…
…
நிதின் கட்கரி பக்கம் யார் யார் வருவார்கள் என்று யூகித்து பார்ப்பதற்குள், முதல் ஆளாக வந்து நிற்கிறார் யோகா மற்றும் பதஞ்சலி பிரபலம் பாபா ராம்தேவ்….!!!
(இதன் தொடர்பை புரிந்துகொள்ள,
இதற்கு முந்தைய இடுகையை
தயவுசெய்து பார்க்கவும்…)
ஹிமாசல் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் மோடிஜியை விடவும் அதிக செல்வாக்கு படைத்தவர் பாபா ராம்தேவ்…கடந்த மக்களவை தேர்தலின்போது மோடிஜிக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.
ஆனால், இப்போது ஜகா வாங்கி விட்டார்… காரணம் நிதின் கட்கரியுடன் அவருக்கு ஏற்கெனவே உள்ள நட்பு ப்ளஸ் மோடிஜியும், அமீத்ஜீயும் – செய்நன்றி மறந்து பாபாவை சற்றும் மதிக்காததால் ஏற்பட்ட மனவருத்தம்….
நேற்று மதுரை வந்த பாபா ராம்தேவ் பேசியதிலிருந்து ஒரு பகுதியை கீழே தந்திருக்கிறேன். இப்போதைக்கு, இதைவிட வெளிப்படையாக அவர் கட்கரி பக்கம் வர முடியாது என்பது
நமக்கு புரிவது தான்.
தமிழ் இந்து செய்தியிலிருந்து –
……………………………
‘அடுத்த பிரதமர் யார் வருவார் எனச் சொல்ல முடியாது’:
யோகா குரு பாபா ராம்தேவ் புதிர்
மதுரையில் நேற்று பாபா ராம் தேவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி :
..

..
நாட்டின் அரசியல் சூழல் கடினமாக இருப்பதால், அடுத்த பிரதமர் யாராக வருவார், இருப்பார் எனச் சொல்ல முடியாது என்று யோகா குரு பாபா ராம்தேவ் குழப்பத்துடன் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ள பாரத் ஸ்வாபிமான் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று மதுரைக்கு வந்திருந்தார். அப்போது பாபா ராம்தேவ் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது, அவரிடம், நாட்டில் அரசியல் சூழல், அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழல் மிகவும் குழப்பமாகவும், கணிக்க முடியாமல் கடினமாகவும் இருக்கிறது. ஆதலால், அடுத்து என்ன நடக்கும், தேர்தலில் யார் வெல்வார்கள் என்று இப்போது கூற இயலாது.
மக்களவைத் தேர்தலுக்கு பின், 2019-ம் ஆண்டு நாட்டில் யாருடைய தலைமையில் ஆட்சி அமையும், அடுத்த பிரதமர் யார், அல்லது பிரதமர் மோடியே 2-வது முறையாக வருவாரா என்பதை
எளிதாகக் கூற இயலாது.
இந்தியா என்பது அனைத்து மதங்களும், பல்வேறு சமூக மக்களும் நிறைந்த நாடு. இது முழுமையான இந்து நாடு அல்ல. நமகுக்கு தேவை ஆன்மீக இந்தியா.
நான் முழுமையான அரசியலில் கவனம் செலுத்தவும் இல்லை, வரும் தேர்தலில் யாரையும், எந்தக் கட்சியையும் ஆதரித்து பிரச்சாரமும் செய்யப்போவதில்லை “என ராம்தேவ் தெரிவித்தார்.
—————————————————————————————————————————————————————-
பின்சேர்க்கை –
நம் நினைப்பை உறுதிப்படுத்துவது போல் –
இப்போது பிபிசி செய்தித்தளத்தில் பாபா ராம்தேவின் இந்த மாறுபட்ட நிலை குறித்து ஒரு செய்தி வந்துள்ளது –
—————–
கடந்த நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி கடந்த சில மாதங்கள் முன்பு வரை பாஜகவுக்கு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோதிக்காக தீவிர பிரச்சாரமும், பாராட்டும் தெரிவித்து வந்த பாபா ராம்தேவின் இந்த நிலைப்பாடு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாபா ராம்தேவிடம் அமித் ஷா ஆதரவு கோரிய பிறகு இதுபோன்ற மாற்று நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அமித் ஷா, “நான் பாபா ராம்தேவின் ஆதரவை பெறுவதற்காக இங்கு வந்துளேன். நான் சொன்னது அனைத்தையும் அவர் பொறுமையாக கேட்டார்,” என்று கூறினார்.
எங்களுக்கு பாபா ராம்தேவின் ஆதரவு கிடைத்தால், அவரது கோடிக்கணக்கான ஆதரவர்களை எங்களால் அடைய முடியும். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது எங்களுடன் பயணித்தவர்களின் ஆதரவை நாங்கள் மீண்டும் எதிர்நோக்கியுள்ளோம்” என்று அமித் ஷா மேலும் கூறியிருந்தார்.
“2014ஆம் ஆண்டு கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து ராம்தேவ் மாறியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் அன்னா ஹசாரேவின் தீவிர ஆதரவாளராக இருந்த ராம்தேவ், அங்கிருந்து விலகி பாஜகவின் ஆதரவாளரானார். தற்போது பாஜகவின் ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகி மோதிக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உருவாக்கி வருகிறார்”
(https://www.bbc.com/tamil/india-46683960 )
.
——————————————————————
.
————————————————————————————————————————————————————————————-



Interesting developments
Sabbaash Sariyaana Potti 🙂
அய்யா …. ! இரண்டு மாதங்களுக்கு முன் இதே பாபா அவர்கள் கூறியது :— // அடுத்த தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவளிக்க மாட்டேன்.. பாபா ராம்தேவ் திடீர் பல்டி.. என்ன காரணம்? // ….
Read more at: https://tamil.oneindia.com/news/india/break-up-relationship-won-t-campaign-bjp-next-election-says-baba-ramdev-329935.html
// மோடியின் தலைமையை சந்தேகிக்க வேண்டாம்.. ஆதரவு கரம் நீட்டும் ராம்தேவ் // By Keerthi Arunachalam | Updated: Thursday, December 13, 2018, 12:08 [IST] …. இந்த செய்தி வெறும் 13 நாட்களுக்கு முன் வந்தது …!
Read more at: https://tamil.oneindia.com/news/mumbai/nobody-can-raise-doubts-about-modi-s-leadership-ramdev-336411.html?utm_source=/news/mumbai/nobody-can-raise-doubts-about-modi-s-leadership-ramdev-336411.html&utm_medium=search_page&utm_campaign=elastic_search …. நேரத்திற்கு ஒரு பேச்சு …?