…
…

30Fir21.qxp
…
இப்படியெல்லாம் மோடிஜிக்கும், அமித் ஷாவுக்கும் எதிராக மேடைகளில் பேசிக்கொண்டிருந்தால் நிதின் கட்க்ரிஜிக்கு அடுத்த தேர்தலில் நிற்க சீட்டு கிடைக்குமா…?
ஒரு சுவாரஸ்யமான மோதல் உருவாகி, தொடர்ந்து கொண்டிருக்கிறது பாஜகவில்.
அண்மையில் சில மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில், 3 மாநிலங்களில் பாஜக தோற்று, ஆட்சியை இழந்து, காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது…
மோடிஜி, ஒரே வார்த்தையில் சுருக்கமாக “இந்த தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.
ஆனால், ஆளும் பாஜகவின் அகில இந்திய தலைவரான அமீத் ஷா, இது வரை இந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்காதது மட்டுமல்ல -இந்த முடிவுகள் குறித்து வாய் திறந்து எந்த
கருத்தும் சொல்லவில்லை.
ஏற்கெனவே, மோடிஜியின் போட்டியாளராக கட்சிக்குள் கருதப்படும் திரு. நிதின் கட்கரி கடந்த வாரம் – அவரது சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவில், புனாவில் பேசும்போது –
நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத ஒரு கருத்தை வேண்டுமென்றே சொன்னார்.
“ஒரு “வெற்றி” கிடைக்கும்போது – பலர் தான் தான் அதற்கு காரணம், அதன் தந்தை என்று சொந்தம் கொண்டாடுவார்கள். ஆனால் “தோல்வி” என்பது ஒரு அனாதை. வெற்றி பெற்றால்
நாங்கள் தான் காரணம் என்று பலரும் கூறிக் கொள்ளும் நிலையில் தோல்வி அடைந்தால் அதற்கு பொறுப்பேற்க ஒருவர் கூட முன்வருவதில்லை. வெற்றி பெற்றாலும் தோல்வி
அடைந்தாலும் அதற்கு பொறுப்பேற்கும் மனப்பாங்கு தலைமைக்கு இருக்க வேண்டாமா…?”
இந்த கருத்தை அவர் தேவையேயின்றி, சொன்னது புனே யில் நடைபெற்ற வங்கி ஊழியர்கள் மாநாட்டில்… அவரது இந்த பேச்சு, பாஜக தலைமையைக் குறித்து தான் அமைந்திருக்கிறது
என்பதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அடுத்து, நேற்று டெல்லியில் நடந்த, அவரது இலாகாவிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு கூட்டத்தில் பேசும்போது,
( டெல்லியில் நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உளவுத்துறை அதிகாரிகள் (Intelligence Bureau officers) மாநாடு )
” நான் கட்சித் தலைவராக இருக்கும் போது என்னுடைய கட்சியின் எம்எல்ஏக்களும், எம்.பிக்களும் நன்றாக செயற்படவில்லை என்றால் அதற்கு நான்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்
நன்றாக செயற்படாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை நான்தான் கண்டறிந்து கூற வேண்டும்” -என்று கூறி இருக்கிறார்…
இது அமீத் ஷாவின் மீதான நேரடி தாக்குதல் என்று நினைத்துக் கொள்வார்களே என்பதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை… வேண்டுமென்றே பேசியதாகத்தான் தெரிகிறது.
இத்தோடும் விடவில்லை கட்கரிஜி… இன்னும் ஒரு படி மேலே போனார்… “சகிப்புத்தன்மை இந்திய கலாச்சாரத்தின் முக்கியமான ஒரு அங்கம் ” என்று கூறி விட்டு,
இதற்கு மோடிஜிக்கு சற்றும் பிடிக்காத நேருஜியின் சில கருத்துக்களை உதாரணம் காட்டிப் பேசி இருக்கிறார்….
” நேரு அடிக்கடி ஒரு விஷயத்தை சொல்லுவார். ஒவ்வோர் மனிதனும் நான் இந்த நாட்டிற்கு பிரச்சனையை ஏற்படுத்துபவனாக இல்லை என்று கருத வேண்டும். இவ்வாறு எல்லா மனிதர்களும்
நான் நாட்டிற்கு பிரச்சனையை ஏற்படுத்த மாட்டேன் என்று நினைத்தால் நம்முடைய பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும். நானும் (நிதின் கட்கரி) அப்படித்தான் நினைக்கிறேன்… ”
தன்னுடைய இத்தகைய பேச்சுகள், மோடிஜிக்கும், அமீத்ஜீக்கும் சற்றும் பிடிக்காமல் போகும் என்று தெரிந்தே மீண்டும் மீண்டும் நிதின் கட்கரி பேசுவது, கட்சித்தலைமையை ( அமீத்ஜீயையும், மோடிஜியையும் ) எதிர்க்க தான் தயார் என்று வெளிப்படையாக காட்டிக் கொண்டு, தன் பின்னால் ஒரு கூட்டத்தை உருவாக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது…
தங்களை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை பேசுவதைக் கூட பொறுக்காத மோடிஜியும், அமீத்ஜீயும், இவ்வளவு தூரம் கட்கரிஜியை பொறுத்துக் கொள்ள காரணம் என்ன….?
