…
…

…
இந்த வலைத்தளத்தில் மோடிஜியின் ஆட்சி குறித்த விமரிசனங்கள்
அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பாஜக நண்பர்கள்
பலருக்கும் –
இந்த தளத்தில் ஒருதலைப்பட்சமாக, பாஜக அரசுக்கு எதிராகவே
விமரிசனங்கள் வந்து கொண்டிருப்பதாக ஒர் எண்ணம் இருக்கிறது.
நான் என்ன தான் தற்கால அரசியல் நிகழ்வுகளை
நாட்டின் நலம், சமுதாய நலன் என்கிற குறிக்கோளில் மட்டுமே
எழுதி வந்தாலும் – அவர்கள் ஏற்பதாக இல்லை.
எனவே, just for a change, ஒரு மாறுதலாக, அரசியல் சார்பற்ற
ஒரு பொது எழுத்தாளரின் கருத்துகளை இங்கே பதிவு செய்வோமே – இதையாவது பாஜக நண்பர்கள் ஏற்கிறார்களா பார்ப்போமே – என்று எண்ணினேன்.
இதை எழுதியவர் தமிழகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
அரசியல் சார்பற்றவர். சிறந்த இலக்கியவாதி.
பொதுவாக – நிகழ்கால அரசியல் குறித்து எழுதுபவர் அல்ல.
சுவாரஸ்யம் கருதி, அவர் பெயரை இப்போது சொல்லாமல் –
இடுகையின் இறுதியில் தெரிவிக்கிறேன்….
( சில நண்பர்கள் ஏற்கெனவே இதை
படித்திருக்கலாம்… அல்லது யூகிக்கலாம்….! )
இனி – மோடிஜி ஆட்சி பற்றிய அந்த விமரிசனத்திலிருந்து –
——————————————–
எனக்கு அரசியல்மாற்றங்கள் வழியாக நிகழும் சமூகவளர்ச்சி மேல் பெரிய நம்பிக்கை ஏதுமில்லை. ஒரு குறிப்பிட்ட பொருளியலமைப்புக்குள் ஆட்சி மாற்றம் என்பது மேலோட்டமானதுதான்.
ஆகவே தான் நரேந்திரமோடி ஆட்சியை நெருங்கிக்கொண்டிருந்த உச்சகட்டப் பிரச்சார காலத்திலும் சரி, அவர் ஆட்சியைப்பிடித்தபோதும் சரி, நான் ஒரு சொல் கூட பேசவில்லை. அவருடைய ஆட்சி அமைந்தபோது எளியமுறையில் வாழ்த்தோ நம்பிக்கையோ தெரிவித்துகூட எதுவும் எழுதவில்லை.
அவ்வரசு அமைந்த அன்று ஊட்டியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்னேன், பாரதிய ஜனதா கட்சி –
இருபதாயிரம் கோடிரூபாய் பிரச்சாரத்திற்குச் செலவிட்டு பதவியைப்பிடித்துள்ளது என்கிறார்கள்.
ஆகவே இரண்டுலட்சம் கோடியையாவது
அதை அளித்தவர்களுக்கு திரும்ப அளிப்பதே
அதன் ஆட்சியின் முதல் கடமையாக இருக்கும்.
ஆகவே அதைப்பற்றி எனக்கு எந்தக் கற்பனாவாத
மயக்கமும் இல்லை என்று.
பின்னர் பாரதிய ஜனதாக் கட்சியின் இரண்டு நடவடிக்கைகளை நான் ஆதரித்தேன். ஒன்று, டெல்லியில் அதிகாரங்களாக உறைந்துவிட்டிருந்த சில கலாச்சார மையங்களைப் பெயர்க்கும் அதன் முயற்சியை.
ஆனால் மிக விரைவிலேயே அந்த மையங்கள் அனைத்திடமும் பாரதிய ஜனதா சமரசம் செய்துகொண்டது. எந்த ஆட்சி வந்தாலும் அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்களே இன்றும் உடனிருக்கிறார்கள்.
