அய்யோ… அது பழைய பொய்யி’ங்க….இன்னிய பொய்’யி இங்கிட்டு… இதோ …!!!


நேற்றைய தினம் ஹிந்து நாளிதழ், பண மதிப்பிழப்பு
(Demonetization) பற்றி மத்திய அரசின் வேளாண்துறை
(தெரியாத்தனமாக) வெளியிட்டு விட்ட
ஒரு உண்மையை கண்டுபிடித்து வெளியிட்டது….
(https://tamil.thehindu.com/india/article25554999.ece)

அதன் சாராம்சம் –

நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக
காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி உள்ளார்.

மத்திய வேளாண் அமைச்சகம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அளித்த அறிக்கையின் சுருக்கத்தை அவர் வெளியிட்டார்…

மத்திய வேளாண் துறை அளித்த அறிக்கையை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் மேற்கொண்டு விவரமாக ஆய்வு செய்து வேளாண் துறையின்
அறிக்கைகளிலிருந்து – கீழ்க்கண்ட கருத்துகள் சொல்லப்பட்டிருப்பதை
கண்டுபிடித்து வெளியிட்டது….

——————

..

..

”நாட்டில் உள்ள விவசாயிகள் தங்களின் கரீப் பயிர்களை
விற்பனை செய்து கொண்டிருந்த நேரத்திலும்,
ராபி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த நேரத்திலும்,
கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு
நடவடிக்கை கொண்டுவரப்பட்டது.

இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்,
சந்தையில் புழக்கத்தில் இருந்த பணம் முழுவதும்
வங்கிக்குச் சென்று விட்டது.
கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
ரொக்கப் பணத்தை மட்டும் நம்பி இந்தியாவில் 26.30 கோடி
விவசாயிகள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த விவசாயிகளிடம் போதுமான பணம் கையிருப்பு இல்லாத
காரணத்தால், ராபி பருவத்துக்கு தேவையான
விதைகளையும் உரத்தையும் வாங்க முடியவில்லை.

மிகப்பெரிய நிலச்சுவான்தார்கள் கூட – நாள்தோறும்
தங்கள் நிலத்தில் வேலைசெய்த விவசாய
கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும்,
வேளாண் நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருட்களை
வாங்க முடியாமலும் சிரமப்பட்டுள்ளனர்.

விவசாயிகளிடம் கடுமையான பணப் பற்றாக்குறை நிலவியதால்,
தேசிய விதைகள் கழகம் (என்எஸ்சி) கூட ஏறக்குறைய
1.38 லட்சம் குவிண்டால் கோதுமை விதைகளை
விவசாயிகளிடம் விற்பனை செய்ய முடியாமல்போனது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளைக் கொண்டு கோதுமை விதைகளை
வாங்கிக்கொள்ளலாம் என்று
மத்திய அரசு விவசாயிகளுக்கு பிற்பாடு அனுமதி அளித்தும்
விதைகள் விற்பனை சூடுபிடிக்கவில்லை”

– என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

– இத்தனை உண்மை விவரங்களும் வேளாண்துறை, பாராளுமன்ற நிதி
நிலைக்குழுவுக்கு அளித்த அறிக்கைகளுக்குள் ஒளிந்து கொண்டுள்ளன.
விவரமாக ஆராய்ந்ததில் வெளிப்பட்டுள்ளன.

நேற்று ஹிந்து நாளிதழ் மூலம் வெளிவந்த செய்தி, மீடியாவில் தீயாக
பற்றிக்கொண்டு எரிந்தது… எதிர்க்கட்சிகள் பொங்கத் துவங்கின….

————–

அதற்கு முந்தைய தினம் தான், மத்திய பிரதேச
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் –

ஊழல் என்னும் கரையான்களை ஒழிப்பதற்காகவே
கசப்பான மருந்தான பண மதிப்பிழப்பு
கொண்டுவரப்பட்டது என்று பிரதமர் மோடி பேசி இருந்தார்..

