இந்த 3 செய்திகளில் எது நிஜம்….?


ரஜினியும், காலாவும் – கீழே இருக்கும் 3 செய்திகளும்
நேற்றிரவு ஒரே செய்தி தளத்தில் வந்தது….
( https://minnambalam.com/k/2018/06/05/51 )

இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று மாறானவை என்பதால்
மூன்றும் நிஜமாக இருக்க முடியாது….
எதாவது ஒன்று தான்
நிஜமாக இருக்க முடியும்….

( ஒருவேளை மூன்றுமே கூட தவறானதாக இருக்கலாம்…!!!
அது வேறு கோணம் )

இந்த மூன்றில் நிஜமான செய்தி எது என்று –
உண்மை நிலவரம் யாருக்காவது தெரிந்திருந்தால் –
சொல்லலாம்……!!!

————————–

செய்தி -1) காலாவுக்கு எதிராக பாமக –

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிக்கையிலிருந்து –

சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உள்ள இரண்டாம் நிலைத் திரையரங்குகளில் முன்பதிவுக்கு முன்னதாகவே 95% இருக்கைகள் நிரம்பியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். “அவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள்தான் சட்ட விரோதமாகச் சில முகவர்களுக்கு வழங்கப்பட்டு, கள்ளச் சந்தையில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. மீதமுள்ள
5% முன்வரிசை இருக்கைகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்கப்படுகின்றன.

இதை வர்ணிக்கப் பகல் கொள்ளை என்பதைத் தவிர வேறு வார்த்தை இல்லை.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படியான
நடவடிக்கை மேற்கொள்வதுடன், அந்த திரையரங்குகளில் காலா திரைப்படம் திரையிடப்படுவதைத் தயாரிப்பாளர் மூலம் தடுத்து நிறுத்தவும் ரஜினிகாந்த் முன்வர வேண்டும்”

————————————

செய்தி -2 ) காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

ரஜினிக்கு அரசியல் ஆதரவு கிடைத்ததுமே மக்கள் ஆதரவு போய்விட்டது.

ரஜினி பட ரிலீஸ் என்றால் பொங்கல், தீபாவளி போல இன்னொரு
பண்டிகையாகப் பார்த்துவந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றனர் மக்கள்.

காலா படத்தின் தயாரிப்பு தரப்பு ’இரண்டு நாட்களுக்கு ஹவுஸ் ஃபுல்
ஆகிவிட்டது’ என பெருமையான பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது.

ஆனால் திரையரங்கு உரிமையாளர்களைப் பொறுத்தவரையில் இது பெரும் பின்னடைவு.

ரஜினி ரசிகர்களால் முதல் 5 நாட்களுக்கு விற்றுப்போகும் டிக்கெட்டுகளையும், அதன் பின் வாய்வழியாகப் பரவும் கருத்து மூலம் தியேட்டருக்கு வரும் பொதுமக்களையும் குறிவைத்தே இரண்டு வாரங்கள் முழு வீச்சில் படத்தைத் திரையிடத் திட்டமிடுவார்கள் தியேட்டர்காரர்கள்.

ஆனால், முதல் வார விடுமுறைக்கு டிக்கெட் விற்பதே பெரும்பாடாகிவிட்ட நிலையில், அதிக விலைக்கு டிக்கெட் விற்கமுடியாமல் திணறுகின்றனர்.

வழக்கமாக முதல் மூன்று நாட்களுக்கு 2000 ரூபாய்க்குக் குறையாதவை ரஜினி பட டிக்கெட்டுகள்.

ஆனால் 500 ரூபாய்க்கும் 800 ரூபாய்க்கும் விற்பதற்கே மிகவும் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வருத்தப்படுகிறார்கள்.

தமிழக அரசின் ஆசியோடு, காவல் துறை பாதுகாப்புடன் காலா டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பதில் தியேட்டர்களுக்கு இனி சிரமம் இருக்காது என்று நினைத்த நிலையில்,

ரஜினி ரசிகர்களாலேயே 2000 ரூபாய்க்கும் 1000 ரூபாய்க்கும் வாங்கப்படாத
டிக்கெட்டுகளை பொதுமக்கள் எப்படி வாங்குவார்கள் என யோசிக்க வைத்திருக்கிறது.

