அசுர வளர்ச்சியா – அல்லது – அசகாய முயற்சியா – திருவாளர் சபரீசன் …..!!!

…………..

…………….

திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள்,
முதலமைச்சராக பதவிக்கு வந்ததில் இருந்து ஆட்சிக்கும், கட்சிக்கும்
எந்தவிதத்திலும் கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்பதில்
மிகவும் கவனமாக இருக்கிறார்.

ஆனால், தற்போது வெளிவந்துள்ள செய்திகள் ஆட்சிக்கும்,
கட்சிக்கும் கெட்ட பெயரை உருவாக்குவதாகவே உள்ளன….

திமுக தலைவர், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு –
அவரது மருமகன் திரு. சபரீசன் புதிதாக 4 நிறுவனங்களில்
இயக்குநராகியுள்ளார்… என்கிற தகவல் தெரிய வந்துள்ளது.

அதேபோல், அவரது மகள் திருமதி செந்தாமரை,
மூன்று நிறுவனங்களில் இயக்குனராகியுள்ளார். குறிப்பாக,
கடந்த 16 நாட்களுக்கு முன்னர் –
அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதியன்று சபரீசன், செந்தாமரை,
அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகன் மகன் கார்த்திக் ஆகிய மூவரையும்
இயக்குநர்களாக கொண்ட சேசாக் ரியால்டர்ஸ் (SESAK Realtors)
என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

No.1202, 2 Block, Anna Nagar, 6th Avenue, Chennai என்ற
முகவரியில் இயங்கி வரும் அந்த SESAK நிறுவனத்தின் பெயர் காரணம்
பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.

அதாவது SE-செந்தாமரை (senthamarai),
SA-சபரீசன் (sabareesan), k-கார்த்திக் (karthik) என்று கூறப்படுகிறது.

இந்த நிறுவனம் தவிர, PENINSULAR RESEARCH OPERATION PRIVATE
LIMITED, SUNSHINE WELFARE FOUNDATION, SUNSHINE FOOD AND
BEVERAGES PRIVATE LIMITED ஆகிய நிறுவனங்களிலும்
சபரீசன் இயக்குநராகியுள்ளார்.

அதேபோல், Rays Sunshine Estates Private Limited என்ற
நிறுவனத்தில் திரு. ஸ்டாலின் அவர்களது மகள் செந்தாமரை
இயக்குநராக உள்ளார்.

இந்த நிறுவனம், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி
பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தாமரையை தவிர, எழிலரசி என்பவரும்
சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில்
இயக்குநராக உள்ளார்.

மேலும், SUNSHINE WELFARE FOUNDATION என்ற நிறுவனத்திலும்
செந்தாமரை இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனம், முதல்வராக
பொறுப்பேற்ற பின்னர், அதாவது 2021ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி
தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சபரீசனும்
இயக்குநராக உள்ளார். மேலும், RAYS SUNSHINE EDUTECH SERVICES LLP
என்ற கல்வி நிறுவனத்திலும் செந்தாமரை இயக்குநராக உள்ளார்.
இந்த நிறுவனம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதவிர SUNSHINE HOLDINGS INDIA PRIVATE LIMITED என்ற
நிறுவனத்திலும் சபரீசன், செந்தாமரை ஆகிய இருவரும் இயக்குநராக
உள்ளனர். இந்த நிறுவனம் 2019ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி
தொடங்கப்பட்டுள்ளது.

………………………

ஒருவேளை மேற்கண்ட தகவல்கள் முதல்வரின் கவனத்திற்கு
கொண்டு செல்லப்படவில்லையோ …!!!

……………………………………………….

…………………..

……..

………………

……………………………………………………….

times now ஆங்கில செய்தித் தளத்தின் தமிழ்ப் பதிப்பில்
மேற்கண்ட தகவல்கள் வெளியாகி உள்ளன ….

மூலம் – https://tamil.samayam.com/latest-news/state-news/mk-stalin-son-in-law-sabareesan-and-his-wfe-senthamarai-started-a-real-estate-firm/articleshow/91565045.cms

.
…………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

9 Responses to அசுர வளர்ச்சியா – அல்லது – அசகாய முயற்சியா – திருவாளர் சபரீசன் …..!!!

  1. Tamil சொல்கிறார்:

    //ஒருவேளை மேற்கண்ட தகவல்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லையோ …!!!

