அமைச்சர் கண்ணப்பனைக் கண்டு -திமுக தலைமை பயப்படுவது ஏன் …..???

……

….

இன்று வெளியாகியுள்ள ஒரு பத்திரிகைச் செய்தியை –
விமரிசனம் தள வாசக நண்பர்களின் பார்வைக்காக
கீழே தந்திருக்கிறேன்.

முதலில் செய்தி – வந்தது வந்தபடி –
பின்னர் அதன் மீது நமக்குண்டான கேள்விகள்…

………………………………………..

எழிலக ரெய்டு –

தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பனுக்கு
உதவிகரமாக இருந்து வந்த போக்குவரத்துத் துறை
துணை ஆணையர் (1) நடராஜன் அலுவலகத்தில் நுழைந்து
அதிரடி சோதனை செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார்.

தமிழக அமைச்சரவையில் உள்ள ஐந்து அமைச்சர்கள் மீது
முதல்வருக்குத் தொடர்ந்து ரிப்போர்ட் போய்க்கொண்டே
இருந்திருக்கிறது, தலைமைச் செயலாளர் மற்றும் உளவுத் துறை
மூலமாக. கடந்த வாரத்தில் அவர்களில் மூன்று அமைச்சர்களை
அழைத்து கடுமையாகப் பேசி எச்சரித்து அனுப்பியுள்ளார்
முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த எச்சரிக்கையின் வெளிப்பாடுதான்,
மார்ச் 14ஆம் தேதி சென்னை எழிலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்
துறை போலீஸ் அதிரடி சோதனை.

“போக்குவரத்துத் துறை ஆணையர் நடராஜன் அலுவலகம்
எழிலகத்தில் இரண்டாவது மாடியில் உள்ளது. முதல் மாடியில்
துணை ஆணையர்கள் இருக்கிறார்கள். அதில் முக்கியமான பொறுப்புகளை துணை ஆணையர் (1) நடராஜன் பார்த்து
வருகிறார். இந்த துணை ஆணையர் நடராஜன் வசூல் ராஜனாக
மாறி தனது அலுவலகத்தை கலெக்‌ஷன் மையமாகவே
மாற்றிவிட்டார்.

பிரேக் இன்ஸ்பெக்டர் கிரேடு 1, கிரேடு 2, ஆர்டிஓ அலுவலக
ஊழியர்களின் இடம் மாறுதல்களுக்கு கடந்த ஆட்சியைவிட
தற்போதைய ஆட்சியில் ஐந்து மடங்கு முதல் பத்து மடங்கு
வரையில் உயர்த்தி வசூல் செய்து வருகிறார்கள்.
அலுவலகத்திலேயே பேரம் பேசி வசூல் செய்து அமைச்சர்
மகனிடம் ஒப்படைத்து வருகிறார்கள்.

துணை ஆணையர் நடராஜன் பிரிவு மீது புகார் வந்ததால்
முக்கிய பொறுப்புகளை வெவ்வேறு துணை ஆணையர்களிடம்
பகிர்ந்து உத்தரவு போட்டார் போக்குவரத்து துறை
ஆணையர் நடராஜன் (இவர் பெயரும் நடராஜன்தான்).

ஆனால், அந்த உத்தரவை அமைச்சர் கண்ணப்பனிடம்
சொல்லி உடனடியாக ரத்து செய்துள்ளார்
துணை ஆணையர் நடராஜன்.

பிரேக் இன்ஸ்பெக்டர்களிடம் மாறுதல்களுக்கு 20 லட்சம் இருந்ததை
60 லட்சமாகவும், 40 லட்சம் இருந்ததை ஒரு கோடியாகவும்,
ஆர்டிஓ இட மாறுதல்களுக்கு அதேபோல் பல மடங்கு உயர்த்தி
கேட்பதால் பலரும் இடம் மாறுதல் வேண்டாம் என்றும் நீங்கள்
போடும் இடத்துக்குச் சென்று பணி செய்கிறோம் என்று ஒதுங்கிப் போகிறார்கள். ஒத்துவராத அதிகாரிகளைக் காத்திருப்பு
பட்டியலில் வைத்து விடுகிறார்கள்.

