திஹார் ஜெயிலில் – இத்தனை ஃப்ராடு வேலை பண்ண முடியுமா….???

( ஓரு சினிமா நடிகையுடன் – திருட்டுப்பயல் எடுத்துக்கொண்ட செல்பி ….!!! )

முதலில் ஒரு சுவாரஸ்யமான, மிக சுவாரஸ்யமான
திருட்டுப்பயலின் நிஜ (???) கதை…. நம்முடைய பேச்சை அதற்குப்
பின்னர் வைத்துக்கொள்வோம்…


“அமித்ஷா தான் சொன்னாரு”.. ஜெயிலிலிருந்தே
ரூ.200 கோடி பறித்த தில்லாலங்கடி சுகேஷ்.. திகில் திகார்
December 18, 2021, 10:33 [IST]
Google Oneindia Tamil News

பெங்களூரு: ஜெயிலுக்குள்ளிருந்து, உள்துறை அமைச்சர்
அமித்ஷாவின் பெயரை பயன்படுத்தி, செல்போனில் பேசி
பேசியே 200 கோடி ரூபாய் வரை பண வசூல் செய்துள்ளார்
சுகேஷ் என்ற மோசடி மன்னன்.

பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர்…
மோசடி பேர்வழி.. இவர் மீது பல்வேறு மாநிலங்களில்
30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

தமிழ்நாட்டிலும் தன் வேலையை காட்டியவர்.. இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்றுத்தர ரூ 50 கோடி
லஞ்சம் வாங்கி மோசடி செய்துள்ளார்..

சிறையில் இருந்தபடியே.. ரூ 200 கோடியை சுருட்டிய கில்லாடி
சுகேஷ் சந்திரா..
……………

இவர் சில மோசடி வழக்குகளில் கைதாகி டெல்லி திகார்
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்… அவருக்கு உடந்தையாக
இருந்தது, இவருடைய காதலியும் நடிகையுமான லீனா மரியா என்பவர்தான். இப்போது விஷயம் என்னவென்றால்,
வெளியில் மோசடி செய்துவிட்டுதான் ஜெயிலுக்கு போயுள்ளார்,
ஆனால், ஜெயிலுக்குள்ளிருந்தே ஸ்கெட்ச் போட்டு 200 கோடி
ரூபாய் வரை பணத்தை கறந்துள்ளார்.. இது தொடர்பான செய்திகள்தான் கடந்த 2 நாட்களாகவே வெளியாகி பரபரப்பை
தந்து வருகிறது.

போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முன்னாள் டைரக்டர்
ஷிவிந்தர் சிங் என்பவர் கைதாகி ஜெயிலில் உள்ளார்..
இவரை ஜாமீனில் வெளியே எடுக்க வேண்டும் என்று இவரது
மனைவி அதிதி சிங் முயற்சி செய்து வருகிறதார்.. ஆனால்,
அதற்குள் ஷிவிந்தர் சிங்கை ஜெயிலுக்குள்ளேயே சந்தித்து
பேசியுள்ளார் சுகேஷ்..

ஜாமீன் வாங்கி தந்தால், தனக்கு பணம் தர வேண்டும் என்று ஜெயிலுக்குள்ளிருந்தே, ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி
சிங்குடனும் பேசியுள்ளார்..

அப்போதுதான் தன் குரலை மாற்றி கொண்டு பேசியிருக்கிறார்.. இதற்காகவே உள்ள சாப்ட்வேரை பயன்படுத்தி குரல் மாற்றி பேசியிருக்கிறார்.. தான் மத்திய அமைச்சரக அதிகாரி என்று சொல்லி உள்ளார்.. அதாவது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் உதவியாளர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அலுவலக ஊழியர் என ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு பெயரில் குரலை மாற்றி பேசி உள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரியான அஜய்
பல்லாவிடமும், சட்டத்துறை செயலாளராக அனூப்பிடமும் பேசியிருக்கிறேன்.. அவர்கள் இதை பற்றி உங்களுக்கு சொல்வார்.. அதேமாதிரி, இந்த கோரிக்கையை உள்துறை அமைச்சரிடமும் எடுத்து சொல்கிறேன்..
அதற்கு சரியான நேரம் வரும்.. உள்துறை அமைச்சர்,
உங்களை நேரில் அழைத்து உங்களுடன் பேசும்படி என்னிடம் சொன்னார்” என்றெல்லாம் அதிதியிடம் சுகேஷ் பேசியிருக்கிறார்.

