…
…

…
இன்றைய சுவாரஸ்யம் என்கிற தலைப்பில் அவ்வப்போது,
சில சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை இங்கே பதிவுசெய்யலாம்
என்று உத்தேசித்திருக்கிறேன்… அதன் முதல் பதிவை
இன்றே – ஒரு நம்பிக்கையோடு துவங்குவோமே…!!!
நம்பிக்கை தான் ஏதோ ஒரு வகையில், அதிருஷ்டத்தையும்
அதன் விளைவாக, வெற்றியையும் கொண்டு வருகிறது –
என்கிறார் தென் கச்சி அவர்கள்…
நம்மில் பலரும் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கும்
ஒரு உண்மை இது … சரி தானே…?
…
…
.
தென் கச்சி அவர்களின் உரை – என் 12-13 வயதில், பார்த்த பழைய
தமிழ்ப்படம் ஒன்றை நினைவிற்கு கொண்டு வந்தது. ஜெமினி கணேசன்,
சாவித்திரி, டி.எஸ்.துரைராஜ் – நடித்த “மாமன் மகள்” என்கிற –
பிரமாதமான காமெடி படம்…
அதில் ஜெமினி இடைவேளை வரை, மிகவும் பயந்த சுபாவம் உள்ள இளைஞனாக வருவார். என்னென்னவோ செய்தும், அவரை மாற்ற முடியாத அவரது பாட்டி நொந்து போவார்…
கடைசியில் ஜெமினியிடம் ஒரு சிறிய வெள்ளி கவசத்தை கொடுத்து
அது ஒரு மந்திரக் கவசம் என்றும், அது அவரிடம் இருக்கும்வரை
அவரை யாராலும் ஜெயிக்க முடியாது என்றும் சொல்லி அவருக்கு
தன்னம்பிக்கையை ஏற்படுத்துவார்.
எந்த effect-உம் இல்லாத அந்த சாதாரணக் கவசத்தை
உண்மையிலேயே மந்திரக்கவசம் என்று நம்பி, அந்த தன்னம்பிக்கை
தந்த தைரியத்தின் விளைவாக ஜெமினி
தைரியசாலியான பெரிய ஹீரோவாக மாறி பல வெற்றிகளைப் பெறுவார்….
இறுதியில் பாட்டி சொன்ன பிறகு தான் அவருக்கு உண்மையில்
அது வெறும் சாதாரண கவசம் தானென்றும், அது கொடுத்த
நம்பிக்கையில் – தான் தன்னம்பிக்கையோடு செயல்பட்ட விதம் தான்
தனக்கு இத்தனை வெற்றிகளை தந்தது என்பதையும் உணர்வார்.
சிறிய வயதில் பார்த்த இந்தப் படம் என் மனதில் அப்போதே
பல விளைவுகளை ஏற்படுத்தியது…இன்று வரை அந்த ‘தீம்’ என் மனதை
விட்டு அகலவே இல்லை…!
பல சமயங்களில், இது எப்படி முடியும் என்று மலைத்து, அரைமனதுடன் ஈடுபடுவதை விட, இது நடக்கக்கூடியது தான், நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையுடன் செயலில் இறங்கும்போது-
அந்த நம்பிக்கையே வெற்றிக்கு பெரிய அளவில் துணையாக நிற்பதை
நானே பலமுறை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்….
தென் கச்சி உரையை கேட்டதும் எனக்கு
அந்த ஜெமினி கணேசன் தான் நினைவிற்கு வந்தார்…
மாமன் மகள் – பாடல்கள் எதாவது கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தேன்.
அந்தக் காலத்து, குழந்தை முகம் கொண்ட அப்பாவி சாவித்திரி பாடி
நடிக்கும் பாடல் ஒன்று கிடைத்தது…..
சுமார் 62-63 ஆண்டு கால இடைவெளிக்குப்பிறகு இப்போது – உங்களோடு நானும் அதைப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது – Youtube என்னும் கொடைவள்ளலின் கருணையால்…!!!