அவர்கள் சென்ற ஆட்சிக்காலத்தில் –
அதிதீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்கள்,
ஆனால் இன்று ஆதரவாளர்கள்.
பாரதிய ஜனதாவின் இந்த ஆட்சிக்காலத்தில் கலாச்சாரத் தளத்தில் அதன் செயல்பாடுகள் அருவருக்கத்தக்கவை.
அவர்கள் இடதுசாரிகளை ஆதரிக்கவேண்டுமென்பதில்லை , அவர்களின் தரப்பிலேயே பொறுப்புடன் பேசும் உண்மையான அறிஞர்களை, அவர்களுக்காகவே கூட இத்தனை ஆண்டுகளாக பணியாற்றியவர்களை, பொறுப்புகளுக்குக் கொண்டுவந்திருக்கலாம். மாறாக பெரும்பாலான பதவிகள் கவனிப்பாரற்று காலியாகவே விடப்பட்டன.
நிரப்பப் பட்டவற்றில் சென்ற காலத்துத் துதிபாடிகளோ இன்றைய ஆட்சியாளர்களின் அடிப்பொடிகளான வெற்று மனிதர்களோதான் நியமிக்கப்பட்டார்கள். கலாச்சார அமைப்புகள் இருப்பதையே டெல்லியை ஆளும் மிகச்சிறிய அதிகாரக்குழு அறிந்திருக்கவில்லை. அவர்களின் உலகில் அப்படி ஒரு விஷயமே இல்லை. அவர்களின் அறிவுத்தரமும் பண்பாட்டுத்தரமும் இங்கே ஒரு அடகுக்கடை நடத்தும் மார்வாடியின் அளவுக்கு சற்றும் மிகுந்ததாக இருக்கவில்லை.
இரண்டாவதாக, பணமதிப்புநீக்கத்தை நான் ஆதரித்தேன்.
அதை ஆதரிப்பதற்கான காரணங்கள் மேல்
இன்றும் எனக்கு நம்பிக்கை உள்ளது.
இந்தியத் தொழில் – வணிகத்துறையை அறிந்தவர்கள் இங்குள்ளது வரிகட்டுவோருக்கும் கட்டாதவர்களுக்கும் இடையேயான போட்டி என்று அறிந்திருப்பார்கள். இந்தியாவின் தொழில்வணிகத்தை பெரும்பாலும் கையில் வைத்திருக்கும் குஜராத்தி – மார்வாடி குழுக்கள் முற்றிலும் வரிகட்டுவதில்லை.
வரி ஏய்ப்பை ஆயுதமாகக்க் கொண்டு வரி கட்டுவோரை வீழ்த்தி சந்தையில் ஆதிக்கம் கொள்வதே அவர்களின் வழிமுறை. அவர்களின் ஆதரவால் பதவிக்கு வந்தவர் மோடி. பணமதிப்பு நீக்கம் நேரடியாகவே அவர்களுக்கு எதிரான நடவடிக்கை. அவர்களின் அடித்தளத்தை நொறுக்குவது. அதை அவர் எடுத்ததே அவர்மீதான நம்பிக்கையை உருவாக்கியது. இந்தியாவின் வரிவசூலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைக்கான முதற்படி அது என தோன்றியது. அத்துடன் இந்தியப்பொருளியலின் பெரும் நோய்க்கூறான கள்ளநோட்டுப் புழக்கத்தை பத்தாண்டுகளுக்காவது அது கட்டுப்படுத்தக்கூடும் என நம்பினேன்.
சாதாரணமாக எந்த ஆட்சியாளரும் அத்தகைய ஒரு நடவடிக்கையைச் செய்யத் துணியமாட்டார்கள். ஏனென்றால் அது உடனடியாக கடுமையான மக்கள் எதிர்ப்பையே உருவாக்கும். நீண்டகால அளவில்தான் அதன் பொருளியல் லாபங்கள் அறியப்படலாகும், அதற்குப்பின்னரே தேர்தல்கள லாபங்களை எதிர்பார்க்க முடியும்.
