…
…

…
பிரதமர் பதவிக்கு – மோடிஜிக்கு பதிலாக மாற்று நபர் தேவை என்று BJP/RSS -லிருந்து வெளிப்படையாக முதல் குரல் மும்பையிலிருந்து கிளம்பியிருக்கிறது….
அடுத்த பிரதமர் “நாக்பூர்” -காரராமே…? RSS-ன் மாற்று யோசனை….!!!
– என்கிற தலைப்பில் 3 மாதங்களுக்கு முன்னர் இந்த தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்… அதை உறுதிப்படுத்தும் விதமாக,
– தற்போது, மோடிஜிக்கு பதிலாக நிதின் கட்கரியை கொண்டு வாருங்கள் என்று வெளிப்படையாக மஹாராஷ்டிராவிலிருந்து பாஜக/ஆர்.எஸ்.எஸ். முக்கியஸ்தர் ஒருவர்
முதல் குரல் கொடுத்திருக்கிறார்….
இது குறித்து தினமணி வலைத்தளத்தில் வெளிவந்துள்ள செய்தியிலிருந்து சில பகுதிகள் கீழே –
——————————————————————
மோடியை அகற்றி விட்டு கட்கரியை நியமியுங்கள்:ஆர்.எஸ்.எஸ்ஸை அதிர வைத்த கடிதம்
Published on : 18th December 2018 03:07 PM
மும்பை: பிரதமர் பதவியில் இருந்து மோடியை அகற்றி விட்டு நிதின் கட்கரியை நியமியுங்கள் என்று விவசாய சங்கத் தலைவர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சி அலைகளை கிளப்பியுள்ளது.
விவசாய மேம்பாட்டுக்காக மஹாராஷ்டிர மாநில அரசால் வி.என்.எஸ்.எஸ்.எம் என்னும் குழு நியமிக்கப்பட்டுள்ளது . இதன் தலைவருக்கு ஏறக்குறைய மாநில அமைச்சர் பதவிக்கு நிகரான
அந்தஸ்து உள்ளது. தற்போது அதன் தலைவராக இருப்பவர் கிஷோர் திவாரி.
செவ்வாயன்று மும்பையில் தானே மற்றும் புணே ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர்
மோடி மும்பை வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மோடியை அகற்றி விட்டு நிதின் கட்கரியை நியமியுங்கள் என்று கிஷோர் திவாரி ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சி
அலைகளை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொதுச் செயலாளர் பையாஜி சுரேஷ் ஜோஷி ஆகிய இருவருக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கிஷோர் திவாரி
குறிப்பிட்டுள்ளதாவது:
தீவிரப்போக்கு மற்றும் சர்வாதிகார மனப்பான்மையை கடைப்பிடிக்கும் தலைவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் இருப்பது என்பது நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஆபத்தானதாகும். இதற்கு முன்பும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே வரலாறு மீண்டும் திரும்ப நடக்க கூடாது என்றால், 2019-ஆம் ஆண்டு தேர்தலில் தலைமைப் பொறுப்பில் இருந்து மோடியை நீக்கி விட்டு, நிதின் கட்கரியை நியமிக்க வேண்டும்.
– இவ்வாறு அந்த கடிதத்தில் திவாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிசம்பர் 11-ஆம் தேதியன்று ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான அன்றும் கூட, ‘பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தவர்களும், விவசாயிகள் மற்றும்
பொதுமக்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டவர்களுமான மோடி மற்றும் அமித் ஷா இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்’ என்று கிஷோர் திவாரி தெரிவித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
பின் குறிப்பு – இவர் மீது பாஜகவிலிருந்தோ, ஆர்.எஸ்.எஸ். -லிருந்தோ இதுவரை எந்தவித கண்டனங்களும் எழும்பவில்லை… இவர் மீது எந்தவித நடவடிக்கைகளும்
எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிதின் கட்கரி மஹாராஷ்டிராவை, முக்கியமாக RSS தலைமை இருக்கும் நாக்பூரை சேர்ந்தவர் என்பதும், அவர் RSS
தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் கூட இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
.
————————————————————————————————————————————–



பி.ஜே.பி க்கு ஓட்டு போட்டவர்கள் நிச்சயமாக மோடிக்காக மட்டுமே ஒட்டு போட்டிருப்பார்கள்.ஒருவேளை ஆதியும் இழக்கலாம் என்று முடிவெடுத்து விட்டார்களோ ?
ஐயகோ….!
அப்ப அந்த 15 லட்சம்….?
போச்சா……!?
—- —-
மோடி பக்தாள் விடுவார்கள்….!
அதற்குள் அமித்ஷா முந்திக் கொண்டார் பார்த்தீர்களா?
‘2019 எங்களுக்கு தான்’ என்று.
என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
அய்யா …! விளக்கம் கொடுத்துள்ளார் கட்கரி அதில் :– சிலர் என்னுடைய அரசியல் வாழ்க்கையை காலி செய்ய நினைக்கிறார்கள். ….! என்றும் கூறியுள்ளார் … ! …
// என்ன மோடிக்கு பதில் நான் பிரதமர் வேட்பாளரா.. நிதின் கட்கரி கொடுத்த ரியாக்சன் என்ன தெரியுமா? //
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/they-want-finish-my-political-career-says-nitin-gadkari-on-bjp-pm-candidate/articlecontent-pf343168-336953.html ….
எங்கே தொடங்கும்… எப்படி முடியும்…? உங்களின் தலைப்புதான் …
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது …. !!!
செல்வராஜன்,
இந்த self defence stand எதிர்பார்த்தது தான்.
இப்போதிருந்தே நிதின் கட்கரிஜி வெளிப்படையாக போட்டிக்கு வர முடியாதே…
ஆனால், உள்ளிருந்து அவர் வேலை செய்யத்துவங்கி விட்டார் என்பதற்கான நிறைய சங்கதிகள் குறித்து நான் கேள்விப்படுகிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. ஐயா,
‘The Wire’ தளத்தில் திரு. அருன் ஷோரி அவர்களின் பேட்டியை படித்தீர்களா?
அவர் அந்த பேட்டியில்,
///Arun Shourie, the former union minister says the SC ignored facts and merely reproduced the flawed defences put out by the Centre.///
என்கிறார்.
மேலும், cut and paste என்றெல்லாம் சொல்கிறார். கீழே,
///And we must be grateful to the Government for giving us a glimpse of this nature of the Judgment— it is a cut-and-paste job. What the Government said, has been reproduced, sometimes in summary form, sometimes, as in this instance, with modifications that make matters even more convenient for the Government. And what we put forth has been completely ignore///
என்னமோ நடக்குது.
—- —-
திரு. அமித்ஷா அவர்கள் அடிக்கடி சொல்வது நியாபகம் வருது.
‘மோடி அடுத்த 50 வருடங்களுக்கு அவர் தான் பிரதமர்’ என்று.
இவர்கள் எதையும் செய்ய கூடியவர்கள்.
50 வருடம் எல்லாம் தேவையில்லை. அடுத்த முறை வந்தாலே போதும். நாடு குட்டிச் சுவர் தான்.
இறைவன் விட்ட வழி.