…
…
உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாதார மாநாடு… பிரதமருக்கு அதை துவக்கிவைத்து, தலைமையுரை வழங்கும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது… உலக மீடியாக்களின் பார்வை முழுவதும் இந்தியாவின் மீது குவிந்திருக்கிறது….
பிரதமர் தனது உரையில் பட்டியலை தொடர்கிறார் …
புதிய இந்தியா பிறந்திருக்கிறது….
30 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் தடவையாக இந்திய மக்கள் நம்பிக்கையுடன், ஒரு தனிக்கட்சிக்கு மெஜாரிடி கொடுத்து ஆட்சியமைக்க வாக்களித்திர்க்கிறார்கள்.
இந்தியா ஒரு அமைதிப்பூங்கா…
உறுதியான மாநில அரசுகள் – உங்களுக்கு உதவ காத்திருக்கின்றன…
உங்கள் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கின்றன…
உலக முதலீட்டாளர்களே – உங்கள் முதலீடுகளுடன்
இந்தியாவிற்கு வாருங்கள்… !!!
மாநாடு இன்னும் முடியவில்லை….உலக மீடியாக்களின் கவனம் இன்னமும் இந்தியாவின் மீது இருக்கிறது….

..

..

..

…
ஆனால், இங்கே என்ன நடக்கிறது….?
மிகச்சாதாரணமான ஒரு திரைப்படம் திரையிடப்படுவதை எதிர்த்து –
பஸ்களை, கார்களை கொளுத்துகிறார்கள்.
multiplex திரையரங்கங்கள் அமைந்துள்ள
மால்கள் தீ வைத்து, கடைகளிலிருந்து, விலையுயர்ந்த
எலெக்ட்ரானிக் பொருட்கள் கொள்ளையடிக்கப்டுகின்றன….
கலவரங்கள் நடக்கும் மாநிலங்கள் அனைத்தும் பாஜகவின்ஆளுகைக்கு உட்பட்ட மாநிலங்கள்… 8 முதல் 14 வயது வரையுள்ள பள்ளிச் சிறார்கள் செல்லும் பஸ், ஆளும் கட்சியைச் சேர்ந்த குண்டர்களால் தாக்கப்படுகிறது… குழந்தைகள் அஞ்சி, அலறி, சீட்டுகளுக்கு கீழே அடங்கிக் கொள்கிறார்கள்….
அத்தனை காட்சிகளும், தொலைக்காட்சிகளில் காட்டப்படுகின்றன…….
உலக மீடியாக்கள் இதற்கும் விளம்பரம் கொடுக்கின்றன…!!!
பொறுக்கிகளை, ரவுடிகளை வளர்க்கும் கட்சி, அவர்களின் அட்டகாசங்களை கண்டு கொள்ளாத மாநில அரசுகள் என்று உலக மீடியாக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன இவர்களின் செயல்கள்.
நூற்றுக்கு மேற்பட்ட 5 ஸ்டார் ஹோட்டல்களின் சிறப்பான chef களுடன்,
3000-க்கும் மேற்பட்ட மாநாட்டில் கலந்து கொண்ட VIP -க்களுக்கு இந்தியா சார்பின் அளிக்கப்பட்ட “டின்னர்” இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் எத்தகைய அபிப்பிராயத்தை உருவாக்கும்…???
karnik sena hooligans – videos –
Padmaavat Row: बच्चों पर हमले में कैसी वीरता? |
Brave Karni Sena Attacks School Buses
bhavnagar, gujarat –
surat and bhavnagar –
Ahmadabad – karni sena
Ahmadabad – gujarat
——————————————————————————————————-



என்ன சொல்வது! கொஞ்சமும் அறிவில்லாதவர்கள்!
