10 நாள் கூட ஆகாத கம்பெனிக்கு 60 ஆயிரம் கோடி…


விகடன் செய்தியிலிருந்து ஒரு துண்டு செய்தியும்,
ஒரு புகைப்படமும் கீழே –


..

மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது…
தந்தை ஏற்கெனவே ராஜ்ய சபா உறுப்பினர்…
ஆகையால் அவருக்கு தேவைப்படாது…

சிவகங்கை தொகுதிக்கு மற்றவர் யாரும் வேட்டு வைக்காமலிருக்க – அட்வான்சாக இவர் வேட்பாளர் சீட்டுக்கு இப்போதே
துண்டு போட்டு வைக்க வேண்டும்… புரிகிறது…!

ஆனாலும் –

1) “10 நாள் கூட ஆகாத கம்பெனிக்கு 60 ஆயிரம் கோடி…”
இதை திருவாளர் கார்த்தி- சொல்வது சிரிப்பாக வரவில்லை…?

2) “ரஃபேல் டீல்” – விவகாரத்திற்கு மாவட்ட கலெக்டருக்கு மனுவா..?
பாவம் அவர் என்ன செய்வார் அதை வைத்துக்கொண்டு…?
ஃப்ரென்ச் ப்ரெசிடெண்டுக்கு எழுதுவாரா…?

2) ஆமாம் – புகைப்படத்தில் – வேட்டி, கருப்புக்கண்ணாடி, மொட்டைஅடிக்கப்பட்ட தலை – இது திருவாளர் கார்த்தி தானா…?
என்ன ஆயிற்று..? ஏனிந்த கோலம் ?
பாவம் அரசியல்வாதிகளுக்கு தான் எத்தனை தொல்லை…
என்னென்ன வேடம் எல்லாம் போட வேண்டியிருக்கிறது…!!!

All the Best Mr.Karti…!!!

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to 10 நாள் கூட ஆகாத கம்பெனிக்கு 60 ஆயிரம் கோடி…

  1. பிங்குபாக்: 10 நாள் கூட ஆகாத கம்பெனிக்கு 60 ஆயிரம் கோடி… – TamilBlogs

  2. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    வழக்கமாக வேட்டி சட்டையில் இருக்கும் தந்தை இப்போது கோட்டும், பேண்டுமாக
    சிபிஐ, ஈடி அலுவலகங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்.
    அதற்கு மாற்றாக பிள்ளை வேட்டி சட்டையுடன் உள்ளூர் கவனிப்பு போலும். 🙂

  3. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    “ஒரு தொழிலும் தெரியாதவர் 10,000 கோடிக்கு அதிபர்” – காங்கிரஸ் ஆட்சியில்

    இதைத்தான் நான் தலைப்பு என்று படித்தேன். விஷயம் கார்த்தி சிதம்பரம் பற்றியல்லவா? ஓவர் நைட்டில், ‘நாங்க இருக்கோம்’ கம்பெனிக்கு அதிபரானவர் என்றுதானே ஊரெல்லாம் அப்போது பேச்சாயிருந்தது.

    மாவட்ட ஆட்சியாளர் நேர்முக உதவியாளரிடம் மனுவா? பரவாயில்லையே.. கார்த்தியும் கூடச் சேர்ந்த தோழரான திமுகவிடமிருந்து நன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறாரே. திமுக தலைமைக்குத்தான், ‘பாராளுமன்ற உறுப்பினர் ராஜினாமா’ கடிதத்தை, திமுக தலைவருக்கு அனுப்பக் கற்றுக்கொடுத்திருந்தாங்க. நல்லவேளை, கார்த்தி சிதம்பரம், தங்கள் மனுவை, அதே பாணியில் சிதம்பரத்துக்கோ சோனியாவுக்கோ அனுப்பாமல் போனார்களே.

    ‘மொட்டை’ என்பது ஒருவேளை, இயக்குநர்கள் சொல்வதுபோல, ஏதேனும் குறியீடா? வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு அல்லது இந்தியாவிற்கு ….. என்று சொல்கிறாரா?

  4. Jc's avatar Jc சொல்கிறார்:

    R u not ashamed of calling ur self a critic. A critic is always objective never subjective. U r a coward hiding behind the portrait of bharathi the greatest poet of all times.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Jc,

      இந்த இடுகை குறித்து ஒரு காங்கிரஸ்காரருக்கு கோபம் வந்தால் என்னால் புரிந்து கொள்ள முடியும்…. ஆனால், திமுக காரர் துடிப்பது ஏன்…?

      பாரதியைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்களா…?

      பாரதியின் சீடரை, தாசனை கொண்டாடி – ஆனால்
      பாரதியை முழுக்க முழுக்க இருட்டடிப்பு செய்த
      அபூர்வ மனிதர் உங்கள் தலைவர் தான்.

      சரி – இந்த இடுகையில் என்ன குற்றம் கண்டீர்கள்…?
      “சப்ஜெக்ட்” ஒரு உத்தமபுத்திரன் என்கிறீர்களா…?

  5. Mani's avatar Mani சொல்கிறார்:

    Jc

    7 பேர் விடுதலையை காங்கிரஸ் எதிர்க்கிறது…;
    திமுக ஆதரிக்கிறது;
    உங்கள் நிலை என்ன ?
    சென்ற இடுகையில் தமிழன் கேட்ட கேள்விக்கு பதில் இன்றி ஓடினீர்கள்.

    Atleast now Without hiding behind any party, come out openly and tell what is your policy ?
    Do you support DMK or Congress on this issue.

