அவுரங்கசீப் செய்த தவறுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ….?அமீரின் நியாயமான கேள்வி ….

……

……

பிரபல இயக்குநரும் , தயாரிப்பாளரும், நடிகருமான அமீர் –

‘இறைவன் மிகப் பெரியவன்’ –

-என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்
சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அமீர் பேசும்போது,
தன் உள்ளக்குமுறல்களை வெளிப்படையாக மனந்திறந்து
வெளியிட்டார்.

…………..

“நான் இஸ்லாமிய சமூகத்தில் இருந்து வந்தவன்.
அந்த சமூகம் தீவிரவாத சமூகமாக வேறு மாதிரி இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது…. இதற்கு முன்பு, நான் பருத்திவீரன்
ஆதிபகவன், ராம் என்று வேறுவகை படங்களை எடுத்தேன்.
அதில் எதிலும் என் சமூக கருத்தை சொல்லவில்லை…

ஏன்னா இன்றைய காலகட்டத்தில் வரக்கூடிய இயக்குநர்கள்
வந்த உடனே எதை அடையாளப்படுத்துகிறார்கள் என்றால்,
தான் சார்ந்து இருக்கக்கூடிய ஜாதி, மதம், அல்லது அரசை அடையாளப்படுத்துகின்றனர். இதுதான் இன்றைய சினிமாவின்
லேட்டஸ்ட் ட்ரெண்டாக இருக்கு. அதை நீங்க படத்தின் டைட்டிலில்
இருந்து கூட பார்க்கலாம்,

அதேபோல் நம் சமூகம் குறித்து நீங்கள் ஏன்
படம் எடுப்பது இல்லை என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள்…

எனக்கு இதுல பெரிய உடன்பாடு இல்லை.
ஆனால் இந்த காலகட்டம் நம்மை அதை நோக்கி
தள்ளி இருக்கிறது.

ஆனால் – ஒரு சினிமா எடுத்து தான், இந்த சமூகம் குற்றமற்ற சமூகம்
என்று சொல்ல வேண்டுமா … ? உலகின் ஏதோ ஒரு பகுதியில் பிறக்கும் குழந்தையின் மீது ஜாதி மதம் மொழி எல்லாம் திணிக்கப்படுகிறது..

அந்த குழந்தை, இந்த சமூகத்தில், அவற்றையெல்லாம்
சுமந்துகொண்டு ஓட வேண்டி இருக்கிறது… யாரும், இந்த வீட்டில்
தான் பிறக்கவேண்டும் என்று நினைத்து பிறக்கவில்லை…

நான் பிறந்ததற்கும், அவுரங்கசீபுக்கும் – என்ன சம்பந்தம்.. ?
ஏதோ ஒரு காலத்தில் அவுரங்கசீப் செய்த தவறு பற்றி இப்போது
என்னிடம் கேள்வி கேட்டால் நானென்ன செய்வேன்….? என்ன பதில் சொல்வேன்….?

பல விஷயங்களை தொடர்புபடுத்தி இந்த அரசியல் விளையாட்டு
நடக்கிறது. மறைந்த இயக்குனர் ஜனநாதன் ஒரு கம்யூனிஸ்ட்..
கரு பழனியப்பன் கடவுள் மறுப்பாளர்..
நான் ஐந்து வேளை தொழுகை செய்பவன்…
நாங்கள் ஒன்னாவே இருப்போம், ஒன்றாக சாப்பிடுவோம்,
எனக்கு பிராமண சமூகத்தை சேர்ந்த நண்பரும்
இருக்கிறார். நண்பர் விஜயகுமார் என்பவர் பிராமண சமூகத்தை தேர்ந்தவர்.

அவர் என் வீட்டுக்கு விருந்துக்கு வருவார், நான்
அவர் வீட்டுக்கு விருந்துக்கு செல்வேன். இதுல எங்கே இருக்கிறது
சாதி மதம்னு எனக்கு தெரியல. கரு பழனியப்பனும், ஜனநாதனும்
சாப்டுட்டு இருப்பாங்க, இருங்க நான் போய் தொழுதுவிட்டு வரேன்னு சொல்லிட்டு வந்து உக்காருவேன். இந்த புரிதலில் தான் இந்த சமூகம் இயங்குது,

நாங்கள் எல்லோரும் நட்பாக இருக்கிறோம்.
எங்களுக்குள் ஜாதி இல்லை; மதம் இல்லை; நல்ல புரிதல் மட்டும் இருக்கிறது.

நட்புடன் இருக்கும் உறவுகளை ஜாதி, மதம் மொழி நிறத்தை – வைத்து பிரிக்கிறார்கள். உலகத்திற்கு, இந்த தேசத்திற்கு, இந்த மண்ணுக்கு இதெல்லாம் தேவையே இல்லை.