இப்படியே சென்றால், போட்ட முதலே வரமுடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

————————————-

செய்தி – 3) காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

சிஸ்டத்தைச் சரிசெய்ய வேண்டும் என்று சொன்ன ரஜினியின் காலா படத்திற்கு மதுரை நகரத்தில் குறைந்தபட்சம் 300 முதல் 500 ரூபாய் வரை காவல் துறை பாதுகாப்புடன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

வேலூர் என்கிற சிறிய நகரத்தில் மட்டும் 16 திரைகளில் காலா திரையிட
ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுபற்றித் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

லைகா நிறுவனத்துடன் விஷாலுக்கு இருக்கும் வியாபாரத் தொடர்பு நியாயம் பேசத் தடுக்கிறது என்பது உண்மையா?

———————————————————————————

.

இந்த மூன்றில், எதை நிஜமென்று எடுத்துக் கொள்வது…?

செய்தி தளங்களை நம்புவது முட்டாள்தனம்
என்கிற நிலைக்கு மக்களை கொண்டு போவது யார்….?

…..அந்த செய்தி தளங்களே தானே….?

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இந்த 3 செய்திகளில் எது நிஜம்….?

  1. BVS's avatar BVS சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    Online booking -ல் check up செய்தேன்.
    சென்னையில் பல தியேட்டர்களில் முதல் நாள் காட்சிகளுக்கு கூட இன்னும்
    இடம் இருக்கிறது. பெரும்பாலான தியேட்டர்களில் 2-ம் நாள் முதல் அனைத்து
    காட்சிகளுக்கும் இடம் இருக்கிறது. புக்கிங்கை ஏற்றுக் கொள்கிறது.
    டிக்கெட்விலை எல்லா வரிகளும் சேர்த்து – 207 ரூபாய்.
    முதல் செய்தி அன்புமணி அவர்களின் ஆத்திரம், அவசரம், வயிற்றேரிச்சல்
    ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. அதில் உண்மை சிறிதும் இல்லை.
    2வது 3வது செய்திகள் எல்லாம் மின்னம்பலம் செய்தித்தளத்தின் கற்பனை+ இட்டுகட்டிய + மிகைப்படுத்தப்பட்ட செய்திகள். அந்த செய்திதளம் திமுக சார்புடையது என்பதால் பின்னணியை புரிந்து கொள்ள முடிகிறது.
    பொதுவாக அனைத்து மீடியாக்களும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ரஜினி மீது
    கொலைவெறி’யில் இருப்பது புரிகிறது.

    • Arun's avatar Arun சொல்கிறார்:

      //முதல் நாள் காட்சிகளுக்கு கூட இன்னும்
      இடம் இருக்கிறது. பெரும்பாலான தியேட்டர்களில் 2-ம் நாள் முதல் அனைத்து
      காட்சிகளுக்கும் இடம் இருக்கிறது. //
      Does it mean people from TN also boycotting the movie? Or was it the same case for his previous movies?

      • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

        இதன் பின்னணியைப் பற்றி எழுதுவது சரியாக வராது. இது சாதிக் கண்ணோட்டம் , அரசியல் கண்ணோட்டம் சம்பந்தப்பட்டது. நேரம் வரும்போது நமக்கே புரியும்

  2. பிங்குபாக்: இந்த 3 செய்திகளில் எது நிஜம்….? – TamilBlogs

  3. Mani's avatar Mani சொல்கிறார்:

    காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசியதற்காக,
    கன்னட வெறியர்கள் கர்நாடகாவில் “காலா” படத்தை திரையிடக்கூடாது
    என்று கலாட்டா செய்து வருகிறார்கள். கோர்ட் தடை விதிக்க மறுத்த பிறகு கூட, முதலமைச்சர் குமாரசாமி கன்னட வெறியர்களோடு சேர்ந்துகொண்டு
    படத்தை திரையிடக்கூடாது என்று கூறுகிறார்.

    ஆனால், தமிழ் நாட்டில், ஒரு அரசியல் தலைவர் கூட,
    இதை கண்டிக்கவில்லை. தமிழர் தமிழர் என்று
    பேசி வரும் தமிழர் கட்சிகள், இதை ரஜினி படமாக பார்க்காமல்,
    ஒரு தமிழ் படத்தை எதிர்த்து கன்னட வெறியர்கள் செய்யும் கலவரம் என்று
    கண்டிக்க வேண்டாமா ? எல்லாரும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறார்கள். வெட்கக்கேடு.

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இன்று காலை ரஜினி செய்தியாளர்களிடம் பேசியதை
    நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன்…

    பாகுபலி விவகாரத்தில் கன்னட வெறியர்களிடையே மன்னிப்பு கேட்ட –
    நமது மரத்’தமிழரைப் போல் அவர் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை.

