இது போன்ற வெறி’யர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் ….

…..

……………….

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம்
பிராம்மணர்களின் பூணூல் அறுக்கும் இயக்கத்தை
துவங்குவோம் என்று அறிவித்திருக்கிறார்…..

மத வெறியைத் தூண்டி விடுபவர்கள்,
வெவ்வெறு மதங்களுக்கிடையே கலவரங்களை
உருவாக்கும் விதத்தில், பேசுபவர்கள், செயல்படுபவர்கள் –
ஆகியோரை –

அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்,
தயவு தாட்சண்யமின்றி கைது செய்து, சட்டத்தின்
முன் நிறுத்த வேண்டும்…. தொடர்ந்து இதே செயலில்
ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும்.

நேற்று முன் தினம், உள்ளாட்சி தேர்தலின்போது,
மதுரையில் பாஜக-வைச் சேர்ந்த ஒருவர் மதவெறியைத்
தூண்டும் விதத்தில் செயல்பட்டபோது, அவர் கைது செய்யப்பட்டு,
அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இதில் மிகச் சரியாக செயல்பட்டிருக்கிறது…
நான் இதை வரவேற்கிறேன்.

தன்னை “தடா அப்தும் ரஹீம்” என்று அழைத்துக்கொள்ளும்
இந்த நபரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின்
முன் நிறுத்தப்பட வேண்டும்…

அப்தும் ரஹீமின் பேச்சுக்கான ஆதாரம், அவரது முகநூல் பக்கத்திலேயே இருக்கிறது….. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இது ஒன்றே போதுமானது….

இந்த மதம், அந்த மதம் -என்றில்லாமல் – எந்த மதத்தைச்
சேர்ந்தவர்களாக இருந்தாலும், சமூகத்தில் கலவரத்தை
தூண்டி விடும்படி, பேசுபவர்கள், எழுதுபவர்கள்,
செயல்படுபவர்கள் – யாராக இருந்தாலும்,
அவர்கள் மீது உடனடியாக தமிழக அரசு கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும்….

இத்தகைய, விஷக்கிருமிகள் – கொஞ்சம் தாமதித்தாலும்,
சமூகத்தில் மோசமான எதிர்விளைவுகளை உண்டாக்கக்கூடியவை.

.
…………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to இது போன்ற வெறி’யர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் ….

  1. gnanasekaran சொல்கிறார்:

    kvm sir, எது மதவெறி ??? நேற்று தமிழக உள்ளாட்சி தேர்தலில், ‘நான் (முகம் தெரியும்) ஹிஜாப் அணிந்து வந்தேன். பாஜக ஆள் எதிர்க்கிறார் என்றார் ஆனால் அம்மணி உண்மையில் அணிந்து வந்தது (முகத்தை மூடிய) புர்க்காவை!
    ” முகம் தெரியாமல், அடையாளத்தை மறைப்பவர்களுக்கு வாக்காளர் அட்டை கிடையாது” என 2010 தீர்ப்பு உள்ளது. இது தெரியாமல் தேர்தல் ஆணையர், “இது மதச்சார்பற்ற நாடு, ஹிஜாப் அவரது உரிமை” என்று அரசியல்வாதி போல பேசுவது முட்டாள் தனத்தின் உச்சம் & நீதிமன்ற அவமதிப்பு!
    நீங்களும் மதவெறி , அப்படி இப்படி னு ஒரு சார்பாக பேசாதீங்க

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஞானசேகரன்,

      வாக்குப் பதிவு மையத்தில் நடந்த நிகழ்ச்சியின் வீடியோவை
      கீழே தந்திருக்கிறேன்….

      அந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட பெண்மணியும் நிற்கிறார்.
      அவர் முகத்தை மறைக்கவில்லை; அவரது முகத்தை
      அனைவரும் பார்க்க முடிகிறது..

      உங்கள் வெறி’யை மறந்து விட்டு பார்த்தீர்களானால்,
      உங்களுக்கும் தெரியும்.

      இதை ஒரு பெரிய பிரச்சினையாக எழுப்பிய பாஜக வேட்பாளரின்
      பிரதிநிதிக்கும், உங்களுக்கும் என்னால் ஒரு வித்தியாசத்தையும்
      காண முடியவில்லை.

      ‘மத வெறி’ கொண்டவர்களின் அறிவுரை –
      அவர் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி – எனக்கு தேவையில்லை;
      முதலில் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்…

      மத அபிமானம் வேறு; மத வெறி வேறு.

      மதவெறி கொண்டவர்களுக்கு நான் சொல்வது
      புத்தியில் உரைக்காது. அவர்கள் மீண்டும் மீண்டும்
      அதையே தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்…

      என்னைப் பொருத்தவரையில் நான் தெளிவாக இருக்கிறேன்.