அதிதியும் இவர் சொல்வதை எல்லாம் நம்பி கொண்டு,
கிட்டத்தட்ட 200 கோடி வரை சுகேஷூக்கு பணம் அனுப்பி
யிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த ஜுலை மாதம்
அதிதி சிங்கை அமலாக்கத்துறையினர் சந்தித்தபோது,
சுகேஷ் பற்றி கூறியுள்ளனர்.. அதை கேட்டு அதிதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.. நடந்ததை எல்லாம் அவர்களிடம் சொல்லவும், உடனடியாக அதிதியிடம் பேசிய ஆடியோ ரிக்கார்ட் எடுக்கப்பட்டது.. 80க்கும் மேற்பட்ட ஆடியோ கிடைத்தது..
எல்லாமே ஜெயிலில் இருந்துதான் சுகேஷ் பேசியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட அதிகாரிகளின் உண்மையான
செல்போன் நம்பரில் இருந்து, அழைப்பது போல் மோசடி
செய்துள்ளார்… ஒருகட்டத்தில் உண்மை தெரிந்துவிட்டது
என்று தெரிந்ததும், அதிதி குடும்பத்தினரை மிரட்டவும் செய்திருக்கிறார்..

இறுதியில் அதிதி இது தொடர்பாக போலீசில் புகார் தந்துள்ளார்..
“நான் அவர்களுக்கு 200 கோடியைக் கொடுத்தேன், என் நகைகள், முதலீடுகள் மற்றும் பிற சொத்துகளை பயன்படுத்தினேன்.
அப்போதும், மிரட்டல் தொடர்ந்தது. அவர்கள் வெளிநாட்டில்
படிக்கும் என் குழந்தைகளை சுட்டிக்காட்டியபடியே இருந்தார்கள்”
என்று புகாரில் கூறியுள்ளார்.

உண்மையிலேயே இந்த சுகேஷ் விவகாரத்தில், எந்த
அதிகாரிகளுக்கும் தொடர்பில்லை.. ஆனால் ஜெயிலுக்குள்ளிருந்தே, அவர்கள் பெயர்களை பயன்படுத்தி, செல்போனில் பேசி ஒரு பெண்ணிடம் 200 கோடி ரூபாயை பறித்துள்ளார் இந்த வசூல் மன்னன் சுகேஷ்.. இவ்வளவும் செய்த சுகேஷ் வெறும் பிளஸ் 2 தான் படித்துள்ளார் …!!!

………………………………

ரூ.200 கோடி மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைது
செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், தன்னை
ஜெயலலிதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறி
நடிகை ஜாக்குலினிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது தெரியவந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியை மிரட்டி
ரூ.200 கோடியைப் பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகரும், அவரின்
மனைவி லீனாவுடன் கூட்டாளிகள் சிலர் இணைந்து
ஏராளமானோரிடம் சட்ட அமைச்சகத்தின் உயரதிகாரி
என்று கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை சுகேஷ்
சந்திரசேகர் ஏராளமான பொய்களைச் சொல்லி தனது
வலையில் விழவைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சுகேஷ் சந்திரசேகர் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில்,
சமீபத்தில் அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்துள்ளது. அதில் சுகேஷ் சந்திரசேகர் எப்படியெல்லாம்
நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிடம் பொய் சொல்லி,
தனது வலையில் விழவைத்தார் என்பது குறித்து
அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிடம்
அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இரண்டு முறை வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அவர் கொடுத்த தகவலின்படி, முதன்முதலில் சுகேஷ் தன்னை சந்திரசேகர் ரத்னவாலா என்று ஜாக்குலினிடம் அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார். அதோடு தான் சன் டி.வி உரிமையாளர் என்றும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஜாக்குலினைத் தொடர்புகொள்ள சுகேஷ் பல முறை முயற்சி மேற்கொண்டார்.

