கலர்ஸ்-ஹிந்தி – தொலைக்காட்சி நிகழ்ச்சி…. ( பகுதி-7 ) இன்றைய -ஆபத்து – (சுவாரஸ்யம்)


இப்போதெல்லாம், சில முக்கியமான தொலைக்காட்சி சேனல்களில்,
இசை, நடனம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று ரியல்டி
ஷோ’க்கள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன….

இவற்றில் சில அபத்தமாகவும், ஆபாசமாகவும் இருக்கின்றன…
இன்னும் சிலவோ – ஆபத்தானவையாக இருக்கின்றன…

பல நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் – சிறுவர், சிறுமியரிடையே – இளைஞர்களிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பணியை மிக அழகாகச் செய்கின்றன….உண்மை தான்.

பெரும்பாலும், நல்ல திறமைகள் ஊக்குவிக்கப்பட்டு, வெளியுலகிற்கு
அடையாளம் காட்டப்படுகின்றன….அதுவும் சரியே..

ஆனால், சில சமயங்களில் சின்னஞ்சிறுசுகளை வைத்துக்கொண்டு,
இவர்கள் புரியும் சாகசங்கள், அந்த குழந்தைகளின் பாதுகாப்பைக்குறித்து நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன….

அந்த குழந்தைகளுக்கு – இவற்றின் விபரீதம் புரியாத வயது…
ஆனால் அவர்களின் பெற்றோர், டிவி நிகழ்ச்சியை
உருவாக்குவோர் ஆகியோர் இதில்
மறைந்து கிடக்கும் ஆபத்தை உணர்ந்து தவிர்க்க வேண்டாமா…?

இந்த சிறுவர்களின் திறமை வியப்பையும், ஆச்சரியத்தையும்
தருவது என்னவோ உண்மை தான்….
ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா…?
கீழே அத்தகைய ஒரு நிகழ்வைப் பாருங்கள்….
இதில் இருக்கும் ரிஸ்க் புரியும் ….

என் முக்கிய பயம் – தமிழ் தொலைக்காட்சி சேனல்களுக்கும், தமிழ்ச்சமூகத்திற்கும் – இந்த வியாதி
தொற்றிக்கொண்டு விடப்போகிறதே என்பது தான்.

—————-

———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கலர்ஸ்-ஹிந்தி – தொலைக்காட்சி நிகழ்ச்சி…. ( பகுதி-7 ) இன்றைய -ஆபத்து – (சுவாரஸ்யம்)

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    இது நடனம் அல்ல. சர்க்கஸ்.
    ஆபத்தான மூவ்’களில் எல்லாம் சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது.
    உள்ளே நுழைந்து விட்ட இதை தடுப்பது இனி கடினம்.
    ஆனால், இதிலெல்லால் ஒரு வயது கட்டுப்பாட்டை விதிக்கலாம்.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! அடிப்படையில் யோசித்தால் குழந்தைகளை வைத்து நடத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அராஜகமானது என்றுதான் சொல்லவேண்டும்!

    உண்மையில் சில அசாத்தியங்களை ரசிக்கும், அதனைக் கொண்டாடும் மனப்பான்மையும் நம்மிடம் இருக்கிறது.நாம் எந்தமாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம், எம்மாதிரியான புரிதல்களுக்கு மத்தியில் வாழ்கிறோம் என்பதையும்,
    இது போன்ற செயல்களுக்கு தான் தற்போது மதிப்பு என்பதையும் சேர்த்தே புரிந்துகொண்டால்தான் இதற்கான விடைகள் கிடைக்கும். …

    இந்த சிறார்களுக்கு ” உடல் ரீதியான பாதிப்பு …உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு ….உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு ” இந்த மூன்றும் ஏற்படுகிறதா இல்லையா என்பதை விளக்குவது யார் …? குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி இத்தகைய நிகழ்ச்சிகள் குற்றமானதா இல்லையா … ? இதில் தொலைக்காட்சிக்கு வருமானம் வருமானால் அது ” குழந்தை தொழிலாளர்களை ” கொண்டு வருகிற வருமானம் என்று அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.