      ‘மத வெறி’ கொண்டு இயங்குபவர்கள்,
      அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்,
      அடக்கப்பட வேண்டும்; தொடர்ந்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

      இது அரசின் கடமை…
      நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசும் மதவெறி
      கொண்டவர்களை திருப்திப்படுத்துவதற்காக,
      தன் கடமையிலிருந்து தவறுகிறது என்றே பொருள்.

      …………………

      .
      …………………

      • gnanasekaran சொல்கிறார்:

        ரொம்ப நன்றி சார், முஸ்லீம் சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்க கூடாது கேட்டால் மதவெறி என்று சொல்கிறீர்கள் , இந்து மத நம்பிக்கையை யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் , அரசாங்கம் சட்டம் இயற்றி மாற்றலாம் , குறிப்பாக தாலி போடக்கூடாது, பூநூல் போடக்கூடாது, பொட்டு வைக்க கூடாது , பூ , கம்மல் மூக்குத்தி அணிய கூடாது …. குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் வாழ்க மதசார்பற்ற இந்தியா

      • Tamil சொல்கிறார்:

        Super sir

  2. புதியவன் சொல்கிறார்:

    காமை சார்.. உங்க பதிவின் நோக்கம் மிகச் சரியானது. ஆனால் செய்திகள்ல இதைப்பற்றி அதாவது இப்படி ஒரு பயங்கரவாதி பேசினதை பெரிய விஷயமா எழுதினாங்களா? தொலைக்காட்சி விவாதம்? பப்பு பேசினாரா? அவர்தான் தமிழராச்சே. திமுக, அதன் எம்பிக்கள்? புளி? மின்னம்பலம்? திருவள்ளுவர் சர்மா.. தில்லி பல்கலை பேராசிரியர்? முத்தரசன் திருமா போன்றவங்க… சிறுபான்மையினர் வாக்கு என்று இவங்க இருக்கும்போது. பெரும்பான்மையினர் சார்பாக பேச பாஜக இருக்கு என்ற எண்ணத்தையும், anti BJP கும்பல் என்ன பேசினாலும் சாத்தான் வேதம் ஓதுது என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கவே முடியாது.

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    அவர் பேசினாரா, இவர் பேசினாரா என்று
    கேட்டு என் இடுகையின் நோக்கத்தை
    அநாவசியமாக மழுங்கடிக்காதீர்கள்.

    மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும்
    என் நோக்கத்திற்கு குந்தகம் விளைவிக்காதீர்கள்;

    எவர் கேட்டாலும், கேட்காவிட்டாலும்
    நான் நிச்சயம் கேட்பேன். நான் யாருக்கும் –
    எந்த கட்சிக்கும் – அடிமையுமல்ல;
    ஜால்ராவும் அல்ல.

    ஆதரிக்காதீர்கள் …. மதவெறியர்களை …
    அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக
    இருந்தாலும் சரி.

    கடுமை காட்டுங்கள்;
    சமூகத்திலிருந்து ஒதுக்கி வையுங்கள்;
    தேர்தல் வந்தால் ஆதரவு தராதீர்கள்;
    மத ஒற்றுமைக்கு விரோதமாக செயல்படும்
    எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காதீர்கள்.

    இந்தியா உருப்பட வேண்டுமென்றால் –
    முதலில் இந்த மதவெறி ஒழிக்கப்பட வேண்டும்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • gnanasekaran சொல்கிறார்:

      பெரியார் அவர்கள் கூட இந்த முக்காடு வேண்டாம் என்று பேசி இருக்கிறார் அதை பற்றி செய்தி வருகிறது , அவரை அவன் மதவெறியன் என்று உங்களால் சொல்ல முடியாது , பெரியார் ஆதரவை பேசினால் நடுநிலைவாதி , இந்து மத பழக்க வழக்கம் பற்றி பேசினால் மத சார்பின்மை , மற்ற மத பழக்கம் பற்றி பேசினால் வெறி ( என்ன நடுநிலை )

      • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        gnanasekaran,

        மூளைச்சலவை செய்யப்பட்டு, திரும்பத் திரும்ப
        தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு
        நான் இனியும் என்ன சொல்லி விளக்க முடியும்….?

        பெரியாருக்கும் தீவிர இந்துத்வா ஆசாமியாகிய
        உங்களுக்கும் என்ன சம்பந்தம்….? பெரியார்
        இந்து மதத்தையும், கடவுளையும் பற்றி சொன்னதை
        எல்லாம் நீங்கள் அறிவீர்களா….? ஏற்றுக் கொள்வீர்களா….?

        மதுரை வாக்குச்சாவடியில் நடந்தது குறித்து
        நீங்கள் எழுதியது அப்பட்டமான பொய் என்பதை
        நான் மேலே பின்னூட்டத்தில் பதிவு செய்திருக்கும் வீடியோ
        காட்டுகிறது…. உங்கள் தவறு வெளியாகியவுடன்,
        அதைப்பற்றி நீங்கள் மௌனம் சாதிக்கிறீர்கள்.

