வேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி….?


ஒவ்வொருவரும், உயர்ந்த குணங்களையும்,
நற்பண்புகளையும் உடைய சிறந்த ஒரு மனிதராக
தன்னை உயர்த்திக் கொள்ளவே விரும்புவார்கள்…

ஆனால், இதை நடைமுறையில் எப்படி செய்வது…?

சில தியாகங்களைச் செய்ய முன்வருவதன் மூலமாக…

எத்தகைய தியாகங்களை….?
உயர்ந்ததை பெறுவதற்காக,
தாழ்ந்ததை கைவிடும் தியாகம்….

தன்னிடமுள்ள, விரும்பத்தகாத, வேண்டாத குணங்களை
கைவிடுவதன் மூலம் …உயர்ந்த குணங்களை பெறுவது…!!!

சரி – வேண்டாத குணங்கள் தன்னிடம் என்னென்ன
இருக்கின்றன என்பதை எப்படி உணர்வது…?

தன்னைத் தானே கண்டறிதல்….
தன்னைத் தானே உணர்தல்…

தினந்தோறும், தன் செய்கைகளை,
பல்வேறு நிகழ்வுகளின்போது,
தான் நடந்து கொண்ட விதத்தை,
அதனால் ஏற்பட்ட பிம்பங்களை /விளைவுகளை
உணர முயல வேண்டும்…

என் செயல்களில் –

ஒருதலைப்பட்சமான அணுகுமுறை இருந்ததா…?
எதிர்மறையான சிந்தனை இருந்ததா…?
கோபம் மேலோங்கி நின்றதா…?
உரிமை அதிகம் தென்பட்டதா…? என்று,

அன்றாடம் நமது செயல்களை, நாமே அலசி ஆராய்ந்து,
நம்முடைய எதிர்மறையான குணங்களை கண்டறிய வேண்டும்…

அதைக் கண்டறிந்து விட்டால், அதன் பின் அவற்றை
ஒவ்வொன்றாக கழற்றி வீசி எறிவது, சுலபம்…

—————————————————-

நான் மேலே வெறுமனே கோடி காட்டி இருக்கிறேன்…
பொருளடக்கத்தை சொல்லி இருக்கிறேன்….அவ்வளவே…!

சுவாமி மித்ரானந்தா, தனது அழகிய ஆங்கில உரையில்
இந்த விஷயத்தை எவ்வளவு சுவாரஸ்யமாகவும், எளிமையாகவும், கையாள்கிறார் பாருங்கள்….

மிகவும் பயனுள்ள ஒரு உரை….

..
———————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to வேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி….?

  1. பிங்குபாக்: வேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி….? – TamilBlogs

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    introspect – சுய பரிசோதனை – ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தலைவனுக்கும் எல்லோருக்கும் மிக மிக அவசியம்.

    அது இல்லாதவன் தன்னை அறிய முடியாது. தன்னை அறியாதவன் இந்த சமுதாயத்திற்கு கேடு.

    —- —- —-

    எல்லா மதங்களும் நல்லவற்றையே போதிக்கின்றன. பின்னே ஏன் இவ்வளவு அட்டூழியங்கள் அநியாயங்கள்.

    நீதி போதனை செய்யும் மதத்தை பின் பற்றுகிறவர்களும் மதத்தை காக்க நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொல்லுகிறவர்களாலும் தான் அதிகமாக நாசம் ஏற்படுகிறது. ஏன்…?

    எல்லா மதமும் நீதி போதனை செய்யும் போது அதை பின் பற்றுகிறவர்களால் அதற்கு எதிரான போக்கு ஏன் எப்படி ஏற்படுகிறது.

    சரி மதமே வேண்டாம், எங்களுக்கு மத நம்பிக்கை தேவை இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் மட்டும் என்ன ஒழுங்கு…?

    நீதி போதனை, அறவழியை போதிக்கும் மத நம்பிக்கை வேண்டாம். நாத்திகமும் பெருசா ஒன்னும் செய்ய முடியாது.

    வேறு எது தான் வேனும், சரி.

    விடை ரொம்ப simple.

    தேடுங்கள் கிடைக்கும்.

    சரி மேலே சொன்ன introspect-க்கு வருவோம். சுய பரிசோதனை செய்து தன்னை நேர் வழியில் செல்ல எத்தனிக்கும் மனிதன் தவறிழைத்து விடுவதில்லையா?

    ஏன்…………?

  3. Sridhar's avatar Sridhar சொல்கிறார்:

    Dear Arivazhagu,

    there is no dearth of questions and none of the questions have a perfect answer. In all deeds and actions, there is good and bad (good for one person is bad for another person), so introspection is to look if the action / thought has good as the prime objective.

    If introspection alone is done, then no action will be taken. If thoughts are good, then it will never result in damage. However knowledgeable you are and how many scriptures you have mastered is not the yardstick for your actions. How you have taken the message of the scriptures / knowledge in your action is the most important thing.

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      Dear Sridhar,

      Everything, the whole Universe including you and me, have been functioning a mastered scripture, the scripture is called vidhi(destiny, விதி).

      The master, God Almighty.

      All actions either good or bad after thoughts only. No actions could not be done without thoughts, yes introspection leading to good actions reflection of good thoughts but certain time destiny has given its role.

      /// there is no dearth of questions and none of the questions have a perfect answer.///

      Why….?

      Because, human haven’t been given enough knowledge, some but not all, certainly not in destiny(விதியில்).

      So, why do we asking so many unanswerable questions again and again? Definitely no one can’t reach the answer in the past at present or in the future.

      Only the God Almighty knows. no one have right to ask him.

      *HE is the creator.*

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.