…
…

…
தொடர்ந்த தாக்குதல்கள்…. பின்னூட்டங்களை முழுவதுமாக பார்த்தால் தெரியும். என்னைப் பொருத்தவரையில், கடவுளை தீவிரமாக ஆராதிக்கிறவர்கள் தான் “பக்தர்கள்”. எனவே நான் “மோடிஜி ஆதரவாளர்கள்” என்கிற சொல்லைத்தான்
உபயோகிக்கிறேன்.
இருந்தாலும், அவர்களுக்கு மோடிஜியை பற்றி விமரிசனம் செய்வதையே தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெறி பிடித்து திட்டி எழுதுகிறார்கள்…. எழுதட்டுமே…அவர்களின் “தெய்வத்”தைப் போல், நான் சுயநலனுக்காகவோ, கட்சிக்காகவோ எதையும் செய்வதில்லை…
நான் இந்த சமூகத்தின் ஒரு பிரதிநிதி…சமூக நலன், தேச நலன் தான் என் குறிக்கோள். என் மனசாட்சி சொல்வதை எழுதிக்கொண்டு தான் இருப்பேன்.இந்த வசவுகளுக்கெல்லாம் அஞ்சுபவன் அல்ல நான்.
சரி விஷயத்துக்கு வருவோம் –
ரிசல்ட் குறித்து இன்னும் கொஞ்சம் அலசல் –
—————
நான் சொன்ன முக்கியமான ஒரு விஷயம் –
கடைசியாக குஜராத்தில் நடந்தது மே, 2014 பாராளுமன்ற தேர்தல்.
அதில் பாஜக அத்தனை எம்.பி. சீட்டுகளையும் பெற்றது ( 26 எம்.பி.க்கள்…)
165 எம்.எல்.ஏ. தொகுதிகளில் பாஜக, காங்கிரசை விட அதிக ஓட்டு பெற்றிருந்தது.
ஓட்டு சதவீதம் – 59.1 %
காங்கிரஸ் பெற்றது பூஜ்ஜியம் சீட்டுகள்.
ஓட்டு சதவீதம் – 32.9 %
இப்போது நடந்து முடிந்த 2017 சட்டமன்ற தேர்தலில்
பாஜக பெற்றது – 49 % – 99 எம்.எல்.ஏ.க்கள்
ஆக, பாஜக இழந்திருப்பது சுமார் 10 சதவீத ஓட்டுகளையும்,
(165 – 99 ) 66 எம்.எல்.ஏ. தொகுதிகளையும்.
இது மோடிஜியின் வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா….?
பாஜக ஆதரவாளர்கள், என்னை வெறித்தனமாக ஏசுவதை விட்டு விட்டு,
வாதம் புரிய வந்தால் வரவேற்பேன்.
( ஒரு வித்தியாசத்தை நண்பர்கள் கவனித்திருக்கலாம் –
பாஜகவுக்கு ஆதரவாக வெகு தீவிரமாக பின்னூட்டம் எழுதுபவர்கள் எல்லாம்
ஆங்கிலத்தில் தான் எழுதுவதை… அநேகமாக அனைவரும் வெளிநாடுகளில்
வசிக்கும் தமிழர்கள்…sorry … மோடிஜி ஆதரவாளர்கள்…)
————
நான் காங்கிரஸ் ஆதரவாளனல்ல.
எனது ஏப்ரல், மே -2014 இடுகைகளை எடுத்துப்பார்த்தால்,
நான் காங்கிரசுக்கு விரோதமாக எவ்வளவு விமரிசனம் செய்திருக்கிறேன்
என்பது தெரிய வரும்.
எனவே, காங்கிரஸ் கட்சியை ஆதரித்து எழுதவோ, வக்காலத்து வாங்கவோ
எனக்கு எந்தவித அவசியமோ, தேவையோ இல்லை.
————
ரிசல்ட்டை சற்று விவரமாக பார்த்தால் –
அர்பன் ஏரியாக்களில்(நகரங்களில்) பாஜக அதிக வெற்றி பெற்றிருப்பதையும்,
ரூரல் ஏரியாக்களில்(கிராமங்களில்) காங்கிரஸ் அதிக வெற்றி பெற்றிருப்பதையும்
பார்க்கலாம்.
