பல்லாயிரம் கோடி பணம் – யாருக்கு போகிறது……???

…..

……

உலகிலேயே மிகப்பெரிய நம்பர் ஒன்
ஆயுத தயாரிப்பு நிறுவனம் –

-அமெரிக்காவின் – Lockheed Martin Corp.(US)

பிஸ்டல்கள், துப்பாக்கிகள் என்று மட்டுமல்லாமல் –
உலகம் முழுவதும் பிரம்மாண்டமான அளவில் வர்த்தகம் செய்ய –

டேங்குகளும், ஜெட் போர் விமானங்களும், பல்வேறு விதமான ராக்கெட்களும், உலகின் மிக நவீன போர் ஆயுதங்களும்
உற்பத்தி செய்யப்படும் –

ஒரு லட்சம் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் ஒரு
அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனம்…

…………………..

  • அடுத்து 2-வதாக வருவது பயணிகள் விமானங்களோடு
    நில்லாமல், பல்வேறு விதமான போர் விமானங்கள்,
    ராக்கெட்டுகள், சாட்டிலைட் மற்றும் தொலை தொடர்பு
    சாதங்களையும் தயாரிக்கும் –

-இதுவும் அமெரிக்காவின் – Boeing (US)

……………..

-அடுத்து 3-வதாக வருவது உலகின் மிகப்பெரிய
guided missiles மற்றும் எலெக்டிரானிக் போர் சாதங்களை தயாரிக்கும் நிறுவனமான –

  • இதுவும் அமெரிக்காவின் – Raytheon (US)

……..

இதற்கு அடுத்தபடியாகத் தான் வருகின்றன இதர நாடுகள்.

உலகின் 4-வது பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனம்
பல்வேறு தரைப்படை, விமானப்படை மற்றும் எலெக்டிரானிக்
போர்த் தளவாடங்களை உருவாக்கும் –

பிரிட்டனின் – BAE Systems (UK)
BAE Systems (UK)

……..

ஐந்தாவதாக வருவது –
மீண்டும் அமெரிக்காவின் – Northrop Grumman Corp. (US)
85,000 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வரும் மிகப்பெரிய
ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை…

இதன் பின் வரிசையில் வரும் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி
மையங்கள் –

  1. General Dynamics Corp. (US)
  2. Airbus group (Trans-European):
  3. Thales (France):
  4. Leonardo (Italy):
  5. Almaz-Antey (Russia):

(ஆதாரம் – The Stockholm International Peace
Research Institute – (Sipri) )
…………………………………..

ஆயுதங்கள், பல்வேறு ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை
பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் –
உலகிலேயே முதலிடத்தைப் பெறுவது –
அமெரிக்கா தான் –

பிற நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதில்
முதல் 5 இடங்களை வகிக்கும் நாடுகள் –

மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில் –

அமெரிக்கா – 37 %
ரஷ்யா – 20%
பிரான்ஸ் – 8.2 %
ஜெர்மனி – 5.5%
சீனா – 5.2 %

……………………………….

ஆக உலகின் எந்த மூலையில், எந்த நாடுகளுக்கிடையே
சண்டை மூண்டாலும் , அவர்களுக்கு முதலில்
ஆயுத சப்ளை செய்ததும்,

பின்னர் – போரில் நிகழும் இழப்புகளை சமன் செய்ய,
மீண்டும் – ஆயுத சப்ளை செய்யப்போவதும் – இந்த நாடுகள் தான்…!!
இவற்றில் எதாவதொன்று தான்…!!!
………………

முக்கியமாக, உக்ரேன் காரணமாக – மீண்டும்
பனிப்போர் சூழ்நிலைக்கு உலகம் தயாராகி வரும் நிலையில்,

அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும், ரஷ்யா எல்லை அருகே
தங்கள் ராணுவத் தளவாடங்களை குவிப்பதில் ஈடுபட்டுள்ளன. வரலாற்றிலேயே முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியம்
தங்கள் செலவில் ஆயுதங்களைக் கொள்முதல் செய்து
உக்ரைனுக்கு உதவியாக அளிக்க இருப்பதாகக் கூறியுள்ளது.

எனவே தான், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்
உலக ஆயுத உற்பத்தியாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்களான
ரேத்தியான்,
லாக்ஹீட் மார்ட்டின் ஆகியவை
உக்ரைன் நெருக்கடி அருமையான வர்த்தக வாய்ப்பு என
தங்கள் முதலீட்டாளர்களிடம் வெளிப்படையாகவே
தெரிவிக்கின்றன….

ரேத்தியான் நிறுவனம், விமானத் தாக்குதல் பாதுகாப்பு
அமைப்புகளைப் பிரதானமாக உற்பத்தி செய்கிறது.

1989-ல் ஆப்கானிலிருந்து சோவியத் படைகள் விரைவாக வெளியேறுவதற்கான காரணங்களில் ஒன்றான ஏவுகணை
அமைப்பும் இதில் அடங்கும். இந்த ஸ்டிரிங்கர் ஏவுகணை ஒன்றின்
விலை 119,300 டாலர். உக்ரைனுக்கான ஐரோப்பிய ஆயுத உதவியில்
இதுவும் முக்கிய அங்கம் வகிக்கிறது.

