மீண்டும் ஒரு கொள்ளை – 22,842 கோடி…. தெரிய வந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடவடிக்கை …..இதில் எங்கே தாமதம் என்று கேள்வி வேறு கேட்கிறார்கள்…!!!!


மேலே இருப்பது தற்போதைய செய்தி –

கீழே இருப்பது 2017-ல் வெளிவந்த செய்தி …..

……

மும்பையில் தலைமையகத்தை வைத்துக் கொண்டு,
குஜராத்’தில் இயங்கும் ஒரு நிறுவனம் ABG ஷிப்பிங்.

1985-லேயே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இது
தீவிரமாக செயல்படத் துவங்கியது குஜராத்தில்
சூரஜ் மற்றும் தாஹெஜ் துறைமுகங்களில் இயங்க
2005-ஆம் ஆண்டு வாக்கில் கிடைத்த அனுமதிகளுக்கு
பிறகு தான்… இதன் வளர்ச்சிக்கு குஜராத் அரசு பெரிதும்
உதவியாக இருந்தது.

இதன் முக்கிய நிறுவனர்கள் –

-Rishi Agarwal (Chairman)
Ram Swaroop Nakra (Managing director)
DP Gupta (Vice president)
Subas Gantayat (Vice president)

நிறைய அளவில் உற்பத்தி மற்றும் ரிப்பேர் ஆர்டர்களை
பெற்று, பெரிய அளவில் நன்றாகவே இயங்கித்தான் வந்தது.
ஆனால், சொந்த முதலீடு மிகக்கொஞ்சமாகவும், பங்கு விற்பனை
மற்றும் வங்கிக்கடன்கள் மூலம் பெரிய தொகைகளை பெற்றும்
இயங்கி வந்தது என்பது பிற்பாடு தெரியவந்த செய்தி.

நன்றாக இயங்கி வந்த ஒரு நிறுவனம் இன்றைய தினம்,
நிர்வாகிகளின் மீதான மோசடி குற்றங்களுக்காக –
சிபிஐ விசாரணையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.

வங்கிகளிலிருந்து பெற்ற சுமார் 22,842 கோடி ரூபாயை –
வாங்கிய காரணங்களுக்காக பயன்படுத்தாமல், வேறு விதங்களில் பயன்படுத்தியதாகவும், கையாடல் செய்து விட்டதாகவும், அதன் விளைவாக, வங்கிக் கடன் தவணைகள் திரும்ப செலுத்தப்படாமல் –

NPA (Non Performing Assets) வகையில் சேர்க்கப்பட்டு,
வங்கிகளின் கூட்டமைப்பால், மேல் நடவடிக்கைகளுக்கு பரிந்துரை
செய்யப்பட்டது. விளைவு, தற்போது இந்த கம்பெனி திவால் நடவடிக்கைகளுக்கும் உட்பட்டிருக்கிறது…. ( இன்சால்வன்சி )…

சிபிஐ நிதானமாக – எல்லா ஆயுவுகளையும் முடித்த பிறகு –

  • குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு,
    முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, நடவடிக்கை
    மேற்கொள்ளப்பட்டிருக்கிறது….

இன்னொரு பக்கம் இன்சால்வென்சி நடவடிக்கைகள் துவக்கம்.
22,842 கோடி கடன் உள்ள கம்பெனியை, அதே நிறுவனர்களின்
பினாமிகள் யாராவது, குறைந்த விலைக்கு ஏலத்தில்
அள்ளிக்கொண்டு போய் விடுவார்கள் என்பதை பழைய
அனுபவங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்….

இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு, எதாவது அரசியல்
பின்னணி உண்டா என்பது தெரியவில்லை. மேல் நடவடிக்கைகள்
இவ்வளவு தாமதப்படுத்தப்பட்டதற்கும், அரசியல் காரணங்கள்
எதாவது உண்டா என்பது தெரியவில்லை;

ஆனால், அரசியல்வாதிகள் மற்றும் சீனியர் அதிகாரிகளின் துணையும், ஆசியும் இல்லாமல் –
இவ்வளவு பெரிய கொள்ளையும், இவ்வளவு காலதாமதமும்
சாத்தியமா…..?