…
…
———————————————————————————————-



மனித மனம் ஒரு குரங்கை போன்றது. அது ஏதாவது ஒன்றை பற்றி பிடித்துகொள்ளவே விரும்புகிறது. பல சமயம் ஒடிந்து விழும் கொம்பாக இருந்தாலும் மதி மயங்கி அதில் வீழவே செய்கிறது.
நம்மை போன்ற படைக்கப்பட்ட அற்ப பொருள்களின் மீது வைக்கும் நம்பிக்கையை விட அனைத்தையும் படைத்த அந்த ‘ஏகனின்’ மீது வைக்கும் நம்பிக்கை மிக உயரிய பலனை தரவள்ளது என்பதை அந்த குரங்கு அறிவதில்லை.
Mr.MK, This post is entirely different.Pl.honour my following request if U feel deemed fit.My
b.in.law (yuonger sister’s husband) aged 74 yrs. suddenly developed a defect in his spine and
it needs a rare surgery followed by a long period of phisiotherapy continiously. Their entirely family is too scared. So as a reader of this site from day one, may I request through U to our readers
(if they like) to pray for his successful surgery and speedy recovery. The surgery is fixed on 27-11-18 at Bangalore and a complicated one as explained by doctors, I am deeply sorry to U and to our friends to make such a request.I normally don’t ask anything for myself to anybody including THE ALMIGHTY. THANKS.
கோபாலகிருஷ்ணன்,
கவலைப்படாதீர்கள்…
நல்லதே நடக்கும்…
கொஞ்சம் வயது முதிர்ந்தவர் என்பதால் –
முழு குணம் பெற கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படலாம்…
நம்பிக்கையோடு இருங்கள் –
நானும் இந்த வலைத்தள வாசகர்கள் அனைவரும்
அவர் விரைவில் குணமடைய வேண்டுவோம்.
————-
” இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை…
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்…
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை, இதயங்களைப் பார்க்கின்றவன்
– இறைவனிடம் கையேந்துங்கள் ”
…
…
-நம்பிக்கையுடன்,
காவிரிமைந்தன்
கூட்டு பிரார்த்தனையின் பலன் நிச்சயம் உண்டு …. எல்லாம் அவன் செயல் ….!
கவலை வேண்டாம் கோபாலகிருஷ்ணன். நல்லதே நடக்கும். நலமுடன் வருவார். அதற்காகப் ப்ரார்த்திப்போம்.
சர்ஜரி முடிந்தபிறகு, வீட்டில், Bedsourக்கான Bed உபயோகப்படுத்தணும். இதற்கென உள்ள கட்டில் வாங்கணும், ஸ்பைன் சர்ஜரி சரியாகறவரைக்கும். இல்லை இது சிறிய சர்ஜரி என்றால் கவலைப்படத் தேவையில்லை.
God the Almighty may bless him and get successful surgery and speedy recover.
Thank U Mr.Arivazhagan
I am sorry. It should be KM & not MK. Typographical error
வானொலியில் தினமும் ஒளிபரப்பான இன்று ஒரு தகவல் புத்தகமாகவும் வெளி வந்துள்ளது …என்ன இருந்தாலும் அவரது வெள்ளந்தியான குரலில் கேட்டது ;;; தனியானது … !
அய்யா … இது வேறு ஒரு காமடி : ரிலையன்ஸே ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதை அதிக விலைக்கு வாங்கி அரசுக்கு லாபம் சேர்த்திருக்கிறதாம். வேடிக்கையாக இல்லை….!
Arms length price மற்றும் Affiliated Copanies என்பதை பற்றி கொஞ்சம் உங்கள் பாணியில் ” நகைச்சுவை ” கலந்து விவரியுங்களேன் — புண்ணியமா போகும் …. அதற்கு இந்த செய்தி துணை புரியும் : — // முதல் முறையாக அம்பானியை எதிர்க்கும் மத்திய அரசு… கோபத்தில் கொந்தளிக்கும் முகேஷ் அம்பானி //
Read more at: https://tamil.goodreturns.in/news/2018/11/21/reliance-violated-cbm-policy-purchasing-its-own-gas-013067.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=relatedArticles
செல்வராஜன்,
அந்த செய்திக் கட்டுரையை படிப்பவர்களாலும் புரிந்துகொள்ள முடியாத
ஒரு குழப்பமான விவகாரம் அது. இது போல் மத்திய அரசுக்கும் அம்பானிகளுக்கும், மத்திய அரசுக்கும் அதானிகளுக்கும் இடையே
மற்றவர்களுக்கு ஒன்றுமே புரியாதபடி போடப்பட்டுள்ள பல குழப்ப பிசினஸ்கள் இருக்கின்றன… இதில் லாபமா, நஷ்டமா…? யாருக்கு லாபம் -யாருக்கு நஷ்டம்…? நஷ்டத்திற்கு ஒருவர் ஏன் காண்டிராக்ட் எடுக்க வேண்டும்…? ஒன்றும் புரியாது….
