…
…

…
இதுவரை அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்களை விட
முற்றிலும் வித்தியாசமான ஒரு பயனை எதிர்பார்த்து
2020-ல் சீனா ஒரு செயற்கைக் கோளை அனுப்பவிருக்கிறது.
அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
பூமியிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரத்தில்(உயரத்தில்)
இந்த செயற்கைக் கோள் நிலைநிறுத்தப்படும்.
இதன் முக்கியமான வேலை –
சூரியனிலிருந்து வரும் வெளிச்சத்தை பிரதிபலிப்பதன் மூலமே
நாம், சந்திரனிலிருந்து இரவில் ஒளியைப்பெறுகிறோம்….
இதே போல், சூரியனிலிருந்து வரும் வெளிச்சத்தை
கிரகித்து, ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் ( டார்ச் லைட் மாதிரி )
இந்த செயற்கை நிலா பிரதிபலித்து, ஒளியை பரப்பும்.
சந்திரனை விட 8 மடங்கு
அதிக ஒளியை இது வீசும் என்று தெரிகிறது.
எனவே, இந்த நிலா செயல்படக்கூடிய தூரத்தில் இருக்கும்
இடங்களுக்கு, இரவில் எந்தவித தெருவிளக்குகளும் தேவையில்லை.
இரவிலும், நகரம் முழுவதும், வெளிச்சமாக இருக்கும்.
இதனால், பல ஆயிரம் கோடிரூபாய் மின் செலவு மிச்சப்படும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒரு செயற்கை நிலா சுமார் 80 சதுர கி.மீ. தூரத்தை
cover செய்யும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது பெரிய
நகரம் ஒன்றிற்கு, இரவு நேரத்தில் முற்றிலும் தேவையான
வெளிச்சத்தை இந்த நிலா கொடுத்து விடும். இது வெற்றிகரமாக
செயல்பட்டால், சீனா, அதன் முக்கிய நகரங்களை மையமாக வைத்து,
பல செயற்கைக் கோள்களை நிறுவக்கூடும்…!!!
இந்த செயற்கை நிலாவின் மூலம் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களை
பற்றி, சீன விஞ்ஞானிகள் விவரமாக ஆராய்ந்து வருகிறார்கள்….
அதைப்பற்றிய ஒரு சுவாரஸ்யமான காணொளி -கீழே ….
……
……
.
———————————————————————————



ஐயா
அதுலே ஆயா வட சுடற மாதிரி நமக்கு தெரியுமா? (இந்த கேள்வி சிரிக்க மட்டுமே)
சிந்திக்க….
இன்று மனிதனின் பலவித பலவீனங்களுக்கும் உடல் நலக்கோளாறுகளுக்கும் மிக முக்கிய காரணம் என்று நான் கருதுவது மினசார கண்டுபிடிப்பே!
மினசாரத்தால் நாம் பலவிதங்களில் முன்னேறியாதாக(???!!!) எண்ணினாலும் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டைக்கும் உடலில் கேன்சர் ஏற்படவும் உலக வெப்பமயமானதற்கும் இது மிக முக்கிய காரணமாகிறது.
இப்போது இலவசமாக இரவு முழுவதும் ஒளிவீசினால் நம் உடலில் இருக்கும் biological watch செயலிழந்து மேலும் பல குறைகளை நம் மனித இனம் சந்திக்கும்
அஜீஸ்,
இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன், உலகின் பல நாடுகளிலிருந்தும்
பலர் இதனால் ஏற்படக்கூடிய வெவ்வேறு விதமான பாதகங்களைப்பற்றி
அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.
சீனா – வழக்கம்போல் – எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
எந்த புதிய விஷனும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நம்மை இட்டுச் செல்லும். மனித குலத்துக்கு அது இன்னமும் பயனுள்ளதாக இருக்கும்.
எக்ஸ் ரே கதிர்களால் எத்தனை பாதகங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் பாதகங்களைக் குறைத்துக்கொண்டே வருகிறார்கள். அதனால் விளையும் சாதகங்கள் நம்மை பாதகங்களைப் பற்றி கவலைப்படவிடுவதில்லை.
நம் மின்சாரத் தேவையைக் குறைக்கக்கூடிய எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நாம் வரவேற்கணும்.
By the by, சீனாவின் நகரங்களைப் போல், நம்மால் எந்த நூற்றாண்டில் நெருங்கமுடியும்னு தோணலை. கல்ஃப் தேசங்கள் அருமையா இருக்கு என்று சொன்னால், உடனே அங்க மக்கள் தொகை குறைவு என்று சொல்லிடுவாங்க. ஆனால் சீனாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இந்தியா பல நூற்றாண்டுகள் பின் தங்கியிருக்கு. இதற்கு மக்களும், ஆட்சியாளர்களும்தான் காரணம்.