இந்த நேரத்தில் ஆந்திர அரசுகள் செயல்படும் விதத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மாநிலம் இரண்டாக பிரிந்தவுடன் கலவரங்கள் வெடிக்கும் என பயந்தால் .. போட்டி போட்டு இரு அரசுகளும் எப்படி தன் மாநிலங்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றன! நோக்கியா மூடியவுடன் வேலை இழந்தவர்கள் அனைவரையும் ஸ்ரீ சிட்டி கட்டமைத்து கவர்ந்த விதம்.. என்ன செய்வோம் என்று தெளிவாக வெளி நாட்டு முதலீட்டாளர்களிடம் விளக்குவது என்று அசத்துகிறார்கள்! மோடி வெளிநாடு போய் கற்றுக்கொள்ள வேண்டாம். கொஞ்சம் இந்த அரசுகளை பார்த்து கற்றுக்கொள்ளலாம்!
தலைப்பு மிகவும் misleading – காங்கிரஸ்க்கும் இந்த கர்னி சேவா என்ற அமைப்புக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக நிறைய செய்திகள் உள்ளது – மேலும் ஹர்திக் படேல் மற்றும் சில தலைவர்கள் ( ?) , இந்த படத்தை எதிர்த்து போராட்டம் செய்து வருகிறார்கள். இதற்காக தான் , ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசாங்கம் தடை வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தை நாடியது .
மிகவும் ஏழை அல்லது நடுத்தர வர்க்கத்து , பெரும்பாலான இளைஞர்கள் , படித்து விட்டு அல்லது சரியாக படிக்காமல், எல்லாவிதமான கெட்ட பழக்கங்களுடன் , உலவி வருகிறார்கள் , சண்டையும் சர்ச்சையும் அவர்களை வெகுவாக ஈர்க்கின்றன , விசில் அடிப்பது, புகை பிடிப்பது, கொஞ்சம் நிறைய மது அருந்துவது , பெண்கள் பின் அலைவது … ஏதாவது சினிமா ஹால் சென்றால் , அங்குள்ள சீட்களை பிளேடால் கீறுவது , சுவற்றில் அநாவசியமான வார்த்தைகளை எழுதுவது …. இது மாதிரி நிறைய .
இதற்கும் மோடிக்கும் நீங்கள் முடிச்சு போட்டால் , உங்களின் உள் மனது குரோதத்தை காண்பிக்கிறது . பணக்கார இளைஞர்கள் இழைக்கும் தவறு வேறுவிதமானது , சூதாட்டம், ரேஸ் , கார் , பைக் ….
நீங்கள் நடுநிலையை கடை பிடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதுமே உண்டு . அடிப்படையில் நீங்கள் மிகவும் நல்லவர்.
https://www.vikatan.com/news/india/114484-coimbatore-helps-to-improve-gujarat-business-industry.html
// தலைப்பு மிகவும் misleading – காங்கிரஸ்க்கும் இந்த கர்னி சேவா என்ற அமைப்புக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக நிறைய செய்திகள் உள்ளது – //
தலைப்பில் எந்த தவறும் இல்லை. எந்தவித சந்தேகமும் இன்றி
அவவ்ர்கள் பாஜகவின் ஒரு பிரிவு குண்டர்கள் தான். இந்த கலவவரங்கள்
எல்லாம் பாஜக ஆளும் ராஜ்ஜியங்களில் மட்டுமே நடக்கின்றன.
இவர்கள் காங்கிரஸ்காரர்களாக அந்தந்த அரசாங்கங்கள் இந்த குண்டர்களை இப்படி கண்டுகொள்ளாமல் விட்டுவைக்குமா? போலீஸ் பின்னி எடுத்திருக்காதா ?
I don’t have a TV , but when I was watching you a few months ago , the speakers from Karni sena was very vocal , violent and some of them ( the chief was in particular very critical of Modi and BJP , If you want, please ask some body who watches TV discussions – like puthiyavan who gave his feedback . But I agree with you, these people have to be taken to task without any feelings , probably the state govt is not going all out offence , as this may spill over as a big riot . Please remember some time back the very same Hariyana, there was a jat agitation , fully sponsored by congress goons , which turned very violent.
