– “இன்விடேஷன்” நீ’ள, அகலம் ….

…….

மாதக் கடைசியில் சென்னை – நந்தம்பாக்கம் வர்த்தக மையம்
அரங்கில் புத்தக வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது.

திரு.ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிடுகிறார்…
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு–காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி ஆகியோர் கலந்து கொள்வது உறுதி
செய்யப்பட்டுள்ளது…

பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் அனைவரும்
அழைக்கப்பட்டிருக்கிறார்கள்… அதில் யார் யார் வருவார்கள்
என்பது இன்னமும் உறுதியாகவில்லை;

நேற்று டெல்லியில் டி.ஆர்.எஸ்.பாலு அவர்கள் திருமதி சோனியா
காந்தி அவர்களைச் சந்தித்து ‘இன்விடேஷனை’ தந்தது
புகைப்படமாக பத்திரிகைகளுக்கு தரப்பட்டுள்ளது.

…………

…………

இன்விடேஷனின் நீள-அகலமும் அளவும் வியப்பைத்
தருகின்றன. சாதாரணமாக எந்த அழைப்பிதழும் இவ்வளவு
பெரியதாக இருப்பதில்லை;

இது விசேஷம் என்பது புரிகிறது….!
அவர்களும் நன்கு யோசித்து தான் இயங்குகிறார்கள்
என்பதும் புரிகிறது.

சில விஷயங்கள் நம்மையும் யோசிக்க வைக்கின்றன …

எத்தனை இன்விடேஷன்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும்;
ஆங்கிலத்தில்…. தமிழில்….? அதனை நேரில் சென்று
கொடுப்பது – ஆகியவற்றிற்கான செலவுகள்….?

இதில் கலந்து கொள்ள ஏகப்பட்ட தலைவர்களும்,
மாநில முதல்வர்களும் வருகிறார்கள். அவர்கள் விமானத்தில்
வந்து போகவும், சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில்
தங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அரசு பதவியில் இருப்பவர்கள் வந்தால் – அந்த செலவுகளை
தமிழக அரசு, (அதாவது மறைமுகமாக தமிழக மக்கள்) –
ஏற்றுக் கொண்டு விடும்….

ஆனால் -பதவியில் இல்லாதவர்கள் வந்தால்
ஆகும் செலவுகள் ….?

விழாவிற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய குறைந்தது
3 நாட்கள் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் ‘புக்’ செய்யப்பட
வேண்டும். இதற்கான வாடகை, இன்டீரியர் – முதலிய செலவுகள்…?

இதைத்தவிர தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான
போஸ்டர்களும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும்
விளம்பரம் போன்ற செலவுகள்….?

எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால், மொத்தச் செலவுகள் –
லட்சங்களைத் தாண்டி, கோடி வரை கூடச் செல்லலாம்…

இந்தச் செலவுகளை ஏற்கப் போவது யார்….?

புத்தகத்தை எழுதியவரா……?
புத்தக வெளியீட்டாளரா….?
(வெளியிடப்போவது எந்த பதிப்பகம் என்று இதுவரை
அறிவிக்கப்படவில்லை…)
திமுக – கட்சியா….?
தமிழக அரசா….?
அல்லது வேண்டப்பட்ட தொழில் அதிபர்கள் யாராவதா….?

எதுவாக இருந்தாலும், அதனை வெளிப்படையாக
தெரிவித்து விட்டால், அநாவசியமாக மற்றவர்கள் மீது
சந்தேகமோ, குற்றச்சாட்டோ வராமல் இருக்கும்.

ஒரு கேள்வி –

இத்தனையும் எதற்காக…..?
புத்தகமோ, தமிழில் ….
பிற மாநில, மற்றும் அகில இந்தியத் தலைவர்கள்
இதை எப்படி படிப்பார்கள்….? படிக்க முடியாதவர்களுக்கு
ஏன் அழைப்பு….?
என்றெல்லாம் தோன்றுகிறதா….?

அகில இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற,
விளம்பரம் பெற முயற்சி என்று தோன்றுகிறதா….?

END JUSTIFIES THE MEANS ……!!!

“ஹிந்தி” தெரியாதவர்கள் “பிரதமர்” ஆகத்தான் முடியாது;

துணைப்பிரதமருக்கு “ஹிந்தி” அவசியமில்லையே….!!!

