…
…

…
1984-ல் திருமதி.இந்திரா காந்தி கொலையுண்டதை அடுத்து டெல்லியில் நடந்த கலவரங்களில் தொடர்புடைய சஜ்ஜன் குமார் என்கிற டெல்லியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவருக்கு,
இன்று டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுட்கால தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.
மிக நீண்ட காலத்திற்கு பிறகு வழங்கப்பட்டாலும், இந்த தீர்ப்பை நாம் முழுமனதோடு வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எத்தகைய கட்சியில், எந்த உயர்
பதவியில் இருந்தாலும் –
எந்தவித தயக்கமோ, தாட்சண்யமோ இன்றி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நம்மைப்போன்ற சாதாரண பொதுமக்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
ஆனால், அரசியல்வாதிகளின் கோணமே தனி….
இந்த தீர்ப்பினையொட்டி, கருத்து சொல்லும்போது மோடிஜி கூறி இருக்கிறார்….
( One Accused is Punished.
But -another Accused is made CM.)
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால், இன்னொரு குற்றம் சாட்டப்பட்டவர் முதலமைச்சராகிறார்.
(மத்திய பிரதேச முதல்வராக பதவியேற்கும் திரு.கமல்நாத்’தை கூறுகிறார்…)
மோடிஜி கூறும் இந்த கருத்தில் நாம் குறையேதும் காணவில்லை. ஆனால், அவர் பாதி உண்மையை மட்டும் சொல்லி விட்டு – மீதியை விட்டு விட்டார் என்று நினைக்கிறோம்.
அதனாலென்ன… அரசியல்வாதிகள் அப்படித்தான் இருப்பார்கள் …
எனவே, அந்த விட்டுப்போன மீதியை இங்கே பேசலாமா …?
மேலே சொல்லப்பட்டது 1984-ல் டெல்லியில் நடந்த கலவரம் குறித்தது – ஆனால், அதைவிட மோசமான கலவரங்கள் 2002-ல் குஜராத்தில் நடந்தன… யாரும் மறக்கவில்லை…
அந்த குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டு விட்டார்களா…?
மோடிஜி சொன்ன அதே ஸ்டைலில் – 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரங்களைப்பற்றி சொல்வதானால் –
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் – அகில இந்திய கட்சி ஒன்றின் தலைவராகி விட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவர் நாட்டின் பிரதமர் ஆகி விட்டார்.
-சரி தானே…?
அனுபவம் சொல்லித்தந்திருக்கும் பாடம் – சில சமயங்களில் அரசியல்வாதிகளுக்கு மறந்து விடுகிறது…..
ஏற்கெனவே – தாமே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் –
மற்றவர் பற்றி கருத்து சொல்லும்போது –
யோசித்து பொருத்தமாக சொல்ல வேண்டும்…
இல்லையேல் – கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்துகொண்டு
கல்லெறிவது போலாகி விடும்….
.
———————————————————————————————————————————————————————-



you are wrong ..charges against modi not proved
avudaiappanna
Then When charges against Kamalnath were proved ?
கா.மை சார்…. இந்த இடுகையை எப்படியும் விமர்சிக்கலாம். நாம ஒருவரைக் குற்றம் சாட்டும்போது, இன்னொருவரும் அப்படிச் செய்தாரே என்று சொல்வதை விரும்புவதில்லை அல்லவா? ரபேல் பற்றிப் பேசுவதற்கு முன்பாக, நாங்கள் போபர்சில் காசு பார்த்தோம், போபால் விஷவாயு சம்பந்தமானவர்களைத் தப்பிக்கவிட்டோம், ஆனாலும் பாஜக இப்போது செய்வதை எதிர்க்கிறோம் என்றா காங்கிரஸ் சொன்னது? இல்லை எந்த அரசியல் கட்சியேனும் அப்படிச் செய்திருக்கிறதா? இல்லை இங்குதான் அப்படிப்பட்ட விமரிசனங்கள் (from your side) வைக்கப்பட்டிருக்கிறதா?
இன்றைக்குமே காங்கிரஸ், “பாஜக ஊழல் செய்கிறது” என்று சொல்லும்போது, தாங்கள் செய்த ஊழல்களைப்பற்றியும் சொல்லியிருந்தால், உங்கள் விமர்சனத்தில் அர்த்தம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த இடுகை சரியான விமரிசனமாக இல்லை.
புதியவன்,
உங்கள் வாதம் விசித்திரமாக இருக்கிறது. உங்களுக்கு பாஜக செய்வது தவறாகத் தெரியவில்லை என்றால் அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டியது தானே…?
சிலர் இப்படித்தான் செய்கிறார்கள் – பாஜக ஆதரவு மனப்பான்மை உண்டு. ஆனால், வெளிப்படையாக அதைச் சொல்லாமல், சுற்றி வளைத்து எங்கெங்கோ செல்வது.