இந்த மோசடி கும்பலில் – எத்தனை பேர் இன்னும் இந்தியாவில் இருக்கின்றனர்…. எத்தனை பேர் விஜய் மால்யா போல் ஏற்கெனவே தப்பியோடி விட்டனர் என்பது தெரியவில்லை; இதுவரை ஒருவரையும் கைது செய்ததாக தகவல் இல்லை.

வழக்கின் முழு விவரங்களையும் live mint – தெளிவாக
தந்திருக்கிறது… வாசகர்களின் உதவிக்காக – கீழே தருகிறேன்.

………………………

₹22,842 cr bank fraud: ABG Shipyard’s liquidation
on as per NCLT process: SBI

Updated: 13 Feb 2022,
Livemint
The CBI has booked ABG Shipyard Ltd and its then
Chairman and Managing Director Rishi Kamlesh
Agarwal along with others for allegedly cheating
a consortium of banks led by SBI of over ₹22,842
crore..

Listen to this article
On the alleged fraud of ₹22,842 crores by ABG
Shipyard Ltd, India’s largest state-owned bank
State Bank of India said in a statement today
that the account is presently undergoing
“liquidation under an NCLT driven process”, and
that at no point in time, there was “any effort
to delay the process”.

“The lender’s forum diligently follows through
with CBI in all such cases,” SBI said. ABG
Shipyard has been accused of diversion of funds, misappropriation, and criminal breach of trust
by the consortium of banks.

Also read: Biggest fraud: CBI books ABG Shipyard, ex-MD for cheating banks of ₹22,842 cr.

The CBI has booked ABG Shipyard Ltd and its then
Chairman and Managing Director Rishi Kamlesh Agarwal along with others for allegedly cheating a
consortium of banks led by SBI of over ₹22,842 crore, news agency PTI reported on Thursday.

ABG Shipyard loan account became NPA – in 2013.

Talking about the chronology of the case, SBI said
ABG Shipyard, which was incorporated on 15 March
1985, has been under banking arrangements since

  1. “Financed under consortium arrangement over
    a two dozen lenders. The leader in Consortium was
    ICICI Bank. Due to poor performance, the account
    became NPA on 30/11/2013. Several efforts were made
    to revive the company operations but could not
    succeed,” a statement from the biggest state-owned
    bank said.

The company’s loan account was restructured under
the CDR mechanism in March 2014 by all lenders,
said SBI, adding that the shipping industry was
going through a downturn, one of the worst ever
seen, and the operations of the company could not
revive.

As per the SBI, after the restructuring failed,
the ABG Shipyard’s account was classified as NPA
(non-performing asset) in July 2016, with
backdated effect from 30th Nov. 2013 (3 வருடங்களுக்குப்
பிறகு) . E&Y was appointed as forensic auditor by
lenders during April 2018 (அவ்வளவு சீக்கிரமாகவா…!!!)
and they submitted their report on January 19.

ICICI Bank was the lead banker: SBI

SBI has said that although ICICI Bank was the
lead lender in the consortium and IDBI was the
second lead, it was preferred that SBI being
the largest PSB lender, lodges the complaint
with CBI. “The first complaint was filed with
CBI in Nov 2019. There was a continuous engagement between CBI and Banks and further information
was getting exchanged,” it added.

Company undergoing liquidation: SBI

SBI has said the circumstances of the fraud,
as well as CBI requirements, were further
deliberated in the various meetings of joint lenders
and a fresh and comprehensive second complaint
was filed in Dec. 2020 (மீண்டும் ஒரு ரிப்போர்ட்…!!!)
“The account is presently undergoing liquidation
under an NCLT driven process,” it added.
(டிசம்பர் 20 -பிப்ரவரி 22 – இன்னமும் process undergoing தான்….)

How fraud is declared by banks:

A fraud is declared basis the Forensic Audit report findings that are discussed thoroughly in joint
lenders meetings. Typically, when fraud is declared,
an initial complaint is preferred with the CBI,
and based on their enquiries further information
is gathered.

In a few cases, when substantial additional
information is gathered, a second compliant
incorporating full and complete details is filed
which forms the basis for the FIR.

( https://www.livemint.com/industry/banking/abg-shipyard-bank-fraud-sbi-says-liquidation-on-as-per-nclt-process-no-delay-11644753934109.html )

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.