மோடிஜியின் செல்வாக்கு கிராமங்களில் செல்லவில்லை என்பதை
இது உணர்த்துகிறது…
இது குஜராத்தில் மட்டுமல்ல. அகில இந்திய அளவிலும் இதே கதை தான்.
டிவி, செய்தி மீடியாக்கள், சமூக வலைத்தளங்கள் சுலபமாக பரவுகிற இடங்களில்
தான் மோடிஜியின் செல்வாக்கு செல்ல முடிகிறது. கிராமங்களில் அல்ல.
இந்தியா முழுவதுமே இது தான் நிலை.
அண்மையில், உத்திர பிரதேச பஞ்சாயத்து தேர்தல்களிலும் இதே தான் நடந்தது.
ஆனால் 16-ல் 14 மேயர்களை நாங்கள் பெற்று விட்டோம் என்று பிரச்சாரம்
செய்து செயற்கையாக தங்களை வெற்றியாளர்களாக காட்டிக் கொண்டார்கள்.
முனிசிபாலிடிகளிலும், டவுன் பஞ்சாயத்துகளிலும், வார்டுகளிலும் மாயாவதியின்
கட்சியும், சுயேச்சைகளும் தான் அதிக அளவில் வெற்றி பெற்றார்கள்.
இவர்கள் விளம்பரத்திலும், சுய தம்பட்டத்திலும் மட்டும் தான் வென்றார்கள்….
மூன்று ஆண்டுகளில் – 3,775 கோடி ரூபாய் அளவிற்கு மோடிஜி அவர்களுக்கு
பத்திரிகைகளிலும், மீடியாக்களிலும் மத்திய அரசின் செலவில் (மக்களின்
வரிப்பணத்தில் …! ) விளம்பரம். சுயமோகத்திலும், சுயவிளம்பரத்திலும்,
வாழும், வளரும் தலைவர்…. கட்சி… !!!
——————–
சரி குஜராத்தை விடுங்கள்…
அடுத்து கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வருகிறதே…
இங்கு எப்படி, எதை முன்வைத்து பிரச்சாரம் செய்யப்போகிறார்கள்…?
ஊழல் மன்னன் எட்டியூரப்பாவை முதலமைச்சர் வேட்பாளராக முன்வைத்தா…?
“எட்டியூரப்பா” முதலமைச்சர் வேட்பாளர் அல்ல என்று சொல்லி விட்டு
தேர்தலை சந்திக்கும் தைரியம் மோடிஜிக்கோ, அமீத் ஷாஜிக்கோ உண்டா…?
இங்கே மோடிஜி –
“என்னை நீச ஜாதிக்காரன் என்று சொல்லி ஏசுகிறார்கள்”
“என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள்”
“பாகிஸ்தானுடன் மன்மோகன்சிங் கூட்டு சேர்ந்து, சதி செய்து
என் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்…”
“நான் கர்நாடகாவின் அஸ்மிதா ”
” நான் கர்நாடகாவின் மைந்தன் அல்லவா… நான் தோற்றால் –
அது கர்நாடக மக்களுக்கு தானே அவமானம்…? ”
என்று சொல்லி ஓட்டு கேட்பாரா.. ?
அல்லது குஜராத்தில் செய்தது போல் –
மாதக்கணக்கில் கேம்ப் போட்டு,
பேரணிகள் நடத்தி, தேர்தல் அன்றைக்கு “விரலை உயர்த்தி”
ரோடுஷோ நடத்தி ஊர்வலம் வருவாரா…?
“சீ-ப்ளேன்” ஷோ – கர்நாடகாவிலும் நிகழுமா…?
…

…
கூடவே, ” கர்நாடகத்தின் காப்பாளன் நான்…
நான் இல்லையென்றால், காவிரி தீர்ப்பாணையம் என்றோ அமைக்கப்பட்டிருக்கும்..
காவிரி நீர் முழுவதும் தமிழ்நாட்டிற்கு பறி போயிருக்கும் ”
என்றும் பிரச்சாரம் செய்வாரா…?
————–
சரி என்னவோ செய்கிறார்… கர்நாடகாவை விடுங்கள்…
அடுத்து 2019 பாராளுமன்ற தேர்தல் வந்தால் –
இந்தியாவின் கிராமங்களை “கவர்” செய்ய மோடிஜி என்ன செய்யப்போகிறார்…?
