முன்னாள் ஜனாதிபதி ஆர்.வி… காமராஜர் பற்றி ஒரு பேட்டியில் ….


தமிழகத்தில் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது,
அவரது அமைச்சரவையில், அவரையும் சேர்த்து எட்டே எட்டு
அமைச்சர்கள் தான்… அவர்கள் அத்தனை பேரும்
தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்கள்… என்று தான் சொல்ல வேண்டும்…

அதில் தொழிலமைச்சராக இருந்தவர் திரு.ஆர்.வெங்கட்ராமன்…
பின்னாளில் அவர் மத்தியில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும்,
இந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் கூட பெரும் பொறுப்புகளை
வகித்தார்.

தலைவர் காமராஜ், தொழிலமைச்சர் ஆர்வி ஆகியோரின் கூட்டு
முயற்சியில் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட தொழிற்பேட்டைகள்,
பெரிய பெரிய தொழிற்சாலைகள்…. இன்று இந்தியாவின்
ஆட்டோமொபைல் தலைநகரம் என்று சென்னை பெயர் பெறக்காரணமாக
இருந்தவர்கள் இவர்கள்…..

இந்தியாவின் முன்மாதிரி என்று தமிழ்நாடு “உண்மை”யாகவே பெயர்
பெற்றது இவர்கள் காலத்தில் தான்…..

தலைவர் காமராஜர் பற்றி, ஒரு பேட்டியில் ஆர்வி….

.
———————————————————————————————————-

இன்னும் கொஞ்சம் – காமராஜர் பற்றி –

.
————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to முன்னாள் ஜனாதிபதி ஆர்.வி… காமராஜர் பற்றி ஒரு பேட்டியில் ….

  1. பிங்குபாக்: முன்னாள் ஜனாதிபதி ஆர்.வி… காமராஜர் பற்றி ஒரு பேட்டியில் …. – TamilBlogs

  2. முகம்மது அன்சாரி திமுக's avatar முகம்மது அன்சாரி திமுக சொல்கிறார்:

    நீங்க நாடாரா ?

    காமராஜர் பதிவுகள் ரொம்ப தூக்கலாக இருக்கே

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த நிலையை எண்ணிப்பார்க்கும்போது காமராஜரைப் போன்றவர்களைப் பற்றி இன்னும் பல இடுகைகள் போட்டாலும் அது தகும். எல்லோரும் ‘ஏன் காமராஜர் மிகச் சிறந்த முதலமைச்சர்’ என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

      காமராஜரைப் புகழ்வதற்கு நாடாராக இருக்கவேண்டிய அவசியமில்லை. கருணாநிதியால் தரம் தாழ்ந்த தமிழகத்தைப் பற்றிய புரிதல் இருந்தால், எத்தகைய செயல்வீரரை, தமிழகம் இழந்துவிட்டது என்பது புரிந்துவிடும். அவரை ‘அண்டங்காக்கை’, ‘சுவிஸ் பேங்கில் பணம் போட்டிருக்கிறார்’ என்றெல்லாம் யார் விமர்சனம் செய்தார்கள் என்பதையும் தெரிந்துகொண்டால், அரசியல் தரம் தாழ்ந்ததற்கு யார் முழுமுதல் காரணம் என்பதும் நமக்குத் தெரியும்.

      முகம்மது அன்சாரியின் முன்னோர்கள் ‘இசை வேளாளர்’ சாதியா என்று யாரும் கேட்கமாட்டார்கள்.

      இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன், பாஜகவுக்கு காமராசரின் பெயரை உச்சரிக்கத் தகுதியில்லை என்று சொல்லியிருக்கிறார். இந்திரா காங்கிரசைச் சேர்ந்த எவருக்கும் காமராசர் பெயரை உச்சரிக்கும் தகுதி இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      அன்சாரி,

      உங்களுக்கு என்ன வயதிருக்கும்….?
      எத்தனை நாட்களாக இந்த வலைத்தளத்தை படித்து வருகிறீர்கள்…?

