
ஒரு சுவாரஸ்யமான நிஜ திருட்டுக்கதை …….
ஒரு ஹோட்டல் நிறுவனத்துக்கு பொதுத்துறை வங்கி
ஒன்று 24 கோடி ரூபாயை கடனாக வழங்குகிறது
அந்தக் கணக்கு அடுத்த மூன்று ஆண்டுகள் செயல்படாமல்
இருந்ததனால் வட்டித் தொகை அதிகரித்து கொண்டே போகிறது.
அசலும் தரப்படவில்லை; வட்டியும் திருப்பித் தரப்படவில்லை.
இதை காரணமாகக் காட்டி, அந்தக் கணக்கு
வாராக்கடன் பட்டியலில் இணைக்கப்படுகிறது.
வாராக்கடன்களின் எண்ணிக்கையை கூறி அடிக்கடி
கடும் விமரிசனங்கள் எழுவதால்,
திரும்ப வராத கடன்களை, வந்து விட்டதாக காட்டி, கணக்கை
முடித்து வைக்க அருமையான ஒரு வழி, கொஞ்ச காலம் முன்பு
கண்டு பிடிக்கப்பட்டது.
வாராக்கடன்களை, கொஞ்சம் தள்ளுபடி தந்து,
அடமானச் சொத்துக்கான உரிமத்துடன்,
எதாவது ஒரு விலை சொல்லி, பிரைவேட் நிறுவனங்களிடம்
விற்று விடுவது. அந்த தொகையை வாராக்கடனுக்கு எதிரான
வரவாக காண்பித்து, கணக்கை நிரந்தரமாக மூடி விடுவது.
இதில் எவ்வளவு தள்ளுபடி செய்வது, எந்த நிறுவனத்திற்கு
விற்பது என்பதிலெல்லாம், கடன் கொடுத்த
வங்கியின் சீனியர் அதிகாரிக்கு நிறைய சுதந்திரம் உண்டு.
இப்போது ஒரு நிஜக்கதைக்கு வருவோம்….
2007-இல் கர் ரஜ்வாடா என்கிற ஹோட்டல் நிறுவனத்துக்கு
பாரத ஸ்டேட் வங்கி ரூ.24 கோடி கடனாக வழங்கியது.
அந்தக் கணக்கு அடுத்த மூன்று ஆண்டுகள் செயல்படாமல்
இருந்ததனால் வட்டித் தொகை அதிகரித்தது.
அசலும், வட்டியும் திருப்பித் தரப்படவில்லை. இதை
காரணமாகக் காட்டி, 2010 ஜூன் மாதம் அந்தக் கணக்கு
வாராக்கடன் பட்டியலில் இணைக்கப்பட்டது.
கர் ரஜ்வாடா ஹோட்டல் நிறுவனத்துக்கு வழங்கிய கடன்
வசூலாகாமல் போனதன் பின்னணியில், அல்கெமிஸ்ட்
என்கிற கடன் மீட்பு நிறுவனத்துக்கு கர் ரஜ்வாடா ஹோட்டல்
சொத்து 2016 மார்ச் மாதம் ரூ.25 கோடிக்கு வழங்கப்படுகிறது.
இந்த விற்பனையின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள
கர் ரஜ்வாடா ஹோட்டல் நிறுவனத்துக்கு சொந்தமான
சொத்துகள் வெறும் 25 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த
முடிவு, செயல்பாடுகள் எடுக்கும் பொறுப்பில் இருந்த பாரத ஸ்டேட்
வங்கியின் வங்கி தலைவர் , 2013 செப்டம்பர் 30 அன்று பணி ஓய்வு
பெற்று -2014 அக்டோபர் மாதம், 200 கோடி ரூபாய் சொத்தை
25 கோடிக்கு தான் விற்ற அதே அல்கெமிஸ்ட் கடன் மீட்பு
நிறுவனத்தின் “இயக்குநர்” ஆகிறார்….!!!
திவால் சட்டம் கொண்டுவரப்பட்டதும், கடன் மீட்பு நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டதும் பல முறைகேடுகளுக்கு
வழிகோலப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், நலிவடைந்த குறு, சிறு,
நடுத்தர தொழில் நிறுவனங்கள்
இழப்பிலிருந்து மீண்டு செயல்படுவதற்கு பதிலாக –
சுயநலமிக்க வங்கி அதிகாரிகளால் விலை பேசப்படும் அவலமும்
ஏற்பட்டிருக்கிறது. கடன் தொகையில் 90% வரையிலான தள்ளுபடி
(ஹேர் கட் ) செய்யப்படுவது அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில்
நாடுதழுவிய அளவில் முறைகேடுகள் நடைபெறுவதும்,
கடன் மீட்பு நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதும்
பரவலாகியிருக்கிறது என்று செய்திகள் சொல்கின்றன.
முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அரசு அதிகாரிகள் –
பணி ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகளுக்கு தனியார் துறையில்
பணிக்கு சேரக் கூடாது என்கிற விதிமுறை,
பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளுக்கும்
விதிக்கப்படுமேயானால் இந்த அவலம் ஓரளவாவது
குறையக்கூடுமோ …?
.