எத்தனை மாதங்கள் பிரச்சாரம் செய்வார்… ?
அத்தனை கிராமங்களிலும் அவரால் வலம் வரமுடியுமா…?
அல்லது கிராமத்தான்களுக்கு ஓட்டே கிடையாது என்று
சட்டம் தான் கொண்டு வர முடியுமா…?
——————-
ஒரு நண்பர் பின்னூட்டத்தில் சொன்னது போல் –
” ஒவ்வொரு பகலுக்கு பின்னரும் இரவு வரும்…
அதே போல் ஒவ்வொரு இரவிற்கு பின்னர் பகலும் வரும்”
-என்பதை உணர்ந்து கொண்டு,
மோடிஜியின் ஆதரவாளர்கள் ( கவனிக்கவும் நான் “பக்தர்கள்” என்று
சொல்லவில்லை… ) கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது…
சாதாரண மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற முயற்சிப்பது நல்லது.
—————-
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனித்திருப்பீர்கள்.
நான் மோடிஜி பற்றி எழுதும்போது மட்டும் தான் இத்தகைய நபர்களிடமிருந்து
பின்னூட்டங்கள் வருகின்றன….
வேறு எத்தனையோ தலைப்புகளில் இங்கே இடுகைகள் எழுதப்படுகின்றன.
எத்தனையோ நண்பர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விவாதிக்கிறார்கள்.
அப்போதெல்லாம் இவர்கள் தலை காட்டுவதே இல்லை.
ஆக, எங்கெல்லாம் மோடிஜி பற்றி விமரிசனங்கள் முன்வைக்கப்படுகின்றனவோ,
அங்கெல்லாம் புகுந்து தாக்குதல் நடத்துவது தான் இவர்களின் வேலை,
கடமை எல்லாம்…..???
பின் குறிப்பு –
குஜராத் தேர்தலுக்கு முன்னதாக விசேஷ சலுகைகளை எல்லாம் அறிவிக்கும் பொருட்டு, தேர்தல் தேதிகளை அறிவிப்பதில் தாமதம் செய்தது,
குஜராத் தேர்தலுக்காகவே, ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாறுதல்களை கொண்டு வந்தது,
பல்லாயிரக்கணக்கான கோடி திட்டங்களை தேர்தலுக்கு முன்னதாக குஜராத் அரசு அறிவித்தது, ஆபாச சிடிக்களை வெளியிட்டது,
குஜராத் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கையிலேயே பிரதமர் நீர்மூழ்கி கப்பலை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் வைபவத்தை நிகழ்த்தியது,
ஏதோ எதேச்சையாக நிகழ்வது போல் (பல மாதங்களுக்கு முன்னரே திட்டம் போட்டு, “சீ-ப்ளேனை” இறக்குமதி செய்து,) பிரச்சாரத்தின் கடைசி நாளன்று அதில் பவனி வந்தது., ஓட்டுப்பதிவு நடந்த அன்று கூட “ரோடு ஷோ” நிகழ்த்தியது….. என்பன பற்றியெல்லாம் என்னிடம் நிறைய தகவல்கள் இருக்கின்றன… ஆனால், ஏற்கெனவே இடுகை நீண்டு விட்டது என்பதால், இதைப்பற்றி எல்லாம் விவரமாக பேசவில்லை…
———————————————————



// 9,981 வாக்குகள் இல்லையென்றால் குஜராத்தில் பி.ஜே.பி எதிர்க்கட்சியாகதான் இருந்திருக்க நேரிடும். 2,000 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்தில் 8 தொகுதிகளில் பி.ஜே.பி வென்றுள்ளது. இவற்றில் மூன்று தொகுதிகள் 1,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவை. இவற்றின் கூட்டுத்தொகை 9,981 வாக்குகள் இந்த வாக்குகள்தான் பி.ஜே.பியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளது. //
விகடன் நியூஸ்
விகடன் நியூஸ் பெரிய கண்டுபிடிப்பு அல்ல. இது கருணானிதியின் வாக்கு சாதுர்யம் போன்றது. அதுவும்தவிர, விகடன் ஒரு பக்க சார்பு ஊடகமாகி எத்தனையோ வருடங்களாகிவிட்டன. அதனால்தான் அவர்களுடைய கருத்துக்கணிப்புகள் நக்கீரன்-பார்ட் 2 என்பதுபோல் போய்க்கொண்டிருக்கின்றன.
பாராளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் வித்தியாசம் உண்டு. 2012ஐ விட, 2% அதிகமான வாக்குகளை பாஜக வாங்கியிருக்கிறது. ஆனால் பல பகுதிகளில் அது தனக்கான ஆதரவுத் தளத்தை இழந்திருக்கிறது. அதனால்தான் சட்டமன்ற இடங்களை இழந்திருக்கிறது. அதுபோலவே, பாஜக நினைத்தாலும், 2014 பாராளுமன்றத் தேர்தல்போல் மீண்டும் 2019ல் ஆதரவு பெற இயலாது. நானும் தளத்தைப் படித்துக்கொண்டிருப்பேன், அப்போது இதனை நினைவுகூறலாம்.
ஆனால், இந்த வெற்றி, எவ்வாறு பெறப்பட்டது என்பதுதான் கொஞ்சம் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. (கிட்டத்தட்ட நம்ம By Election Model போல், எல்லாத் தெருக்களையும் அமைச்சருக்குப் பிரித்துக்கொடுத்து பிரச்சாரம் செய்வதுபோல). இந்த ரிசல்ட், காங்கிரசுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும். I am sure it will help them to get some of the support base that was lost in 2012.
சென்ற முறை காங்கிரஸ் வென்ற 16 தொகுதிகளை பி.ஜே.பி கைப்பற்றியது. ஆனால், காங்கிரஸோ சென்ற முறை பி.ஜே.பி வென்ற 33 தொகுதிகளை தன் வசப்படுத்தியுள்ளது.
விகடன் நியூஸ்
இளங்கோ , உங்களுக்காக தமிழில் , விகடன் படித்தவர் அதற்க்கு கீழே உள்ள கமெண்ட்ஸ் படிக்கவில்லை போலும் . அது போலவே , பா ஜ காவும் குறைந்த வித்தியாசத்தில் சில சீட்டுகளை நழுவ விட்டிருக்கிறது .
கா மை சார்,உங்களுக்கு தெரியும், எந்த இலவசமும் கொடுக்காமல் , எந்த சேவைக்கும் வரி உண்டு, கட்டணம் உண்டு என்று சொல்லி – நீங்கள் சொன்ன நம்ம தேசத்தின் நலம் கருதி , ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்து, இது போல தான் எங்கள் ஆட்சி இருக்கும் என்று சொல்லி – சொல்லி அடித்திருக்கிறார் . குக்கர், சீலை, பணம், இன்னும் பல இத்தியாதிகள் இருந்தால் , வெகு சுலபமாக 180 கூட கிடைத்திருக்கும்.
EVM பற்றி நீங்கள் ஒண்ணுமே சொல்லல
சுந்தரராமன்,
தேர்தல் அறிவிப்புக்கு 3 நாட்கள் முன்பாக 8000 கோடிக்கு ரூபானி
அறிவித்த குஜராத் திட்டங்கள் பற்றி உங்களுக்கு எதுவும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை என்று ….. நான் …… நம்புகிறேன்…!!!
இந்த அறிவிப்புகள் செய்வதற்கு வசதியாகவே தேர்தல் தேதிகளை
அறிவிப்பது ஒத்தி வைக்கப்பட்டது என்பதும்…. உங்களுக்கு தெரியாது…
என்று…. நான் நம்புகிறேன்.
தேர்தல் அறிவிப்புக்கு 4 நாட்கள் முன்னதாக, ஜிஎஸ்டி யில் பல பொருட்கள்
28 % -லிருந்து 18 % -க்கு அவசரம் அவசரமாக கொண்டு வரப்பட்டதும்
உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று…. நான்…. நம்புகிறேன்.