அதற்கு ஓர் ஆட்சியாளர் துணிவதென்பது அவருடைய நல்ல நோக்கத்தையே காட்டுகிறது என்று எண்ணினேன்.
வரலாற்றில் இடம்பெறுதல், மீண்டும் பதவிக்கு வருதல் போன்ற பல காரணங்களுக்காக ஆட்சியாளர்கள் மெய்யான நடவடிக்கைகளை எடுப்பதுண்டு. இருக்கும் அமைப்பின் எல்லைக்குள் சில முன்னடிவைப்புகளை அவர்கள் உருவாக்கக் கூடும். நரசிம்மராவ் போல நல்விளைவுகளை உருவாக்கவும் வாய்ப்புண்டு. அன்று என் எதிர்பார்ப்பு அதுவே.
அந்நடவடிக்கை தொடங்கியதுமே அதன்மேல் உருவான எதிர்ப்பு ஏமாற்றத்தை அளித்தது.
அதன் எதிரிகள் இன்று சொல்வதுபோல
அது ஒரு மோசடி என்பதனாலோ
அதனால் நன்மை நிகழாதென்பதனாலோ
அவர்கள் அதை எதிர்க்கவில்லை. அந்த அளவுக்கு மேதைகளல்ல அவர்கள்.
அரசியல் எதிரி எதைச்செய்தாலும் எதிர்க்கும் எதிர்க்கட்சி மனநிலை மட்டுமே அவர்களிடமிருந்த்து. அதனால் உருவான மக்கள் எதிர்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர். உண்மையிலேயே மோடி அரசியல் ஆதாயம்பெற்றுவிடக்கூடும் என அஞ்சினர். அந்த அவசரம் எனக்கு கசப்பளித்தது. அதையே நான் கண்டித்தேன்.
பணமதிப்புநீக்கம் தோல்வியடைவதை
கண்கூடாகவே பார்த்துக்கொண்டிருந்தேன்.
சில தனியார் வங்கிகள் அதை உடைத்து
பெரும் லாபம் ஈட்டின.
கணக்காளர்களும் வங்கியாளர்களும்
அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்
கைகோர்த்துக்கொண்டு அதை அழித்தார்கள்.
நான் அறிந்தது உண்மை என்றால் கெடு முடிந்து எட்டுமாதங்கள் கடந்தும் கூட பழைய நோட்டுக்களை மாற்றிக்கொண்டிருந்தார்கள்.
முதலில் – தயாரிப்பின்மை, அரசுநிர்வாகத்தின்மேல் ஆள்வோருக்கு கட்டுப்பாடு இல்லாமை ஆகியவையே அதற்குக்காரணம் என நம்பினேன்.
ஆனால் அத்தனை நோட்டுகளும் திரும்பி வந்துவிட்டன
என்றால் அதன்பொருள் ஒன்றே,
இதில் பாரதியஜனதா கட்சியும், இந்த அரசும்
ரகசிய லாபமீட்டாமல் இவ்வாறு நிகழாது.
அவர்கள் உடனிருக்காமல் இத்தனை
முழுமையான மோசடி நிகழவே முடியாது.
அவர்கள் அதற்குப்பொறுப்பேற்றே ஆகவேண்டும்.
அதன் விளைவான அனைத்து அழிவுகளுக்கும்.
கடுமையான அரசியல் நிலைபாடு கொண்டவர்கள், மதக்காழ்ப்புகளை அரசியலாக வெளிக்காட்டுபவர்கள் தவிர இந்தியாவின் எளிய குடிமக்கள் பெரும்பாலானவர்கள் அந்நடவடிக்கை வந்தபோது நான் கொண்டிருந்த நம்பிக்கையையே கொண்டிருந்தார்கள்.