சுந்தரராமன்,
பொறுக்கிகளும், ரவுடிகளும் – பாஜக காரர்களாக இருந்தாலென்ன; காங்கிரஸ்காரர்களாக இருந்தாலென்ன…?
நான் எந்த கட்சியையும் support பண்ண மாட்டேன். கலவரத்தை அடக்க வேண்டியது யார் பொறுப்பு…?
ஒன்று லத்திசார்ஜ் செய்து கூட்டத்தை விரட்ட வேண்டும்.
இல்லையேல், அரெஸ்ட் செய்து ஜெயிலில் போட வேண்டும்…
இரண்டையும் செய்ய வக்கில்லாமல் இருந்த அரசு யாருடைய பொறுப்பில் இருந்தது…?
அதற்கு காரணமென்ன…? ஒன்று கலவரம் செய்பவர்களை அடக்க GUTS இல்லை அல்லது, அரசில் இருப்பவர்களும் அதை ஆதரிக்கிறார்கள் –
அது தானே அர்த்தம்…?
இரண்டுமே தவறு தானே…?
இந்த தொணி , தலைப்பிலோ அல்லது கட்டுரையின் உள்ளேயோ இல்லை . ( அதாவது இரண்டு பேருமே குண்டர்கள் தான் என்று ) . நிச்சயம் கடுமையான நடவடிக்கை வேண்டும், இந்த கடுமை ஒரு பாடமாக அமைய வேண்டும் … பந்த், வேலை நிறுத்தம் , கல் எறிதல், பொது சொத்துக்கு நாசம் இது எல்லாம் வரம்புக்கு மீறி போகிறது , யார் கையில் ஆட்சியும் , போலீசும் இருக்கிறோதோ , அவர்கள் தான் இதை நிச்சயமாக செய்ய வேண்டும். செய்ய தவறியது இந்த அரசு ( அதனால் அவர்களும் கூட்டு என்று சொல்வது , வாதத்துக்கு சரியாக இருக்கலாம் …) ஒரு வேளை , துப்பாக்கி சூடு போன்ற பெரிய அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க , தடுக்க , முற்சித்திருக்கலாம் …
// 8 முதல் 14 வயது வரையுள்ள பள்ளிச் சிறார்கள் செல்லும் பஸ், ஆளும் கட்சியைச் சேர்ந்த குண்டர்களால் தாக்கப்படுகிறது… குழந்தைகள் அஞ்சி, அலறி, சீட்டுகளுக்கு கீழே அடங்கிக் கொள்கிறார்கள்….//
Is it only me remembering Dharmapuri bus burning while reading this?
‘நேற்று ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியையும் பார்த்தேன் கா.மை சார். எனக்குச் சந்தேகமில்லை, இந்த கர்னிக் சேவா தலைவரையும் கலவரத்தில் ஈடுபட்டவர்களையும் குண்டா சட்டத்தின் அந்த அந்த மானில பாஜக அரசுகள் உள்ளே தள்ளவேண்டும். எவ்வளவு அயோக்கியத்தனம், நம் அரசு அமைப்புகளின் மீது நம்பிக்கையின்மை இவர்களுக்கு. சென்சார், CERTIFICATE கொடுத்தாகிவிட்டால், அந்தப் படத்தைத் திரையிடுவதைத் தடுக்க முயலும் எவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கவேண்டும்.. அது விஸ்வரூபம், சண்டியர்/விருமாண்டி படங்களுக்கு கொடி பிடித்தவர்கள் ஆகட்டும், இந்த பத்மாவத் படத்துக்குக் கொடிபிடிப்பவர்கள் ஆகட்டும். இவர்கள் எல்லோரும் இந்தியாவில் இருக்க, அல்லது எந்த ஒரு நாட்டின் குடிமகனாகவும் இருக்கத் தகுதியற்றவர்கள்.