அதைப் பொய்யென்று நிரூபிப்பதாக வேளாண்துறை புள்ளிவிவரங்கள்
அமைந்துவிடவே – பதறியடித்துக் கொண்டு,

அவசர அவசரமாக நேற்று மாலை –

அதே வேளாண்துறை அமைச்சக அதிகாரிகள் சில புதிய புள்ளி
விவரங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

அதன்படி, வேளாண்துறையின் விதைகள் மற்றும் எண்ணை வித்துக்கள்
விற்பனை அனைத்தும், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்படுவதற்கு
முன்பாகவே முடிவடந்து விட்டதாகவும் 🙂 🙂

ஆகையால் – பணமதிப்பிழப்பால், வேளாண்துறையில் எந்தவித
பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் – தனியே ஒரு செய்திக்குறிப்பு
மூலம் அறிவித்திருக்கிறார்கள். 🙂 🙂

“The Ministry, in a press note, said the sales of oilseeds
and pulse seeds were completed by the time of the announcement and had no
impact due to it.

அதற்கு அடுத்து,
இது இன்னும் முக்கியமான விளக்கெண்ணை விளக்கம் –

” நிதி நிலைக்குழுவிற்கு முன்பு தரப்பட்ட புள்ளி விவர அறிக்கை
“அவசரத்தில்” – “தயாரிக்கப்பட்டதால்” –

புதிதாக, “புதிய தகவல்களுடன்” இன்னொரு அறிக்கை
“தயாரிக்கப்பட்டு” – நிதி நிலைக்குழுவின் அடுத்த கூட்டத்தில்
நவம்பர் 27-ந்தேதியன்று சமர்ப்பிக்கப்படும்… 🙂 🙂

One of the senior bureaucrats at the Ministry said the report sent to the Standing Committee was prepared in a hurry and a revised report with more details would be furnished at its next meeting on November 27.

பொய்யிலே பிறந்து… பொய்யிலே வளர்ந்த…..

———

அதாவது, முன்னால தந்தது –
அவசரத்துல தயாரிச்ச “பொய்’யிங்க…

புதுசா இப்ப “தயாரிச்சு” தரப்போறது தான் நிஜ “மெய்’யிங்க”
என்று வேளாண்துறை – துரைகள் சொல்கிறார்கள்…!!!

இப்போது வேளாண்துறை – ‘துரை’கள் வெளியிட்டுள்ள அறிக்கை
முன்னதாக ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலை மறுக்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது….

The clarification, however, does not deny the report of The Hindu .

பரமார்த்த குருவும், சீடர்களும் கதைகளை
சின்ன வயதில் படித்திருக்கிறோம்.

பிரதமரும், மத்திய அரசு அதிகாரிகளும் –
விடும் கதைகளை இப்போது – பார்த்துக்கொண்டிருக்கிறோம்…

இரண்டில் எது அதிக சுவாரஸ்யம்…?

.
———————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to அய்யோ… அது பழைய பொய்யி’ங்க….இன்னிய பொய்’யி இங்கிட்டு… இதோ …!!!

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    ///உண்மை என்பது எப்போதும் உள்ளது. நீங்கள் உண்மையிலிருந்து தப்ப முடியாது”, என்று கீதை சொல்கிறது.///

    ராகுல் காந்தி quote செய்தது வேறு ஒரு மாபாதக செயலான போலி என்கவுண்டர் செய்திக்கு.

    அது இதற்கும் எல்லாத்துக்கும் பொருந்தும்.

    ராகுல் குறிப்பிட்டு சொன்ன செய்தி கீழே…

    ///போலி என்கவுண்டர் வழக்கு.. பகவத் கீதையை உதாரணம் காட்டி அமித்ஷாவை கண்டித்த ராகுல் காந்தி!///

    https://tamil.oneindia.com/news/delhi/amit-shah-key-conspirator-says-rahul-gandhi-334825.html

    தெய்வம் நின்று கொல்லும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.