ரூ.5- செலவு செய்தால் மோடியை சந்திக்கலாம் என்கிற செய்தி எப்படி வரவேற்கப்படுகிறது…?


நேற்றைய நாளிதழ் ஒன்றில், ரூ.5/- செலவுசெய்தால் மோடியை
சந்திக்கலாம் என்கிற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது.

அந்த செய்தியை அப்படியே கீழே தந்திருக்கிறேன்….

நான் இதை இங்கு ஒரு செய்தியாக மட்டுமே தந்திருக்கிறேன்.
எனது கருத்தோ, விமரிசனமோ – எதுவும் சேர்க்கவில்லை.

முதலில் – இந்த செய்தியை, விமரிசனம் தள வாசக நண்பர்கள் எப்படி,
எந்த கோணத்தில் பார்க்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்.

இந்த உத்தி, மோடிஜிக்கோ, பாஜகவுக்கோ – பெருமை சேர்க்கிறதா…? பலன் உண்டா..? மக்கள் இந்த செய்தியை ஆர்வத்துடன் வரவேற்பார்களா..?

குறைந்த பட்சம் 4 பின்னூட்டங்களாவது வந்த பிறகு –
நான் இதுகுறித்த இன்னொரு செய்தியை பின்னூட்டம் மூலமாகவே
தரவிருக்கிறேன்.

பலருக்கு அதிர்ச்சியை தரத்தக்கதாக இருக்கும் அந்த செய்தி….!!!

சஸ்பென்ஸ் சீக்கிரம் கலைய வேண்டுமானால், முந்துங்கள்
பின்னூட்டங்களுக்கு…. 🙂 🙂

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ரூ.5- செலவு செய்தால் மோடியை சந்திக்கலாம் என்கிற செய்தி எப்படி வரவேற்கப்படுகிறது…?

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    வெறும் ஐந்து ரூபாய் செலவில் ஒரு ‘டீ ஷர்ட்’ கிடைக்கும் என்றால்
    இதற்கு நிச்சயம் ‘அமோக ‘ வரவேற்பு இருக்கும்…
    டீ குடிக்கும் காசில் டீ ஷர்ட் கிடைக்குமென்றால் – நான் கூட அனுப்புவேனே.
    அந்த ‘ஆப்’பை உடனடியாகத் தேட வேண்டும். 🙂
    கே.எம். சார்,
    நான் ஒன்றும் தப்பாகச் சொல்லி விடவில்லையே ?
    ஒரு வேளை டீ ஷர்ட் வாங்கிக்கொண்டால், பாஜகவில் சேர்ந்ததாக ஆகி விடுமோ ?

    • Dhamodharan Subramaniam's avatar Dhamodharan Subramaniam சொல்கிறார்:

      the t shirt will have NAMO’s face. Soon you will find that only this t-shirts are visible like INDIAN thatha T shirt in the INDIAN movie. Putting the NAMO brand strongly in your mind. This also is an attempt to continue what they did in 2014 that is making the parlimentary elections like a US presidential elections. This strategy helps NAMO and BJP

  2. Dhamodharan Subramaniam's avatar Dhamodharan Subramaniam சொல்கிறார்:

    This is to find the “exact votebank” of BJP. Only who is interested in BJP, will do this. In other words to find the committed BJP voters for 2019.

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    “ஒருவரை ஏமாற்றவேண்டுமென்றால் முதலில் அவனின் ஆசையை தூண்டவேண்டும்” – இது ஒரு படத்தில் வரும் வசனம் ஐயா!
    400+ ரூபாய்க்கு மொபைல் ஃபோன் வாங்கிவிட்டோம்…
    மிஸ் கால் கொடுத்து நதிகளை இணைத்துவிட்டோம்…
    அடுத்து நம் நாட்டு பிரதமரை நாம் சந்திக்க (லஞ்சம்?!??) ₹5/-
    நல்லா வருவோம் நாமும் நம் நாடும்

  4. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    சில வருடங்கள் முன்னால் ஒரு fraud -chain scheme வெகு பிரபலமடைந்திருந்தது.

    ஒரு ஏஜென்சி. 10 ரூபாய் கொடுத்தால் மெம்பர் ஆகலாம். மெம்பர் ஆனவுடன், உங்களுக்கு 10 form அனுப்புவார்கள்.
    அதை உங்களுக்கு தெரிந்த 10 பேருக்கு கொடுத்து, அவர்களை மெம்பர் ஆகச் சொல்ல வேண்டும்.
    அந்த 10 பேரும் ஆளுக்கு 10 ரூபாய் கொடுத்து மெம்பர் ஆனவுடன், நீங்கள் முதலில் கட்டிய 10 ரூபாய் உங்களுக்குதிரும்ப தரப்படும்.
    அந்த 10 பேரும், நீங்கள் செய்த மாதிரியே 10 பேரை பிடித்து 10 ரூபாய் கட்டவைத்து மெம்பர் ஆக்க வேண்டும்.
    இப்போது, உங்களுக்கு இன்னொரு10 ரூபாய் வரும். நீங்கள் மெம்பர் ஆக்கிய 10 பேருக்கும், அவர்கள் கட்டிய 10 ரூபாய் திரும்ப கிடைத்து விடும்.
    இதே மாதிரி இந்த செயினை தொடர்ந்து கொண்டே இருந்தால், நீங்கள் விரைவில் லட்சாதிபதி ஆகி விடுவீர்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

