…
…

…
தெளிவாக, அர்த்தமுள்ள ஒரு ஆலோசனையை – இன்றைய பெற்றோர்களுக்கு வழங்கி இருக்கிறார் திருமதி ரேகா பத்மனாபன் –
…
…
– உரையாளர் சொல்வதை நான் முழுவதுமாக ஏற்கவில்லை. ஓரளவு அவர் சொல்வது சரியே என்றாலும்,
அறியாத வயதில், இளம் பிராயத்தினரை, எல்லாவற்றையும் அவர்களே அனுபவித்து – அடிபட்டு, உதைபட்டு – உணர்ந்து, தெரிந்து – கொள்ளட்டும் என்று விட்டு விடுவது சரியாக இருக்காது.
அதே சமயம் எல்லாவற்றிலும் தலையீடு, எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடு என்று வைத்துக் கொள்வதும் எதிர்மறையான விளைவையே உண்டாக்கும் என்பதும் உண்மையே…..
இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் – அவர்கள் பயணிக்கக்கூடிய திசைகள், உதவக்கூடிய பாதைகள் இன்னின்ன என்பதைப்பற்றி அவர்களுக்கு ஓரளவு தெரியவைத்து விட்டு –
பிறகு அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டு விட்டு – தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் நேரங்களில் மட்டும் course correction செய்வது சிறந்த முறையாக இருக்கும் என்பது என் கருத்து.
அதே போல், சில அறிவுரைகள், guidance( வழிகாட்டுதல்கள் ) எல்லாருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்க முடியாது… அந்தந்த குழந்தைகள் பிறந்து வளர்ந்த, வளரும் சூழ்நிலைகளைப் பொருத்தும் மாறுபடும்.
முக்கியமான கருத்து ஒன்றை அழகாக, மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கும் விதத்தில் – திருமதி ரேகா பத்மனாபன் பாராட்டிற்குரியவர்.
.
——————————————————————————————————————————————————-



கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…