அதை அம்மக்களுடன் எளிய முறையில் உரையாடிய எவரும் உணர்ந்திருக்கலாம்.
இன்று அவர்களில் பலரும் நான் உணரும் ஏமாற்றத்தையும் கசப்பையும் தாங்களும் அடைந்திருப்பார்கள். ஒரு குடிமகனாக தனிப்பட்ட முறையில் அவமதிக்கப்பட்டவனாக, சுரண்டப்பட்டவனாக உணர்கிறேன்.
நரேந்திரமோடியின் ’மனதோடு பேசும்’ நிகழ்ச்சியில் உள்ள அசட்டு நாடகத்தனம், செயற்கையான பாவனைகள், புனிதர்களுக்குரிய நல்லுபதேச மொழிகளை கூச்சமே இல்லாமல் சொல்லும் தோல்தடிமன் உச்சகட்ட வெறுப்பையே உருவாக்குகிறது.
ஆயினும் நடுநிலையில் நின்றபடித்தான் பார்க்கவேண்டும் என எனக்கே சொல்லிக்கொண்டேன். இந்த ஆட்சியின் செயல்பாடுகளை என் தனிச்சூழலிலும் நான் செய்யும் பயணங்களிலும் கூடுமானவரை உளப்பாகுபாடின்றியே நோக்குகிறேன்.
கருத்துக்கேட்கும்போது அரசியல்திரிபுகள் அற்றவர்கள், சொல்லப்போனால் ஆதரவுநிலையுடன் இவ்வரசை நோக்கியவர்களிடமிருந்தே கேட்டறிகிறேன். விளைவாக உருவான என் எண்ணம் சுதந்திரத்திற்குப்பின்னர் இந்தியாவில் உருவான அரசுகளில் முழுத்தோல்வியடைந்த இரண்டு அரசுகளில் ஒன்று இது என்பதே. இன்னொன்று
1971- 77 ல் இந்திராகாந்தி அமைத்த அரசு.
இரு அரசுகளையும் பலவகையிலும் ஒப்பிட முடியும், பொதுவான மூன்று அம்சங்களைச் சொல்லலாம்.
ஒன்று ;
ஒற்றைமனிதரை முன்னிறுத்தும்
நபர்வழிபாட்டு அரசியல். அனைத்து இடங்களிலும்
ஒரு மனிதரை அரசே முன்வைப்பது.
அரசு ஊடகம் அனைத்து ஆற்றல்களையும் கொண்டு,
கோடானுகோடி ரூபாய்ச் செலவில் அவரை
விளம்பரப்படுத்துவது.
அவரை ஒரு தீர்க்கதரிசி, அவதாரம், ரட்சகர் நிலைவரை
கொண்டுசென்று வைப்பது. எழுபதுகளில்
இந்தியாவே இந்திரா என்னும் கோஷத்திற்கும்
இன்று நரேந்திர மோடிமேல் அரசு குவித்துப்பெருக்கும்
துதிக்கும் வேறுபாடில்லை.
ஒருவரை நம் அரசு வரிப்பணத்தால் மிகைவிளம்பரம்
அளித்து பூதாகரமாக்கி நிறுத்தி அவர்களுக்கு எதிராக
பிறர் அரசியல்செய்வேண்டும் என்னும் நிலையை
உருவாக்குவது ஜனநாயகத்தை அழிப்பது.
இரண்டு;
சமையற்கட்டுச்சபையின் நிர்வாகம். தனிமனிதனை
மையமாக்கிய அரசு அமையும்போது
இயல்பாக உருவாவது இது. அவருக்கு அணுக்கமான
ஒரு சிறுகுழுவுடம் அனைத்து அதிகாரங்களும்
சென்று சேர்கின்றன. வெவ்வேறு துறைநிபுணர்கள்,
அனுபவம் மிக்கநிர்வாகிகள், களத்தொடர்புடைய
அரசியலாளர்கள் ஆகியோர் கூடி செயல்படுவதாகவே
இந்தியா போன்ற ஒரு மாபெரும் நாட்டின் நிர்வாகம்
இருக்கமுடியும்.
