மோடிஜி அரசை கவிழ்க்க சு.சுவாமி செய்யும் முயற்சிகள்…..!!!



இன்று ஒருவர் இந்திய அரசின் உச்ச பதவியில் இருப்பவர்… மற்றொருவர் அவரது அமைச்சரவையில் ஒரு மூத்த அமைச்சர் – என்கிற அளவிற்கே அவர்களது வெளித்தோற்றம் காட்டினாலும் –

அவர்கள் இருவரும் 25 வருடங்களுக்கு மேலான உயிர்த் தோழர்கள், பிரிக்க முடியாத நண்பர்கள்; 1990 -களில் டெல்லியின் தெருக்களில் ஒருவரின் ஸ்கூட்டரில் பின் சீட்டில் மற்றொருவர் அமர இருவரும் வலம் வந்ததை மிகச்சிலரே அறிவர். ஏனெனில், இரண்டு பேர் மீதும் புகழின் வெளிச்சம் அதிகம் படாத காலம் அது.

பின்னர் ஒருவர் குஜராத் மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட, மற்றொருவர் டெல்லியில் தொடர நேரிட்டது. இருந்தாலும் இந்த பிரிவு அவர்களின் நட்பை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

குஜராத் மாநில தேர்தல் பிரச்சாரங்களுக்கு பொறுப்பாளராக டெல்லிக்காரர் நியமிக்கப்பட்டார். இருவரும் இணைந்து கட்சிக்கு குஜராத்தில் பாஜகவுக்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டித் தந்தனர்.
விளைவு, டெல்லிக்காரர் குஜராத்திலிருந்தே ராஜ்ய சபாவிற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்… தொடர்ந்து பல தடவைகள்…!!!

பின்னர், ஒருவர் குஜராத் முதல்வராக பொறுப்பேற்க, மற்றவர் டெல்லி அரசியலில் தன் தீவிர பணியைத் தொடர்ந்தார்…. சொல்லப்படுபவர்கள் யார் என்பதை படிப்பவர் நன்கு அறிவர்.

——————

2002 – குஜராத் கலவரங்களின் விளைவாக, திரு.ந.மோ.வின் நிலைக்கு பங்கம் ஏற்பட, அதிலிருந்து அவர் வெளிவர, பின்னவர் பெரிதும் காரணமாக இருந்தார். சட்டபூர்வமாக பல வழக்குகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயங்கள் ஏற்பட்டபோது பின்னவர் முனைந்து நின்று உதவினார். இந்த கால கட்டங்களில், திரு.ந.மோ.வுடன், அவரது வலது கரமாக இருந்த மற்றொரு குஜராத்தியரான திரு.அமீத் ஷாவும் சேர்ந்து கொண்டார். இருவர் மீதும் ஏகப்பட்ட
கிரிமினல் வழக்குகள்…. அமீத் ஷா குஜராத்துக்குள்ளேயே நுழையக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்
தடை விதிக்கும் அளவுக்கு சீரியசான வழக்குகள்…..!

தீவிரமான சட்ட சிக்கல்களிலிருந்து வெளிவர, திரு.அ.ஜெ.யின் அபாரமான சட்டமூளையும், அணுகுமுறையும், அவர் வகுத்த திட்டங்களும் பெரும் உதவியாக இருந்தன. இந்த 3 பேரும் சேர்ந்து மாதத்தில் பல நாட்கள் டெல்லியில் சந்தித்து வழக்குகளை முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்….. டெல்லிக்காரரின் ஆழ்ந்த ஈடுபாடும், முயற்சிகளுமே
மற்ற இருவரும் சட்ட, நீதிமன்ற சிக்கல்களிலிருந்து வெளிவர உதவின.


இருவராக இருந்த இந்த நட்பு வளையம் இதன் மூலம் மூவரை கொண்டதாக உருவானது…. ஆக, பல வருடங்களாக தொடர்ந்து இணைந்து, பிணைந்து இருந்த நட்புக்கூட்டணி இது…. இன்று புதிதாகபார்ப்பவர்களுக்கு, அவர்களிடையே இப்போது உள்ள கட்சி, மற்றும் அரசு சம்பந்தப்பட்ட வெளிப்படையான உறவு மட்டுமே தெரியலாம்…