  6. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    கனிமாெழி அவர்களின் தற்பாேதைய கவிதை ஒன்று :

    ” நீயற்ற நாட்களில் பார்த்துவிட்டேன் பல புதிய முகமூடிகளை , பொய்களால் ஆன உலகத்தில் எப்படி வார்த்தாய், உன் நாவிற்குள் இரும்புத்தண்டு என்றும்…
    ஒவ்வொரு முறை கடந்தபோதும் சொல்வாய் என் மகளுக்கு அழத் தெரியாது என்று, இப்போது அழுகிறேன் அப்பா… நிறுத்தத் தெரியாமல் என்று கொட்டியுள்ளார்…” யார் அந்த புதிய முகமூடிகள் ….? ஏன் அழுகிறார் …?

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      //பொய்களால் ஆன உலகத்தில் எப்படி வார்த்தாய்//

      இந்தக் கனிமொழி யார்? தெரியலையே… மகளாக இருந்ததனால் பல கோடிகளுக்கு அதிபதியாகி, ஜி2வில் கிடைத்த பெரும் பணத்தினால் எஸ்.ஆர்.எம். ஐயே விலைக்குப் பேசத் துடித்தவரா? இல்லை வேறு ஒருவரா?

      20% முதலீடு கலைஞர் தொலைக்காட்சியில் செய்தவரா? (எங்கிருந்து பணம் என்றெல்லாம் நான் கேட்கலை). இல்லை, ஆவணங்கள் கிழிக்கப்பட்டு, நிர்வாகக் குழுவில் இல்லை என்று, முன் தேதியிட்டு புது ஆவணங்கள் எழுதப்பட்டன, பழைய ஆவணங்கள் குப்பைபோல் அறிவாலயம் வெளியில் பறந்துகொண்டிருந்தது என்று விகடனில் கட்டுரை வந்ததற்குக் காரணமானவரா?

      இல்லை, குழந்தையை வளர்க்கமுடியவில்லையே, தன்னுடைய முதல் கடமையே குழந்தையோடு எப்போதும் இருப்பதுதானே, மகன் தாயில்லாமல் துடிக்கிறானே அதனால் ஜாமீன் கொடுத்துவிடுங்கள் என்று மன்றாடி, ஜாமீன் கிடைத்தபின்பு, ராஜ்ஜியசபா எம்.பி. பதவி பெற்று தில்லியில் குடிபுகுந்தவரா?

      இல்லை… மிக தைரியசாலியாக, திமுக தலைவர், தமிழ்நாட்டில், ‘தமிழர்களே, இலங்கைத் தமிழர்களே’ என்று நீலிக் கண்ணீர் வடித்துக்கொண்டு, தில்லியில் பசையுள்ள பதவிகளைப் பிடித்துக்கொண்டிருந்தபோது, புலியைக் கூண்டுக்குள்ளேயே சந்திக்கிறேன் என்று சொல்லி இலங்கைபோய் ராஜபக்‌ஷேவைப் பார்த்து கைகொடுத்துச் சிரித்து, அவரிடம் பரிசில் பெற்றுவந்தவரா (கூட வந்து இன்னொரு பரிசை வாங்கிய திருமாவளவனையும் அவரின் கூழைக் கும்பிடுவையும் இப்போது நான் நினைவுகூரவிரும்பவில்லை)

      அனுபவமுள்ள கட்சிக்காரர்கள் பலரையும், நீ எனக்குப் பின்னால் இருந்ததால் அழவைத்தேனே….. இப்போது காலம், நீ இல்லாதபோது, என்னை அழவைக்கிறதே என்று வருத்தப்படுபவரா?

      கள நிதர்சனம்… கருணாநிதிக்கு கடமை இருந்தது, கனிமொழி, ஸ்டாலின், அழகிரி, அவர்களின் வாரிசுகள் என்று ஒவ்வொருவருக்கும் பிரித்து வாய்ப்புகள் கொடுப்பதற்கு, அரசுரிமைக்கு ஏரியா பிரிப்பதற்கு. ஆனால், ஸ்டாலினுக்கு அந்தக் கடமை இல்லையே. என்ன செய்ய…. அவருக்கு இருக்கும் ஒரே கடமை, அவரது வாரிசுகளுக்கு எப்படிச் செய்வது, எங்கு அமரவைப்பது என்பதுதான்.

      காலத்தை நினைத்துச் சிரிப்பு வந்து ‘ஹாஹாஹா’ என்று போட்டால், மட்டமான ரசனை என்று குறைகூறுகிறார்கள். அதனால் என் சிரிப்பைக் காட்டாமல் போய்விடுகிறேன்.

      • Mani's avatar Mani சொல்கிறார்:

        புதியவன் அவர்களுக்கு நன்றி.
        அந்த தேவையற்ற சொல்லை நீக்கி விட்டதால்,
        உங்கள் பின்னூட்டத்தின் வீரியம் அதிகமாக இருக்கிறது என்பதே உண்மை.
        நல்ல எண்ணத்தில் தான் நான் சொன்னேன். சொன்ன விதம் ஒருவேளை
        சரி இல்லாமல் இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

  7. Mani's avatar Mani சொல்கிறார்:

    போடும் பல வேடங்களில் இதுவும் ஒன்று; அவ்வளவு தான்.

  8. Mani's avatar Mani சொல்கிறார்:

    பொய் இவர்களுக்கு புதிதா ?
    கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் எப்படி வந்தது என்று சொல்ல முடியுமா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.