இட மாறுதலுக்கு இப்படி என்றால்… மாதா மாதம்
போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் மூலமாக நடத்தப்படும்
வசூலும் எகிறிவிட்டது.

கடந்த அதிமுக மற்றும் முந்தைய திமுக ஆட்சிக் காலங்களில்
ஒரு ஆபீஸுக்கு 15,000, 25,000 அதிகபட்சமாக 30,000 என வசூல்
செய்த அதிகாரிகள் மேலே மாசம் 40 லட்சம் ரூபாய் கொடுத்து
வந்தனர்.

ஆனால் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் அமைச்சர்
கண்ணப்பனின் உதவியாளர்கள், குறிப்பாக துணை ஆணையர்
நடராஜன் இந்த மாதாந்திர கப்பத் தொகையை
கன்னாபின்னாவென ஏற்றிவிட்டார். அதாவது மாதம் 25,000
வசூல் செய்து கொடுக்கும் ஆபீஸ் இனி 2.50 லட்சம் கொடுக்க
வேண்டும் என்று டார்கெட் வைத்தார்.

இந்த கணக்குப்படி தமிழக போக்குவரத்துத் துறையில் உள்ள
120 அலுவலகங்களும் ஒவ்வொரு மாதமும் மொத்தமாக 3.30 கோடி கொடுக்க வேண்டும் என்று மாதந்தோறும் கசக்கிப்
பிழியப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் நடக்கும்

இந்த வசூல் மொத்தமாக –
அமைச்சரின் அண்ணன் பிள்ளை மற்றும் வளர்ப்பு பிள்ளையிடம் பத்திரமாகப் போய் சேர்கிறது.

இந்த சம்பவங்களை புள்ளி விவரங்களுடன் அகில இந்திய
மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் முருகன்
கடந்த 2021 இறுதியிலேயே( வருட இறுதி அல்ல – 11/08/21 அன்றே)
முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர்,
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்
பிரிவு இயக்குநருக்கு புகாராகவே அனுப்பியுள்ளார்.

இந்த வசூல் வேட்டைக்காரர்கள் பற்றிய தகவல்கள் முதல்வருக்குப் போய்விட்டது என்று தெரிந்தும் அமைச்சர் கண்ணப்பன்
எந்த சிறு தடுப்பு நடவடிக்கை கூட மேற்கொள்ளவில்லை.

மாறாக பணம் எண்ணும் மெஷின்களை வாங்கி எழிலகத்தில் வைத்திருக்கிறார்கள்.

ஆர்டிஓ ஆபீஸ் மற்றும் பிரேக் இன்ஸ்பெக்டர் யூனிட் ஆபீஸ்களில் கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு வழக்கமாக ஒரு லட்சம்
அதிகபட்சம் இரண்டு லட்சம் வரையில் வாங்கினார்கள்.

துணை ஆணையர் நடராஜன் 10 +1 லட்சம் என பேரம் பேசி
30 நபர்களிடம் பணம் பெற்றிருக்கிறார். இந்த லஞ்சப் பணத்தை எண்ணுவதற்காகவே துணை ஆணையர் அலுவலகத்தில்
பணம் எண்ணும் இரண்டு மெஷின் வாங்கி வைத்து அதைக் கையாள்வதற்கான இரண்டு ஊழியர்களையும் பயன்படுத்தி
வந்துள்ளார்.

இந்தத் தகவலும் லேட்டஸ்டாக முதல்வருக்கு கொண்டு
செல்லப்பட்டது . உடனடியாக ஊழல் தடுப்பு மற்றும்
கண்காணிப்புப் பிரிவு இயக்குநர் மூலம் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு தெரிவிக்கப்பட்டது. கூடுதலாக உளவுத் துறையும்
கொடுத்த ரிப்போர்ட் வைத்து ஏற்கனவே கோபமாக இருந்த
முதல்வர் ஸ்டாலின், நடவடிக்கை எடுக்க கிரீன் சிக்னல் கொடுத்தார்.

இதையடுத்து தான் மார்ச் 14ஆம் தேதி மதியம் 3.00 மணியளவில்
டிஎஸ்பி தலைமையில் சென்ற விஜிலென்ஸ் போலீஸ் முதல் மாடியில் துணை ஆணையர் (1) அறைக்குள் சென்றதும் கதவு ஜன்னல் அனைத்தையும் மூடி விட்டனர்.

