டாக்டர் சு.சுவாமி : மால்யாவை தப்பவைத்த – அந்த “பெரிய சக்தி”



..

54 லக்கேஜ்களுடன் ஒருவர் லண்டனுக்கு வண்டி (ப்ளேன்…) ஏறுகிறார். இந்தியா என்ன, உலகமே அறியும் அவர் பின்னணிகளை…

அவர் ஓடிப்போகிறார் என்பதை உணர்ந்துகொண்ட ஏர்போர்ட் செக்யூரியில் பதறுகிறார்கள்… என்ன செய்வது என்று கேட்கிறார்கள்…

சிபிஐ தனது நோட்டீசில் “BLOCK” (தடுத்து நிறுத்துங்கள்) என்றிருந்ததை “report” ( தகவல் அனுப்பினால் போதும்…) என்று மாற்றுகிறது….

..

..
அண்ணன் அத்தனை லக்கேஜுகளுடனும், 9000 கோடி கடனுடனும் எஸ்கேப்…. இன்று இந்தியா முழுவதும், அத்தனை தொலைக்காட்சிகளும் விவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றன…

போகும் முன்னர் நிதியமைச்சரிடம் பார்லிமெண்ட் ஹாலில் பார்த்து சொல்லி விட்டுத்தான் வந்தேன் என்கிறார் எக்ஸ்பர்ட் திருடர்…!!!

ஆளும் கட்சியை சேர்ந்த டாக்டர் சு.சுவாமி சொல்கிறார்… சிபிஐ ரிப்போர்ட் மாற்றப்பட்டதற்கு காரணம் நிதியமைச்சரையும் தாண்டிய ஒரு சூப்பர் சக்தி என்று….

யார் அந்த சக்தி…?
நாமறியோம் பராபரமே…
அதை அறிந்து கொள்ளும் “சக்தி” நம்மிடம் இல்லை….

ஆனால், மின்னம்பலம் செய்தித்தளத்தில் இது குறித்து விவரமாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது… இதில் எந்த அளவிற்கு உண்மை ..? என்பது நமக்கு தெரியாது… அந்த செய்தியை இங்கே பகிர்ந்து கொள்வதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன்….. இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கலாம் என்பதை தீர்மானித்துக் கொள்ளும் பொறுப்பு வாசக நண்பர்களுடையது….

———————————————————————————

15

மாலை 7, சனி, 15 செப் 2018
“மல்லையாவை தப்ப வைத்த மோடியின் சிபிஐ செல்லப் பிள்ளை”

———–

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்திய நாடாளுமன்ற உரையில் தொடங்கி மத்திய அரசின் மீதும் பிரதமர் மீதும் தாக்குதல்களை இறங்கி அடித்து வருகிறார். அந்த வகையில்தான் இன்றைய தனது ட்விட்டரில்,

‘சிபிஐயில் இருக்கும் மோடியின் செல்லபிள்ளை அதிகாரிதான் விஜய் மல்லையா விவகாரத்தில் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறார்.

நிரவ் மோடி போன்றவர்கள் தப்பிப்பதற்கும் சிபிஐ க்குள் இருந்துகொண்டு உதவுகிறவர் மோடியின் இந்த செல்லப்பிள்ளைதான்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தியின் இந்த ஓப்பன் அட்டாக் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, சிபிஐயிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (செப்டம்பர் 15) ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,

“சிபிஐயில் இணை இயக்குனராக இருப்பவரும், பிரதமர் மோடியின் செல்லப் பிள்ளையுமான (blue eyed boy) ஏ.கே. ஷர்மாதான் விஜய் மல்லையா மீதான லுக் அவுட் நோட்டீசை பலவீனப்படுத்தியவர்.

இதுமட்டுமல்ல, இதே ஏ.கே. ஷர்மாதான் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகிய குஜராத் வைர வியாபாரிகள் இந்தியாவை விட்டு தப்பிச் சென்றதிலும் முக்கியப் பங்கு வகித்தவர். இந்த ஷர்மா குஜராத் கேடர் அதிகாரி. இதுதான் புலனாய்வு…” என்று பதிவிட்டிருக்கிறார் ராகுல்.

ராகுல் இன்று பகலில் பதிவிட்ட இந்த ட்விட்டர் செய்திக்கு சிபிஐக்குள் பலத்த வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். காரணம் ஏ.கே. ஷர்மாவின் ப்ளாஷ்பேக் அப்படி.

கடந்த 2015 ஏப்ரல் மாதம் குஜராத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான
அருண் குமார் ஷர்மா சிபிஐக்கு இணை இயக்குனர் அந்தஸ்தோடு பதவி உயர்வில் மாற்றப்பட்டார்.

