ஏனோ தெரியவில்லை…நித்யானந்தா நினைவிற்கு வருகிறார்… (பகுதி-15) – இன்றைய சுவாரஸ்யம் …


ஏனோ தெரியவில்லை… எனக்கென்னவோ
இந்த வீடியோவைப் பார்த்தால் –
பரமபூஜ்ய நித்யானந்தாஜி ஞாபகம் தான் வருகிறது…

ஒரு வேளை, இந்தியாவில், முதலே போடாமல்,
பெருவளர்ச்சி பெற்ற இந்த தொழில்’ அதிபரின் புகைப்படத்தை பார்த்ததால்
ஏற்பட்ட விளைவோ…?…. 🙂 🙂 🙂

(2001 -ஸ்ரீலஸ்ரீ நித்யானந்தா தொழில்’ துவங்கிய நேரம்…!!! )

.
——————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஏனோ தெரியவில்லை…நித்யானந்தா நினைவிற்கு வருகிறார்… (பகுதி-15) – இன்றைய சுவாரஸ்யம் …

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! தற்போது பரிணாம வளர்ச்சியடைந்து “குரங்கு, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளைத் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைப்பேன்” என நித்யானந்தா தனது சீடர்களிடம் உரையாற்றும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. // `சிங்கம், புலிகளை பேச வைக்கப் போகிறேன்’ – சீடர்களிடம் விவரித்த நித்யானந்தா // https://www.vikatan.com/news/tamilnadu/137596-i-will-make-animals-to-speak-nithyanantha.html என்னே – ஒரு சாமர்த்தியம் …. !!
    அடுத்து இந்தியர்களின் கோரிக்கை நிறைவேறப்போகுது ..? என்ன ஒரு இனிப்பான செய்தி .. கனவு மெய்ப்பட வேண்டும் …! // விரைவில் ரூ.15 லட்சம் டெபாசிட்: மத்திய அமைச்சர்! // ….. https://www.minnambalam.com/k/2018/12/19/14 இப்படியெல்லாம் மத்திய இணை அமைச்சர்கள் நமக்கு ….?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      அத்வாலே இதுவரை போடப்படாததற்கான காரணத்தைக் கூட குறிப்பிட்டிருக்கிறார் –

      // ரிசர்வ் வங்கியில் போதிய பணம் இல்லாததால்தான் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.//

      இப்போது ரிசர்வ் வங்கி மோடிஜி நிர்வாகத்தின் வசம் வந்து விட்டதால்,
      விரைவில் இது நிறைவேறும் என்று நம்பலாம்.

      மக்கள் எல்லாரும் அடிக்கடி தங்கள் வங்கிக்கணக்கை “செக்” செய்துகொண்டே இருப்பது நல்லது…. சொல்லாமல் கொள்ளாமல் நடு ராத்திரியில் எதாவது சஸ்பென்சாக நடக்குமோ என்னவோ…!!!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை சார்… ஆரம்பத்திலிருந்தே நீங்கள் போலிச் சாமியார்களைப் பற்றி எழுதிவந்திருக்கிறீர்கள். காலம் அவர்களைத் தோலுரித்திருக்கிறது. பாராட்டுகள்.

    நித்தியானதாவின் பழைய படத்தை இப்போதுதான் பார்க்கிறேன். பேசாமல் நானும் ‘சாமியார்’ பிஸினஸில் இப்போது இறங்கினால் பலகோடிகளுக்கு அதிபதியாக சிலவருடங்களில் ஆகிவிடமுடியுமோ?

    இதை முன்பே எழுதியிருக்கிறேனா என்று தெரியவில்லை. எனக்கு யோகா கத்துக்கொடுத்தவர், பல வருடங்களாக தியானம் செய்பவர். அதனால் அவருக்குச் சில சக்திகள் உண்டு (அதை வெளிக்காட்டமாட்டார். அவர் உடை சாதாரணமானவர்கள் அணியும் உடை, பேண்ட் சர்ட்). ஒரு முறை ஒரு ‘சாமியார்’ வந்தார். அவரைத் ‘தரிசிக்க/குறி கேட்க’ ஏகப்பட்ட தொண்டர்கள். இவர் அந்தச் ‘சாமியாரைப்’ பார்த்தார். அவருக்கு இவரது யோகா திறமைகள், தியான லெவல் எல்லாம் தெரிந்துவிட்டது. அவர் இவரிடம், நீங்க பேசாம என்னோட வந்திடுங்களேன், டிரெஸ் மட்டும் காவி உடையா மாத்திடணும், கழுத்தில் உத்திராட்ச மாலைகளும் நெற்றி நிறைய விபூதியும் பூசி இதுபோல் சில மாற்றங்கள் செய்தால் போதும், நாம் கோடிக்கணக்காக சம்பாதிக்கமுடியும் என்று ஆசை காட்டினாராம். இதுதான் எனக்கு இந்த போலிச் சாமியார்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும்.

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    ஏனோ தெரியவில்லை. நிறைய பேர் – படித்தவர்கள்… வக்கீல்கள், டாக்டர்கள்
    ஏன் எனக்கு தெரிந்து சில ஜட்ஜுகள் கூட,

    இந்த மாதிரி போலி சாமியார்களின் வலையில் விழுந்து கிடக்கிறார்கள். அசலுக்கும், போலிக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கக்கூட தெரியாமல் – இவர்கள் படிப்பு இவர்களுக்கு எதைக் கற்றுத் தந்திருக்கிறது என்று எனக்கு இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் எரிச்சலாக இருக்கும்.

    ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் வெற்றி பெற்றுக்கொண்டு தான்
    இருப்பார்கள். Unfortunate things is that – சட்டங்களும், நீதிமன்றங்களும் கூட
    இவர்களை கண்டுகொள்வதில்லை.

    நாம் இவற்றைப்பற்றி எல்லாம் எழுத ஆரம்பித்தால் – நமக்கே இந்த போலிகளின் ஆதரவாளர்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது.

    எனவே தான், இதைப்பற்றி சீரியசாக எழுதாமல், கிண்டலடித்து விட்டு நகர்ந்து விடுகிறேன்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      உண்மையானவர்களைக் கண்டுபிடிப்பது மிக மிக சுலபம் கா.மை. சார்.
      1. அவர்கள் பகட்டாகவோ டாம்பீகமாகவோ இருக்கவே மாட்டார்கள். தங்களை எப்போதும் முன்னிறுத்திக்கொள்ள மாட்டார்கள்.
      2. காசு கேட்பது, பொதுச் சேவை செய்கிறேன் என்று சொல்வது என்பது உண்மையானவர்களிடம் கிடையாது (உண்மையான துறவிகள், ‘இந்தச் செயலுக்கு’ உங்களால் முடிந்தால் பணம் கொடுங்கள் என்று யார் கலெக்ட் செய்கிறார்களோ அவர்களிடம் தரச் சொல்வார்களே தவிர, என் பேங்க் அக்கவுண்டில் போடு என்று சொல்லமாட்டார்கள்)
      3. பொதுவாக அவர்கள், ‘தங்களுக்கான கூட்டம்’ சேர்ப்பது கிடையவே கிடையாது.

      ஏன் பெரிய மனிதர்கள் (டாக்டர், படித்தவர்கள், ஜட்ஜு, பெரிய அரசியல்வாதிகள்) போலியானவர்களை அடைந்துவிடுகிறார்கள் என்பதற்கும் காரணம் உண்டு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.