ஒரு உத்தமரைச் சுற்றி இத்தனை வில்லன்களா…? நம்ப முடியவில்லை…வில்லை…ல்லை….லை…!!!


அவரா செய்திருப்பார்…
இருக்காது…
இருக்கவே இருக்காது..
இருக்கவும் கூடாது……
நம்ப முடியவில்லை…வில்லை…ல்லை….லை…!!!

குஜராத்திலிருந்து உத்தமருக்கு மிகவும் பிடித்தமானவர்…
மிகவும் நெருக்கமானவர்…
நம்பிக்கைக்கு உரியவர்… என்று
மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒருவர் மீது –
பாஜக மத்திய அமைச்சர் மீது –
சில கோடிகள் லஞ்சம் வாங்கினார்
என்று குற்றம் சாட்டப்பட்டால் –
அதுவும் சுப்ரீம் கோர்ட்டில், எழுத்து மூலம் சாட்டப்பட்டால் –
நம்ப முடிகிறதா…?

முடியவில்லையே …

ஆனால், இவர்கள் சொல்கிறார்களே…?

சிபிஐ-யில் டிஐஜி பொறுப்பு வகிக்கும் திரு.மணிஷ்குமார் சின்ஹா,
சுப்ரீம் கோர்ட்டில் எழுத்து மூலமான பெட்டிஷன் ஒன்றை சமர்ப்பித்து
இருக்கிறார்….

மத்திய அமைச்சர் ஒருவர் ‘சில கோடிகள்’ லஞ்சம் வாங்கி இருக்கிறார்

என்றும் அதற்கான ஆதாரங்களை சேகரிக்க முடியாமல், தான்
தடுக்கப்பட்டதாகவும், சுப்ரீம் கோர்ட் ஒரு Special Investigation Team-ஐ
அமைத்து இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும்…

நம்பவே முடியவில்லை…
பாஜக அரசில் –
அதுவும் மோடிஜியின் அமைச்சரும், உயர் அதிகாரிகளும் –
இப்படியெல்லாம் செய்திருப்பார்கள் என்று இவர்கள் சொல்வது
எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும்….?

இவர்கள் அத்தனை பேருமே –
பார்த்துப் பார்த்து, தேடித்தேடி, குஜராத்திலிருந்து
மணி மணியாக செலக்ட் செய்யப்பட்டு
கொண்டு வரப்பட்டவர்களாயிற்றே….!

ஒரு உத்தமர் தேடியெடுத்து – கொண்டு வந்தவர்கள் –
இத்தனை அதமர்களாகவா இருப்பார்கள்…? முடியுமா…?

சரி – இவர்கள் என்ன தான் சொல்கிறார்கள் …?

……

A senior officer from the Central Bureau of Investigation who was “unjustly”
transferred the day the Modi government ousted director Alok Verma has
alleged in a petition to the Supreme Court that Union minister of state for coal and mines Haribhai Parthibhai Chaudhary received “a few crores of rupees” in the “first fortnight of June 2018” as part of the ‘extortion racket’ being run by certain officers investigating the Moin Qureshi case.

He has also accused national security advisor Ajit Doval of blocking crucial
investigations into the matter.

Rohini Singh and Siddharth Varadarajan dissect
CBI DIG Manish Kumar Sinha’s allegations.

……

……

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஒரு உத்தமரைச் சுற்றி இத்தனை வில்லன்களா…? நம்ப முடியவில்லை…வில்லை…ல்லை….லை…!!!

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    புதிய உத்தம வில்லர் ?

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா..! உம் .. // அவரா செய்திருப்பார்…
    இருக்காது…
    இருக்கவே இருக்காது..
    இருக்கவும் கூடாது……
    நம்ப முடியவில்லை…வில்லை…ல்லை….லை…!!! // செல்வம் படப்பாடல் வரிகள் பாேல் …! ஓகே நையாண்டி தர்பார் ஆரம்பம் …வாழ்த்துகள் …!!!

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    எல்லாம் தேச விரோதிகள்.

    அந்த உத்தமரை சுற்றியுள்ள வில்லன்களை சொன்னேன்.

  4. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    பண மதிப்பிழப்பால் லட்சக்கணக்கான விவசாயிகள் உரம், விதை வாங்கமுடியாமல் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சகம்

    https://tamil.thehindu.com/india/article25554999.ece

    ஊழல் கரையான்களை ஒழிப்பதற்காகவே கசப்பான மருந்தான பண மதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டது என்று பிரதமர் மோடி மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று பேசி இருந்தார்.

    ஓ….!

    இவர்களுக்கு, விவசாயிகள், தான் கொடுக்கப்பட்டதா…!

    2019 ல் திருப்பி தருவார்கள். தயாரா இருங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.