..
..
மே 2019 தேர்தலில், பாஜகவுக்கு தனிப்பட்ட மெஜாரிடி கிடைக்காது என்று சர்வே முடிவுகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் –
மோடிஜிக்கு பதிலாக கட்கரிஜியை பிரதமர் பதவிக்கு முன்மொழியலாமா என்று RSS -தலைமை ஆலோசனை செய்துகொண்டிருக்கும் வேளையில் –
பாஜக முன்னணியினருக்கு பொறுப்பான ஆலோசனைகள் சொல்ல ஆரம்பித்து விட்டார் அடுத்த பாஜக கூட்டணியின் பிரதமராக முன்மொழியப்பட சகல வாய்ப்புகளும் உடைய திருவாளர்
நிதின் கட்கரி.
நேற்று மும்பையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்திருக்கிறார்…
அதில் பேசும்போது –
“பா.ஜ.க-வினர் வாயைக் கட்ட துணி தேவைப்படுகிறது” – என்று கிண்டல் செய்திருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. “பா.ஜ.க-வில் இருக்கும் சிலர் குறைவாகப் பேசினால் நல்லது” என்றும் கூறி இருக்கிறார்.
நிதின் கட்கரிஜி பேசியது கட்சி உறுப்பினர்களிடையே அல்ல.. செய்தியாளர்கள் கூட்டத்தில் என்பதை கருத்தில் கொண்டால் தான் – சிரித்துக்கொண்டே அவர் கடுமையான கருத்தைச் சொல்லி இருக்கிறார் என்கிற இந்த செய்தியின் முக்கியத்துவம் – தீவிரம் – புரியும்…
கடுமையான விஷயங்களையெல்லாம் கூட சிரித்துக்கொண்டே சொல்லி விடுவது தான் கட்கரியின் ஸ்டைல்.
செய்தியாளர்களிடையே பேசிய அவர்,
“ பா.ஜ.க-வில் நிறைய தலைவர்கள் உள்ளனர். அவர்கள் அதிகமாக ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கின்றனர். பா.ஜ.க-வினர் குறைவாகப் பேசினால் மிகவும் நல்லது.
1972-ம் ஆண்டு வெளியான ‘பாம்பே டு கோவா’ படத்தில் ஒரு குழந்தை உணவு கேட்டு அலறும். குழந்தையைக் கட்டுப்படுத்த ஒருவர் அதன் வாயில் துணியை கட்டுவார்.
அதேபோன்ற ஒரு துணி தற்போது பா.ஜ.கவுக்குத் தேவைப்படுகிறது” எனக் கிண்டலாகப் பேசியிருக்கிறார்.
உ.பி. முதலமைச்சர் யோகிஜியை கூட விடவில்லை கட்கரிஜி…
இதையடுத்து செய்தியாளர்கள் –
“உத்தரப்பிரதேச முதல்வர் கடவுள் ஹனுமனின் ஜாதி (சமூகம்) குறித்தும், உ.பி பா.ஜ.க தலைவர் மகேந்திரநாத் பாண்டே, ராகுல் காந்தி இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் விமர்சித்துள்ளார்களே” என கேட்டதற்கு,
“அவர்கள் காமெடி (நகைச்சுவை) செய்கிறார்கள்” என பதிலளித்திருக்கிறார்.
மேலும் பேசிய அவர் –
“அரசியல்வாதிகள், ஊடகங்களின் முன்னே குறைவாகப் பேச வேண்டும் என்பதுதான் என் கருத்து. அதுதான் தற்போது தேவைப்படுகிறது. அதிலும் பா.ஜ.க-வுக்கு சற்று அதிகமாகவே தேவைப்படுகிறது …என்றும் கூறி இருக்கிறார்.
மோடிஜியும், அமீத்ஜீயும் கோலோச்சிக் கொண்டிருக்கும் வேளையில் –
பாஜகவில் இந்த அளவிற்கு துணிச்சலாக,
வெளிப்படையாக தங்கள் கட்சித்தலைவர்களையே
விமரிசனம் செய்யும் அளவிற்கு வேறு யாருக்கு துணிச்சல் வரும்…
அடுத்த பிரதமரைத் தவிர….??? 🙂 🙂 🙂
.
——————————————————————————————————————————————————————



ஒருவேளை கட்கரி அவர்கள் அடுத்த இடத்துக்கு நகர்கிறாரோ (மோடி பிரதமர், கட்சித் தலைமை கட்கரி).
Mr. Puthiyavan is probably UNABLE TO EVEN THINK that
somebody else from BJP itself could replace Namo. 🙂
I dont think that will happen (ie dropping Modi) at least until 2019 election end. If BJP does not come to power (though they may be the single largest party), Nithin could be elevated to Opposition Leader. If BJP gets sufficient seats (ie around 250), Modi might continue as opposition leader (which I doubt) to get back to power at the end of another 5 years. I am sensing this is the route BJP is trying to take now. A party requires a ‘front face’ to fight an election. Let us see how this is going to turn.
// மாண்புமிகு நிதின் கட்காரிஜி’ யின் முன்னாள் விவகாரங்கள் ……//
Posted on மே 24, 2015 by vimarisanam – kavirimainthan https://vimarisanam.wordpress.com/2015/05/24/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/ — இந்த இடுகையில் உள்ள சில வாசகங்கள் :—
//“காசு வாங்கினாலும் கூட வேலையை கச்சிதமாக முடித்து
விடுவார் ” – இது கட்காரிஜி பற்றி அவரது பாஜக அன்பர்கள்
பெருமையுடன் பேசும் விஷயம்.
கமிஷன் வாங்குவதை பெருமையுடன் கூறும் அளவிற்கு
சென்று விட்டார்கள் பாஜக நண்பர்கள்.// மேலும் …. // இதே நிதின் கட்காரியை தலைவராக வைத்துக் கொண்டு,
பாஜக வினர் எந்த முகத்தோடு மக்களை சந்திக்க முடியும் ?
எப்படி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மக்களிடம்
ஓட்டுக் கேட்க முடியும் ?
காங்கிரஸை விட தாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை
பாஜக எப்படி நிரூபிக்கப் போகிறது ? // எது எப்படியிருந்தாலும் கடுமையான விஷயங்களையெல்லாம் கூட சிரித்துக்கொண்டே சொல்லி விடுவது தான் கட்கரியின் ஸ்டைல்.// என்பதற்கிணங்க செயல் படுவார் என்று நம்புவோமாக …!!!