
…………………………
கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசங்களின் உள்ளே
என்ன இருக்கும் என்பதில், மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும்
சேர்ந்தே இருக்கின்றன….
இப்போது உயர்ந்தக் கட்டடங்களில் கூட காந்தக் கம்பிகள் பொருத்தப்படுகின்றன. மழை பெய்யும்போது,
வானில் இருந்து இடி தாக்கினாலோ, மின்னல் பாய்ந்தாலோ
முதலில் உயரமான கட்டடங்களைத் தான் தாக்கும்.
அந்தக் காலத்தில் கோயில் கோபுரங்கள்தான் உயர்ந்து நிற்கும். இவற்றை இடி தாக்காமல் இருக்கவே, அவற்றின் உச்சியில்
செம்புக் கலசங்கள் பொருத்தப்பட்டன.
காந்தக் கம்பிகள் விஞ்ஞானத்தால் சில நூறு ஆண்டுகளுக்கு
முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களில் செம்புக் கலசங்கள் பொருத்தப்பட்டன.
இவற்றில் வரகு தானியம் கொட்டப்பட்டிருக்கும். இந்தத் தானியம் இருக்கும் வரையில் இடியை எதிர்க்கும் காந்த அதிர்வு கலசத்துக்கு கிடைக்கும். மொத்தத்தில், இது இடிதாங்கி.
வரகு தானியத்துக்கு இடியை எதிர்க்கும்- தடுக்கும் ஆற்றல்
12 ஆண்டுகள் வரை உண்டு.
எனவே தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டு வந்தன.
.
…………………………………………….
கோபுரத்துடன், த்வஜஸ்தம்பத்தையும் சேர்த்திருக்கலாம். த்வஜஸ்தம்பத்தில் வரகு போன்ற தானியங்கள் முழுமையாக அந்த தேக்கு (அல்லது பொருத்தமான) மரம் மற்றும் வெளிப்புற உலோகத்திற்கிடையில் இருக்கும் வெற்றிடத்தில் இருக்கும். சில நேரங்களில் நீர்க்கசிவு நேர்ந்தால் உள்ளிருக்கும் தானியங்கள் கெட்டுப்போகும், அதன் மூலம் மரமும் பழுதுபடும். இந்தத் தானியக் கலவைகளின் ஆயுள் 12 ஆண்டுகள்தான், அதிகபட்சம். கோவிலின் விஸ்தீரணத்தைப் பொருத்து, வெளிப்புறங்களில் நான்கு பகுதிகளிலும் கோபுரங்கள், கலசத்துடன் அமைக்கப்பட்டிருக்கும். படத்தில் காட்டப்பட்டிருப்பது, கர்பக்ரஹம் என்று சொல்லப்படும், மூலவர் இருக்கும் கோபுரத்தின் உச்சிப்பகுதி.