அதே வருடம் ஜூலை மாதம், 1987 பேட்ச் குஜராத் அதிகாரியான ஏ.கே. ஷர்மாவை சிபிஐயின் கொள்கை வகுக்கும் பிரிவில் முக்கிய அதிகாரியாக நியமிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்துவதாக செய்திகள் வெளியாகின.

சிபிஐயின் நடவடிக்கைகள் குறித்து சிபிஐ இயக்குனரோடு பிரதமர் விவாதிக்கும்போது கொள்கை வகுக்கும் பிரிவின் அதிகாரியும் இருப்பார்கள். எனவேதான் ஏ.கே. ஷர்மாவை அந்த பதவியில் நியமிக்குமாறு அப்போது அழுத்தம் கொடுத்திருக்கிறார் பிரதமர்.

அதாவது சிபிஐ இயக்குனரைத் தாண்டி தனக்கென சில நபர்களை சிபிஐக்குள் வைத்திருக்க பிரதமர் முயல்கிறார் என்றும் அப்போது புகார்கள் எழுந்தன.

தவிர, சிபிஐயின் கொள்கை வகுக்கும் பிரிவில் மிக அனுபவம் வாய்ந்த
நேர்மையான அதிகாரிகளையே நியமிப்பது வழக்கம். ஆனால் ஏ.கே. ஷர்மா சர்ச்சை நிழல் படிந்தவராக இருந்தார்.

குறிப்பாக 2004 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த மோடியை கொலை செய்யும் நோக்கோடு வந்தார்கள் என்று மும்பை பெண் இஷ்ரத் சகன் உள்ளிட்டோரை குஜராத் போலீஸ் சுட்டுக்கொன்றது. இது போலி என்கவுண்ட்டர் என்று மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பின. இந்த விவகாரம் மோடிக்கு பெரும் சிக்கலானது. அந்நிலையில் இந்த விவகாரத்தின் புலனாய்வை தடம்புரளச் செய்ததில் ஏ.கே.ஷர்மாவுக்கும் பங்கு உண்டு என்று புகார்கள் எழுந்தன.

இப்படி சர்ச்சைக்குள்ளான அதிகாரியை சிபிஐயின் கொள்கை வகுப்புப் பிரிவில் உயர் அதிகாரியாக நியமிக்க சிபிஐ இயக்குனர் அனில் சின்ஹா பிரதமரின் யோசனையை நிராகரித்தார் என்றும் அப்போதே ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த அதிகாரி ஏ.கே. ஷர்மாவை குறிவைத்துதான் இன்று ராகுல் காந்தி தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதனால்தான் சிபிஐ அதிகாரிகள் பலர் உள்ளுக்குள், ‘ராகுல் காந்தி உண்மையை உடைத்துவிட்டார்’ என்று தங்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் மனம் விட்டு பேசியிருக்கிறார்கள்.

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to டாக்டர் சு.சுவாமி : மால்யாவை தப்பவைத்த – அந்த “பெரிய சக்தி”

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    எல்லோரும், விஜய் மால்யாவுக்கு வங்கிக் கடன் கொடுத்ததில் காங்கிரசுக்குத்தான் (அந்தக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்குத்தான்) பெரிய பங்கு என்று சொல்லுகின்றனர். அது உண்மையாகவே இருக்கக்கூடும். சாதாரண மக்களுக்கு என்றைக்கு வங்கிகள் கடன் கொடுத்திருக்கின்றன, அதற்கு பிணை இல்லாமல். காங்கிரஸ் அடாவடியான ஊழலில் திளைத்தது. அதற்கு தனக்குப் பிரச்சனை எதுவும் வரக்கூடாது என்று திமுக லாலு போன்ற முழு (திருடர்களை என்று சொல்லப் போனேன்… ஆனால் அது பார்லியாமெண்டரி வார்த்தை இல்லை. அதனால் அந்த வார்த்தையை உபயோகிக்கக்கூடாது) ஊழல்வாதிகளைத் தன்னுடன் வைத்துக்கொண்டது.

    அதற்குத்தான் மக்கள் காங்கிரஸ் மற்றும் அதைச் சேர்ந்த 2ஜிக்களைத் தண்டித்துவிட்டார்களே. அதனைச் சரி செய்யத்தானே பாஜகவை ஆட்சியில் அமரவைத்தார்கள்.