அர்னாப், இந்தத் தலைவருடன் நேரலையில் பேசி, உங்களை சிறையில் தள்ளவேண்டும் என்று தெளிவாகச் சொன்னது மிகவும் கவர்ந்தது. இவர்கள் ANTI SOCIAL ELEMENTS என்று திரும்பத் திரும்ப அவர் சொன்னார்.
அதுவும் தவிர பேருந்தை எரிப்பவர்கள், மரங்களை வெட்டுபவர்கள் போன்றவர்கள் சமுதாயத்துக்குக் கேடுவிளைவிப்பவர்கள். அவர்கள் கர்னிக் சேவாவில் இருந்தாலும், திமுக, அதிமுகவில் இருந்தாலும், பாமக வில் இருந்தாலும், விடுதலைச் சிறுத்தைகள் ஆனாலும், அவர்கள் எல்லோரையும் குண்டா சட்டத்தில் உள்ளே தள்ளவேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.
ஐயா
உங்களது பிரச்சினை பி.ஜெ.பி யா அல்லது நடைபெறும் வன்முறை சம்பவமா?
வன்முறை சம்பவங்கள் என்றென்றும் வேலையில்லாதவர்களால் நடத்த படுவது. அதற்க்கு கட்சி சாயம் பூசுவது,மற்றும் அரசியலாக்குவது என்றென்றும் விபரீதமானது. அதைத்தான் தாங்கள் இப்பொழுது செய்கிறீர்கள். இந்த செய்தி இந்த தலத்தில் நிச்சயம் பி.ஜெ.பி மற்றும் non-B.J.P யாக மட்டுமே பரிமளிக்கும். அதன் seriousness நிச்சயம் நீர்த்து போகும்.
/// பொறுக்கிகளை, ரவுடிகளை வளர்க்கும் கட்சி, அவர்களின் அட்டகாசங்களை கண்டு கொள்ளாத மாநில அரசுகள் என்று உலக மீடியாக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன இவர்களின் செயல்கள். ///
இந்த பொறுக்கிகள், ரவுடிகள், பயங்கரவாதிகள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர். எத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2014க்கு பிறகு நடந்த கலவரங்களில் அப்போது நடத்திய கொலை கொள்ளைகளுக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு கூவும் யாரும் பதில் சொல்ல வேண்டாம். தரவுகள் தரமுடியுமா?
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.
கொலை கொள்ளைகள் செய்பவர்களை மட்டும் பாவம் சேராது. அதை கண்டும் காணாது இருப்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் அதற்காக சப்பைகட்டு கட்டுபவர்களையும் சேரும்.
தெய்வம் நின்று கொள்ளும்.
வளர்ச்சியை கொண்டு வந்தார்களோ இல்லையோ இந்த மாதிரி கலவரங்களை கண்டும் காணாதது போல் இருப்பதால் நாட்டில் ஒரு பதட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள்.
காங்கிரஸ் காலங்களிலும் தானே கலவரங்கள் நடந்தது என்று வழக்கமாக திசைதிருப்புபவர்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும். இப்போது இருக்கின்றது போல் ஒரு பயம் கலந்த பதட்டமான சூழ்நிலை நிலவியதா என்று.
இன்னும் சொல்லப்போனால், ஒரு சில எதிர்வினைகளை தவிர, காங்கிரஸ்
காலத்திலும் இந்த சங்க்பரிவார்கள் தான் அதிகம் கலவரங்களில் ஈடுபட்டனர்.
ஆர்எஸ்எஸ் ஆகட்டும் அதன் அரசியல் அமைப்பான பாஜக மற்றும் அதன் உதிரி பிரிவுகளாகட்டும் கலவரங்கள் கொலை கொள்ளைகள் தான் அவர்களின் வழிமுறைகள்.
இவர்கள் இல்லாத இந்தியாவே நிம்மதியான நாடாக இருக்கும்.