நாமாக ஒரே ஒருவிஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளலாம்
இவை எல்லாவற்றிற்கும் “கைம்மாறு” ஒன்று உண்டு… 2019 தேர்தலை
“அவர்கள்” “கவனித்துக் கொள்ள” வேண்டும்… அவ்வளவே….
ராகுல் காந்தி எல்லாம் இவர்களுக்கு முன்னால் “பச்சா” (குழந்தை..!)
மஹாகட்பந்தன்’கள் எல்லாம் இந்த தொழிலதிபர்களின் “கட்பந்தன்” களுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை….
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை சார்… எனக்கு ஒன்று புரியலை.
1. லஞ்சம் வாங்க மாட்டோம்.
2. ஆட்சி அதிகாரத்துக்கு வருவோம்.
இந்த ஆட்சி அதிகாரத்தினால் என்ன பிரயோசனம் இந்த அரசியல்வாதிகளுக்கு? 20,000 கோடி (இந்தியா முழுமைக்கான தேர்தல், தமிழகத்தில் 1000 கோடி) செலவழித்து எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களாக ஆவதினாலும், ஆட்சியைப் பிடிப்பதாலும் இந்த so called அரசியல் கட்சிகள் எதற்கு, ‘மக்களுக்கு உழைப்பதற்காக’ இப்படி மாய்கின்றன?
புதியவன்,
டாக்டர் சுப்ரமணிய சுவாமி – நேற்று ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார்.
அரசில் ஊழல்கள் மலிந்து விட்டனவாம்…!!!
எனவே, ஆட்சியும் அதிகாரமும் ஒரு “ஞானி” அல்லது “தியாகி” யிடம் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
இந்த definition -க்குள் மோடிஜி வந்து விடுவாரா இல்லையா தெரியவில்லை…!!!
சு.சுவாமி இந்த definition-க்குள் வந்து விடுவாரா – அதுவும் தெரியவில்லை… 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
///நாமாக ஒரே ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளலாம்
இவை எல்லாவற்றிற்கும் “கைம்மாறு” ஒன்று உண்டு… 2019 தேர்தலை
“அவர்கள்” “கவனித்துக் கொள்ள” வேண்டும்… அவ்வளவே….///
இது தான் பயமாக இருக்கிறது.
அது என்ன மாதிரியான ‘கைம்மாறு’…..?
EVM fraud செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட சத்தீஸ்கர் வாக்குப்பதிவின் போது என்று நினைக்கிறேன்.
எந்த சின்னத்தை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு விழுந்தது என்றும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது என்றும் செய்தி வந்தது.
இப்படி ஏதாவது என்றால் இந்த நாட்டை யாராலும் இந்த மாபாதகர்களிடமிருந்து காப்பாற்ற முடியாது.
இதற்கு ஒரே தீர்வு Ballot Box அதாவது வாக்குச் சீட்டு ஓட்டு பதிவு தான்.
அட … நீங்க வேற நண்பரே … ஈவிஎம் மே பாேற்றி என்று தீபாராதனை செய்த பாஜக ஆளைப் பற்றிய செய்தி வந்துள்ளதே …! அவர்கள் முழுக்க நம்பியுள்ள ஒரே ” கடவுள் ” அதுதானே …?
அந்த ஒரே இறைவன் (original) தான் நம்மை காப்பாற்ற வேண்டும்.
Thanks a lot Mr.KM & Mr.Selvarajan for your immediate response and wishes.
Mr.Pudhiyavan, I thank U also for your valuable advise