    கொண்டு சென்றால் அவர் என்ன செய்வார்? அதிகபட்சம் மகளையும் மருமகனையும் கூப்பிட்டு வாழ்த்து சொல்வாரா?

  2. Tamil சொல்கிறார்:

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

    இதைத்தான் இப்போது சொல்ல முடியும்!!

  3. கார்த்திகேயன் சொல்கிறார்:

    //திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள்,
    முதலமைச்சராக பதவிக்கு வந்ததில் இருந்து ஆட்சிக்கும், கட்சிக்கும்
    எந்தவிதத்திலும் கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்பதில்
    மிகவும் கவனமாக இருக்கிறார்.//

    சிரிக்காமல் இருக்க முடியவில்லை

  4. புதியவன் சொல்கிறார்:

    ஊருக்கெல்லாம் ஒரு பாதை என்றால் இந்த விமர்சனம் தளத்துக்கு வேறு பாதை போலிருக்கிறது. ‘நடுநிலை விமர்சனம்’ என்றால் என்ன என்பதை நான் உங்களுக்குக் கற்றுத்தரணும் போலிருக்கிறது.

    நியாயமா நீங்க என்ன எழுதணும்? அதானி ஆப்பிரிக்காவில் அதை வாங்கிவிட்டார், அம்பானி ஐரோப்பாவில் இதை வாங்கிவிட்டார், பாஜக கார்ப்பரேட்டுகளுக்கான கட்சி என்றுதானே எழுதணும். அதை விட்டுவிட்டு, தயாநிதி மாறன், சன் கார்ப்பொரேட்டுகளைப் பற்றியோ, அல்லது, மருமகன் புதிது புதிதாக ஆரம்பிக்கும் கம்பெனிகளைப் பற்றியோ அவரது பிரம்மாண்டமான பங்களாக்களைப் பற்றியோ (சமீபத்தில் மனைவி கூட வாட்டர் பாட்டில் கம்பெனி ஆரம்பித்திருக்கிறார் என்று பார்த்தேன்) , இல்லை தமிழகத்தில் எந்தத் திரைப்படம் வெளியிடவேண்டும் என்றாலோ அது ரெட் ஜெயண்ட் மூலமாகத்தான் வெளியிடணும் என்ற அழுத்தங்கள் பற்றியோ எழுதினால், ஒன்று நீங்க சங்கியாக இருக்கவேண்டும், இல்லையென்றால் ஆரியராக இருக்கவேண்டும்.

    நல்லவேளை… /திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பதவிக்கு வந்ததில் இருந்து ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்தவிதத்திலும் கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்// என்பதைக் குறிப்பிட்டு புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    • Tamil சொல்கிறார்:

      //மனைவி கூட வாட்டர் பாட்டில் கம்பெனி ஆரம்பித்திருக்கிறார்

      தமிழ்நாட்டு மக்களின் தாகம் தீர்க்க அவர்கள் செய்கின்ற புண்ணிய காரியங்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      .
      விமரிசனம் தளம்
      தொடர்ந்து
      வெளிவர வேண்டுமென்பதில்
      உங்களுக்கு விருப்பமில்லையோ …. !!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  5. TAMILMANI சொல்கிறார்:

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட
    கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறமும் திருவான்மியூரிலிருந்து மாமல்லபுரம் வரை காலியாக இருந்த நிலங்கள் மைசூர் பாக்
    போல பிரிக்கப்பட்டு கோடி கணக்கில் விலை நிர்ணயம் செய்து இந்த ஓராண்டில் விற்கப்பட்டு விட்டன.
    ஹிந்து நாளிதழின் சனிக்கிழமை ரியல் எஸ்டேட் பக்கத்தில் இந்த கம்பெனியின் முழு
    பக்க விளம்பரங்கள் மிகவும் பிரபலம். இப்போது தமிழ்நாட்டின் மற்ற பெரு நகரங்களிலும் ஜி SQUARE
    இந்த நிறுவனம் கால் பதித்து விட்டது. இதன் பின்னணியிலும் ஆளும் கட்சியின் நண்பர்கள் இருக்கிறார்கள்.

  6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த ஜி SQUARE பற்றிய மேலதிக
    தகவல்கள் – நண்பர்கள் யாரிடமாவது
    இருந்தால் இங்கே தரலாம்..
    ஆதாரங்களுடன் இருந்தால் தேவலை…..!!!

    .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.