இங்கே ஒவ்வொன்றையும் பலதரப்புகளைக் கலந்தாலோசித்து சிறிய அளவில் செய்து பார்த்து , தொடர்ச்சியாக விமர்சனங்களை கவனித்து பிழைகளைக் களைந்தே நிறைவேற்றவேண்டும். ஏனென்றால் இதன் சமூகப்,பொருளியல் அமைப்பு எந்த மேதையாலும் புரிந்துகொள்ளமுடியாதபடிச் சிக்கலானது. சமையற்கட்டுச்சபையில் வெறும்துதிபாடிகளும் சதிகாரர்களுமே அமர முடியும். அங்கே என்ன நிகழ்கிறதென்றே எவருக்கும் தெரியாது – அமைச்சரவையில் இருப்பவர்களுக்கும் கூட.
இந்த அரசு அத்தகைய சிறு குழு ஒன்றால்
நடத்தப்படுகிறது. அவர்களைச்சுற்றி
தன்னலமிகளான வணிகர்களின் ஒரு வட்டம்.
கட்சியோ அரசின் பிற அமைப்புகளோ
எந்த அதிகாரமும் இல்லாத வெற்றுப்பார்வையாளர்களாக
மாறிவிட்டிருக்கின்றனர். எழுபதுகளின் இந்திரா அரசும்
இத்தகையதாகவே இருந்தது
மூன்றாவதாக;
இது ஓர் அதிகாரியாதிக்க அரசு என்பது. இத்தகைய தனிமனிதமைய, சமையற்கட்டு நிர்வாக அரசு அது நடைமுறையில் செயல்பட அதிகாரிகளின்திரளையே நம்பியிருக்கும். ஆகவே வேறுவழியில்லாமல் அதிகாரியாதிக்க அரசு [ bureaucratic government] ஒன்று உருவாகிறது.
அதிகாரியாதிக்க அரசின் இயல்புகளில் முக்கியமானது அது எவ்வகையிலும் முன்னகர விரும்பாது என்பதுதான். வழக்கமானவற்றை மட்டுமே செய்தபடி தன் வட்டத்தில் சுற்றிவருவதே அதற்கு உகந்தது. ஆகவே அனைத்து மாற்றங்களையும் அது காகித அளவில் மட்டுமே செய்யும்.
கத்தைகத்தையாக அறிக்கைகளை மட்டுமே
தயாரித்து மேலே அனுப்பும்.
அரசதிகாரிகள் அளிக்கும் அத்தனை அறிக்கைகளும்
பெரும்பாலும் பொய்யே. தகவல்களை முடைந்து
பொய்யான அறிக்கைகளை உருவாக்குவதில்
பயிற்சியே அரசூழியர் முதலில் அடைவது.
அந்த அறிக்கைகளையே ஆட்சியாளர்கள்
மக்களை நோக்கித் துப்பிக்கொண்டிருப்பார்கள்.
இந்திய அதிகாரிவர்க்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்தே ஊழல் வழியாக உருவாகி ஊழலினூடாக நிலைநிறுத்தப்படுவது. ஊழலுக்கான நடைமுறைகள் அனைத்தும் இருநூறாண்டுக்காலச் சடங்குகளாக மாறிவிட்டிருக்கின்றன. அதிகாரிகளின் கட்டமைப்பு ஆளும் அரசின் ஏவற்கருவியாக ஆகவேண்டும் என்றால் அரசு அதன் ஊழலுக்கு தடையற்ற முழு வாய்ப்பு அளித்தாகவேண்டும்.
