யாருக்குப் போக வேண்டிய பாராட்டு ….?

” இந்தியாவிலேயே முதல் முறையாக
தமிழ்நாட்டில் அமையும் சூப்பர் திட்டம்.. ஸ்டாலினுக்கு
குவியும் பாராட்டு… “

  • இது செய்தியின் தலைப்பு ….!!!


….

கீழே – அந்த தலைப்பிற்கான செய்தி –

டென்மார்க்கில் கடலில் மிதக்கும் காற்றாலைகள்
அதிகமாக உருவாக்கப்படுகிறது. அதேபோல இங்கும்
மிதக்கும் காற்றாலைகளை அமைத்துக்கொடுக்க
அந்நாட்டு ( டென்மார்க்….!!! ) அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து பேசுவதற்காகத்தான் டென்மார்க் மின்சக்தி
அமைச்சர் ஜானிக் ஜோர்சென்சன் தலைமையில் 50 பேர்
கொண்ட குழு அண்மையில் தமிழகம் வந்தது. புதன்கிழமை
அன்று சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசிய
குழுவினர், தமிழ்நாட்டில் எந்த மாதிரியான காற்றாலைகளை
அமைப்பது? எவ்வாறு அவற்றை செயல்படுத்துவது என்பது
தொடர்பாக ஆலோசித்தார்கள். விரைவில் எங்கெல்லாம்
மிதக்கும் காற்றாலைகள் அமையப்போகிறது என்பது
இறுதி செய்யப்பட உள்ளது….

( https://tamil.oneindia.com/news/chennai/a-floating-wind-farm-is-being-set-up-in-tamil-nadu-many-praised-mk-stalin/articlecontent-pf592203-432487.html )

இந்த திட்டம் எப்படி தமிழ்நாட்டிற்கு வந்தது?

இதன் பின்னணியிலுள்ள செய்தி –

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்
டென்மார்க்குடன் “கிரீன் மின்சக்தி” தொடர்பாக ஒப்பந்தம்
மேற்கொண்டார். ( அந்த சமயத்தில் ஆட்சியில் இருந்தது –
மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக … !!!)

அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் காற்றாலை
மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம் வந்துள்ளது.

இந்த திட்டத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம்
கோடி வரை முதலீடு செய்யப்பட உள்ளது. கடலில்
அமைக்கப்படும் காற்றாலைகள் மூலம் 4 ஆயிரம்
மெகாவாட்டில் இருந்து 10 ஆயிரம் மெகாவாட் வரை
மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம்
செய்யப்பட்டிருக்கிறது.
………………………………………

உண்மையில் இந்த திட்டம் வர காரணமாக இருந்தது யார்…?
நியாயமாக பாராட்டு யாருக்குப் போய்ச்சேர வேண்டும்….?

சில தமிழக மீடியாக்கள் அற்புதமாக செய்தித் “தலைப்பு”களை …”தயாரி”க்கின்றன… (வாங்கிய, வாங்குகிற காசுக்கு வஞ்சனையின்றி..!!!)

வாழ்க – ” வளமுடன்”…!!!

…………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், சினிமா, தமிழ்நாடு, கடலிலிருந்து காற்றாலை மின்சாரம், டென்மார்க் நாடு ,, பசுமை மின் உற்பத்தி திட்டம்,. Bookmark the permalink.

4 Responses to யாருக்குப் போக வேண்டிய பாராட்டு ….?

  1. Rajs சொல்கிறார்:

    BJP is busy with vinayagar

  2. Rajs சொல்கிறார்:

    But BJP is busy with பிள்ளையார்

  3. புதியவன் சொல்கிறார்:

    //இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அமையும் சூப்பர் திட்டம்.. ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு…//

    ஊடகங்கள் எல்லாமே விலை போனவை அல்லது திமுக கட்சி கைப்பற்றியுள்ளவை அல்லது மதச் சார்பானவை. அதனால் அவைகளில் வரும் செய்திகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

    பாஜக வுக்கு வேறு திட்டங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னால்தான் வந்தது என்று என்னதான் பேசினாலும் அதனால் பிரயோசனமில்லை. 108 ஐ கொண்டுவந்தது அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது. ஆனால் இங்கு திமுக, கருணாநிதி படம் போட்டு விளம்பரப்படுத்தியதற்கு ஊடகங்களும் ஒரு காரணம். ஊடகங்களை தன் கையில் வைத்திருப்பதால் கோயபல்ஸ் பிரச்சாரங்கள் கடந்த சில மாதங்களாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

    Down the line, as it had happened, the media will loose their importance and will be identified as DMK party propaganda machineries like Thanthi, Vikatan thatstamil Minnambalam etc. As usual, Polimer is being ignored by many cable operators.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      // அவைகளில் வரும் செய்திகளைப்
      பொருட்படுத்தத் தேவையில்லை. //

      இது உங்களுக்குத் தெரியும்…
      எனக்குத் தெரியும்….
      இன்னும் சில நண்பர்களுக்கும் தெரியலாம்.

      ஆனால் – எல்லாருக்கும் தெரிய வேண்டுமே…!!!

      அதனால் மீண்டும் மீண்டும் இங்கு எடுத்து
      போட்டு, பொய்-பொய் என்று திரும்பத் திரும்ப
      எடுத்துச்சொல்லி அனைவருக்கும்
      தெரிய வைக்க முயற்சிக்கிறேன்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.