ஆனால், பிரிக்க முடியாத பந்தத்தால் கட்டுப்பட்டவர்கள் இந்த 3 பேரும். கட்சியிலும், ஆட்சியிலும் – யார் எந்த பதவியை வகித்தாலும், இதில் மற்ற இருவர் மீதும் அதிக செல்வாக்குடையவர் டெல்லிக்காரர். எனவே, மூன்றாவது நபர் எவரும் உள்ளே புகுந்து இவர்களைப் பிரிப்பது மிகவும் கடினம். மேலும், இந்த மூவரணியிலிருந்து யாராவது ஒருவர்
பிரிந்தாலும், மூவருக்குமே அது பலத்த பாதகங்களை விளைவிக்கும் என்பதால், அதற்கான வாய்ப்பே இல்லை
என்று சொல்லலாம்.

———————–

இன்று அரசுக்கு பிரதமர் தலைமை வகித்தாலும், அமைச்சர்கள் அனைவரையும் வழி நடத்துபவர் ( micro management …) திரு.அ.ஜெ. தான் என்று கூறப்படுகிறது. உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்களைத் தவிர, மற்ற அனைத்து அமைச்சர்களும் – திரு.அ.ஜெ.வின் ஆலோசனையை பெற்றே செயல்படுவதாகத் தெரிகிறது.

மத்திய அரசு நிர்வாகங்களில், பல்வேறு துறைகளில், ஜூனியர் அமைச்சர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு தனக்கு அனுபவம், ஆற்றல், பொறுமை – போதாது என்பதால் திரு.ந.மோ.வே செய்துள்ள ஏற்பாடு இது என்றும் தெரிகிறது. முக்கியமான எந்த விஷயங்களிலும், தன்னிடம் வருவதற்கு முன்னர், திரு.அ.ஜெ.விடம் கலந்தாலோசிக்கும்படி அவரே சொல்லி இருக்கிறாராம்.

திருமதி சுஷ்மா உள்ளூர தன் தலைமையை ஏற்க விரும்பாதவர் என்பதாலும்,
திரு.ரா.நா.சி. தன்னிச்சையாக செயல்படக்கூடியவர் என்பதாலும்,
பிரதமருக்கு திரு.அ.ஜெ. தவிர்க்க முடியாதவராக இருக்கிறார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தாக்குதலை, அறிவுபூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் எதிர்கொள்ள, திரு.அ.ஜெ.யின் உதவி பிரதமருக்கு அவசியம் தேவைப்படுகிறது. பதவியேற்று மூன்றரை ஆண்டுகள் ஆகி விட்டாலும், இன்னமும் மீடியாவை நேரடியாக சந்தித்து, எதிர்கொள்ள திரு.ந.மோ.வால் இயலவில்லை. அந்தக் குறையை திரு.அ.ஜெ. தான் சமன்
செய்கிறார். மேலும் இவர்களிடையே நிலவும் நம்பிக்கையும், நட்புணர்வும் உணர்வுபூர்வமானது… அனுபவ பூர்வமானது….

வெளியுறவுத் தொடர்புகள், மாநில முதல்வர்களுடனான தொடர்புகள், ஒருங்கிணைப்பு, தேர்தல் முனைப்பாடுகள் ஆகியவற்றில் திரு.ந.மோ. தன் புத்திசாலித்தனத்தாலும், பேச்சுத்திறனாலும் தனித்திறமையுடன் செயல்பட முடிகிறது –

ஆனால், அரசு நிர்வாகத்தில் மைக்ரோ மேனேஜ்மென்ட் -க்கு அவர் முற்றிலுமாக நம்பியிருப்பது திரு.அ.ஜெ.யை தான்….

சரி இதையெல்லாம் இங்கு ஏன்…?
இந்த இடுகையில் எழுதியிருக்கும் பல சங்கதிகளுக்கெல்லாம் ஆதாரமாக நான் எந்த லிங்க்கையும் காட்ட மாட்டேன்.

நான் பலவேறு வழிகளிலும் சேகரித்த / எனக்கு தெரிய வந்த, நிஜத்திற்கு மிக அருகாமையில் உள்ள விஷயங்கள் என்று நான் நம்புவதைத்தான் இங்கு எழுதுகிறேன். இதை எந்த அளவிற்கு ஏற்பது என்பது படிப்பவர்களின் விருப்பம்…

அண்மைக்காலத்தில், திருவாளர் சு.சுவாமி. திரு.ந.மோ. தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாக பாஜகவுக்கு உள்ளேயே ஒரு தீவிரமான வதந்தி பரவி வருகிறது.