காங்கிரஸ் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதா – பாஜக தன் குற்றத்தை எப்படி ஒப்புக்கொள்ளும் என்கிற பேச்சு இங்கே எப்படி வரும்…? மற்றவரை குற்றம் சொல்பவர், அவரே அதே குற்றத்தை செய்திருக்கிறாரே என்று நான் தான் விமரிசனம் செய்கிறேன்.
பொதுவாகவே, ஆட்சியில் இருப்பவர்களைப்பற்றி தான் அதிக விமரிசனங்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாததா என்ன…? முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நான் எத்தனை கடுமையான விமரிசனங்களை முன்வைத்தேன் என்று செல்வராஜன் ஒரு பெரிய பட்டியலே தந்துள்ளாரே…( மிக்க நன்றி செல்வராஜன்…).
முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நான் அதை விமரிசிக்க சற்றும் தயங்கவில்லை. இப்போது பாஜக ஆட்சியில் இருக்கும்போது அதை அதிகமாக விமரிசிக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. காங்கிரசை விமரிசித்தபோது, ரசித்துப் பாராட்டியவர்களுக்கு, பாஜகவை விமரிசிக்கும்போது, அது சரியாகத் தோன்றவில்லை என்றால் என்ன அர்த்தம் ? சரியோ, தவறோ – பாஜகவை விமரிசிப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று அர்த்தம்…
நான் எந்த கட்சியின் அனுதாபியும் இல்லையென்பதால் தான் என்னால் சுதந்திரமாக இப்படி எழுத முடிகிறது. யாரையும், எந்த கட்சியையும் விமரிசிப்பதையோ, ஆதரிப்பதையோ – வெளிப்படையாகவே செய்கிறேன்..
எப்போதும், நான் சொல்வது தான் சரி என்று சொல்லிவிட முடியாது. சில சமயங்களில் என் கருத்துகள் தவறாக இருக்கலாம்.. ஆனால் சரியோ-தவறோ, வழுக்காமல், சுற்றி வளைக்காமல் – நான் என்ன நினைக்கிறேன் என்பதை நேர்மையாகச் சொல்வது தான் என் வழக்கம்..
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்… மீண்டும் சொல்கிறேன். மோடி அவர்கள் சொன்னது தவறுதான். ஆனால் நான் மோடி அவர்களை காந்தியைப் போல் தார்மீக நெறி கொண்டவர் என்று எப்போதும் நினைத்ததில்லை. அதனால் இத்தகைய நிகழ்வுகளை நான் ‘வெற்று அரசியல் ஆர்ப்பரிப்பு’ என்று புறம் தள்ளிவிடுகிறேன். நான் ஏற்காதது, தமிழகத்தை அவர் புறக்கணிப்பதை. நம் தமிழக நலனுக்கு எதெல்லாம் எதிரானதோ அதனை அவர் முனைந்து செய்வதை.
அண்ணா அதெல்லாம் இந்தாளுக்கு பெரிதல்ல. தினமும் பாஜகக்காரன் கவட்டையை மோர்ந்து பாக்கணும் அவ்வளோதான் .
தெய்வம் நின்று கொல்லும்.
இன்றில்லாவிடில் நாளையாவது 2002 குஜராத் படுகொலையில் சம்பந்தபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புவோம்.
அய்யா …! தாங்கள் இந்த போபர்ஸ் பீரங்கி பற்றி எழுதிய அளவுக்கு –ரபேல் விமானம் பற்றி ஏதோ ஒரு காரணத்திற்காக விலாவாரியா எழுதாமல் விட்டது ஏன் என்பது தான் எங்களை போன்ற நீண்ட நாளைய ” விமரிசனம் தளம் ” வாசகர்களின் மனதில் உள்ள எண்ணம் — புதியவர்களுக்கு இது பற்றியெல்லாம் தெரிந்திருக்க நியாயம் இல்லை என்பதால் —
அப்போதைய பழைய இடுகைகளின் தலைப்பும் – அந்த பதிவுகளில் ஆளும் கட்சியைப்பற்றிய எந்த ஒரு அச்சமும் இல்லாமல் வெளியிட்டதை தற்போது கண்ணுறும் வேளையில் — தங்களின் நேர்மையும் — நடு நிலையும் நன்கு விளங்குகிறது — அப்போதைய பின்னூட்டங்கள் — விவாதங்கள் அர்த்தம் உள்ளவைகளாக இருந்ததும் — தற்போது ஒரு சிலர் திசை மாற்ற அவ்வப்போது ” சிரிப்பு பின்னூட்டங்கள் ” இடுவதும் காலம் செய்த கோலமோ …?
1 // ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ? //
Posted on ஜனவரி 15, 2011 by vimarisanam – kavirimainthan
2 // கொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் – (ஏன் இத்தனை மர்மங்கள் – 2) //
Posted on ஜனவரி 17, 2011 by vimarisanam – காவிரிமைந்தன் ……
3 நவம்பர் 19, 1991 -அன்று 10,000 கோடி என்றால் -இன்று ? (ஏன் இத்தனை மர்மங்கள் -3)
Posted on ஜனவரி 18, 2011 by vimarisanam – kavirimainthan ….
