கடற்படை Band வீரர்கள் நடனமாடும் -R.D.பர்மனின் “மோனிகா ஓ மை டார்லிங்” band music….

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாடப்படும்
ஜனவரி 26-ந்தேதி சமயத்தில், டெல்லியில் குளிரும் பனியும்
பிய்த்து உதறும். உடல், கை, கால் – எல்லாம் நடு நடுங்கும் …
( நான் ஒரு ஜனவரி – நேரில் பார்த்து அனுபவித்திருக்கிறேன்…)

அணிவகுப்பிற்கான “ரிஹர்சல்”கள் ஒரு வாரம் முன்னதாகவே
துவங்கி விடும்…டெல்லி விஜய் சவுக்’கில் ரிஹர்சல்களை
பார்க்கவென்றே மக்கள் நிறையபேர் கூடுவர்….

முக்கியமான காரணம் – விழாவன்று, பரேடில் – ரொம்ப
டிசிப்ளினோடு அணிவகுத்து செல்லும் படைப்பிரிவுகள் –

  • ரிஹர்சலின்போது, ஜாலி மூடில் இருப்பார்கள்…
  • அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, பிரபல ஹிந்தி
    திரைப்பட பாடல்களும் வாசிப்பில் இடம்பெறும்.

– இந்த வருட கொண்டாட்டத்திற்காக ரிஹர்சல்
செய்துக்கொண்டிருக்கும், படையினர்-பேண்டு பிரிவு,

அந்தக் காலத்தில் மிகவும் பாப்புலராக இருந்த –
“கேரவன்” என்கிற ஹிந்தி படத்தில் R.D.பர்மனின்
இசையமைப்பில் வந்த “மோனிகா -ஓ- மை டார்லிங்”
என்ற பாடலை வாசித்து ஆடிய காட்சி, காணொலியாக
வந்திருக்கிறது….

நண்பர்களும் கண்டு ரசிக்க – கீழே தந்திருக்கிறேன்.
அதற்கு கீழே சென்ற வருடம் (2021) ஜனவரியில்
நடந்த ரிஹர்சலின் வீடியோ….

………..

.
…………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.