…
…

…
தலைவர் முகத்தைக் கொஞ்சம் பாருங்கள்…
பால் வடியும் முகம் தெரியவில்லை….. ? தெரியாத்தனமாக
P.S.வீரப்பா மாதிரி கொஞ்சம் தாடி,மீசை வைத்து விட்டார்… அதற்காக இப்படியா….. கொலைக்கதை எல்லாம் சொல்லுவது….?
கீழே கதையைப் பாருங்களேன்….
( http://minnambalam.com/k/2018/11/23/55 )
——————
சதிகாரர் அமித் ஷா: விசாரணை அதிகாரி!
துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கில் முக்கிய சதிகாரர்களில் பாஜக தலைவர் அமித் ஷாவும் ஒருவர் என விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் சொராபுதீன் ஷேக்.
தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக இவர் மீது குற்றம் சாட்டிய
குஜராத் போலீசார், 2005ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி
தனது மனைவியுடன் ஐதராபாத்தில் இருந்து
மகாராஷ்டிரா வந்துகொண்டிருந்த அவரை கைது செய்தனர்.
மூன்று நாட்கள் கழித்து சொராபுதீன், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அடுத்த சில நாட்களின் அவரது மனைவியும் கொல்லப்பட்டார்.
சொராபுதீன் கொலையை பார்த்த ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதி
2006-ஆம் ஆண்டில் ஒரு ஆண்டு கழித்து போலீசாரால் கொலை செய்யப்பட்டார். ஆனால் அவர் தங்கள் காவலில் இருந்து தப்பியோட முயன்றபோது அவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
துளசிராம் பிரஜாபதியின் மரணம் தொடர்பான வழக்கை கடந்த 2012ஆம்
ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து விசாரித்தவரான விசாரணை அதிகாரி சந்தீப் தம்காட்கே மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 21ஆம் தேதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, இந்த விவகாரத்தில் குற்றவாளிகள்- அரசியல்வாதிகள் –
போலீஸ் கூட்டு இருந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அமித் ஷா மற்றும்
குலாப்சந்த் கட்டாரியா (ராஜஸ்தானின் உள்துறை அமைச்சர்) ஆகியோர்
சொராபுதீன், துளசிராம் மற்றும் ஆசம் கான் ஆகியோரை குற்றவாளிகளாக பயன்படுத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
துளசிராம்
“நாங்கள் நடத்திய விசாரணையில், அமித் ஷா, டிஜி வன்சாரா
(குஜராத் முன்னாள் டிஐஜி), ராஜ்குமார் பாண்டியன்
(புலனாய்வு அமைப்பு) மற்றும் எம்.என். தினேஷ்(ராஜஸ்தான் ஐபிஎஸ் அதிகாரி) ஆகியோர் முதன்மை சதிகாரர்கள் என்பது தெரியவந்தது”
என நீதிமன்றத்தில் சந்தீப் கூறியுள்ளார்.
துளசிராம் போலி என்கவுன்டர் வழக்கில் ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு அமித் ஷா கைது செய்யப்பட்டிருந்தார்….. எனினும் அவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என 2014-ல் சிபிஐ நீதிபதி எம்.பி. கோசவி அமித் ஷாவை வழக்கில் இருந்து விடுவித்தார்.
சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா ரூ. 70 லட்சம் லஞ்சம் பெற்றதாக அந்த வழக்கை விசாரித்த வந்த அதிகாரி அமிதாப் தாக்கூர் கடந்த 19ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.
தற்போது கொலை சதியிலும் அமித் ஷா
ஈடுபட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
———————————————————–
பத்திரிகைக்காரர்கள் ஏன் தான் அப்பாவித்தலைவர்களின் மீது இப்படி
எல்லாம் கதை கட்டுகிறார்களோ தெரியவில்லை…
மின்னம்பலம் செய்தித்தளத்தை கேட்டால், அவர்கள் என்ன
சொல்லப்போகிறார்கள்…?