திரு.அ.ஜெ.யை அகற்றி விட்டு, நிதியமைச்சர் பொறுப்பை தான் அடைய கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து அவர் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காததால்,

பிரதமர் அவரது கோரிக்கைக்கு கொஞ்சம் கூட அசைந்து கொடுப்பதாக தெரியாததால், சு.சுவாமி மிகவும் அதிருப்தி, விரக்தி, ஆவேசத்தில் இருப்பதாகவும் – ஆர்.எஸ்.எஸ்.-ல் திரு.ந.மோ.வுக்கு எதிரான உணர்வு உள்ளவர்களை ஒன்று திரட்ட முயற்சி செய்வதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த மூன்றரை ஆண்டுகளாகவே, திரு.சு.சுவாமி, நிதியமைச்சகம், வருமான வரி இலாகா, அமலாக்கப்பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகளைப்பற்றி கடுமையாக குறைகூறி வெளிப்படையாக பிரதமருக்கு பல கடிதங்கள் எழுதி, அவற்றை வெளியிட்டும் வந்தது அனைவரும் அறிந்ததே…

தற்போது முதல் தடவையாக, பிரதமரின் மீதும் மறைமுகமாக சில அதிருப்திகளை தெரிவித்து வருகிறார்… பிரதமருக்கு சங்கடமூட்டும் விதத்தில் சில சங்கதிகளை கிளப்பி விடுகிறார்.

இந்த மாற்றங்களெல்லாம் கடந்த 10-15 நாட்களுக்குள் உருவானவை…

முதலில் – குஜராத் தேர்தலில் கட்சியின் செயல்பாடு எதிர்பார்த்தபடி இல்லை… மிகவும் குறைந்த எண்ணிக்கை வித்தியாசத்திலேயே ஆட்சியை பிடிக்க முடிந்திருக்கிறது… இதற்கு காரணமானவர்களை கட்சி அடையாளம் கண்டு அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்….

அடுத்து – அரசியல் சட்டவிதி 49- ன் கீழ், இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த மத்தியிலுள்ள பாஜக அரசின் சார்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

பிறகு – கட்சியின் உறுப்பினர்கள் யாரும் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருக்கக்கூடாது என்று கட்சியின் அடிப்படை கோட்பாடுகளில் புதிய விதி ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்றார். ( அவருக்குப் பிடிக்காத அமைச்சர்…..பார்ட்டிகளில் மதுவருந்தும் வழக்கம் உடையவர்…)

அடுத்து, கட்சியின் தலைவர்கள் மேற்கத்திய உடை அணிவதை முற்றிலுமாக தவிர்த்து, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உடைகளை தான் அணிய வேண்டும் என்று விதிகள் கொண்டு வரப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அண்மையில், தான் 2013-ல் வெளியிட்டிருந்த ஒரு ட்விட்டர் செய்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், 2017-ல் ஒரு டாலர் – ஒரு ரூபாய்க்கு சமமாக இருக்கும் என்று தெரிவித்திருந்ததை நினைவூட்டி இருக்கிறார்….

பாஜக ஆட்சிக்கு வந்தால் ( தான் நிதியமைச்சராக பொறுப்பேற்று…!!!) – வருமான வரியை முற்றிலுமாக ஒழிப்போம் என்று கூறி இருந்ததையும் நினைவூட்டி இருக்கிறார்.

கடைசியாக, திரு.ந.மோ. குஜராத் முதலமைச்சராக பதவி வகித்தபோது, அஹமதாபாத் நகரத்தின் பெயரை அதன் புராதன பெயரான “கர்ணாவதி” என்று மாற்றப்பட வேண்டும் என்று கூறியிருந்ததை நினைவுபடுத்தி –

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் இந்த பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருப்பது ஏன் என்று வினவி இருக்கிறார்….