    காங்கிரஸ், பிராந்தியக் கட்சியில் திமுக போன்றவை, முக்கிய இடங்களின் தங்கள் ஆட்களைத்தான் வைப்பார்கள். திறமை அனுபவம் போன்றவைகளை கன்சிடர் செய்ய மாட்டார்கள் (உடனே திமுக மாவட்டச் செயலாளர், நீதிபதி ஆனார் என்று உதாரணத்தைக் கொண்டுவராதீர்கள்). பாஜகவும் அதையே செய்திருக்கிறது. பிறிதொரு செய்தியில், இந்தியாவுக்கு டாட்டா காண்பிப்பதற்கு முன்பு ஜேட்லியை பாராளுமன்றத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்தார் என்பதையும் படித்தேன். (அதற்கப்புறம் ஷர்மாவுக்கு கட்டளை அனுப்பப்பட்டிருக்குமோ?). அதிகாரிகள், மேலிடத்து உத்தரவு இல்லாமல் எதையும் செய்யமாட்டார்கள். (பிஎஸ்.என்.எல் தமிழக ஜி.எம். தானே வலிந்து 150+ கேபிள் கனெக்‌ஷன் தயாநிதி மாறனுடைய சன் தொலைக்காட்சிக்குப் போட்டிருக்கமுடியாதல்லவா?)

    இந்தச் செய்தி சொல்வது என்ன? ஊழல் செய்வதில் காங்கிரசோடு பாஜக நன்றாக போட்டி போடுகிறது என்பதைத்தான். அதனால், பாஜகவுக்கு ‘ஊழல்’, ‘தவறுகள்’ விஷயத்தில் காங்கிரசைச் சொல்ல ஒரு அருகதையும் கிடையாது. இது மால்யா விஷயத்தில் மட்டுமல்ல, இன்னும் நிறைய பேர் விஷயத்தில் நடந்துள்ளது. லலித் மோடி ஒரு உதாரணம். பல்வேறு முக்கிய ஊழல் வழக்குகளில் ஆதாரங்களைக் கொடுக்கவிடாமல் கட்டுப்படுத்துவதையும் நாம் பார்த்துவருகிறோமே.

    எனக்கு न खाऊँगा என்பதிலும், न खाने दूँगा என்பதிலும் ‘न’ என்பது தட்டச்சுப் பிழையா என்பதை ஹிந்தி அறிந்தவர்கள் சொன்னால் தெரிந்துகொள்வேன். ஏனென்றால் எனக்கு ஹிந்தி नहीँ मालूम

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      “வாழு… வாழ விடு” என்று தமிழில் சொல்வார்களே…

      அதே தான் இது ஹிந்தியில்…
      ” நீயும் சாப்பிடு… கூட இருப்பவர்களையும் சாப்பிட விடு ”

      சின்ன வயதில் சத்தியமாகச் சொல் என்றால், முதலில் “அ” என்பதை மௌனமாக மனதிற்குள் சொல்லிக் கொண்டு (அ) சத்தியமாக என்று மற்றவரை ஏமாற்றி விட்ட பெருமிதத்தில் சத்தமாகச் சொல்லிக் கொள்வோம்.

      தேர்தல் கூட்டங்களில் “அச்சே தின் வரும்”என்று சொன்னார்.. அது உண்மையாகவும் ஆகிக்கொண்டிருக்கிறது.

      ஆனால் அது தன்னைச் சுற்றியுள்ள 15-20 பேர்களுக்கு மட்டும் என்பதை மனதிற்குள்ளாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது இப்போது தானே நம்மைப் போன்ற முட்டாள்களுக்கு தெரிகிறது…. (என்னையும் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்… எனவே, யாரும் ஆட்சேபிக்க முடியாது..!!!)
      அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக இன்ஸ்டால்மெண்டில்… 🙂 🙂 🙂

      -வாழ்க வளமுடன் ( 🙂 )
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        சுப்பிரமணி சுவாமி, கட்டுச் சோத்தில் கட்டிய பெருச்சாளி என்றாலும், அவரால் பல உபயோகங்கள் இருக்கின்றன. ‘போட்டுக் கொடுத்தாலும்’ நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு வேறு எப்படி முக்கிய விஷயங்களின் உள்குத்துகள் தெரியவரும்? அதற்காகவே சு.சுவாமியைப் பாராட்டணும். அதனால்தானே ஜேட்லி வேறு வழியில்லாமல், வெறும்ன ஹாய் ஹாய் சொல்லத்தான் அவர் என்னைச் சந்தித்தார் என்று சொல்லியிருக்கிறாரே.

  2. பிங்குபாக்: டாக்டர் சு.சுவாமி : மால்யாவை தப்பவைத்த – அந்த “பெரிய சக்தி” – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.