    அவர் சொன்னது –
    ——————————

    // நான் எந்த தப்பும் செய்யவில்லை.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். இதை நான் கூறியதில் என்ன தப்பு இருக்கு என்று தெரியவில்லை.

    அணைக்கட்டுகள் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கணும் என்பது எனது கருத்து. இதற்காக காலா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறுவது சரியில்லை.//

    —————————

    தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து ரஜினி கூறிய கருத்துகள் நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக
    அவருக்கு, நம்மிடையே எதிர்ப்பும் இருக்கலாம். அது தமிழ்நாட்டு அரசியல்.

    ஆனால், காவிரி விவகாரத்தில், தமிழக உரிமையை வலியுறுத்தி
    பேசியதற்காக, ஒரு தமிழ்ப்படத்தை திரையிடுவதை கர்நாடகா
    தடுக்கிறது என்றால், அதை பார்த்துக் கொண்டு, தமிழக அரசியல்வாதிகள்
    ஒரு சிறிய எதிர்ப்பை கூட காட்டாமல் இருப்பது என்ன மானங்கெட்ட அரசியல் என்று எனக்கு புரியவில்லை.

    இதில் கர்நாடகாவிற்கு பலத்த எதிர்ப்பை தெரிவிக்காத
    நமது அரசியல்வாதிகளுக்கு தங்களை தமிழர் என்று கூறிக்கொள்ள
    எந்தவித தகுதியும் இல்லை….

    இவர்கள் – சூடு, சொரணை இல்லாத –
    தமிழ் பேசும் தலைவர்கள்… அவ்வளவே…

    .

    தமிழர்களின் தலைவர்கள் அல்ல.

    • Arun's avatar Arun சொல்கிறார்:

      Agreed.
      Apart from whether Rajini is a Tamilian or not,
      It is a movie from Tamil cinema industry and lot of Tamil technicians involved in this movie.

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! // காவிரி பிரச்னைக்காக காலா திரைப்படத்தை எதிர்ப்பது தீர்வாகாது: திருமாவளவன் ….. காவிரி பிரச்னைக்காக காலா திரைப்படத்தை எதிர்ப்பது தீர்வாகாது: திருமாவளவன் திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும், காவிரி பிரச்சினைக்காக காலாவை கர்நாடகாவில் தடை விதிப்பது ஏற்புடையது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.// https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-exam-should-be-banned-says-thirumavalavan-321730.html. …. இவர் பல கேள்விகளுக்கு பதில் கூறிய பாேது தெரிவித்தக் கருத்து இது……இவர் ஒருவர் தான் இங்குள்ள தலைவர்களில் இவ்வாறு கூறியவர் … இதற்கும் வேறு விதமான சாயம் பூசுகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள் என்பது தான் வேதனையான விஷயம் …!!!

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      செல்வராஜன் சார் – //இதற்கும் வேறு விதமான சாயம் பூசுகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள் // – முதல் படக் கதை இன்னொருவருக்குச் சொந்தம். அதில் படக்காட்சிகளை எடுத்து நஷ்டப்பட்டவருக்கும், பா.ரஞ்சித்துக்கும் கட்டப் பஞ்சாயத்து செய்தவர் திருமா. (நம்ம ஆள் ஒருத்தன் டைரக்டரா வெற்றிபெறுகிறான், அதனால் நீ ஒதுங்கிக்கோ என்றமாதிரியான கட்டப்பஞ்சாயத்து, நஷ்ட ஈடு வாங்கித்தராமல்). அதனால் திருமாவின் கருத்து பா.ரஞ்சித்துக்குச் சாமரம் வீசுவதற்கானது.

      இதில் எந்த வேதனைக்கும் இடமில்லை. நம்ம அரசியல்வாதிகளின் லட்சணம் இது.

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      வந்துட்டாருல்ல வேறு சாயம் பூசிக் கொண்டு.

      ///காவிரி விவகாரத்தில், தமிழக உரிமையை வலியுறுத்தி
      பேசியதற்காக, ஒரு தமிழ்ப்படத்தை திரையிடுவதை கர்நாடகா
      தடுக்கிறது என்றால், அதை பார்த்துக் கொண்டு, தமிழக அரசியல்வாதிகள்
      ஒரு சிறிய எதிர்ப்பை கூட காட்டாமல் இருப்பது என்ன மானங்கெட்ட அரசியல் என்று எனக்கு புரியவில்லை.///

      என்ற கேள்விக்கு தான் இதோ ஒரு தலைவர் பேசியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

      அதையும் கொச்சைப் படுத்தினால் அது தன் வக்கிர புத்தியை காண்பிப்பதாகுமே ஒழிய வேறு இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.