ஆக மொத்தம், கட்சிக்குள்ளேயும், ஆட்சியிலும் அதிருப்தியாளர்களை உருவாக்கவும், அவர்களை ஒரு அணிக்குள் கொண்டு வரவும் சு.சுவாமி முயற்சி செய்வது தெரிகிறது. பாஜக உள்வட்டத்தில் இருப்பவர்கள் இதை அறிவார்கள்….
ஆர்.எஸ்.எஸ்.-ல் சு.சுவாமிக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தபோதும், இவரது விருப்பப்படி எல்லாம் செயல்படக்கூடிய நிலையில் ஆர்.எஸ்.எஸ்.தலைமை இல்லை என்பதால் –

இவரது முயற்சிகளுக்கு இப்போதைக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு விளைவுகள் எதுவும் ஏற்படாது என்றாலும் கூட, இதுவரை திரு.ந.மோ.வுக்கு எதிராக எந்தவித குரலும் எழாத நிலையில், இனி சில சலப்புகளை எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

பாஜக தலைமை இவரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுமேயானால், ஆட்சியை சங்கடத்திற்கு உள்ளாக்கக்கூடிய பல விஷயங்களை இவரால் வெளியிட முடியும் ….

மோடிஜியின் ஆட்சிக்கு சீரியசான பாதிப்பு எதையும் சு.சுவாமியால் ஏற்படுத்த இயலாது என்றாலும், சு.சுவாமி மேலும் மேலும் பொறுமை இழப்பது, பாஜகவுக்கு பல சங்கடங்களை ஏற்படுத்தக்கூடும்….!!!

ஆட்சிக்கு அசௌகரியமான சில செய்திகள் பொதுவெளிக்கு வரக்கூடும்…!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to மோடிஜி அரசை கவிழ்க்க சு.சுவாமி செய்யும் முயற்சிகள்…..!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    தெரியாத செய்திகள். பின்னணி இல்லாமல் எப்படி அ.ஜெ அவர்கள் முன்னணியில் இருக்கிறார் (ராஜ்ஜியசபா மூலம்) என்று அப்போதே தோன்றியது.

    சொல்லமுடியாது, ஒரு சமயத்தில், சு.சுவாமி, காங்கிரஸோடு இணைந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ் என இரண்டையும் எதிர்க்கலாம். He is capable of turning any side (நல்ல பாம்பு எந்தத் திசையை நோக்கித் திரும்பப்போகிறது, சீறப்போகிறது என்பதைக் கணிப்பது கொஞ்சம் கஷ்டம்)

  2. vijay's avatar vijay சொல்கிறார்:

    Vow. Lot of hitherto Unknown details.
    I am following you for quite a long time and I am sure what you say can’t be false.
    As you say S.Swamy is capable of blackmailing bjp govt.
    If he decides to take on, we can see lot of things coming out.

  3. BVS's avatar BVS சொல்கிறார்:

    // இந்த இடுகையில் எழுதியிருக்கும் பல சங்கதிகளுக்கெல்லாம் ஆதாரமாக நான் எந்த லிங்க்கையும் காட்ட மாட்டேன்.

    நான் பலவேறு வழிகளிலும் சேகரித்த / எனக்கு தெரிய வந்த, நிஜத்திற்கு மிக அருகாமையில் உள்ள விஷயங்கள் என்று நான் நம்புவதைத்தான் இங்கு எழுதுகிறேன். இதை எந்த அளவிற்கு ஏற்பது என்பது படிப்பவர்களின் விருப்பம்…//

    I appreciate your these words.
    Mr.Swamy can never be true to anyone.
    He will not hesitate to do anything for his own advantages.
    But what I feel is that unless he is sure of mustering enough support, he may not revolt openly.

  4. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    // The Suave Arun Jaitley, an Old Friend of the New Prime Minister
    People | Written by Devesh Kumar | Updated: May 27, 2014 16:18 IST // https://www.ndtv.com/people/the-suave-arun-jaitley-an-old-friend-of-the-new-prime-minister-564022 …. // Decoding the Jaitley-Swamy hatred: Is this all about who has Narendra Modi?
    Perhaps Swamy simply wants Modi all to himself. // https://www.thenewsminute.com/article/decoding-jaitley-swamy-hatred-all-about-who-has-narendra-modi-45425 ….. உட்கட்சி பூசல்கள் இருக்கத்தான் செய்யும் .. ஓரளவு தமிழில் திரு . கா. மை .. அப்பப்ப இதுபற்றியெல்லாம் – பதிவிடுகிறார் … ஆனால் ஏகப்பட்ட விவரங்கள் மேலே உள்ளது போல் கொட்டிக் கிடக்குது —

  5. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    //மத்திய அரசு நிர்வாகங்களில், பல்வேறு துறைகளில், ஜூனியர் அமைச்சர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு தனக்கு அனுபவம், ஆற்றல், பொறுமை – போதாது என்பதால்….. //

    எவ்வளவு பெரிய உண்மையை போட்டு உடைத்து இருக்கிறீர்கள். அவர் அடிவருடிகள் இதைப் படித்து விட்டு தனிமையில் கதறி அழுதாலும் ஆச்சரியமில்லை. ஆக, தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு பிரதமர்.