உங்களுக்கு தெரிந்தது “குக்கர்” “சீலை” பற்றி மட்டும் தான் …
என்றும்…. நான்…. நம்புகிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சுந்தரராமன்,
நீங்கள் இளங்கோவுக்காக மட்டுமல்லாமல்,
தமிழில் எழுத உங்களுக்கு தெரிந்திருப்பதால்,
தமிழில் எழுத உங்களுக்கு இயல்வதால் –
மோடிஜியை தொடர்ந்து ஆதரித்து எழுதவேண்டுமே
என்கிற காரணத்திற்காகவாவது –
சோம்பல் பார்க்காமல், தொடர்ந்து தமிழில் எழுத வேணுமாய்
கேட்டுக் கொள்கிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அவர் தமிழில் எழுதமாட்டார். இவரும் சரி, இன்னொன்னு குரைத்துக் கொண்டிருக்கே சரியா பேர் வைத்துக்கொள்ளக் கூட தெரியாத ஒன்னு, அதுவும் கண்டிப்பாக தமிழில் எழுதமாட்டாதுகள். ஏன் எனில், அப்ப தானே இங்கிலீஷ்ல எழுதினத எஜமானர்களிடம் காண்பித்து ‘ரொட்டித் துண்டு’ வாங்க முடியும்.
இப்ப யாராவது சொல்லட்டுமே ‘அதுகள் மனதில் படுவதை எழுதுகிறதுகள்’ என்று லொஜிக் பேசட்டுமே.
இதுகளா…!
வெறி பிடித்ததுகள்.
காலம் காலமாய் தேர்தல் திட்டங்கள் அறிவிப்பது நடந்து வருகிறது, அதில் சில திட்டங்கள் செயல் பட்டும் உள்ளது , பெரும்பாலும் அறிவிப்போடு நின்றுவிடும் . ஆனால் திட்டத்தில் தகிடுதித்தம் யார் செய்வார்கள் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். GST ஒரு புதிய வரிக்கொள்கை , எவ்வளவு வரி வரும், எவ்வ்ளவு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற கணக்குகள் , நாளுக்கு நாள் மாறும். வரி குறைப்பையும் , பணம் பொருள் லஞ்சமாக கொடுப்பதையும் ஒரே மாதிரி பார்த்தீர்கள் என்றால் – நான் ஒன்றும் சொல்வதற்கில்லை . அரசு அதிகாரம் கையில் இருந்தால் , இது மாதிரி வரி குறைப்பு , அறிவிப்புகள் வருவது சகஜம் தானே. முதலில் கடுமையான திட்டங்களும் , பின் மக்கள் மனதை கவரும் திட்டங்களும் வருவது ஒரு தேர்தல் யுக்தி . ( ஆனால் சிதம்பரம் என்ன யுக்தியை கையாண்டார் என்று எல்லாருக்கும் தெரியும் ). மோடிக்கு எதிரில் யார் நிற்கிறார்கள் – Lallu ( criminal convicted – out on bail ) , Sonia , RG ( out on bail )Sharthpawar ( less said the better it is ), MK ( you yourself know), Yetchuri ( they are on their way out ) Kapil Sibal ( you look at his clients – u know what sort of person he is ) Kejriwal ( My god, what a disaster )Sharth Yadav ( he is already out of parliament) Mamtha ( i think next stop for all the media and people like you is WB) – the problem is the general public does not these details – some times they just vote on the face value. Anyway , lets continue to talk.
So, Modi – 2002 Gujarath mass killers suppoerter, Amit Shah – fake encounter suspicious.
As you’ve given above the list of leaders may be scandalous, but these two…..
who are they….?
The same justice system which gave bail to RG and Sonia has examined a CM Modi, and exonerated him – even SIT under supreme court was set up , but Supreme Court has discharged him .
Fake encounter – we can compare as to how many in each states , just try and read those days news reports , in which state fake encounter case was more – and if you are implying shorabudeen case , he was chased by 4 states , including police personnel’s of AP ( Cong rule at that time ) , it was hundreds in other states and less than a double digit figure in Gujarat . In Kerala, a CPM ruled state, in addition to police, party cadres themselves killing opponents ,even now.
I am sure you are supporting that Mumbai girl encounter .Isharat Jahan case. If you have a soft corner , as one of the lower court magistrate had , you need to go little deep or more deep .
You don’t be in the company of Rajdeep and Barkha – who keep harping about 2002.Try to Move on…. congress downfall started with the association with these half baked so called journalists, who or otherwise power brokers.
What about the ‘Tehelka’ outcome man. Recently broke out the news headline of the judge HK Loya’s of sudden suspicious demise – ‘the truth behind gone to bin’.
Your ‘Deivams’ has got good names man.
சுந்தர்ராமன்
// வரி குறைப்பையும் , பணம் பொருள் லஞ்சமாக கொடுப்பதையும் ஒரே மாதிரி பார்த்தீர்கள் என்றால் – நான் ஒன்றும் சொல்வதற்கில்லை . //
தேர்தலை முன்னிட்டு வரியை குறைத்தால், அதுவும் லஞ்சம் தானே ?
