…
…
இன்றைய ஹிந்து ஆங்கில நாளிதழில் கார்ட்டூன் ஒன்று….
பெயர் மாற்றச் சக்கரவர்த்தி – கின்னஸ் ரிக்கார்டு ப்ரேக்கர் –
மாண்புமிகு உ.பி.முதல்வர் யோகிஜி அவர்கள்
மோடிஜியின் பெயரை –
2-ஆம் வாஜ்பாய் என்று மாற்ற விரும்புவதாக ……!!!
அதற்கென்ன அவர்கள் நினைத்தால் எதன் பெயரையும் மாற்றலாம்…
என்ன பேரும் வைக்கலாம்… எப்படியும் அழைக்கலாம்…
ஆனால்……
எனக்கு ஒரு கதை நினைவிற்கு வருகிறது…
ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் தன்னிடம் வைத்தியம் பார்த்துக்கொள்ள
வந்தவருக்கு லேகியம் ஒன்றை கொடுத்து விட்டு – ஒரே ஒரு பத்தியம்
மட்டும் சொன்னார்….
“நீ என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
அதற்கு தடையேதும் கிடையாது…
ஆனால் இந்த லேகியத்தைச் சாப்பிடும்போது, குரங்கை மட்டும்
நினைக்கக் கூடாது ” …
மனம் என்னும் குரங்கு, நம் விருப்பப்படி செயல்படுமா என்ன…?
அன்றிலிருந்து அந்த நோயாளி லேகியத்தை சாப்பிடும்போதெல்லாம்
வைத்தியர் சொன்னது தான் அவருக்கு நினைவிற்கு வருகிறது…
“குரங்கை நினைக்காதே..”… எனவே, லேகியம் சாப்பிடும்போதெல்லாம்
அவனுக்கு தவறாமல் குரங்கு நினைவிற்கு வந்தது…
மனிதர்களின் மனதில் சில விஷயங்கள்
எதிர்மறையான விளைவுகளையே
உண்டுபண்ணுகின்றன….ஒன்றைப்பற்றி நினைக்ககூடாது என்று
நினைத்தால், அது தான் நினைவிற்கு வருகிறது.
இவர்கள் 2-ம் வாஜ்பாய் என்று தாராளமாக அழைத்து மகிழட்டும்…!!
பின்னர், யோகிஜியையே 3-ஆம் வாஜ்பாய் என்றும் அழைக்க அது உதவும்…!!!
அது அவர்கள் ஆசை …!
ஆனால், ஒவ்வொரு முறையும் இவர்கள் 2-ம் வாஜ்பாய் என்று
அழைக்கும்போது –
அது – மக்கள் மனதில் – 2-ஆம் ….. என்று,
உலகப்புகழ்பெற்ற ஜெர்மானிய தேசபக்தரின் ( …! )
நினைவு வந்து விட காரணமாகி விடக்கூடாதே –
என்று வேண்டுவோமாக……..!!!
…

…
.
———————————————————————————



ஹா ஹா ஹா ஹா
எல்லோரும் நிலவைப் போன்றவர்கள் — அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு … !
One thing is sure. Yogi will takeover the mantle of India from Modiji in year 2024. And the entire India will be delighted with this development.
இது ஏதோ உள்குத்து மாதிரி இருக்கிறதே….
இந்த ‘entire india’, ‘தமிழக மக்கள் அனைவரும்’ என்றெல்லாம் எல்லோரும் இஷ்டத்துக்குப் போட்டுக்கொள்கிறார்களே… எங்கள் ஒபினியன் எல்லாம் கேட்ட மாதிரித் தெரியலையே..
Srikanth
மோடிஜி 2024 வரை மட்டும் தானா ? ஏன் ?
உங்களுக்கே அலுத்துவிட்டதா ?
No. It is not like that. Though BJP is going to win again in 2024 as well, Modi is not power greedy like Nehru and Indira Gandhi to rule India till the end. He will himself step aside and hand-over the mantle to others in the party. That is the difference between BJP and other parties in India.
ஸ்ரீகாந்த் – எனக்கு மயக்கம் வராத குறைதான். மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சர் பதவியில் இரண்டு முறைக்கு மேல் இருந்தார். ஏதோ அவர், பதவி ஆசை இல்லாதவர் போலும், இரண்டுமுறை (அப்படி வாய்க்குமானால்) பதவியில் இருந்த பிறகு இன்னொருவருக்கு விட்டுக் கொடுப்பார் என்றும் சொல்கிறீர்களே…
நீங்கள் வைத்திருக்கும் பூமாலை இந்திய மக்கள் அத்தனைபேர் காதுகளுக்கும் போதும் போலிருக்கிறதே…
Srikanth
//He will himself step aside and hand-over the mantle to others in the party. //
இவராவது கொடுப்பதாவது.
அத்வானியிடமிருந்து இவர் பிடுங்கிக்கொண்டது மாதிரி மொட்டை மாதிரி யாராவது இவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டால் தான் உண்டு.