    விவாதம் என்று வந்துவிட்டால் தன் இயலாமை வெளிப்பட்டுவிடும் என்பதால்….. இல்லை ஒரு தடவை அது தெரிய வந்தது.

    பிரதமர் ஆவதற்கு முன்னால் கரன் தாப்பரிடம் பேட்டி கொடுக்கும் போது அவரின் கேள்விகளை எதிர் கொள்ளும் திரானியற்று மிரண்டு நாக்கு வரண்டு தண்ணீர் வாங்கி குடித்து விட்டு பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறிய சம்பவம் நடந்திருக்கு.

    இவர் மற்றவர்கள் போல் சாதாரணர் மட்டுமல்ல சாதாரண மற்றவர்களைவிட பயங்கரமானவரும் கூட என்பது தான் இவரின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

    அருன் ஜெட்லி மாதிரி கிரிமினல் வழக்கறிஞர்கள் நீதி அரசர்கள் உதவியுடன் கொடுப்பதை கொடுத்து பெறுவதை பெற்றுவிட்டதால் மட்டும் இவர் சரியானவர் அல்ல.

    கொடுப்பதை கொடுத்து பெறுவதை பெற்ற நீதி அரசர் கேரள கவர்னர் நல்ல உதாரணம்.

    இவரை இவரின் அடிவருடிகள் ஊதிப்பெருக்கி காணக் கிடைக்காதவர் போல் கூத்தடிப்பது தான் சகிக்க முடியவில்லை.

    கடவுள் சிலருக்கு கொடுப்பான் பிறகு கை விட்டு விடுவான் என்பது இவர் விசயத்தில் கூடிய சீக்கிரம் நடக்கத்தான் போகிறது. அதற்கு சுசு மாதிரி ஆட்கள் எல்லாம் தேவையே இல்லை. அவரே போதும். குஜராத் தேர்தலில் தன்னுடைய தரத்தை வெளிப்படுத்தினாரே அது சிறந்த உதாரணம்.

    மேலும், சில மாதங்களுக்கு முன்பு காமை ஐயா இவரை ஹிட்லருடன் ஒப்பிட்டு இட்ட இடுகையை படித்தால் இன்னும் எவ்வளவு பொருந்துகிறது என்பது தெரியவரும்.

    இன்னும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள கடவுள் அவகாசம் கொடுத்து இருக்கிறார் என்பதை இவரும் இவர் அடிவருடிகளும் உணர்ந்தால் நல்லது.

  6. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    இதெல்லாம் இருக்கட்டும் — //
    ‘பா.ஜ.க தலைமைக்கு எடப்பாடி பழனிசாமியின் பார்ட்டி ஃபண்ட்!’ – போட்டு உடைக்கும் தங்க.தமிழ்ச்செல்வன் // https://www.vikatan.com/news/tamilnadu/112034-edappadi-palanisamy-gives-party-fund-to-bjp-leadership-says-thanga-tamilselvan.html#vuukle_div

    இதில் அவர் கூறுகிறார் … // உ.பி , குஜராத் தேர்தல் செலவுகளுக்காக ஆயிரம் கோடி ரூபாயை எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கொடுத்திருக்கின்றனர். பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் மாதம் ஆயிரம் கோடி ரூபாயை இவர்கள் கப்பம் கட்டுகின்றனர். மாநில அரசில் செய்யும் ஊழல் பணத்தில் பாதிப் பணம் பா.ஜ.க தலைமைக்குச் செல்கிறது. இரட்டை இலையை இவர்களுக்குக் கொடுத்தது; சின்னம்மா குடும்பத்தின் மீது வருமான வரித்துறை சோதனையை ஏவிவிடுவது என எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே பா.ஜ.க அரசு நடந்துகொள்கிறது. இந்த ஆட்சிக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், மாதம்தோறும் மிகச் சரியாக கப்பம் கட்டுவதுதான்’. // —– இது எப்படியிருக்கு — ! என்ன ” எதிர் வினை ” – வரப்போகிறதோ பா. ஜ .க . பக்கம் இருந்து … ?