அரசின் அனைத்து திட்டங்களையும் அவர்கள் முழுமையாகவே உண்டு செரிப்பார்கள். வான் உடைந்து பெய்தாலும் ஒரு துளிகூட தரைக்கு வராது. இன்றைய அரசு மிதமிஞ்சிய வரிகளை உருவாக்கி அதை அதிகாரிகளை அதை வசூல்செய்யும் வேட்டைவிலங்குகளாக்கி அவர்கள் ஊழலில் திளைக்க வழிவகுத்துள்ளது. இன்றும் வரிகட்டாத பழம்பெருமை கொண்டவர்கள் அதே வீச்சில் தொடர்கிறார்கள்.
( 2-ஆம் பகுதியில் – தொடர்கிறது … )
(இடையே, இந்த இடுகையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் குறித்து,
நண்பர்களிடமிருந்து, பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன… )
—————————————————————————————————————————————————————————————–



enna oru analysis..perfect !!
It needs extraordinary skill to write such a heavy subject in a very simple manner. Hats off to the author. By the way, I guessed the name of the author.I will verify when U tell in your next issue.
Once again, I wish to state it is very Excellent.
எழுதியவர் யார் என தெரியவில்லை – மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார் .
20000 கோடி செலவழித்து ஆட்சிக்கு வந்தால்
200000 கோடி பார்க்க வழி செய்ய வேண்டும் – Full marks !
500, 1000 ரூ நோட்டுக்களை ஒழித்தது உத்திர பிரதேசத்தில்
தேர்தலுக்காக தவிர வேற ஒன்றும் இல்லை .
யாரைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த நடவடிக்கை .
இந்தியாவில் கறுப்புப்பணம் இப்ப இல்லவே இல்லை !
பழைய நோட் அத்தனையும் திரும்ப வந்து விட்டது .
கள்ள பணம் வைத்து இருந்தவர்கள் என்ன ஆனார்கள் ?
GST அவசரமாக கொண்டு வரப்பட்டது . சரி செய்வார்களா ?
இல்லை அப்படியே விட்டு விடுவார்களா ?
இந்த அரசுக்கு மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை
எதுவும் கிடையாது .
அதிகார வர்க்கம் – so called steel frame of India – is corrupt .
அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டும்
என்றால் அவர்கள் கொள்ளையடிக்க வழி செய்ய வேண்டும் – Correct !
//இருபதாயிரம் கோடிரூபாய் பிரச்சாரத்திற்குச் செலவிட்டு பதவியைப்பிடித்துள்ளது என்கிறார்கள்.
ஆகவே இரண்டுலட்சம் கோடியையாவது
அதை அளித்தவர்களுக்கு திரும்ப அளிப்பதே
அதன் ஆட்சியின் முதல் கடமையாக இருக்கும்.//
// பணமதிப்புநீக்கம் தோல்வியடைவதை
கண்கூடாகவே பார்த்துக்கொண்டிருந்தேன். //
//நான் அறிந்தது உண்மை என்றால் கெடு முடிந்து எட்டுமாதங்கள் கடந்தும் கூட பழைய நோட்டுக்களை மாற்றிக்கொண்டிருந்தார்கள்.//
//ஆனால் அத்தனை நோட்டுகளும் திரும்பி வந்துவிட்டன
என்றால் அதன்பொருள் ஒன்றே,
இதில் பாரதியஜனதா கட்சியும், இந்த அரசும்
ரகசிய லாபமீட்டாமல் இவ்வாறு நிகழாது.
அவர்கள் உடனிருக்காமல் இத்தனை
முழுமையான மோசடி நிகழவே முடியாது.
அவர்கள் அதற்குப்பொறுப்பேற்றே ஆகவேண்டும்.
அதன் விளைவான அனைத்து அழிவுகளுக்கும்.
