பெண் பார்க்கும் படலம் – கிரேஸி நாடகத்தில் ஒரு கூத்து -15 நிமிட காணொலி …

………………………………………………

………………………………………………

இதற்கு நமது அறிமுகமெல்லாம் எதற்கு….?

……………………….

.
………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to பெண் பார்க்கும் படலம் – கிரேஸி நாடகத்தில் ஒரு கூத்து -15 நிமிட காணொலி …

  1. புதியவன் சொல்கிறார்:

    மணல் கயிறு படத்தில் similar scene (இது நிச்சயம் கிரேஸி நாடகத்துக்கு முந்தையது. 80ல் வந்தது), அப்புறம் கவுண்டமணி நடித்த ஒரு படம் (கிரேஸிதான் வசனமா என்று நினைவில்லை) இதே போன்ற காமெடி ஆனால் கிளினிக்கில் நடைபெறுவதாக இருந்தது. இரண்டையும் பார்த்த நினைவு பசுமையாக இருப்பதால், இந்தக் காணொளி ரசிக்கவில்லை.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    எனக்கு ஞாபக சக்தி குறைந்துகொண்டே வருகிறது.
    சில சமயங்களில், ஏற்கெனவே பார்த்த படத்தையே
    திரும்ப பார்க்கிறேன்… படித்த புத்தகத்தையே மீண்டும்
    படிக்கிறேன்…பாதி பார்த்த/படித்த பிறகு தான் இதை
    ஏற்கெனவே பார்த்து/படித்து விட்டோம் போலிருக்கிறதே
    என்று தோன்றுகிறது….

    கொஞ்ச நாட்கள் முன்பு, என் நெருங்கிய உறவினர் ஒருவருடன்
    போனில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் மனைவியிடமும்
    பேசவேண்டிய அவசியம் வந்தது…. என்னம்மா …. என்று
    துவங்கியவனுக்கு சட்டென்று அந்தப் பெண்ணின் பெயர்
    நினவிற்கு வரவில்லை; ரொம்பத் தடுமாறி விட்டேன்…
    அவ்வளவு நெருங்கிய சொந்தத்திடம், பெயரைச் சொல்லி
    அழைக்காமல் ஏதோ மூன்றாம் நபரிடம் பேசுவது போல்
    பேசியது எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது….

    பேசி முடித்தபிறகு, மனைவியிடம் அந்த பெண்ணின்
    பெயரை கேட்டபோது, மனைவி ஆச்சரியத்துடன்
    இதெல்லாம் கூடவா மறந்து விடும் என்றார்…!!!

    விளைவு – இப்போதெல்லாம், என்னிடம் சொல்லாத விஷயங்களை
    எல்லாம் கூட ஏற்கெனவே சொல்லி விட்டதாக சாதிக்கிறார் –
    “நான் அப்பவே சொன்னேனே- நீங்க தான் வழக்கம்போல
    மறந்திருப்பீங்க …!!! ”

    என் மறதி, இப்போது சிலருக்கு வரமாகி விட்டது….!!!

    • புதியவன் சொல்கிறார்:

      இதற்குக் கவலைப்படவேண்டாம் கா.மை. சார். எனக்கு எப்போதுமே கவனக்குறைவு உண்டு. அதாவது பிறர் சொல்வதை முழுவதும் காதில் வாங்கிக்கொண்டு பிறகு ரெஸ்பாண்ட் பண்ணும் குணம் குறைவு. என் மனைவி, இந்த குணத்தை அவ்வப்போது கடிந்துகொள்வார். அதனால் நான், எனக்குப் பிடித்திருந்தால், ஒரு படத்தை 2-3 முறையாவது பார்ப்பேன். அதனால் படித்த புத்தகத்தையே இன்னொரு முறை படிப்பதிலும் எனக்கு அலுப்பு தட்டாது. மகளுக்கு திரைப்படத்தை, கதைப் புத்தகத்தை, திரைப்பாடலை ஒரு முறை பார்த்தாலே, எக்ஸாமுக்குப் படிப்பதுபோல மனதில் தங்கிவிடும். (except her books I think ஹா ஹா ஹா)

      எனக்கு உள்ள பிரச்சனை, முகத்தை நினைவில் வைத்துக்கொள்வது. 7-8 முறை சந்தித்தாலோ இல்லை, அடிக்கடி பார்த்துப் பேசினாலோதான் என்னால் ஒருவர் முகத்தை நினைவில் வைத்திருக்கமுடியும். ஆபீஸில் வேலை பார்த்தபோது, பலர் என்னை இங்கே சந்தித்தேன் என்றெல்லாம் சொல்வார்கள், எனக்கு அவர்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனோ என்று மட்டும்தான் தோன்றுமே தவிர, இங்குதான் என்று நினைவுக்கு வராது. அவர்களிடமும் என் இந்தப் பிரச்சனையைச் சொல்லிவிடுவேன். அதனால்தான் ஒவ்வொரு நிகழ்வையோ இல்லை சந்திப்பையோ நான் படம் எடுத்து வைத்துக்கொள்வேன். பின்னால் நினைவுகூறுவதற்கும் எனக்குமே முகம் நினைவுக்கு வருவதற்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s