      இந்த தளத்திற்கு வந்து ஜாதி’யைப்பற்றி பேசியதற்கு நீங்கள்
      வெட்கப்பட வேண்டும்…

      காமராஜரைப் போற்றுபவர்கள் அனைவரும் நாடார் இனத்தைச்
      சேர்ந்தவர்கள் என்பது உங்கள் எண்ணமா…?
      அல்லது நாடார் இனத்தவர் மட்டுமே காமராஜரை போற்றுவார்கள்
      என்று சொல்கிறீர்களா….?

      பெயரிலேயே திமுக என்று சொல்லி இருக்கிறீர்களே…
      அது உங்கள் பெற்றோர் வைத்த பெயரா…?
      இல்லை உங்கள் தந்தையை விட ‘திமுக’ என்கிற பெயர்
      உயர்வானது என்று நினைக்கிறீர்களா….?

      உங்கள் பின்னூட்டத்தை delete செய்துவிட்டு நான் போயிருக்கலாம்.
      ஆனால், நீங்கள் எழுதியது தவறு என்று எப்படி உங்களுக்கு உணர்த்துவது…?
      அதனால் தான் இந்த கேள்விகளெல்லாம்…

      -காவிரிமைந்தன்

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    காமராஜரைப் போன்ற முதலமைச்சரை (எம்.ஜி.ஆர் நல்லவர் எனினும் நல்ல முதலமைச்சர் அல்லர்) தமிழ்நாடு கண்டதில்லை.

    இந்திரா காந்தி அவர்கள் இறுமாப்புடையவர்கள். தேசத்துக்கு அத்தகைய தலைமை இருக்கவேண்டும் என்றாலும், அவர் ‘அகில இந்திய கருணாநிதி’ என்று சொன்னால் (குணத்தில்) அதில் தவறிருக்க முடியாது.

    ஆர்.வெங்கட்ராமன் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் அக்கறை காட்டினார் என்றாலும் காசு பார்த்தார் என்பதில் எனக்கு ஐயமில்லை.

  4. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் ஏன் திரும்ப கிடைக்கவில்லை.

    இதில் யார் குற்றம்…? மக்களா….. தலைவர்களா…?

    யார் மாறிப் போனார்கள்.

    தலைவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்…?

    மக்களில் இருந்து, எனில் மக்கள் தான் மாறி போனார்களா என்றால் அவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை ஓட்டு போட்டு தலைவர்களை தேர்ந்தெடுப்பதை தவிர அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள். எனில் தலைவர்கள் தானா…?

    தவறுவதற்கு வாய்ப்பு தலைவர்களுக்கு தான் அதிகம். பதவி எல்லா அனுகூலங்களையும் அளப்பறிய சந்தர்ப்பங்களையும் அளிக்கிறது.

    அப்படி தன்னை தானே கெடுத்துக் கொண்டு இந்த நாட்டையும் நாசமாக்குவது தலைவர்கள் தான்.

    நேரு, காமராஜர், லால் பகதூர் சாஸ்திரி வழியில் வந்தவர் தானே இந்திரா. அவரை யார் மாற்றியது. மக்களா…? எமர்ஜென்சி கொண்டு வந்தது….?

    இந்திராவின் தொடர்ச்சி தான் மோடி.

    ஒவ்வொரு தலைவர்களும் தங்களலவில் ஒரு பரிமாணத்தை காண்பிக்கிறார்கள்.

    மோடி தன் மன பிரழ்வை காண்பிக்கின்றார். எனவே மக்கள் அனைவரும் அப்படி தான் என்று சொல்ல முடியாது அல்லவா…!

    இந்த மனம் பிரழ்ந்தவரின் ஆட்சி இன்னும் தொடர்ந்தால் நாட்டின் கதி…?

    விதி.

  5. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    The end of kamaraj rule is the starting point of disaster for Tamilnadu. When you compare the
    corruption level when dmk was power and when it part of central govt the corruption level of
    kamraj govt is negligible. one should not compare R venkatraman( who was instrumental in
    starting big industries in Tamilnadu} with the scientific corruption people

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.