அதே நேரத்தில், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் ஹைபர்சாபிக்
நுட்பம் கொண்ட ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது.
போர் விமானம், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றையும் தயாரிக்கிறது.

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, மேம்பட்ட FGM-148 பீரங்கிகளுக்கு எதிரான ஏவுகணைகளை உற்பத்தி செய்கின்றன.
இவை 2.5 முதல் 4 கிமீ தாக்குதல் திறன் கொண்டவை, ரஷ்யாவுக்கு
எதிரான உக்ரைன் ராணுவத்தின் முக்கிய பதிலடியாக
அமைந்துள்ள வேறு பல ஆயுத அமைப்புகளும் உள்ளன.

ஒவ்வொன்றும் 175,200 டாலர் விலை கொண்ட 30 ஜாவ்லின் ஏவு மையங்களையும் 180 ஏவுகணைகளையும் கடந்த அக்டோபரில்
அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியது. இப்போது ஐரோப்பிய
ஒன்றிய உதவியிலும் இத்தகைய ஏவுகணைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த ‘இன் திஸ் டைம்ஸ்’
இதழின் தகவலின்படி, ரேத்தியான் நிறுவன சி.இ.ஓ
கிரேக் ஹேய்ஸ், ஜனவரியில் வெளியிட்ட வருவாய் அறிக்கையில், ஐரோப்பாவின் தற்போதைய நெருக்கடி மூலம் நிறுவனம்
தங்கள் நிறுவனம் பயன்பெறும் வாய்ப்பு உள்ளதை
வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார்….

இதேபோல, லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைவர்
ஜிம் டைக்லெட், உக்ரைன் தொடர்பாக அமெரிக்க, ரஷ்ய நாடுகளிடையிலான அதிகாரப் போட்டி அருமையானதொரு
வர்த்தக வாய்ப்பாக அமைவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

……………….

ஊர் இரண்டு பட்டால் – கூத்தாடிக்கு கொண்டாட்டம்
என்பது போல் –

இரண்டு நாடுகள் போரிட்டுக் கொண்டால் – அதில்
யாருக்கு லாபம்….? வென்றவருக்கா, தோற்றவருக்கா …?

என்று யோசிப்பதை விட –

எந்த நாடு வெற்றி பெற்றாலும்,
எந்த நாடு தோற்றுப் போனாலும் –
அதன் மூலம் லாபம் அடையப்போவது –

ஆயுத உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முதன்மை வகிக்கும்
மேற்கண்ட நாடுகள் தான் என்பதைத் தான் மேற்காணும்
தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன ….

எனவே – ராணுவ சாதன உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில்
முன்னிலை வகிக்கும் நாடுகள் ….
அதன் மூலம் பெரும் தொழில் வாய்ப்பும்,
லாபமும் பெறும் நாடுகள் ….

போர் நிறுத்தம் வர வேண்டுமென்று
நினைப்பார்களா ….? அல்லது
போர் தொடர்ந்து இதே போல், அல்லது இதைவிட மோசமாக
நீடிக்க வேண்டும் என்று நினைப்பார்களா…?

பாவம் – இந்தக் கழுகுகளின் இரையாக
மாட்டித் திணறும் அப்பாவி பொதுமக்கள்…


…..

உண்மையிலேயே –

மனசாட்சி உள்ள மனிதர்களைத் தவிர –
வேறு எந்த ஆயுத உற்பத்தி/ஏற்றுமதி நாட்டுக்கு
இந்த அப்பாவி மக்களின் அல்லல்களைப் பற்றி கவலை… ????

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to பல்லாயிரம் கோடி பணம் – யாருக்கு போகிறது……???

  1. புதியவன் சொல்கிறார்:

    இவைகளெல்லாம் மிகப்பெரிய மாஃபியா. அமெரிக்க அதிபர் தேர்தலையே இவைகள்தாம் நிர்ணயம் செய்கின்றன. இதனால்தான் சைனா போன்றவை, தங்களுக்கென்று உருவாக்கிக்கொள்கின்றன.

    உலகில் போர் இல்லை என்றால், ஈராக்கில் அணு ஆயுதம் இருக்கிறது என்று புரளி கிளப்பி போர் நடக்கும். பிரிட்டிஷாரின் ஸ்ட்ராடஜி-அவர்கள் ஒரு நாட்டை விட்டுப் போகும்போது பிரச்சனைகளை உருவாக்கிவிட்டுத்தான் போவார்கள். அமெரிக்காவின் ஸ்ட்ராடஜி-எப்போதும் தன்னுடைய ஆயுதங்கள், சர்வீஸ்கள், உணவு போன்றவற்றை விற்கும் விதமாகத்தான் அவர்கள் நடந்துகொள்வார்கள். பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை என்று எதை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் வியாபாரம் செய்து அமெரிக்க மாஃபியாக்களுக்கு பணம் சம்பாதித்துக்கொடுப்பதுதான் அவர்கள் கொள்கை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.