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      கூட்டுக் களவானிகள். இவர்கள் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துகிறார்களாம்.

      நான் வீட்டுக்குள்ளே வரமாட்டேன், நீ தூக்கி போடு கொண்டு போய்விடுகிறேன் என்று சொல்பவனும் களவானி தானே.

      இவர்கள் ஆபத்தானவர்கள்.

  7. Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

    Elango Sir , PM Modi was three times CM, if there were corruption – how come no one case in any court, no inquiry, no action – u mean to say , when he was a CM he was controlling the judiciary also .(I think there was a judge who was Digvijay’s brother / or Himachal CM’s brother -in Gujarat highcourt.)

    KM sir diplomatically said, Modi needed some one in Delhi to negotiate with the powerful Luyten’s gang in Delhi . It does not mean – he doesn’t know how to to speak or negotiate – he has displayed his skills all over the world , including in side the white house.
    Congress tried all the tricks under the sun to implicate Modi , including the case for Ishart Jehan’s encounter , stalking of a women, encounter cases ….. he came out successfully, which you people are not able to digest .

    you are still talking of Karan thapar show – karan himself is out of circulation now . He was a pakisthan sympathizer and Sonia’s pet ….

    It is true that S.Swamy has a problem with AJ – which will get resolved one way or the other. But AJ did cause lots of damage like his friend SG in supreme court , and other lawyer friends – 2 G was a name spoiler for BJP, however TN people , strongly believes that Kanimozi and Raja are culprits – one of the reason for RK nagar – results ( deposit gone ) – also closeness by Veeramani and Subaveera pandiayan contributed for their loss.

    • Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

      opppsss. Arivalagu sir …not Elango

    • Sanmath AK's avatar Sanmath AK சொல்கிறார்:

      Veeramani and Subveera played a role in DMk’s poor show in RK Nagar election??…..How have you started and where have you ended ?….. It shows you inner hatred towards whom !!!…..But I like your presentation.

      • Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

        Sir I have no plans as such when I type a reply , that is why I get mixed up with names also. In this blog only, I have already said , I hope and wish , Veeramani and Subaveera etc plays a bigger role with DMK .. and they didn’t fail my expectation. It is perfectly OK to be an atheist, but you have to be fair – not run down a particular religion, which MK and DK did so often.

        And you say I have inner hatred , if you have said , I have feelings of hurt – would have been perfect . Now , with the time, I don’t really get hurt for these kind of blabbering ( DK or MK) …

  8. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    Where is Elango?

    What have you done for Sundaraman.

    ஏன் இப்படி மிரண்டு போய் கெடக்கார்….?

    பாவம்.

  9. Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

    அறிவழகு ஐயா , இதில் மிரள்வதற்கு என்ன இருக்கிறது , நீங்கள் சில விஷயங்கள் சொல்கிறீர்கள், நானும் என்னுடைய பங்கிற்கு கொஞ்சம் சொல்கிறேன் … மற்றபடி உங்கள் பயணம் உங்கள் வழி , என்னுடைய பயணம் என் வழி …

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      அதில்லை man. இளங்கோ உங்கள என்ன தான் செய்தார். அவரத்தான் காணோம். நீராவது சொல்லும்.

  10. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    திரு. இளங்கோ,

    நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் .

    சுந்தர ராமன் இரண்டு முறை எனக்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ‘இளங்கோ’ என்றே விளித்து மறுமொழியிட்டார். சுட்டிய பின் திருத்திக் கொண்டார்.

    நீங்கள் தொடர்ந்து இந்த தளத்தை, பின்னூட்டங்களை வாசிப்பவர் என்று நினைக்கிறேன். இரண்டு மூன்று இடுகை பின்னோக்கி பாருங்கள் தெரியவரும்.

    //Where is Elango?

    What have you done for Sundaraman.

    ஏன் இப்படி மிரண்டு போய் கெடக்கார்….?

    பாவம்.//

    இது டைப்பிங் மிஸ்ட்டேக்.

    “கெடக்கிறீர்….?” என்று வந்திருக்கனும். இது “சுந்தரராமனை” சுட்டுவது.

    கவனக்குறைவு தவறாக பொருள் கொள்ள விழைந்தது. தவறு தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.