…
…

…
ஸ்டார் ஸ்பீக்கர் இருக்கும்போது –
டிவி விளம்பரங்கள் எதற்கு…?
அதுவும் ஒரே வாரத்தில் 22,099 தடவைகள்…?
இன்றைய செய்தியை கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்…
just அதிலிருந்து கொஞ்சம் மட்டும்…
……
5 மாநில தேர்தல்களை அடுத்து
தொலைக்காட்சி விளம்பரங்களில் பாஜக தொடர்பான விளம்பரங்கள் முதலிடத்தில் உள்ளன என்று
ப்ராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் (BARC) வெளியிட்டுள்ள
தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
நெட்ஃப்ளிக்ஸை விட,
டெட்டால் சோப்பை விட,
கால்கேட் டூத் பேஸ்ட்டை விட,
அமேசான் ப்ரைமை விட –
அதிகமான அளவில் – பாஜக தொலைக்காட்சிகளில் விளம்பரம்
செய்துள்ளது….
நவம்பர் 10-16 காலகட்டத்தில் பாஜக அதிக விளம்பரங்களை வெளியிட்டு,
22,099 புள்ளிகளில் அகில இந்தியாவிலும் முதலிடத்தில் உள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற எந்த அரசியல் கட்சியும் இப்படியான அதிகபட்ச தொலைக்காட்சி
விளம்பரங்களைச் செய்யவில்லை. இதற்கு அடுத்ததாக நெட்ஃப்ளிக்ஸ்
12951 தடவை விளம்பரங்களில் வந்துள்ளதாம்….காங்கிரஸ் கட்சி முதல்
பத்து இடங்களில் கூட வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
….

…….
ஸ்டார் ஸ்பீக்கர் கைவசம் இருக்கும்போது –
கேவலம் தொலைக்காட்சி விளம்பரங்களை கட்சி நம்புவது ஏன்..?
தலைவரின் வாக்காளரை கவர்ந்திழுக்கும் சக்தியின் மீது
கட்சிக்கே நம்பிக்கை குறைந்து விட்டதா…?
அல்லது –
மக்கள் – தலைவரை நேரில் பார்த்தால் வேறு விஷயங்கள் நினைவிற்கு
வந்து – உள்ள ஓட்டுகளும் போய் விடுக்கூடும் என்கிற பயமா…?
———————————————
1960-ல் -இந்தப்பாடலை இயற்றியவர் – தஞ்சை ராமையா தாஸ்… 🙂 🙂
காலத்தால் அழியாத ஒரு பாடல்…!!!
இந்தப்பாடல் இப்போது எதற்கு என்கிறீர்களா…?
ஒரு நல்ல பாடல் நினைவிற்கு வந்தது… ஜஸ்ட் …போட்டு வைத்தேன்…
எந்தப்பாடல், யாருக்கு –
எப்போது தேவைப்படும் என்பதை யாரறிவார்…? 🙂 🙂
…
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் – அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
மானாபிமானந்தன்னை மறைவாக்கும் – நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும் – பல
விபரீத செயல்களை விளைவாக்கும்
(தன்னைத் தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்)
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஓடவிடும் – பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்
…
…
ஞானோதயம் குறைந்தால் தொற்றும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் – சுத்த
ஞானோதயம் குறைந்தால் தொற்றும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் – அதற்கு
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
.
.
———————————————————————————



// தலைவரை நேரில் பார்த்தால் வேறு விஷயங்கள் நினைவிற்கு
வந்து – உள்ள ஓட்டுகளும் போய் விடுக்கூடும் என்கிற பயமா…? //
அப்படிக்கூட இருக்கலாம் .