………………………………………………………
பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு புத்திசாலித்தனமோ எப்படித் திருடலாம் என்பதோ தெரியாது. அதனை விளக்கிச் சொல்லுபவர்கள் இந்த ஐ.ஏ.எஸ் மற்றும் அதிகாரிகள்தான். புதிய அமைச்சர்களுக்கு வகுப்பு எடுப்பதே இவங்கதான். 3 வருடம் தனியார் பணியில் சேரக்கூடாது என்றால் எவ்வளவு இழப்பு இருக்கப் போகிறது? மிஞ்சிப்போனால் 3 கோடி ரூபாய். அதனைப்போல பலமடங்கு ஏற்கனவே சம்பாதித்திருப்பார்களே. பிஎஸ் என் எல் வேலுசாமியா(இல்லை வேற எவனா?) கேடி வீட்டிற்கு கேபிள் போட்டுக்கொடுத்து திருட ஐடியா கொடுத்தவன்) – இவர்களையெல்லாம் திகார் ஜெயிலில் போட்டு, தான் குற்றவாளி இல்லை என்று அவங்களையே நிரூபிக்கச் சொல்லணும்.
முழுமையாக பென்ஷனை நிறுத்துவதும் அவர்களுடைய ரத்த சொந்தங்களுக்கு இனி அரசுப் பதவி கிடைக்காது என்ற நிலை ஏற்படுத்துவதும் நல்லது. விஜய் மால்யாவின் பையனை உள்ளே போட்டிருந்தால் கடன் தொகையை முழுமையாக மால்யா கட்டியிருப்பார். அந்தக் காசுலதானே மால்யாவின் பையன் கூத்தடித்துக்கொண்டிருந்தான்.
Sir., Is this not a similar process followed by another SBI chairman before joining Rel Indusries?.
Regards
Raghuraman
ரகுராமன்,
இவரைப்போல் இன்னும் சிலரும்
போயிருக்கிறார்கள். ஓய்வு பெறுவதற்கு
முன்னர் சில ஆண்டுகள் அதற்கெனவே
“உழைக்கிறார்கள்” ….அந்த விசுவாசிகள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//அல்கெமிஸ்ட்
என்கிற கடன் மீட்பு நிறுவனத்துக்கு கர் ரஜ்வாடா ஹோட்டல்
சொத்து 2016 மார்ச் மாதம் ரூ.25 கோடிக்கு வழங்கப்படுகிறது.
//
//
இந்த
முடிவு, செயல்பாடுகள் எடுக்கும் பொறுப்பில் இருந்த பாரத ஸ்டேட்
வங்கியின் வங்கி தலைவர் , 2013 செப்டம்பர் 30 அன்று பணி ஓய்வு
பெற்று -2014 அக்டோபர் மாதம், 200 கோடி ரூபாய் சொத்தை
25 கோடிக்கு தான் விற்ற அதே அல்கெமிஸ்ட் கடன் மீட்பு
நிறுவனத்தின் “இயக்குநர்” ஆகிறார்….!!!//
தாங்கள் தந்துள்ள ஆண்டுகளில் ஏதோ தவறு இருக்கிறது.
மேலும் இது ஐபிசி (IBC) வருவதற்கு முன்பாக அல்லது அதற்கு பின்பா என்பது தெரியவில்லை.
ஐபிசி வந்தபிறகு பல நிறுவனங்களின் உடைய கடன் ஆனது தொண்ணூத்தி எட்டு சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்பட்டு அந்த நிறுவனமானது பெரிய அம்பானி மற்றும் பெரிய பண முதலைகளுக்கு தாராளமான மனப்பான்மையோடு நமது மோடி அவர்களால் தரப்பட்டிருக்கிறது.
இதற்கு சமீபத்திய உதாரணம். 95 ஆயிரம் கோடி மதிப்புள்ள DHFL, பெரிய அம்பானியின் சம்மந்தி (மகள் வழி) அவர்களுக்கு இருபத்தி 28,000 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அளவில் பாதிப்பு அடைந்தவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் செய்திருந்தவர்கள் மற்றும் என்சிடி முறையில் முதலீடு செய்திருந்தவர்கள். மேலும் பல லட்சம் ஷேர் முதலீட்டாளர்கள் பணம் கடலில் போட்ட உப்பாக மாறி போனது.
3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் 40 ஆயிரம் கோடி ரூபாயை இந்த நிகழ்வில் இழந்திருக்கிறார்கள் அவர்களுக்காக பேச இந்த தேசத்தில் ஒரு நன்றியுள்ள நாய் கூட இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.
Tamil,
// அவர்களுக்காக பேச இந்த தேசத்தில்
ஒரு நன்றியுள்ள நாய் கூட இல்லை என்பதுதான்
வருத்தத்திற்குரியது. //
நண்பரே,
இதைச் சொல்ல உங்களுக்கு உங்களுக்கு
ஏன் இவ்வளவு நாட்கள் ஆனது….?
இவ்வளவு நாட்களாக நீங்கள் எங்கே
போயிருந்தீர்கள்…. ?
அங்கே தான் எல்லாரும் போயிருக்கிறார்கள்…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இதுதான் நடக்கப்போகிறது இதனை தடுங்கள் என்று SEBI, NCLT, RBI , PM Office அனைவருக்கும் மின்னஞ்சல் செய்து அவர்கள் அதை பொருட்டாகவே கருதவில்லை என்பதை சொல்வதற்காக சொன்ன வார்த்தைகள்.
வருடங்களில் வித்தியாசம் –
முடிவெடுக்கப்பட்டு விட்ட பிறகு, கடன் வாங்கிய
ஓட்டல் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை
அணுகியதால், நடைமுறையில் சொத்து கைமாற
இடைவெளி ஏற்பட்டிருக்கிறது.