…
…
…

…
…
இரண்டு நாட்களுக்கு முன்னர், மிஜோரம் மாநிலத்தில் ஒரு தேர்தல்
பிரச்சார கூட்டத்தில் பேசும்போது –
“மிஜோரம் உடைகளைப் பார்த்து மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்கள்;
பாஜக மட்டும் தான் உங்களைப் புரிந்துகொண்டு மதிக்கிறது ” –
என்று மனம் வருந்திப் பேசி இருக்கிறார்….

அநேகமாக, இந்த ஒரு கூட்டத்திற்காக மட்டுமே தைக்கப்பட்ட கோட்’டாக இது இருக்கும்…. மோடிஜியின் தையல்காரர் கொடுத்து வைத்தவர்…!!!
…

இந்தியா ஒரு பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு. காஷ்மீர் முதல்
கன்யாகுமரி வரை, குஜராத் முதல் நாகாலாந்து வரை இங்கு பலவித
கலாச்சாரங்களை உடைய மக்கள் வசிக்கிறார்கள். வெவ்வெறு மொழி,
நடை,உடை, பாவனைகள் – இது தான் இந்தியாவின் விசேஷமே…
இந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே இது நன்கு தெரியும். மக்கள் யாரும், எந்த மாநில கலாச்சாரங்களையும் இகழ்வதில்லை….மாறாக ரசித்து அனுபவிக்கவே செய்கிறார்கள்…
அப்படியானால் மக்கள் கிண்டல் செய்வது …..?
…


..

…

…

வோட்டுப் வேட்டைக்கு செல்லும், அரசியல்வாதிகள், போகும் இடத்தில்
எல்லாம், அந்தந்த மாநில மக்களின் உடைகளை-காஸ்டியூம்களை
“மேக்கப்” போட்டுக்கொண்டு “நான் உங்க வீட்டுப்பிள்ளை” என்று
சொல்லிக்கொண்டு அலையும் கேலிக்கூத்தை கண்டு தான் கிண்டல்
செய்கிறார்கள்….
விவரம் தெரிந்தவர்கள், நெருக்கமானவர்கள் யாராவது இதைப்பற்றி மோடிஜிக்கு எடுத்துச் சொல்லலாமே… பாவம் அவர் இதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாரே.. !!!
.
——————————————————————————-



கிண்டலோ கிண்டல் சுவையான சுண்டல் !
புகைப்படங்கள் காமெடியோ காமெடி !
// மக்கள் யாரும், எந்த மாநில கலாச்சாரங்களையும் இகழ்வதில்லை….மாறாக ரசித்து அனுபவிக்கவே செய்கிறார்கள்…
அப்படியானால் மக்கள் கிண்டல் செய்வது …..? // ….. ஒரு சில மணி நேர கூத்தைத்தானே …? …. ஆமாங்கய்யா இந்த உடைகளையெல்லாம் என்ன செய்வார்கள் …? இங்கே நம்மூர் அரசியல்வாதிகள் அவர்களுக்கு போடுகிற சால்வை மற்றும் துண்டுகளை மறு சுத்து விற்பனைக்கு அனுப்பி காசாக்குவதாக கேள்விப்பட்டது உண்டு … அங்கே …?
அய்யா …. ! ஒரு செய்தி :— // ரஃபேல்: பிரான்சிலும் ஊழல் புகார்! // https://www.minnambalam.com/k/2018/11/24/67