…
…
லண்டன் நகரத்து மக்களின் நடை, உடை, கலாச்சாரம் ஆகியவை இன்றைக்கு சுமார் 140 வருடங்களுக்கு முன்னர் (1875-ல்) எப்படி இருந்தது என்பதை அறிய உதவும் சில அரிய புகைப்படங்கள் கீழே –
இன்னும் கொஞ்சம் இருக்கிறது.. அவற்றை அடுத்த பகுதியில்
பதிப்பிக்கிறேன்.
நினைத்துப் பார்த்தால், வியப்பாக இருக்கிறது….
இவர்களிடம் போய் நாம் 200 ஆண்டுகளுக்கு மேல்
அடிமையாக இருந்தோமே… அப்படி எந்த விதத்தில் நம்மை விட
இவர்கள் சிறப்பானவர்களாக இருந்தார்கள்…???
—————————————————————-

…

…

…

…

…

…

Street Photographer
…

…

…

.
——————————————————————————————————————–



அய்யா …! // அப்படி எந்த விதத்தில் நம்மை விட
இவர்கள் சிறப்பானவர்களாக இருந்தார்கள்…??? //…என்று நோக்கினால் குறிப்பாக தமிழனை விட இவர்கள் சிறந்தவர்கள் இல்லை என்றே தோன்றுகிறது .. ! அடுத்து —
இன்று இந்த முதல்வர் என்கிற நாற்காலிக்கு பலரும் ஆளாய் பறப்பது எதற்கு என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்று — ஆனால் இதே தமிழகத்தின் ” முதல்வர்களின் முதல்வர் ” என்று அழைக்கப்பட்ட ஒருவரை பற்றி தெரிய வரும் போது நம்மால் வெறுமனே பெருமூச்சு மட்டுமே தற்போது விட முடிகிறது அவரைப்பற்றி ஒரு செய்தி : // ’பெரியோர்களே… தாய்மார்களே’ – முதலில் சொன்னவர் யார் தெரியுமா? அவரின் பிறந்தநாள் இன்று! // https://tamil.thehindu.com/tamilnadu/article26146669.ece … எப்படிப்பட்டவர்களால் நாம் ஆளப்பட்டிருக்கிறோம் — ஆளப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் …!
நினைவுபடுத்தியதற்கு நன்றி செல்வராஜன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//எந்த விதத்தில் நம்மை விட இவர்கள் சிறப்பானவர்களாக இருந்தார்கள்…???//
கா.மை.சார்… நீங்க ஏற்கனவே தமிழ்நாட்டின் பழைய புகைப்படங்களை (ராஜராஜேச்வரம் உள்பட) பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். நான் பயணத்தின்போது லண்டனில், பாரீசில், பிலிப்பைன்ஸில் பிச்சைக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். (தாய்வானில் பார்த்த ஞாபகம் இல்லை). பாரிஸின் முக்கியப் பகுதிகளில் முழுக்க முழுக்க குப்பைக் காகிதங்களாலும், பழைய பொருட்கள் (ஷூ, உடை போன்று) விற்பனைக் கடைகளையும், ஏன்… பொதுக் கழிப்பிடத்துக்கு முன்பாகவே ரோடில் பைப் அடிப்பவனையும் (ஒரு முறை) பார்த்திருக்கிறேன்.
நம்மிடம் வியாபார நுணுக்கம் (அதாவது எதை எப்படி மாற்றி வெளியிடங்களுக்கு விற்கலாம்) அல்லது வியாபார மைண்ட்செட் சிறிது குறைவு. அதனால்தான் கிழக்கிந்தியக் கம்பெனி, இங்கிருப்பதை குறைந்த விலைக்கு வாங்கி தன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து அதில் உள்ளவர்கள் நிறைய சம்பாதித்தனர். இப்போதும் பிரிட்டனில் மட்டுமல்ல, உலக நாடுகளில் பிஸினஸ் மைண்ட் தான் பணத்தைச் சம்பாதிக்கிறது.
நம்மிடம் என்ன இல்லை? இருந்தாலும், பிட்சா, கேஎஃப்சி, வெளிநாட்டு பிராண்ட் துணிகள், கார்கள் என்று நாம் நம் பணத்தை வெளிநாட்டுக்காரனுக்கு அனுப்பி கிட்டத்தட்ட பொருளாதார அடிமையாயிருக்கோம். சாதாரண ரொட்டி, அசைவ பஜ்ஜி (அதான் பிட்சா, கேஎஃப்சி) போன்றவற்றை உலகளாவிய வர்த்தகமாக ஆக்கியிருக்கான். பால் பவுடர், குழந்தைகளுக்கான சோப்பு, பேம்பர்ஸ், உடைகள் என்று அவன் கிடைத்த சந்திலெல்லாம் வியாபார எண்ணத்தோடு கடைவிரிச்சு நம்மை அவன் வலையில் விழ வைத்திருக்கிறான். நாம, இத்தனை வருடப் பாரம்பர்யம் என்று சொல்லி, இட்லி கடை, உலகளாவியதாக ஒரு பிராண்டைக் கொண்டுவந்திருக்கோமா?
பணம் படைத்தவன் பணக்காரன். மற்றவங்க அவனுக்குக் கீழ வேலை பார்கிறவங்க என்பதுதானே உலக நடைமுறை?
இன்னொன்று, நமக்கு எப்போதுமே ‘தாழ்வுமனப்பான்மை’ உண்டு. அதனால் வெள்ளையர்கள் என்றால் நமக்கு அவர்கள் தேவதூதர்கள், பெரிய பணக்காரர்கள், எல்லாம் அறிந்தவர்கள் என்ற நினைப்பு உண்டு. இதையும் நான் அவதானித்திருக்கிறேன், அதில் உண்மை இல்லாதபோதும். (வாய்ப்பு இருக்கும் இடங்களிலெல்லாம் இந்திய கணக்காயர்கள்தாம் பைனான்ஸில் இருக்கிறார்கள். Of course, ITலயும்)
நெல்லைத்தமிழன்,
இவையெல்லாவற்றையும் தாண்டி, இன்னும் சில மோசமான பலவீனங்களும் நம்மிடையே இருந்தன… இப்போது கூட இருக்கின்றன…
முக்கியமாக ஒற்றுமையின்மை…
அடுத்தது சுயநலம்…அடுத்தவரைப்பற்றி எந்தவித அக்கறையும் கொள்ளாமை.
பக்கத்து ஊர் பற்றி எரிந்தால் கூட கவலை கொள்ள மாட்டோம்… நம்ம ஊரில் தீப்பற்றாத வரை நாம் ஏன் அநாவசியமாக கவலைப்பட வேண்டுமென்கிற மனப்பான்மை….
இப்படி இன்னும் கூட சிலவற்றை சொல்லலாம்.
படிப்பவர்களுக்கே புரியும்.
நம் மக்கள் இப்போது கூட நிறைய மாற வேண்டியிருக்கிறது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்