உலகின் முதல் – முதல் கம்ப்யூட்டர் எப்படி இருந்தது…?


மே 10, 1950 – ஆச்சரியமாகத்தான் இருக்கிறது…. உலகின் முதல்
கம்ப்யூட்டர் என்று சொல்லக்கூடிய –
இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு, இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு
முன்னர் முதன் முதலாக பொதுமக்களுக்கு இயக்கிக் காட்டப்பட்ட
Pilot ACE (Automatic Computing Engine) இது தான்…

1945-ல் முதலில் இதை கட்டத்துவங்கியவர் (!!!) Alan Turing என்கிற
எஞ்சினீயர். பிரிட்டனின் National Physical Laboratory-யின் ஒப்புதலை
பெற்று முதல் கம்ப்யூட்டரை உருவாக்க முனைந்தவர் – பற்பல
சோதனைகளையும் தாண்டினாலும், ஒரு கட்டத்தில் இனி என்னால்
முடியாது… இது எனக்கு வேண்டாம் என்று விட்டு விட்டார்.

ஆனால், லண்டன் National Physical Laboratory – இந்த முயற்சியை
கைவிடத்தயாராக இல்லை. James H. Wilkinson, Mike Woodger, Donald
Davies and Harry Huskey ஆகிய தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து,
இதை மேலும் கொண்டு செலுத்தி,

இறுதியில் ஒரு வழியாக வெற்றிகரமாக முடித்து, மே 10, 1950 அன்று
உலகிற்கு இயக்கியும் காட்டி விட்டது. 1951 முதல் 1955 வரை
இத்தகைய 30 கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்பட்டு விற்பன செய்யப்பட்டன.
1955-க்கு பிறகு பெருத்த மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய மாடல் பிறந்தது.

தற்போது இந்த முதல் கம்ப்யூட்டர், Science Museum – லண்டனில்
காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

.
———————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to உலகின் முதல் – முதல் கம்ப்யூட்டர் எப்படி இருந்தது…?

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பாஜக பெருமானே….!

    ஐயகோ மானம் போகுது.

    கா.மை. ஐயா,

    உச்ச நீதிமன்றத்தில் பாஜகவின் அண்டப்புழுகு ஆகாசப்புழுகு….!

    தங்கள் கருத்து என்ன ஐயா…?

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அறிவழகு,

    எது நடந்ததோ அது நன்றாக நடந்தது….
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது…
    எது நடக்க வேண்டுமோ – அதுவும் நன்றாகவே நடக்கும்…

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      இறைவன் இருக்கின்றான்……
      அவன் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்……
      அவன் இல்லா உலகம் என்று எதுவும் இல்லை….
      எல்லாம் அறிகின்றான்….

      —— ——
      ஐயா,

      //எது நடக்க வேண்டுமோ – அதுவும் நன்றாகவே நடக்கும்…//

      JPC…?

      நடக்கும்….? நடக்க வேண்டும்.

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! உலகின் முதல் – முதல் கம்ப்யூட்டர் எப்படி இருந்தது…? என்பதும் …… // சட்டை பாக்கெட்டில் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு
    ஒரு கம்ப்யூட்டர் கிடைத்தால் சௌகரியம் தானே ! // என்பதையும் ஒப்பிட்டால் பிரமிப்பு தானே …? அது பற்றி அறிய பழைய இடுகை ஒன்று :– // அற்புதமான தொழில் நுட்பம் !!! //https://vimarisanam.wordpress.com/2013/03/04/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/
    Posted on மார்ச் 4, 2013 by vimarisanam – kavirimainthan

    அடுத்து ஒரு செய்தி :– // NGT Orders Reopening of Vedanta’s Sterlite Plant in Thoothukudi, Tamil Nadu to Move Supreme Court // https://www.news18.com/news/india/vedanta-copper-plant-in-tamil-nadus-thoothukudi-to-reopen-as-green-court-cancels-govt-order-1974473.html …அரசு கொள்கை முடிவு எடுக்காத வரை சிக்கல் தானோ …? The National Green Tribunal என்பதின் அர்த்தம் மாறுகிறதா …?

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை சார்.. இது ஒரு பெரிய சப்ஜெக்ட். கணிணி உலகின் பெரும் ஜாம்பவான்களே இத்தகைய வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்கவில்லை. முதல் கம்ப்யூட்டர் தயார் செய்தபோதே, உலகில் 50 கம்ப்யூட்டர் விற்றாலே அது சாதனை, அதைச் சாதிக்கமுடியாது என்று ஜாம்பவான்கள் பலர் சொல்லினர்.

    95ல், (நான் கம்ப்யூட்டர் லைனில் பலவருடங்கள் வேலைபார்த்தவன்), கையடக்க கம்ப்யூட்டர் (அதாவது நம் கையளவு கம்ப்யூட்டர் இருக்கும், ஆபரேடிங் சிஸ்டம் இருக்காது. அது மைக்ரோசாப்ஃப்ட் தலைமை கம்ப்யூட்டரோடு தொடர்பு ஏற்படுத்தி அந்த சாஃப்ட்வேரைத்தான் உபயோகிக்கமுடியும். அப்போ லைசன்ஸ் சம்பந்தமான பிரச்சனை இருக்கவே இருக்காது) அடுத்த டெக்னாலஜி என்று பலர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது லேப்டாப் ஒரு அலுவலகத்தில் சிலர் மட்டும் உபயோகப்படுத்திக்கொண்டிருந்தனர் (இங்கு அல்ல, வெளிநாட்டில்). அப்புறம் 2002ல், மைக்ரோசாஃப்ட் ஒரு லோ கிளாஸ் ஸ்மார்ட் போன் கொண்டுவந்தது (உண்மையில் இது சைனா பிராடக்ட், தங்கள் விண்டோஸ், வேர்டு லைசன்ஸ் வாங்கும் பெரிய கம்பெனிகளுக்கு 1-2 இலவசமாகக் கொடுத்தனர்). 2009களில்தான் ஸ்மார்ட்போன் மார்கெட்டுகளில் வர ஆரம்பித்தது (பிளாக்பர்ரி, அதுவும் ஆபீஸ் மெயில் பார்ப்பதற்காக). இன்று இருக்கும் வளர்ச்சியை அப்போது எண்ணிப்பார்த்ததில்லை. அளவிட முடியாத வளர்ச்சி.

    டெக்னாலஜி, எந்தக் கம்பெனியின் எதிர்காலத்துக்கும் கேரண்டி கொடுப்பதில்லை. (மேனுஃபேக்சரிங் கம்பனி). கோலோச்சிய நோக்கிய எங்கு என்றே தெரியவில்லை. பிளாக்பர்ரி இப்போது மிக மிகக் குறைவு.

    நம் கண் முன்னாலேயே ஓலா, ஊபர் வளர்ச்சியும், ஸொமட்டோ/ஸ்விக்கி வளர்ச்சியும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    20-25 வருடங்களில் ஆட்டோ, தனிப்பட்ட மருத்துவர்கள் (கிளினிக்குகள்) இங்கு இருக்காது என்று தோன்றுகிறது.

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்க பிரதமர் அறிவுரை: தமிழக பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் // https://tamil.thehindu.com/tamilnadu/article25756330.ece வாக்கு சேகரிக்க அறிவுரை கூறுகிற வேளையில் … இப்படியும் ஒரு செய்தி :– // நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம் // https://tamil.thehindu.com/incoming/article25751067.ece நல்லாத்தான் இருக்கு …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.