பிறகு சோதனை நடத்தியதில் பணம் என்னும் இரண்டு மிஷன்,
ரூ.35 லட்சம் ரொக்கம், வரவு செலவு டைரி, குறிப்பு சீட்டுகள்,
செல்போன் அனைத்தையும் கைப்பற்றி கொண்டு
துணை ஆணையர் நடராஜனிடம் விசாரணை நடத்தினார்கள்.

“நான் 1993 பேட்ஜ் கிரேடு 1 பிரேக் இன்ஸ்பெக்டராக பணியில்
சேர்ந்து பதவி உயர்வு பெற்று துணை ஆணையராக இருக்கிறேன்.

அமைச்சருக்கு உதவியாக இருப்பேன். அவர் சில பணிகளை
சொன்னால் செய்வேன்” என்று கூறியுள்ளார் நடராஜன்.

‘இவ்வளவு பணம் எப்படி வந்தது?’ என்று போலீஸார் கேட்க…

“கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு அவர்களாகவே
எடுத்து வந்து கொடுத்துட்டு போகிறார்கள்” என்று
கொட்டிவிட்டார் நடராஜன்.

‘இந்தப் பணம் யாருக்கு போகிறது?’ என்று துருவித் துருவி
கேள்விகள் கேட்டு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்
விஜிலென்ஸ் போலீஸார்.

இந்த ரெய்டு நடந்த அடுத்த நாளான நேற்று மார்ச் 15ஆம் தேதி
ஒன்றும் தெரியாதவர்போல் அலுவலகத்துக்கு வந்தார்
துணை ஆணையர் நடராஜன்.

தன்னிடம் ரெய்டு குறித்து கேட்டவர்களிடம், “எனக்கு ஒன்றும்
பிரச்சினை இல்லை. அமைச்சர் பேசிவிட்டார். என் அறையில்
விஜிலென்ஸ் ரெய்டு செய்ததற்கு பல ஆர்டிஓ அலுவலகத்தில்
பட்டாசு வெடித்துக் கொண்டாடி இருக்கிறார்களாம்.
பலர் பார்ட்டி வைத்திருக்கிறார்களாம். வசூல் செய்யும்
பணத்தை என் வீட்டுக்கா எடுத்துப் போகிறேன்?

அமைச்சர் சொல்வதை தானே செய்கிறேன்” என்று
ஃபீலிங்குடன் பேசியுள்ளார் நடராஜன்.

செய்தி லிங்க் – https://www.minnambalam.com/politics/2022/03/16/14/raid-ezhilagam-transport-commissioner-office-minister-kannppan
……………………………………….

………………………………………

வெளி வந்த செய்தி முடிந்தது…
இனி நமக்கான சில கேள்விகள்….

1) சென்ற ஆகஸ்டிலேயே, இந்தப் புகார் வெளிப்படையாக
முதல்வருக்கும், லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறைக்கும், இன்னும்
பல இலாகாக்களுக்கும் சென்றுள்ளது (மேலே பார்க்கவும்…)
இதில் நடவடிக்கை எடுக்க 8 மாதங்கள் பிடித்தது ஏன்….?
இந்த தாமதத்தால், தப்பியவர்கள் எத்தனை பேர்… யார் யார்…?

2) பெறப்படும் லஞ்சப்பணம் அமைச்சருக்கு போகிறது
என்று வெளிப்படையாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
அமைச்சரின் சார்பாக, அவரது அண்ணன் மகனும், தத்துப் பிள்ளையும்
அவற்றை பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் செய்தியில்
கூறப்பட்டிருக்கிறது…. அமைச்சர் மீது என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டது…?

3) புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கும், உண்மையில் பணம்
போய்ச்சேர்ந்த இடமான, அமைச்சரின் அண்ணன் மகன் மற்றும்
தத்துப் பிள்ளை மீது ரெய்டு நடத்தப்படாதது ஏன்…?

4) அவர்களிடம் போய்ச்சேர்ந்த பணம் கைப்பற்றப்படாதது
ஏன்….? சட்டவிரோதமாக, லஞ்சமாக பெற்ற அந்தப் பணத்தை
அவர்களே அனுபவிக்க விடப்படுகிறதா…?