மனமார்ந்த வாழ்த்துகள்….!!!

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to – “இன்விடேஷன்” நீ’ள, அகலம் ….

  1. கார்த்திகேயன் சொல்கிறார்:

    எந்நேரமும் மக்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருப்பவருக்கு புத்தகம் எழுத ஏது நேரம்.

  2. சிவா சொல்கிறார்:

    மகாபலிபுரம் சாலையில் சைக்கிள் ஓட்ட,
    ஜிம்முக்கு போக, வாக்கிங்க் போக, எதிரே பார்ப்பவர்களுடன்
    பேச, செல்பி எடுக்க, இதையெல்லாம் வீடியோவாக எடுத்து
    மீடியாக்களில் வெளியிட என்று நேரம் கிடைக்கவில்லையா ?
    அது மாதிரி தான் இதுவும்.
    எல்லாவற்றுக்கும் விளம்பரம் தான் கிரியா ஊக்கி.

  3. சிவா சொல்கிறார்:

    ‘எதிர்கால துணைப்பிரதமரின் அழைப்பிதழ்’ என்றே
    தலைப்பு வைத்திருக்கலாம் சார்.

  4. புதியவன் சொல்கிறார்:

    அதெல்லாம் சரிதான். அண்ணன் துணைப்பிரதமர்னு வாழ்த்திட்டீங்க. பிரதமர் யாருங்கற ரகசியத்தை அந்த விழாவுலதான் தெரிவிப்பீங்களா?

  5. புதியவன் சொல்கிறார்:

    காமை சார்.. ஒரு சந்தேகம். வடவர் கட்சியான காங்கிரஸ் பிரதமமந்திரி இந்திரா அவசரநிலை பிரகடனம், மிசாவில் உள்ளே வைத்து வகுப்பு எடுத்தது, தேச விரோதக் கட்சி என்ற லேபிளோடு ஆட்சி கலைக்கப்பட்டது, கீழ்த்தளத்தில் சிபிஐ, மேல்தளத்தில் கழுத்தில் துண்டைப் போட்டு 64 சீட்டுகள் வாங்கியது, திகாரில் உள்ளே வைத்து சக்கரநாற்காலியோடு வாசலில் காங்கிரஸ் கதற வைத்ததெல்லாம் இந்தப் புத்தகத்தில் வருமா இல்லை அதெல்லாம் நெஞ்சுக்கு நீதி நாவலின் அத்தியாயங்களா?

    கவுல் பிராமணர் தமிழன் ராவுல் வெளியிடறாரே.. அதனால் எழுந்த சந்தேகம் இது

  6. புதியவன் சொல்கிறார்:

    கருணாநிதி சொன்ன என் உயரம் எனக்குத் தெரியும் என்ற வார்த்தைகளால் தான் நீள அகலத்தை மாத்திரம் குறிப்பிட்டுள்ளீர்களோ?

  7. tamilmani சொல்கிறார்:

    கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம்
    போவானாம் . ஒன்பது மாத ஆட்சியே சென்னை வெள்ளம் , பொங்கல் பரிசு
    நீட் விலக்கு என்று சிரிப்பாய் சிரிக்கிறது. இதில் துணை பிரதமர் ஆசை வேற .
    2024 ஜூன் மாதம் வர இன்னும் நிறைய நாள் இருக்கிறது.

  8. bandhu சொல்கிறார்:

    எல்லாம் ஒரு விளம்பரம்தான்! எப்படியும் இந்த ‘விழா’வுக்கு ஐந்து கோடி வரை செலவாகும் என நினைக்கிறேன். அதில் 4 கோடியை தமிழக அரசு கணக்கிலும், 5 கோடி வரை யாரோ ஒரு மறைமுக sponsor மூலமாக வாங்கி, ஒரு 4 கோடியை உள்ளே தள்ளுவார்கள் என நினைக்கிறேன். இதில் மறைமுக sponsor தான் யாரென்று தெரியவில்லை. (மோடிக்கு எதிராக காய் நகர்த்தும் எவரும் இருக்கலாம் )

  9. Tamil சொல்கிறார்:

    கவலைப்படாதீர்கள் ஐயா.
    காலம் இது எல்லாம் மாயை என்பதை இவர்களுக்கு விரைவில் புரிய வைக்கும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.