        உங்களை ஒன்று கேட்கிறேன் – அடுத்த மதத்துக்காரர்
        எதை அணிந்து கொண்டாலென்ன….
        அணியா விட்டாலென்ன….?
        அது முட்டாள்தனமான, மூட நம்பிக்கையாகவே
        இருந்துவிட்டுப் போகட்டுமே… அதைப்பற்றி நீங்கள்
        கவலைப்படுவது போல் காட்டிக்கொண்டு,
        ஏன் வீண் வம்பைக் கிளப்புகிறீர்கள்….?

        உங்கள் மத பழக்க வழக்கங்களை நீங்கள் தொடராதபடி
        யாராவது தடுக்கிறார்களா…? தடுத்தால், சட்டத்தின்
        உதவி உங்களுக்கு எப்போதும் உண்டு. இந்திய அரசியல்
        சட்டம் அதற்கு உத்திரவாதம் அளிக்கிறது.

        அனைத்து மக்களுமே, அடுத்த மதத்துக்காரர்களைப்பற்றி
        பேசுவதை விட்டு விட்டாலே போதும்… இங்கே அமைதி
        தன்னால் திரும்பி விடும்.

        அறியாமைக்கும், அசட்டுத்தனத்துக்கும்,
        வறட்டு பிடிவாதத்திற்கும் – என்னால் ஒன்றும் செய்ய
        முடியாது; ஒரே ஒரு ஆலோசனை சொல்வதைத்தவிர –

        உண்மையான இந்துவாக இருக்க விரும்பினால் –
        விவேகானந்தரை நிறைய படியுங்கள்… மீண்டும் மீண்டும்
        படியுங்கள்…. அவர் சொன்னதை எல்லாம்
        நன்கு புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
        அவர் சொன்னதை பின் பற்ற முயற்சி செய்யுங்கள்.
        அது உங்கள் தெளிவுக்கும், அமைதிக்கும்
        வளர்ச்சிக்கும் வழி கோலும்.

        கண்மூடித்தனமாக, சுயலாபம் கருதி
        மதவெறியை மேலும் மேலும் தூண்டி விடும்
        அரசியல்வாதிகளை ஒதுக்குங்கள்.

        மதம் வேறு; அரசியல் வேறு – என்பதை புரிந்து
        கொள்ளுங்கள்; இரண்டையும் இணைத்து
        பிழைப்பு நடத்துபவர்கள் சுயநலவாதிகள்
        என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

        நீங்கள் தெளிவு பெற வேண்டுமென்று
        உண்மையாகவே நான் விரும்புகிறேன்.

        இல்லை – எனக்கு எல்லாம் தெரியும்…
        நான் இப்படித்தான் இருப்பேன் என்று
        சொல்வீர்களேயானால், இனியும் நீங்கள்
        இந்த தளத்தில் பின்னூட்டம் எழுதும் தகுதியை
        இழக்கிறீர்கள் என்பதை உணருங்கள்;

        .
        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

    • gnanasekaran சொல்கிறார்:

      இந்தியாவில் 2 சட்டம் இருக்கிறது , 1. இந்து மதத்தை , இந்து மத வழக்கங்களை ஒழிப்பது இந்து மதத்திற்கு எதிராக பேசுபவர்களை கேள்வி கேட்க கூடாது , மதசார்பின்மை 2. மற்ற மதத்தை பற்றி கேள்வி கூடாது , கேட்டல் மத வெறியன் , அவர்கள் மதத்தில் அரசாங்கம் எந்த ஒரு சட்டம் கொண்டு வந்து மற்றம் செய்ய கூடாது ஆனால் இந்து மாதத்தில் மற்றம் கொண்டுவரலாம்

      • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        உளறலுக்கும் ஒரு எல்லை இருக்கிறது..

        இனியும் இங்கே வந்து இந்த மாதிரி எல்லாம்
        உளறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த இடத்தில் நான் இதை அவசியம் சொல்லியாக
    வேண்டும்…. விவேகானந்தரை மறந்து விட்டு,
    இந்து மதத்துக்காக வாதாடுகிறேன் என்று யாரும்
    பெருமை கொள்வதில் அர்த்தமில்லை;

    என்னைப் பொருத்தவரை, விவேகானந்தரை மறந்தவர்,
    இந்து மத கொள்கைகளையே அறியாதவர் என்று தான்
    சொல்ல வேண்டும்..
    —————————————————
    சுவாமி விவேகானந்தர் என்ன சொன்னார்….???

    ” I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true.
    I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. ”

    – Swami Vivekananda
    ——————————————
    Swami Vivekananda’s address to the World Parliament of Religions, Chicago on 11 September, 1893 .

    ——————————————————-

  5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இன்றைய (25/02/22) செய்தி –

    புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரகீம் மீது கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், இரு பிரிவினரிடையே வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்று அவரை கைது செய்தனர்.

    https://tamil.oneindia.com/news/chennai/indian-national-league-leader-tada-abdul-rahim-has-been-arrested-for-allegedly-trying-to-provoke-a-r/articlecontent-pf658372-449944.html

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.