5) ஏற்கெனவே, தீபாவளி சமயத்தில், போக்குவரத்து
ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக ஸ்வீட் பாக்ஸ் வாங்கும்
சமயத்தில், திருவாளர் கண்ணப்பன் மீது லஞ்சப்புகார்
வெளிப்படையாக பத்திரிகைகளில் வெளிவந்த பிறகு,
அந்த டெண்டர் ரத்து செய்யப்பட வேண்டியதாகியது.

அப்போதும் திருவாளர் கண்ணப்பனின் மீது எந்தவொரு
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; இலாகா மாற்றம் கூட
செய்யப்படவில்லை;

6) இப்போது மீண்டும் வெளிப்படையாக இவ்வளவு பெரிய
லஞ்ச ஊழல் விவகாரம் வெளிவந்திருக்கிறது. எட்டு மாதங்கள்
எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் – இறுதியாக இப்போது,
ரெய்டு நடத்தி அலுவலகத்தில் இருந்த பணம் மட்டும்
கைப்பற்றப்பட்டிருக்கிறது… சம்பந்தப்பட்ட அதிகாரி
மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை…. கைதோ,
சஸ்பென்ஷனோ – எதுவுமே இல்லை…

சம்பந்தப்பட்ட அதிகாரி -மறுநாளே வழக்கம்போல்
அலுவலகத்திற்கு வந்து, அமைச்சர் பேசி விட்டார்.
ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை என்று சொல்கிறார்…
இது என்னவித ஊழல் தடுப்பு நடவடிக்கை….?

7) இத்தனை நடந்த பிறகும் திருவாளர் கண்ணப்பன் மீது
எந்தவித நடவடிக்கையும் காணோம்…

திமுக ஆட்சி உண்மையிலேயே லஞ்ச ஊழல்களை
பொறுத்துக் கொள்ளாது, அனுமதிக்காது,
கடுமையாக தண்டிக்கும் என்றால் –
அந்த அமைச்சர் இதற்குள்ளாகவே –

  • டிஸ்மிஸ் ( ராஜினாமா அல்ல டிஸ்மிஸ்) செய்யப்பட்டிருக்க
    வேண்டும்…
  • அவர் சம்பந்தப்பட்ட இடங்களிலும், அவரது பிள்ளைகள்
    சம்பந்தப்பட்ட இடங்களிலும் ரெய்டுகள் நடத்தப்பட்டிருக்க
    வேண்டும்…
  • பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

இது எதுவுமே நடக்கவில்லை….

இது ஒரு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது…
திமுக தலைமை – திருவாளர் கண்ணப்பன் மீது நடவடிக்கை
எடுக்க பயப்படுகிறதா….?

ஏன்….? அப்படி நடவடிக்கை எடுக்க முடியாதபடி
அவரிடம் எதாவது ரகசியங்கள் மாட்டிக்கொண்டிருக்கின்றனவா….?

.
…………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to அமைச்சர் கண்ணப்பனைக் கண்டு -திமுக தலைமை பயப்படுவது ஏன் …..???

  1. புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்…. ‘இனி நமக்கான கேள்விகள்’ என்பதை உங்களுக்கு எழும் சந்தேகங்கள் என்று புரிந்துகொள்கிறேன். எனக்கும் சில சந்தேகங்கள் இருக்கின்றன.

    1. லஞ்சம் கொடுத்து அல்லது துட்டு கொடுத்து இட மாறுதல்கள், போஸ்டிங் வாங்குபவர் மீது துறை அமைச்சருக்கோ இல்லை மேலிட அதிகாரிகளுக்கோ, லஞ்ச ஊழல் அல்லது பொதுமக்களிடமிருந்து கறப்பதற்காக நடவடிக்கை எடுக்கும் துணிவு வருமா?
    2. அமைச்சர் சொன்னதைத்தான் இந்த நடராஜன் போன்ற பதர்கள் செய்தார்கள் என்றால், அமைச்சர் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருப்பார்களா இந்த அல்லக்கைகள்?
    3. காசு வாங்கிக்கொண்டு பதவியைக் கொடுப்பவர்களுக்கு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சலோ அல்லது moral courageஓ எப்படி இருக்கும்? ஆள்பவர்களே 400 கோடி கொடுத்து பிரஷாந்த் கிஷோரை வாடகைக்கு எடுத்து அவர் சொன்னதுபோலெல்லாம் ஆடி, பதவிக்கு வந்தவர்கள். அவர்கள் மட்டும் நாட்டுக்கு நல்லது செய்யவா பதவிக்கு வந்திருப்பார்கள்?