2020-ம் ஆண்டில் டிசம்பரில் இருந்து 2021ம் ஆண்டு, ஜனவரி
வரை ஜாக்குலின் நம்பருக்குப் பல முறை போன் செய்துள்ளார்.
ஆனால் ஜாக்குலின் தெரியாத நம்பர் என்பதால் போனை எடுத்துப் பேசவே இல்லை. இதையடுத்து ஜாக்குலினின் மேக்கப் கலைஞர்
ஷான் என்பவருக்கு அரசு அதிகாரி ஒருவர் போன் செய்து,
சந்திரசேகர் மிகவும் முக்கியமான நபர் என்பதால் அவரிடம்
ஜாக்குலின் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும்,
சந்திரசேகர் ஜாக்குலினிடம் பேச விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஜாக்குலின் சந்திரசேகரின் போனை எடுத்துப் பேசினார். அவர் தன்னை சன் டி.வி உரிமையாளர் என்றும்,
தான் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், தான் உங்களின் தீவிர
ரசிகன் என்றும், தென்னிந்திய மொழியில் உங்களை வைத்துப்
படம் எடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதோடு ஜாக்குலினின் மேக்கப் கலைஞருக்கு மத்திய அமைச்சர்
அமித் ஷாவின் அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறி ஓர்
அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சேகர் என்ற சுகேஷ்
சந்திரசேகர் அரசாங்கத்துக்கு மிகவும் முக்கியமான நபர்
என்றும், அவரிடம் தொடர்பில் இருக்கும்படியும் கேட்டுக்
கொண்டார். ஆனால் அமலாக்கத்துறையின் விசாரணையில்
அமித் ஷாவின் அலுவலகத்திலிருந்து வந்த போன் அழைப்பு
சுகேஷ் சந்திரசேகர் ஏற்பாட்டில் அவரின் கூட்டாளிதான் போன் செய்திருப்பது தெரியவந்தது.

அதோடு மூன்று ஆடம்பர பேக், இரண்டு ஜிம் ஆடைகள்,
இரண்டு ஜோடி ஷூக்கள், இரண்டு ஜோடி வைரக் காதணிகள்,
இரண்டு பிரெஸ்லெட் போன்றவற்றையும் ஜாக்குலினுக்கு
சுகேஷ் சந்திரசேகர் பரிசாக கொடுத்திருப்பது ஜாக்குலினிடம்
நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுகேஷ் கொடுத்த காரை திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும்
ஜாக்குலின் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் சுகேஷ் கைதுசெய்யப்படும் வரை அடிக்கடி ஜாக்குலினுடன் அவர் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுகேஷ் சந்திரசேகரிடம் 1.5 லட்சம் டாலர் அளவுக்கு ஜாக்குலின்
கடன் பெற்றிருப்பதும், ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை,
ரூ.9 லட்சம் மதிப்புள்ள இரண்டு பூனைக்குட்டிகளும்
சந்திரசேகரிடம் ஜாக்குலின் பரிசாகப் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்படி செய்திகளுக்கான அடிப்படை –

https://tamil.oneindia.com
https://www.vikatan.com/news

https://www.indiatoday.in/interactive/immersive/oh-jacqueline-how-did-you-land-in-this-mess-jaqueline-and-shekhar-news/

.
……………………………………..

டெல்லி தொலைக்காட்சிகளில் இந்த திருட்டுப்பயலைப்பற்றிய
பல செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன….

நமக்கு பல கேள்விகள் எழுகின்றன —

  • Maximum Security Prison – உச்சபட்ச பாதுகாப்புடன்
    உள்ள சிறைச்சாலை என்று அழைக்கப்படும் இந்த சிறை
    ஆசியாவிலேயே பெரியது….
  • ஏறக்குறைய 17,000 குற்றவாளிகள் இந்தச் சிறையில்
    அடைக்கப்பட்டிருக்கிறார்கள்….
  • இந்த சிறை – is Run by Department of Delhi Prisons, Government of Delhi.
  • நாட்டின் தலைநகரில், மிகக்கடுமையான பாதுகாப்புக்கு
    இடையே இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு சிறைச்சாலையில்
    இருந்துகொண்டு, வெறும் ப்ளஸ் 2 வரை மட்டுமே படித்த
    ஒரு 30-32 வயது இளைஞன் – இவ்வளவு துணிகரமான
    செயல்களை எப்படி நிகழ்த்த முடிந்தது….?

