…
…
இன்றைய தினம் தொலைக்காட்சிகள் சமூகத்தை
டென்ஷனாக்கி, டிஆர்பியை அதிகரிக்கச்செய்து, காசு சம்பாதிப்பது
ஒன்றையே குறிக்கோளாக வைத்து செயல்படுகின்றன…
நாம் மனதில் நினைப்பதை இந்த மனிதர் வெளிப்படையாக,
சிரிக்கச் சிரிக்க சொல்கிறார்….
கொஞ்ச நேரம் ரசித்து, மனம்விட்டு சிரிப்போமே –
கவிஞர் மோகனசுந்தரம் பேசுவதைக் கேட்டு …..
…
.
———————————————————————————



HILARIOUS
பிங்குபாக்: சேனல்கள் நம் எல்லோரையும் முட்டாள்கள் ஆக்குகின்றன…. – TamilBlogs
கவிஞர் மோகனசுந்தரம் போன்ற பலர் ரொம்ப நகைச்சுவையா ரசிக்கும்படி பேசுவாங்க. இந்தக் காலத்துல உடனுக்குடன் யூடியூபில் வந்துவிடுவதால் அவர்கள் சொன்ன நகைச்சுவையை இன்னொரு ஊரிலும் சொன்னால் (அவங்களுக்கு வேறு வழியில்லை), சொன்னதையே ரிபீட் செய்வதைப்போல் தோன்றும்.
எல்லாச் சேனல்களையும் இந்தமாதிரிச் சொல்லலாம் என்றாலும், ஒரு சில சேனல்களில் நல்ல நிகழ்ச்சிகளும், பேட்டிகளும் வருகின்றன. தந்தி தொலைக்காட்சியின் மக்கள் மன்றம், நேருக்கு நேர், சிறப்பு பேட்டி போன்றவைகளும் நன்றாக இருக்கும்.
தேர்தல் சமயத்தில், தந்தியின் கருத்துக்கணிப்புகளும் (இப்போ அவங்களும் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டார்கள் என்று தோன்றுது. கருணாநிதியை வைத்து எத்தனை நிகழ்ச்சிகள்.. விஜய் தொலைக்காட்சி, திமுக மாநாடுபோல், கருணாநிதியிடம் உங்களுக்குப் பிடித்தது அவரது அழகா, இல்லை உடையா என்ற ரேஞ்சுக்கு நீயா நானா), பாலிமர் செய்திகளும் ஓரளவு நம்பும்படியாக இருக்கும்.
மற்றபடி தினப்படி விவாதங்கள், 99% நேரம் வீணடிப்புதான். கட்சி சாரா ஒரு சிலர் நன்றாகப் பேசுவார்கள், ஆனால் அதனை ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்குப் பதில் நிகழ்ச்சிகளையே பார்க்கவேண்டாம்.
இதுக்கு மெயின் காரணம் என்னவென்றால், எந்தத் தொலைக்காட்சியும் பார்வையாளர்களை இழக்க விரும்பாது, அபிமான கட்சியை இழக்க விரும்பாது, அடாவடி கட்சிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதனால் எல்லா நிகழ்வுகளிலும் உண்மையைப் பேச விரும்புவதில்லை. கட்சித் தொலைக்காட்சின்ன (90% கட்சித் தொலைக்காட்சிகள்தான்), ஆளும் கட்சி என்றால் மக்கள் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகவும், எதிர்கட்சி என்றால், மக்கள் எல்லோரும் எப்போடா இந்த ஆட்சி போகும் என்று காத்திருப்பதாகவும் அடித்துவிடுவார்கள்.