ஒரு குடிமகனாக தனிப்பட்ட முறையில் அவமதிக்கப்பட்டவனாக, சுரண்டப்பட்டவனாக உணர்கிறேன். //
பணமதிப்புநீக்கம் கொண்டு வரப்பட்டது முழுக்க முழுக்க
சுயநல காரணங்களுக்காக; பாஜக தலைமைக்கும், அதற்கு
வேண்டப்பட்ட சிலருக்கும், உத்திர பிரதேச தேர்தலில்
எதிரிகளின் பணபலத்தை அழிக்கவும் –
– என்று காவிரிமைந்தன் எழுதியிருந்ததை இந்த விமரிசனங்களும்
உறுதி செய்கின்றன.
விமரிசனம் செய்திருப்பவர் யாராக இருந்தாலும் சரி;
அற்புதமான எடைபோடல்.
கே.எம்.சார்,
நீங்கள் விமரிசனம் தளத்தில் முன்வைக்கும் வாதங்களை இன்னமும் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் எடுத்து வைக்கிறது இந்த விமரிசனம். உங்கள் எழுத்தை குறைகூறும் பாஜக வினர் இந்த
விமரிசனங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள் ?
தலைமையை சூழ்ந்துள்ள ஒரு சிறு குழுவின் லாபங்களுக்காகவும், தன்னலமிகளான ஒரு வணிகர் வட்டத்திற்கும், தங்கள் கட்சிக்காகவும்,
மட்டுமே உழைக்கிறது இந்த அரசு ; இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
சொன்னவர் யாரென்று சொல்லாமல் விட்டது நல்லதுதான். பொதுவா சொல்லப்படும் செய்தியைவிட சொன்னது யார், அவர் சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பதிலேயே மனது சென்றுவிடும். சொல்லும் பொருளில் மனது ஒன்றாது. (ஏனென்றால், அட்வைஸ் அள்ளித் தெளிப்பது மிக சுலபம்).
இடுகையைக் காலையிலேயே படித்தேன். மீண்டும் படித்தேன். சொன்னவை உண்மையானவை. எந்தப் பாயிண்டையும் மறுத்து நேருக்கு நேராகப் பேசமுடியாது. அனைத்திலும் உண்மை பொதிந்திருக்கிறது. இந்தப் பாயிண்டுகள் நெஞ்சில் கலக்கத்தை உண்டாக்கத் தவறவில்லை. காரணம், எந்த தேவதூதன் வந்து நம் சமூக, அரசியலில் படிந்துவிட்ட 90% சகதியை அகற்றப் போகிறாரோ என்ற கலக்கம் வருகிறது. மோடி அவர்களின் மீது இருந்த நம்பிக்கை தளர்கிறது.
நமக்கு கண்ணாடிபோல் உண்மையை எடுத்துரைக்க, 10 பேராவது இருக்கவேண்டாமா, அவர்களைத் தக்க பதவியில் உட்காரவைக்கவேண்டாமா என்று மோடி ஏன் நினைக்கவில்லை என்று தோன்றுகிறது. கிச்சன் கேபினட்டில் ஜெட்லி போன்ற மலைமுழுங்கிகள் இருப்பதால் இந்தியாவுக்கு என்ன நன்மை? இந்த விஷயத்தில் சு.சுவாமி எவ்வளவோ பரவாயில்லை. கட்டுச் சோற்றுக்குள் இருந்துகொண்டே தவறுகளை வெளிப்படையாகச் சொல்வது (சொந்த லாபம் கருதி என்றாலும்) நல்லது அல்லவா?
வேஷதாரிகளே ஒட்டிக்கொண்டிருப்பது (அதிதீவிர இந்து எதிர்ப்பாளர்கள், இப்போது ஆதரவாளர்கள்) சமூகத்தின் நலனுக்கு எவ்வளவு கேடு.
அதுமட்டுமல்லாமல், ஒருவரையே ப்ரொஜெக்ட் செய்வதும் ஆபத்தான போக்குதான். இந்தியாவில் ஒருவர் மட்டுமே எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. அவரைச் சுற்றி நிறைய நல்லவர்கள்/வல்லவர்கள் தேவை. பிரதமர், தன்னை மட்டும் ப்ரொஜெக்ட் செய்துகொள்வதும், கூட இருக்கும் புல்லுருவிகள் அதனையே செய்வதும் பிரதமருக்கும் நல்லதல்ல, கட்சிக்கும் இந்தியாவுக்கு நல்லதல்ல.