    இந்தச் சந்தேகங்களுக்கு விளக்கம் சொன்னால், தானாகவே உங்களின் சந்தேகங்களுக்கு விடை கிடைத்துவிடும் என்று எனக்குத் தோன்றுகிறது

  2. tamilmani சொல்கிறார்:

    அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் நடவடிக்கைகள் எடுக்க பட்டு ஒவ்வொருவராக
    target பண்ணப்படுகிறார்கள். சரி, அவர்களுக்கு அடுத்து வந்த இவர்கள் ஒன்றும் யோக்கியர்கள்
    அல்ல என்று தமிழகத்தில் எல்லாருக்குமே தெரியும் . ஆனால் காய்ந்த மாடு கம்பன்கொல்லையில்
    புகுந்தது போல அப்படி ஒரு desperation ஐ இந்த பத்து மாதங்களில் திமுக அமைச்சர்களிடம் காண்கிறோம் .
    அவர்கள் பத்து வருடங்களில் சுருட்டியதை இந்த ஒரே வருடத்தில் இவர்கள் target வைத்துக்கொண்டு
    கொள்ளை அடிப்பதை பார்த்தால் தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை பண நாயகம் ஒன்றே பிரதானம்
    ஆகி விட்டது.அதானி அம்பானி பிசினெஸ் செய்து கோடிக்கணக்கில் லாபம் பார்க்கிறார்கள் .
    தமிழகத்தில் பிசினெஸ் எதுவும் செய்யாமல் அரசியல் மட்டும் செய்தால் போதும் கோடிக்கணக்கில்
    சம்பாதிக்கலாம்.

    • புதியவன் சொல்கிறார்:

      தமிழ்மணி – நீங்க நம்ம தொலைக்காட்சிகள் இணையப் பத்திரிகைகளைப் பார்த்து ஒன்றும் கற்றுக்கொள்ளாதது வருத்தமளிக்கிறது. நீங்க, ஊழலை மறைக்க, அதிமுகவினர் மீது அடக்குமுறை, ரெய்டு, கைது என்று அரசு செய்வதை மட்டுமே தொலைக்காட்சிகள்/இணையப் பத்திரிகைகள் எழுதுவதுபோல அதை மட்டுமே சொன்னால் நீங்க செக்யூலார், மதச்சார்பின்மையை ஃபாலோ பண்ணுகிறீர்கள் என்று நம்புவேன்.

      மின்னம்பலப் புளி, தமிழக, இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டு ஏகப்பட்ட ஆர்ட்டிகிள் எழுதினார். இப்போது எங்கு போனார்? ஒரு பதவி வாங்கிக்கொண்டு ஷூபாலிஷ் போட்டுக்கொண்டிருக்கிறார். மது ஆறாகப் பெருகுகிறதே, குடிமக்கள் சாகிறார்களே என்று கவலைப்பட்டு கண்ணீர் காவிரி பெருக்கிய சிகரெட் வியாபாரி கோவாலசாமி மற்றும் பலர் இப்போது, அரசு நடத்த டாஸ்மாக் வரவே மிக முக்கியம், அதனால் விலையேற்றம் செய்ததில் அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது என்று பாராட்டுரைகளை எழுதி மாய்கிறார்கள். அவ்வளவு கீழே இறங்கி ஷூ பாலீஷ் போடுகிறோமே என்ற ஆற்றாமை மனதில் எழும்போது, ரஷ்யா உக்ரைனில் படையெடுத்ததை..இல்லை இல்லை..அது கம்யூனிஸ்டுகளை மனவருத்தத்தில் ஆழ்த்தும். அதனால், இப்போது கர்நாடக ஹிஜாப் விஷயமாக வருத்தக் கட்டுரை எழுதுவார்கள். அந்த மாதிரி எழுதினால்தான் நாம் செக்யூலார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.