அது அல்லாது வெளிநாட்டினரை என்னதான் கூவி அழைத்தாலும் இந்த வீடியோக்கள் அவர்களை வர தடுக்கும்.
என்ன செய்ய போகிறீர்கள்.
வழக்கம் போல் இது பி.ஜெ.பி யின் மீது கொண்ட கோபத்தால் எழுதப்பட்ட தலைப்பாக கருதுகிறேன். இங்கு யாரும் வன்முறையை விரும்புவதில்லை.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த west bengal ல் நடந்த வன்முறையை பற்றி K.M சார் ஏன் கட்டுரை எழுதவில்லை.
உங்கள் ஒரு சார்பு கொண்ட கட்டுரைகள் நியாயமற்றவை.
ஒரு வேலை அங்கு பி.ஜெ.பி ஆட்சி இருந்திருந்தால் வழக்கம் போல கொதித்திருப்பீர்கள் .என செய்வது அங்கு பி.ஜெ.பி இல்லை.
https://www.hindustantimes.com/kolkata/hindu-man-dies-in-west-bengal-violence-clashes-erupt-in-basirhat-again/story-O1j8VjMqPCdgSdCYQRyVVJ.html
மீடியாக்கள் மட்டுமே பதட்டத்தை உருவாக்குகிறார்கள். எங்கு பி.ஜெ.பி ஆட்சி இல்லையோ அங்கு வன்முறை இல்லை என்று சாதிக்கிறார்கள். எங்கு பி.ஜெ.பி ஆட்சி செய்கிறதோ அங்கு வன்முறை தாண்டவம் என்று கூவுகிறார்கள்.
இந்தியாவில் எல்லா இடத்திலும் வழக்கம் போல் வன்முறை நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மீடியாக்கள் அதை வெளியிடுவதற்கு முன் அங்கு பி.ஜெ.பி ஆட்சியா இல்லை காங்கிரஸ் ஆட்சியா என்று செக் செய்து கொண்டு பிறகு மற்றுமே செய்தியை வெளியிடுகிறது.
Its a shame on media.They look dangerous for the integrity of this country.
கலவரத்தை தூண்டி அதன் மூலம் குளிர் காய நினைப்பதே RSS/BJP யின் வேலை. நேற்றும் கடந்த வருடமும் RSS தலைவர் கேரளாவில் கொடியேற்ற செல்வது எதற்காக ? அங்கு ஒரு அடித்தளத்தை உருவாக்கத்தான் இந்த மேனக்கெடல்.இன்று இல்லாவிட்டாலும் என்றாவது இது ஒரு நாள் ஏதேனும் குழப்பத்தில் கலவரம் ஏற்படுத்தத்தான் இந்த திட்டமெல்லாம். எங்கு கால் ஊன்ற வேண்டுமோ அங்கே கலவரமும் குழப்பமும் உண்டாக்குவது அவர்களது திட்டத்தின் முதல் படி.மேற்கு வங்கத்தில் நடந்ததும் இப்படித்தான், Photo shop வேலை செய்து அசிங்க பட்டதும் அங்கே தான், தமிழ் நாட்டில் ஹச். ராஜா மாதிரியான ஆட்கள் காட்டு கூச்சல் போடுவதும் இதற்காகத்தான். ட்விட்டர் கருத்து சொல்லுபவருக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா? மற்ற நாடுகளில் கலவரம் ஏற்பட்டால் கருத்து போடுகிறாரே, சொந்தநாட்டு மக்கள் அதுவும் பிஞ்சு குழந்தைகள் கண்ணுக்கு தெரியவில்லையா ? உங்களுக்கும் கண்ணில்லையா ? இரக்கம் கொள்ளும் நெஞ்சமும் இல்லையா ? எல்லாவற்றுக்கும் mediaவை குற்றம் சொல்லி தப்ப வேண்டாம்.
Sir , how much so ever bad you tried to portray , tourists nos are increasing , foreign investments are increasing .India is a beautiful country and it will remain . It is improving on every front.