4 ஜெர்மன் வங்கியில் கள்ளப்பணம் வைத்திருந்த 250 பேர் கொண்ட பட்டியல் … (ஏன் இத்தனை மர்மங்கள் -4 )
Posted on ஜனவரி 19, 2011 by vimarisanam – kavirimainthan
5 சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )
Posted on ஜனவரி 20, 2011 by vimarisanam – kavirimainthan ….. இந்த ஐந்தும் ஒரு தொடராக வந்தது — அதன் பிறகு வந்த கீழே உள்ள இடுகை பலரைப்பற்றியும் — அறிய ஒரு வாய்ப்பாக அளித்து அசதியுள்ளீர்கள் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை — . !
//அவிழும் மர்ம முடிச்சுகள் – ராஜீவ் காந்தி , சோனியா காந்தி, அருண் நேரு, கொட்டரோச்சி, அமிதாப் பச்சன், இந்து – ராம் – ஸ்வீடன் போலீஸ் தலைவரின் காலம் கடந்த பேட்டி !! //
Posted on ஏப்ரல் 26, 2012 by vimarisanam – kavirimainthan / ://vimarisanam.wordpress.com/2012/04/26/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ …… உண்மையான விமரிசனம் என்பது இதுதான் என்று மற்றவர்கள் உணர்ந்தால் — அது தான் தளத்தின் மேன்மை … !
புதியவன்
//இல்லை இங்குதான் அப்படிப்பட்ட விமரிசனங்கள் (from your side) வைக்கப்பட்டிருக்கிறதா? //
சிலருக்கு பாஜகாவை வெளிப்படையாக ஆதரிக்க தயக்கம் அல்லது வெட்கம்.
அதுபோல் மறைமுகமாக இப்படி எழுதுகிறீர்களோ ?
செல்வராஜன் சார், வரிசையாக எடுத்து வைத்திருக்கிறாரே விமரிசனங்களின் பட்டியலை. அதைப்பார்த்த பிறகும் நீங்கள் சொல்லி இருப்பது தான் சரி என்று
உங்களால் சொல்ல முடியுமா ?
அரவிந்தன்…. பாயிண்ட் அதைப் பற்றியல்ல. மோடி மற்றவரைக் குறை சொன்னார் (அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் பதவியிலிருக்கிறார் என்று). ஆனால் அவர் அப்படிச் சொல்லும்போது தன்னைப் பற்றியும் தன் சகாக்களைப் பற்றியும் சொல்லவில்லை என்பது.
எல்லா அரசியல்வாதிகளும் மற்றவர்களை ஊழல்வாதிகள், குற்றம் சாட்டப்பட்டவர் என்று சொல்லுவது வழக்கம்தான், அவர்களும் ஊழல் செய்திருந்தபோதும், குற்றம் சாட்டப்பட்டிருந்தபோதும். இதைச் செய்யாதவர்கள் யாரேனும் அரசியலில் இருந்தால் சொல்லுங்கள்.
இந்த பாயிண்டுக்காக மோடியை விமர்சிக்கமுடியாது என்பதுதான் என் கருத்து. பாஜக அரசு, மோடி தலைமையில் செய்தவற்றிர்க்கான விலையை அவர்கள் 2019 தேர்தலில் பெறுவார்கள். அப்போதுதான் அவர்களுக்குப் புரியும் தாங்கள் என்ன என்ன செய்யவில்லை என்று. ஆட்சியில் இருக்கும்போது அந்த மமதையில் அவர்கள் செவியில் அவை ஏறாது.
கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் என்ற முறையில் பார்த்திருக்கலாம் (வானத்திலிருந்துதான்). அது ஒரு மாரல் சப்போர்ட் என்ற அளவில் இருந்திருக்கும். ஆனால் அவர்தான் பிரியங்கா சோப்ரா திருமண வரவேற்பில் மிகவும் பிஸியாக இருந்துவிட்டாரே. பிரதமருக்கு அதுதான் நாட்டைப் பொறுத்தவரையில் முக்கியம் என்று நினைத்துவிட்டார். காவிரி சம்பந்தமான எல்லா நிலைகளிலும் அவர் கர்நாடகா சார்பாகத்தான் எல்லாவற்றையும் செய்தார். இதுபோல பலவற்றைப் பட்டியலிடலாம். ஜெ. மாத்திரம் இருந்திருந்தால் நாம் இன்னும் பெட்டரான நிலையிலிருந்திருப்போம். (தன் எம்பிக்கள் பலத்தை வைத்து அதனை அவர் சாதித்திருப்பார்) அதனால் நாம், தமிழர்கள் மோடி அவர்களை வெறுப்பதற்கான முகாந்திரங்கள் பலப் பல உண்டு.