நீ அரசியல் செய்கிறாயா செய் ;பணத்தை திருடு; பொய் பேசு;
உன் குடும்பம், உன் வாழ்க்கை நல்லா இருக்க
எது வேண்டுமானாலும் செய்.

அதுக்காக எங்களை ஏன் சாவடிக்கிற…? நாங்கள் இங்கே அண்ணன் தம்பியாக நல்லாத்தானே இருக்கிறோம்…. எங்களை பிரிக்க
நீ யார் …?

நாங்கள் இங்க நல்லா தான் இருக்கோம். அண்ணன் தம்பியா சந்தோஷமாத்தான் இருக்கோம். நீங்கள் பார்த்த நிகழ்வுகளைத்
தான் இந்த படத்தில் நான் கொண்டு வரவே போறேன், அதுதான்
‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படம் ” .

என் முதல் படத்தை தயாரித்தவர் கணேஷ் ரகு;
அவர் பிராமண சமூகத்தவர். வேதம் படித்தவர்..
அதற்குத் தகுந்த மாதிரி தலைமுடி வைத்திருப்பார்.
அவர் அமெரிக்காவில் இருக்கிறார்;

அவர் சென்னை வந்தால் காஞ்சிமடம் போய் சங்கராச்சாரியார்
அவர்களை பார்ப்பார்.
அடுத்து ‘பாய்’ வீட்டுக்கு போகலாம் என்று என் வீட்டிற்கு வருவார்.
அந்த நட்பு 20 ஆண்டுகளாக தொடர்கிறது…

இதை தொடர்வதில் யாருக்கு என்ன நஷ்டம்…?

……………….

பின் குறிப்பு – என்னால் அமீரின் குமுறல்களை நன்றாக
புரிந்து கொள்ள முடிகிறது…. மனசாட்சியை மதிப்பவர்கள்,
எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு
இது நன்றாகப் புரியும்.

இந்தப் புரிதல் மட்டும் – இந்த மாபெரும் தேசத்தின் வாசிகள்
அனைவருக்கும் இருந்தால், இந்த நாடே சொர்க்கமாக இருக்கும்.

புரிதல் அனைவருக்கும் வரவேண்டுமென்று வேண்டுவோம்…

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to அவுரங்கசீப் செய்த தவறுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ….?அமீரின் நியாயமான கேள்வி ….

  1. புதியவன் சொல்கிறார்:

    இந்தக் கருத்தைச் சொன்ன அமீர் பல்வேறு சமயங்களில் எப்படிப் பேசியிருக்கிறார் என்று பார்த்தால், இப்போதைய அவரது போலி முகம்/கருத்து தெரியும்.

    இந்தச் சமூகம் பிளவுபட்டதற்கு யார் காரணம் என்பதையும் அவரே சொல்லியிருக்கலாம்.

    • gnanasekaran சொல்கிறார்:

      சரியாக சொன்னீர்கள் புதியவன் sir, முஸ்லீம் சொன்னால் இப்படி கட்டுரை எழுதி சமத்துவம் பேசுவார்கள் , இதே ஒரு இந்து ku இப்படி பேச மாட்டார்கள்

  2. gnanasekaran சொல்கிறார்:

    இந்து மதத்தை பற்றி , மூட நம்பிக்கை பற்றி பேசி கேலி செய்வார்கள் முற்போக்குவாதி என்கிற போர்வையில், அனால் முஸ்லீம் மதத்தில் உள்ள மூட நம்பிக்கை பற்றி பேசமாட்டார்கள் ( ஹிஜாப் )

  3. gnanasekaran சொல்கிறார்:

    அமீர் அவர்கள் , ஆப்கானிஸ்தான் விஷயத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாக பேசியவர், குறிப்பாக சேரன் அவர்களை பற்றி கேவலமா பேசினார்கள் (ஆப்கானிஸ்தான் பெண் இயக்குனர் தாலிபான்களுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பை பதிவு செய்தார் , சேரன் அவருக்கு ஆதரவு கொடுத்தார் என்கிற காரணம் )

  4. சதாசிவம் சொல்கிறார்:

    அருமைதான் ,
    மதமாற்றங்கள் , முயற்சிகள் , தகிடுதத்தங்கள் ஒழியும் பொழுது, நிச்சயம் இங்கு சமத்துவம் பிறந்துவிடும் .
    ஆனால் அவர்கள் விடுவதாக இல்லையே, மதமாற்ற முயற்சிகளுக்கு அங்கீகாரத்துடன் கூடிய மத சமத்துவத்தை எதிர்பார்க்கிறார்கள் போலும் ….

  5. Vicky சொல்கிறார்:

    It could have started with political parties trying to please a particular section of the people based on religion when it was not required. What is your view on which party had started this? But I do not think the majority in the country still worries about this.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.