There was a action when the so called farmers ( in MP ) went on to stop the highway buses and tried to torch it / hurled stones . police shooting – 5 people got killed . But press and opposition took a different view point , unlike yours. Where did the RSS indulged in riot ? killing ? arson ? . You just makes wild allegation .If you don’t like to live in India – you have a choice , but don’t attribute everything on RSS.
சுந்தரராமன்,
// .If you don’t like to live in India – you have a choice , but don’t attribute everything on RSS.//
உங்களின் இந்த வார்த்தைகளுக்காக, நான் உங்களை, சுயமாக யோசிக்கத்தெரியாத ஒரு அடிமுட்டாள், மதவெறி பிடித்த மனிதர், கொலைகாரர்களைக் கொண்ட இயக்கத்தை சேர்ந்தவர் என்றெல்லாம் நான் சொன்னால், அதில் நூற்றுக்கு நூறு நியாயம் இருக்கும்….
இருந்தாலும் அப்படியெல்லாம் சொல்லாமல் கேட்கிறேன்…
உங்களின் மேற்படி statement -க்கு என்ன அர்த்தம்…?
ஆர்.எஸ்.எஸ்.ஐ ஏற்றுக்கொள்… இல்லையேல் இந்த நாட்டை விட்டு வெளியேறு என்று சொல்கிறீர்களா…?
எந்த திமிர் உங்களை இப்படி எழுத வைக்கிறது…?
நான் இந்த மண்ணில் பிறந்தவன்…. ஒரு சுதந்திர போராட்ட வீரரின் மகன் …இந்த மண்ணின் சுதந்திரத்திற்காக சிறை சென்ற குடும்பம் எங்களுடையது…
என்னை வெளியேறு என்று சொல்ல எந்த ஆர்.எஸ்.எஸ். அடிமைக்கும் உரிமை இல்லை.
இனியும் நீங்கள் இந்த வலைத்தளத்தில் எழுத வேண்டுமென்று நினைத்தால் – என்னை நோக்கி அந்த வார்த்தையை சொன்னதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேளுங்கள். இல்லையேல், காந்தியை கொன்ற கொலைகார கூட்டத்தில் நீங்களும் ஒருவர் என்றே கருத வேண்டியிருக்கும்.
.
-காவிரிமைந்தன்
கே.எம்.சார்,
ஒரு வேண்டுகோள். இந்த மாதிரி வெறியர்களை எல்லாம் இங்கே எழுத
அனுமதிக்காதீர்கள். இந்த ஆளுக்கு எத்தனை திமிர் இருந்தால் இப்படி
எழுதுவார்? இவனுங்களை எல்லாம் மதித்து நீங்கள் பதில் எழுதிக்கொண்டிருப்பதால் தான் இப்படி வெறி பிடித்து எழுதுகிறார்.
இவன் மன்னிப்பே கேட்டுக்கொண்டால் கூட இனி இங்கே எழுத
அனுமதிக்காதீர்கள்.
சுந்தர்ராமன் – உங்கள் கடைசி இரண்டு வரிகள், “If you don’t….” நல்ல எண்ணத்தில் எழுதப்பட்டதல்ல. உங்களுக்கு நிச்சயம் mental maturity வரவில்லை. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இங்கு வாழ, சமூக மேன்மைக்கு உழைக்க, எண்ணங்களை எழுத, பேச முழு உரிமை இருக்கிறது. கர்னா சேவாவின் செயல்களை ஆதரிக்கும் எவரும் பயங்கரவாத்த்தைப் பற்றிப் பேச தகுதியில்லை. எலக்ஷன்ல காலம் வருகிறது என்பதால் மென்மையாக பாஜக அரசுகள் செயல்பட்டால், இஸ்லாமிய பயங்கரவாத்த்தின்மீது காங்கிரஸ் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று எழுதுவதில் அர்த்தமே இருக்காது.