Yes it is true that compare to the 2014 election, he lost his vote base , I have already explained it is due to GST, Demo, caste based politics ( j patel) , propaganda by Dalit activists – plus Modi was a charismatic leader in Gujarat, the new CM’s is not as powerful as Modi.
I totally agree with you that you are not congress supporter – but if your action / campaign brings back a novice like RG – we will have pay the price along with you. It will be a total disaster.
The so called advt money 3k crores etc., you have to really see deep into it, what sort of advt is this , where all ? – many a times people ignore the full page ad given by the govt, these are given by AJ to keep his friends happy in the media business , plus there are always ads which are required like women education, girl child , health, cleaning, environment etc., You can’t club and claim that Modi is there simply because of Advt , he was a 3 times CM , go and see the state, his family , appreciate the corruption free admin he gave it to the people of Gujarat .
Coming to Karnataka – you wait and watch, Modi always has some tricks under his sleeve. ( though his kurtha is half hand only ) . I am deeply disappointed that you get upset for sex CD of J Patel , It is not you , the hatred for Modi is making you to over look those bad qualities of those boys.
Sea plane – well in a poll campaign there is always Plan B and Plan C, they would have already tied up ( they have already tied up as u have said ), otherwise also, he could have used to show that , how the river front is beautiful now – its not a big thing. You are seeing a conspiracy which is not there at all. As Venkat said, Get a life – see the both the things. Speak to some south indian in Gujarat – ask him what is missing there or what have they got.
சுந்தர்ராமன் – நீங்க ஒரு extreme க்குப் போய் மோடி அவர்களை ஆதரிப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.Sea Plane – என்னால் உங்கள் வாதத்தை நம்பமுடியவில்லை. கா.மை சாரும் ராகுல் காந்தியை ஆதரித்து எழுதுவதுபோல் தெரியவில்லை. In this context he is referring to only Mr.Modi. கா.மை சார் மோடியின் செயல்களை விமரிசித்து எழுதுகிறார். சில சமயம் எல்லாச் சந்தர்ப்பங்களையும் உபயோகப்படுத்துகிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் என்ன, அது அவர் கருத்து. அதில் உண்மை இருக்கா அல்லது பொய்யை உண்மை முலாம் பூசிச் சொல்கிறாரா என்பதை மட்டும் நாம் விமரிசிக்கலாம்.
குக்கர், சீலை, பணம் – நானும் இப்படித்தான் திருமங்கலம் தொடங்கி எல்லா தொகுதி மக்களைப் பற்றியும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் மனதில், ‘எங்கள் கிட்ட இருந்து திருடினதை இவன் கொஞ்சம் திருப்பித் தரான்.’ என்ற எண்ணமே மேலோங்கியிருப்பதால், அதனை ‘பிச்சையெடுத்தல்’ போல் இழிவானதாக மக்கள் இன்னும் எண்ண ஆரம்பிக்கவில்லை. இப்படி பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி முதலமைச்சராக முடியும் என்றால் 2ஜி ஊழலில் கிடைக்காத பணமா?
You are being very decent I think 😊 ..extreme supporter ….
I did not feel anything grossly wrong in sea plane episode , cancellation of road show may have been a coincidence.
Isn’t it true that Modi offered no freebies, no concession, no distribution of even a sweet – just compare this with Congress or our Kazgams, how they bring in people for the rally. You just go back and see the rally in Patna – Bihar during 2014 election , the scene, the bomb blast, and amidst the bomb Modi’s speech. Whether you agree or …Modi has certain qualities
சுந்தர ராமன்,
உங்கள் பதில்களில் நிறைய contradictions…..
தொடர்ந்து எல்லா பின்னூட்டங்களையும் ஒரு முறை படித்துப் பாருங்கள்…
Over enthu …வில் – Defend பண்ணுவதாக நினைத்துக்கொண்டு
உங்களை நீங்களே expose செய்து கொண்டிருக்கிறீர்கள்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Sir , I haven’t done any crime – to expose my self. I only feel that there is some one who is making efforts and you feel he is not making efforts – but faking . We all have certain intelligence , can always makes a fair decision.