நாங்கள் என்ன இட்டுக்கட்டிய கதையையா போட்டிருக்கிறோம்…?
நீதிமன்றத்தில் நடந்த விவகாரத்தைத்தானே போட்டிருக்கிறோம்..
வீணாக எங்களை ஏன் குறை சொல்கிறீர்கள் என்று திரும்பக் கேட்பார்கள்….!!!
உம்ம்ம்….காலம் கெட்டுக் கிடக்கிறது….
” யாரை எங்கே வைப்பது என்பது யாருக்கும் தெரியல்ல..
அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்ல…
பேதம் புரியல்லே ….!!!
.
———————————————————————————



Hilarious !
பிஜேபி தலைவரை பால் வடியும் முகம் என்று வர்ணிக்கும் நபர் இந்தியாவிலேயே நீங்கள் ஒருத்தராகத்தான் இருக்க முடியும். பிஜேபி காரர்களெ
இந்த கோணத்தில் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இதற்காகவே
பிஜேபி காரர்கள் உங்களுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். 🙂
கே.எம்.சார்,
நோகாமல் நுங்கு எடுக்கும்
உங்கள் புதிய உத்தி நன்றாக இருக்கிறது.
பாஜகவினர் யாரும் குறை சொல்ல வழியே இல்லை.
அவர்களே கூட பாராட்டாத அளவுக்கு தலைவரை பாராட்டி
இருக்கிறீர்களே. ரொம்ப பெரிய மனசு சார் உங்களுக்கு.
“யாரை எங்கே வைப்பது என்பது யாருக்கும் தெரியல்ல..
அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்ல…
பேதம் புரியல்லே ….!!!”
///குஜராத் கலவரம்: மோடியை விடுவித்த எஸ்ஐடி அறிக்கைக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு///
உச்ச நீதிமன்றம் நாளை 26ந் தேதிக்கு
இந்த மனுவை விசாரிக்க இருக்கின்றது. விசாரணையில் நல்ல தீர்ப்பு வந்தால்…..!
இந்த பாடலை இன்னும் ஒரு தடவை போடலாமா…!?
சோராபுதீன் கேஸ் மிக பிரபலம் . சோராபுதீன் கொல்லப்பட்ட
ஒரு வருடம் கழித்து வெளியே வந்தது .
காரணம் – தயாள் என்ற ஒரு பத்திரிகை நிருபர் .
தயாள் ஆட்டோ ஒட்டி , நிருபர் ஆனவர் .
சரக்கு சாப்பிட்டு சில போலீஸ் அதிகாரிகள்
(குஜராத்தில் மது விலக்கு உள்ளது ) நிருபரிடம் உளறிவிட்டனர் .
சோராபுதீன் மிரட்டி பணம் பண்ணும் பேர்வழி .சொந்த ஊர் மத்திய பிரதேசம் .
சோராபுதீன் வயல் கிணற்றில் 40 (நாற்பது )
A K 47 ரைபிள்கள் எடுக்கப்பட்டன .ராஜஸ்தானில் மார்பிள்
விற்பனை செய்பவர்களை மிரட்டி பணம் பறித்தவர் .
அமித் ஷா விற்கு முன்னால் Home minister ஆக
இருந்தவர் ஹரேன் பாண்டியா என்பவர் .
போலீஸ் துறைக்கு பொறுப்பில் இருந்தவர்
காலையில் நடை போகும் போது சுடப்பட்டு இறந்தார் .
இதற்கு பின்னே அமித் ஷா பதவிக்கு வந்தார் .
சோராபுதீன் கேஸில் முக்கிய சாட்சி துளசிராம் பிரஜாபதி .
இவரும் என்கவுண்டர் செய்யப்பட்டார் .
காங்கிரஸ் என்கவுண்ட்டர்களை வைத்து அரசியல் செய்தது .
ஆனால் , மக்கள் ரௌடிகளை சுட்டது சரிதான் என நினைத்தனர் .
அதனால் காங்கிரஸ் பெரிய தோல்வியை சந்தித்தது .