நிதின் கட்கரிஜிக்கு பலமான RSS பின்னணி உண்டு. RSS தலைவரான மோகன் பாக்வத் கட்கரிக்கு மிகவும் நெருக்கமான பல பத்தாண்டுகளுக்கான நண்பர்.
எனவே, நிதின் கட்கரி மீது வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாத நிலை மோடிஜிக்கும், அமீத்ஜீக்கும்….
பதிலுக்கு இப்போதே அவர்கள் செயலில் இறங்கினால், காரியம் கெட்டு விடும், கட்கரிஜியின் பின்னால் பெரிய கூட்டம் சேர்ந்து விடும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்…..
எனவே, வெளிப்படையான பாதிப்பு இல்லாத வகையில், கட்கரிஜியை தங்கள் பாதையிலிருந்து அகற்ற என்ன செய்யலாம் என்பது அவர்களின் தீவிர ஆலோசனையில் இருக்கும் என்று
நம்பலாம்….
– அவர்களுக்கென்ன அனுபவத்திற்கா பஞ்சம் … ? அவர்கள் பார்க்காத எதிரிகளா… எதிரிகளை அகற்ற அவர்கள் அறியாத யோசனைகளா… !!!!
.
——————————————————————————————————————————————————————–



// பாஜகவிலிருந்து ஓரங்கட்டப்படுவாரா நிதின் கட்கரி? //
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/is-nitin-gadkari-s-comments-serious-or-just-storm-a-tea-cup-337375.html …..
அய்யா அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை — அதுவும் இல்லாமல் மேலும் சில விவரங்கள் இந்தசெய்தியில் அவை : — நிதின் கட்கரி ஆர்எஸ்எஸி ன் பக்க பலம் இல்லாமல் இந்த விமர்சனங்களை செய்ய ஆரம்பித்திருக்க மாட்டார்” என்று இந்த கட்டுரையாளரிடம் கூறினார் டில்லியில் இருக்கும் ஒரு தேசீய நாளிதழின், தலைமை செய்தியாளராக இருப்பவரும், பாஜக தலைவர்களிடம் பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பில் இருப்பவருமான ஒரு பத்திரிகையாளர் : .
// ஆரம்பத்திலிருந்தே உரசல் ……. ‘’ஆரம்பத்திலிருந்தே நிதின் கட்கரிக்கு மோடியிடமும், அதை விட அதிகமாக அமீத் ஷா விடமும் உரசல்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. இதில் கோபத்தின் உச்சத்திற்கு நிதின் கட்கரி போனது பண மதிப்பிழப்பு (demonetization) நடவடிக்கையின் போதுதான். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நிதின் கட்கரி யை கடுங் கோபத்தில் ஆழ்த்தியது. அப்போது தன்னுடைய நம்பிக்கைக்கு உரியவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசும் போது நிதின் கட்கரி கூறியது, ‘’demonetization ஏதாவது ஒரு ரூபத்தில் பாஜக விற்கு மிக கடுமையான பாதிப்பை கொண்டு வந்தே தீரும். பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவுள்ளவர்கள் கூட நான் சொல்லுவதை மறுக்க மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார் என்று மேலும் சொன்னார் அந்த பத்திரிகையாளர்.// என்றும் மேலும் —
// இவரும் ஓரம் கட்டப்படுவாரா…… இதற்கு முன்பு மோடியை, அமீத் ஷா வை எதிர்த்தவர்கள் பாஜக விற்குள் ஓரங்கட்டப்பட்டார்கள். ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி என்று ஒரு பட்டியலை சொல்லலாம். ஆனால் நிதின் கட்கரியை இந்த பட்டியிலில் சேர்க்க முடியாது. காரணம் அவர் ஆர்எஸ்எஸூ க்கு நெருக்கமானவர், குறிப்பாக அதன் தற்போதய தலைவர் மோஹன் பகவத்துக்கு நெருக்கமானவர். நிதின் கட்கரி யின் இந்த கருத்துக்கள் பாஜக விற்குள் ஒரு கலகமாக உருவெடுக்குமா அல்லது ஆங்கிலத்தில் சொல்லுவது போல, Just a storm in a tea cup, அதாவது, இது ஒரு சிறு பிரச்சனைதான், விரைவில் அடங்கி விடும் என்பது தேர்தல்களின் நெருக்கத்தில் நமக்கு தெளிவாக தெரிய வரலாம், அதுவரை நாம் பொறுத்திருக்கவே வேண்டும்.// … என்றும் செய்தியின் ஊடே அறிய முடிகிறது … என்னமோ நடக்குது — ?