பொதுவாக கட்டுரையாளர் செல்லும் பாதை அல்லது சொல்ல விழைவது ஒன்றுதான். இந்திராகாந்தி குறிப்பிட்ட காலத்தில், ஆகாச உயரத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார், ஆனால் அந்த உயரத்தாலேயே 77ல் தலைகுப்புற விழுந்தார். 2019 அதை நோக்கிச் செல்லுமா? பார்ப்போம்.
இந்தச் செய்தியையும் பாருங்கள் கா.மை சார். பொருத்தமான சமயத்தில் வந்துள்ள செய்தி.
https://tamil.oneindia.com/news/tamilnadu/gandhi-s-secretary-says-that-he-will-accept-if-british-rule-happens/articlecontent-pf329067-331097.html
நன்றி புதியவன்.
எல்லாரும் சுலபமாகப் படிக்க வசதியாக, இதன் சுருக்கத்தை தனியே பின்னூட்டத்தில் தந்திருக்கிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Sorry sir, my guess about the author’s name is wrong.
கோபாலகிருஷ்ணன்,
அதனாலென்ன விடுங்கள்… யார் சொன்னார்கள் என்று தெரியாமல் ஒரு விமரிசனத்தை படிப்பது அதன் மீதான
ஒரு உண்மையான மதிப்பீட்டிற்கு உதவும் என்று தான் நான் முதலில் பெயரை சொல்லவில்லை…
ஆமாம் – நீங்கள் யாரென்று நினைத்தீர்கள் …? சொல்லலாம் என்று நினத்தால் சொல்லுங்கள்… 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
I thought it was either Mr.Kanakaraj or Mr.Arunan of CPM. Both are very excellent performers
in any debate, They talk only within the subject and under no circumstances they praise their
founders unnecessarily.
கோபாலகிருஷ்ணன்,
திரு.கனகராஜ் நீங்கள் கூறுவது போல் சிறப்பாக, புள்ளி விவரங்களுடன், நறுக்கு தெரித்தாற்போல் பேசக்கூடியவர்…
ஆனால்,திரு.அருணன்….ஊஹூம்… ஒப்புக்கொள்ள மாட்டேன்.
ஆனால், இருவருமே எழுதுவதில் சிறப்பானவர்கள் என்று சொல்ல முடியாது…
மேலும் – இருவருமே அரசியல்வாதிகள்.
நான் துவக்கத்திலேயே – “எழுதியவர் அரசியல்வாதி அல்ல” என்று கூறி இருந்ததை நீங்கள் கவனிக்கத்தவறி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
no problem… leave it.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
It’s by Jeyamohan. It’s very easy to guess. Anyone who has read at least a few of his writings can easily guess by his writing style
Yes Mr.Ravi. I too read a few of his writings. But, it did not strike.
Again, full credit to Jeyamohan for writing this article. As Mr. KaviriMaindhan correctly observed, Jeyamohan (incorrectly) considered to be a BJP supporter. I have heard from my sources that he even withdrew his name from Padmashri considerations in order to avoid criticisms that it was given by BJP for his hindutva friendly writings. I may have some reservations about his other creations but he’s spot on in this article and also about the current status of Indian Railways (that article was written very recently).
sorry for typing in English. I’ll try to reply in tamil once I get more proficient with it.
ரவி,
திரு.ஜெயமோகன் பற்றி,
நீங்கள் கூறி இருப்பவை சரியே.
உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
.
– வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பிங்குபாக்: 2-ஆம் பகுதி – மோடிஜியின் அரசாட்சி ….. ஒரு மூன்றாவது நபரின் பார்வையில்…. | வி ம ரி ச ன ம் – காவி