நீங்கள் உங்கள் கருத்தைவிட்டு விலகி, தீவிரவாத்த்தை ஆதரிக்கிறீர்கள். “உங்களுக்கு இஷ்டமில்லைனா இந்தியாவில் இருக்கவேண்டாம்” என எழுதுவதற்கும், எதிர்கருத்தைச் சொன்னாலே, “நீ பாகிஸ்தானுக்குப் போ” என்று arroganceஆகப் பேசுவதற்கும் என்ன வித்தியாசம்? I am dissatisfied and pained by your arrogance. காமை சார் நேரடியாக பிரதமரைக் குற்றம் சுமத்தவில்லை. If appropriate measures are not taken by STATE BJP GOVTS., மத்திய பாஜக அரசு அந்தப் பழியை ஏற்கத்தான் வேண்டும்.
sundarraman suyarooobam came out phatak… ! cant hide it for long…
Sundararaman
You are a Distilled………… Slave of RSS bosses.
Get out of this Blog. Never show your…….face here
அசிங்கமான மனிதனுக்கு அழகுராஜா என்று பெயர் வைத்தது போல்
உன் மனம் இவ்வளவு அசிங்கமாக இருக்குமென்று தெரியாமல்
உன்னைப்பெற்றவர்கள் சுந்தர’ராமன் என்று பெயர் வைத்து விட்டர்கள் . முதலில் உன் பெயரை மாற்றிக்கொள் …………….. பிடித்தவனே.
கே.எம்.சாரைப்பற்றி உனக்கு என்ன தெரியும் ? அவரை நாட்டை விட்டு
வெளியேறச்சொல்லும் அளவிற்கு அடிமையாகி விட்டாயா
……….. பரிவாரத்திற்கு ?
இங்கு பா.ஜ.க.விற்கு வக்காலத்து வாங்கும் சிலர் மேற்கு வங்கத்தில் நடக்கவில்லையா என்று கேட்கிறார்கள், ஒரு மாநிலத்தில் நடப்பதை இவர்கள் மேற்கோள் காட்டுவார்களாம் ஆனால் மூன்று மாநிலங்களில் நடப்பதை சுட்டிக் காட்டினால் குற்றம் சொல்வார்களாம். கலவரங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் மூன்று மாநிலங்களுமே பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் போது இந்த கலவரங்களுக்கும் பா.ஜ.க.விற்கும் சம்மந்தமில்லை என்று எப்படி இவர்களால் மழுப்ப முடிகிறது
பாபர் மசூதி இடிப்பு, முராதாபாத் கலவரங்கள், முஸாபர் நகர் கலவரங்கள், குஜராத் வன்முறை, பாகல்பூர் கலவரங்கள், ஒரிசாவில் ஒரு பாதிரியாரும் அவர் மகனும் உயிரோடு எரித்தது, அந்த காலகட்டத்தில் செவிலியர்கள் கற்பழித்து கொலை இன்னும் பல கலவரங்கள் ஞாபகத்துக்கு வரவில்லை.
இதையெல்லாம் யார் ஐயா செய்தது.
பயங்கரவாத ஆர்எஸ்எஸும் அதன் துணை அமைப்புகளும் இல்லையா?
தலைப்புக்கு சம்பந்தம் இல்லை. ஆனால்….. எந்நாடே…..!
//சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார மாநாடு நேற்று நடைபெற்றது. 600 கோடி பேர் தமக்கு வாக்களித்ததாக டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.//
இவர்கள் பொய் பிரச்சாரம் இந்தியாவில் தான் என்றால் அத்தனை வெளிநாட்டு தலைவர்கள் முன்னாலுமா?
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின் போது சுமார் 130 கோடி இருக்கலாம்.
உலக மக்கள் தொகை 600 கோடி இருக்கலாம். உலக தலைவர்கள் முன்னால் எந்நாடு இப்படியா தலை குனியனும்.