// – அவர்களுக்கென்ன அனுபவத்திற்கா பஞ்சம் … ? அவர்கள் பார்க்காத எதிரிகளா… எதிரிகளை அகற்ற அவர்கள் அறியாத யோசனைகளா… !!!! //
-அதானே; என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் இந்த கட்கரி ?
எதிர்த்தவர்களின் கதி என்னா ஆயிற்று என்று பேசுவதற்கு முன்னர் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா ?
எனக்கென்னவோ பாவம் கட்கரி என்று தான் தோன்றுகிறது.
இவர் பின்னால் இன்னும் யார் யார் அணி சேர்கிறார்கள் என்று கணிப்பதற்காக கூட,
இவரை இதுவரை பேச விட்டிருக்கலாம்.
Yacht case may be on priority now.
கா.மை சார்… இதை வித்தியாசமான கோணத்துல பார்க்கிறேன்.
நான் பணி புரிந்த காலங்களில், மற்றவர்கள் கருத்துக்கு (அதாவது என்னைவிட பெரிய பதவிகளில் இருப்பவர்கள்) எதிராக, நான் சரி என்று நினைத்ததைச் சொல்லியிருக்கேன், கலகம் செய்திருக்கிறேன் (அதாவது, இதற்கு நான் பணியமாட்டேன், வேலையை விட்டு விலக நான் தயாராகவே உள்ளேன், ஆனால் என் கருத்தை கம்பெனி தலைவருக்குத் தெரியப்படுத்தாமல் நான் பயந்து விலக மாட்டேன் என்பதுபோல). அதுல பெரிய ரிஸ்க் உண்டு. நமக்கு நிலைமை சரியில்லைனா வேலை போயிடும். ஆனா, நாம நியாயம்தான் சொல்றோம் என்று புரிந்துகொண்டுட்டாங்கன்னா, நாம மளமளன்னு மேல வந்துடுவோம், புதுப் பதவி வரும் இல்லைனா, சம்பளம் உயரும். ரிஸ்க் எடுக்காமல் பரிசுகள் கிடைக்காது.
அதனால், மோடிக்கு நான் ஒரு மாற்று இருக்கிறேன் என்று காண்பிப்பதற்காகவும் இவர் இதை முயற்சித்திருக்கலாம். அவருடைய நேரம் நன்றாகவும், மோதி அவர்களுக்கு நன்றாக இல்லாமலும் இருந்தால், இவர் உச்ச பதவிக்கோ அல்லது பெரிய பதவிகளுக்கோ வரும் வாய்ப்பு பிரகாசமா இருக்கும். இல்லைனா, டம்மியாகிவிடுவார், அல்லது சு.சுவாமி மாதிரி புலம்பும் நிலைமைக்கு ஆளாகிடுவார்.
கட்காரி அவர்கள் இதைத்தான் முயற்சிக்கிறாரோ? (இவ்வளவு அனுபவிச்சாச்சு. போனா தற்போதுள்ள பதவி போகும், வந்தா ‘கனவிலும் நினைக்கமுடியாத பெரிய பதவி வருமே’ என்று நினைத்திருப்பாரோ?
புதியவன்,
ஒரு விதத்தில் நீங்கள் சொல்கிறாப்போல் இருக்கலாம்.
இன்னொரு விதத்தில் எனக்கென்னவோ, இந்த TOPIC -ஐ RSS தான், trend / re-action எப்படி இருக்கிறது என்று சோதித்து பார்க்கும் உலவ விட்டிருக்குமோ என்றும் தோன்றுகிறது. பின்னணியில் பலத்தை உறுதி செய்துகொள்ளாமல் பேசக்கூடியவர் அல்ல கட்கரிஜி. இன்னும் கொஞ்சம் பொறுத்து பார்ப்போம்… அடுத்த மூவ் எப்படி இருக்கிறது என்று…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்