  • முதலாவதாக ஜெயிலுக்கு உள்ளே இருந்தபடி இத்தனை
    டெலிபோன் உரைகளை எப்படி நிகழ்த்த முடிந்தது…?
  • உள்துறை அமைச்சகம், சட்டத்துறை அமைச்சகம் – போன்ற
    மிக முக்கியமான மத்திய அரசு இலாகாக்களின் டெலிபோன்
    எண்களும், அவற்றைச் சேர்ந்த முக்கியமான அதிகாரிகளின்
    பெயர்களையும் இவன் பயன்படுத்தி இருக்கிறான்… இந்த
    விவரங்கள் இவனுக்கு எப்படி கிடைத்தன….?
  • இவன் செய்யும் தொலைபேசி அழைப்புகள், அந்த
    இலாகாக்களிடமிருந்து வரும் எண்களைக் கொண்டதாக
    இருக்கும்படி மாற்றக்கூடிய software -யையும் இவன்
    பயன்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
  • மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், சமீபத்தில் அமலாக்கப்
    பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலிருந்து
    கிடைத்ததாக பத்திரிகை/தொலைக்காட்சி செய்திகள்
    சொல்கின்றன…. அப்படியானால், திஹார் ஜெயிலில்
    இருந்துகொண்டே – இவனால் இத்தனை மோசடி வேலைகளையும்
    செய்ய முடிந்தது என்று ஒப்புக்கொள்கிறார்களா….?
  • இத்தகைய மோசடிச் செயல்களை அவன் திஹார் ஜெயிலில்
    இருந்துகொண்டே செய்தான் என்பது உண்மையென்றால் –
    ஜெயில் நிர்வாகத்தில் இருக்கும் உயர்ந்த அதிகாரிகளின்
    துணையுடன், ஒத்துழைப்புடன் தானே அவன் இவற்றைச்
    செய்திருக்க முடியும்….?
  • அந்த அதிகாரிகள் யாரென்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு
    விட்டார்களா…? அவர்கள் யார்…? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை
    ஏதும் எடுக்கப்படவில்லை…? அவர்களின் பெயர்கள் ஏன்
    வெளியிடப்படவில்லை….?
  • ஒரு திருட்டுப்பயல், ஜெயிலில் இருக்கும் ஒரு தொழிலதிபரை
    வெளியில் விட ஏற்பாடு செய்வாதாகச் சொல்லி –
    அதை வைத்து 200 கோடி ரூபாய் வரை கறந்திருக்கிறான் என்று
    சொல்கிறார்கள்….
  • இதில் சில விஷயங்கள்… இந்த அளவிற்கு பணம் கொடுக்க,
    அந்த தொழிலதிபரின் மனைவியிடம் நியாயமான முறையில்
    சம்பாதிக்கப்பட்ட பணம் இருந்ததா…?
  • அந்தப் பணம் யார் மூலம், யாருக்கு – கைமாறியது….???
    அந்தக் கூட்டாளிகளின் பெயர் ஏன் வெளிவரவில்லை…???
  • இவ்வளவு கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்தது
    அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறையின்
    பார்வைக்கு வராமல் போனது எப்படி…? அல்லது அங்கும்
    கருப்பு ஆடுகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனவா…?
  • இந்த முழுவிவரங்களும் திரட்டப்பட்டு விட்டனவா…?
    ஆம் என்றால், வெளியிடுவதில் என்ன தயக்கம்… ???
  • இல்லை என்றால், அந்த விவரங்கள் இல்லாமல் இந்த வழக்கு
    கோர்ட்டில் எப்படி நிற்கும்….? ( அல்லது நிற்க வேண்டாம்
    என்பது தான் சம்பந்தப்பட்டவர்களின் நோக்கமா….? )
  • மிகப்பெரிய புரியாத புதிராக இருக்கும் இந்த வழக்கு பற்றிய
    முழு விவரங்களும் அரசுபூர்வமாக இதுவரை வெளி வரவில்லை; மீடியாக்களும் அவற்றை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் இறங்கவில்லை என்பது பலவித சந்தேகங்களையும், யூகங்களையும் உருவாக்கவே துணை போகின்றன அல்லவா…?

திஹார் சிறைக்கு பொறுப்பானவர்களிடமிருந்து
அதிகாரபூர்வமான செய்திகள் எப்போது வெளிவரும்…..?
வெளியிடுவதில் அவர்களுக்கென்ன பிரச்சினை….?

.
……………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.