    இதில் ஏகப்பட்ட பேர் ஆசையுடன் வாங்கி செயினைத்தொடர முடியாமல் ஏமாந்து போனார்கள். இந்த ஏஜென்சியை நடத்தியவன் எத்தனை லட்சம் சம்பாதித்திருப்பான்
    யோசித்துப் பாருங்கள்.
    அவர்களை அப்போது சட்டப்படி ஒன்றும் செய்ய முடியவில்லை.
    மக்களின் முட்டாள்தனம் தான் அவர்களின் நம்பிக்கை, முதலீடு எல்லாமே.

    இங்கே 5 ரூபாய் டீ ஷர்ட் மூலம் மக்களின் எதிர்காலம் விலைக்கு வாங்கப்படுகிறது. அவ்வளவு தான் வித்தியாசம். மோசடி சரித்திரம் மீண்டும் அரங்கேற்றப்படுகிறது.

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    மேலே இருக்கும் இடுகையின் தொடர்ச்சியாக
    இந்த பின்னூட்டம்…..

    ———————————–

    மேலே இருக்கும் 5 ரூபாய் செய்தியை, தினமலர் facebook- லிங்கிலிருந்து தான் நான் எடுத்துப் போட்டிருக்கிறேன்….

    இந்த செய்தியைத் தொடர்ந்து வந்த பின்னூட்டங்களைப் பார்த்து, பொதுமக்களிடையேயிருந்து இதற்கு எத்தகைய வரவேற்பு இருந்தது என்றும் பார்த்து, அதைப்பற்றியும் எழுத விரும்பினேன்.

    ஆனால், மக்களின் கருத்து, எனக்கே அதிர்ச்சியை உண்டாக்கியது.
    இந்த விமரிசனம் வலைத்தளத்தில் எடுத்து பிரசுரிக்க முடியாத அளவிற்கு
    இருக்கிறது அங்கு எழுதப்பட்டிருப்பவை…

    அவற்றை இங்கு பிரசுரிப்பது, நமது தளத்தின் மரியாதையை குறைத்துவிடும் என்பதால், நான் அவற்றைப்பற்றி எழுதும் உத்தேசத்தை கைவிட்டு விட்டேன்…

    அங்கு மக்கள் என்ன கூறி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும் நண்பர்கள் கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து
    அங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம்.

    அவற்றை கண்டபிறகாவது, பாஜக அபிமானிகள், இங்கே, நமது விமரிசனம் தளத்தில் வரும் கட்டுரைகளைப்பற்றியும், அவற்றிற்கு நண்பர்கள் எழுதும் பின்னூட்டங்களின் தரத்தைப்பற்றியும் குறைகூறுவதை நிறுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    ———————————

    இந்த லிங்க் தினமலர் நாளிதழின் வலைப்பக்கத்திற்கு
    சென்று விடுகிறது. நான் கூறுவது அங்கேயுள்ள comments களை அல்ல.

    தினமலர்-ன் – facebook -க்கு சென்று, அதாவது
    https://www.facebook.com/Dinamalardaily

    சென்று, அங்கே search -ல்

    ரூ.5 செலவு செய்தால் மோடியை சந்திக்கலாம்!

    கொடுத்தால், கிடைக்கும் தலைப்பில் உள்ள
    செய்தியின் கீழேயுள்ள comments -களை காணலாம்.

    —————————————————————————————-

  6. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    comment-ஐ எடிட் செய்துவிட்டார்கள்.

  7. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மல்டி செயின் ஃப்ராடு (MLM-Multi Level Marketing). இது ஒரு பூதாகார செயினை உண்டாக்கும். 1 X 100 X 100 X 100 = 10 லட்சம். வெறும் 3 செயிலேயே 50 லட்சம்-1 கோடி ரூபாயும், 10 லட்சம் மொபைல் நம்பர்களும் கிடைத்துவிடும். யோசியுங்கள் ஜஸ்ட் லைக் தேட், பல மாநிலங்களில் இது நடந்தால் எப்படி கோடிக்கணக்கான பணம் வசூலாகும், எத்தனை பணம் வசூலானதாகக் காண்பிக்கப்படும் என்று. வெறும் மார்க்கெடிங் உத்தி என்றாலும், இது ஃப்ராடுதான்.

    இந்தியாவில் எந்தத் திட்டத்தையும் யாரும் கொண்டுவந்துவிடலாம் போலிருக்கு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.