I have already said in so many times that something are beyond my intelligence like – why this English channels owned by Ambani goes all out against Modi, where as you and others claims that – Modi is for Ambani. I don’t know whether it is a tactic or game plan ? sorry for English –
sundarraman,
// even SIT under supreme court was set up , but Supreme Court has discharged him .//
அதற்குத்தான் பரிசாக கவர்னர் பதவி கொடுக்கப்பட்டதே…
மறந்து விட்டீர்களா அல்லது மறைத்து விட்டீர்களா ?
SIT is the one who exonerated him. Mr.Raghavan from CBI headed that, on the basis of SIT report , SC discharged the case.
On the other hand the activists like Teetsa – was reprimanded by SC. She even forged accounts . And her narrative was repeated by the Media houses ,
நான் கனடாவில் வாழும் ஓர் தமிழன்.கடந்த பல வருடங்களாக
தமிழ் நாட்டு அரசியலையும் வெப் உலகில் எழுதுபவர்களின் கட்டு
ரைகளைப்படித்ததில் நான் அறிந்து கொண்டது. தமிழ்நாட்டில் இரு பிரிவு இருந்து வருகிறது.ஒரு பிரிவு கண்ணை மூடிக்கொண்டு காங்கிரசை ஆதரிப்பவர்கள். மற்றப் பிரிவு மூர்க்கமாக மோடியை எதிர்ப்பவர்கள்.நடுநிலையாக ஒருவரும் இல்லை.
ஓ…
எம் தேவேஷ்
நீர்தான் நடுநிலையாளரோ?
அதாவது நடுநிலையாளரென்றால் மோடியை ஆதரிப்பவர்….
கரெக்ட்டா?
நா…. கரெட்டாதானே பேசறேன்?….
Arivazgu:- What about the ‘Tehelka’ outcome man. Recently broke out the news headline of the judge HK Loya’s of sudden suspicious demise – ‘the truth behind gone to bin’.
Your ‘Deivams’ has got good names man.
Honestly I wasn’t all that familiar with this incident – the judge , hospital , and family has said there was no foul play – according to the news sites.
I didn’t understand that good names part –
‘family has said there was no foul play’
yes, family has said, ‘what they’ve been told’.
Tehelka……?
// .ஒரு பிரிவு கண்ணை மூடிக்கொண்டு காங்கிரசை ஆதரிப்பவர்கள். மற்றப் பிரிவு மூர்க்கமாக மோடியை எதிர்ப்பவர்கள்.நடுநிலையாக ஒருவரும் இல்லை. // பாவம் எவ்வளவு வருத்தப்படுகிறார் நம்ம தேவேஷ் …! .இங்கே பதிவிடுகிற மாேடி ஆதரவாளர்களுக்கு காேபம் வந்துவிட பாேகிறது …? எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியும் கனடாவில் வசிப்பவர் ஏற்றுக் காெள்ளும்படி .இல்லை பாேல
தெரிகிறது … எனவே மாேடி
ஆதரவு சுருதியை அதிகப்படுத்துங்க … நண்பர்களே ….!!!
நான் பாஜக ஆதரவாளன் இல்லை. ஆனால் காங்கிரசை பலமாக
எதிர்ப்பவன்.தமிழ்நாட்டுத் தமிழர்கள் காங்கிரசின் அடிமைகள் என்பது 60 வருட ஆட்சியைச் சகித்ததிலிருந்து அறிந்து கொள்ளலாம்.10 வருட ஆட்சியை மோடிக்குக் கொடுத்தான் பாருங்களேன்.என்ன குடி மூழ்கப்போகிறது.சரிவரவில்லை என்றால் இருக்கத்தான் இருக்கிறதே ராகுலின் காங்கிரஸ்.
காெடுக்கலாம் … உங்களை பாேன்றவர்கள் … ! தமிழர்கள் காங்கிரஸின் அடிமை என்றால் … நீங்கள் …? // நான் கனடாவில் வாழும் ஓர் தமிழன். // அப்புறம் இந்த முத்திரை எதற்கு உங்களுக்கு …? கிழிந்த காேமணமாவது எங்களுக்கு மிஞ்ச வேண்டுமே என்கிற கவலை ….!
M.Thevesh,
// 10 வருட ஆட்சியை மோடிக்குக் கொடுத்தான் பாருங்களேன்.என்ன குடி மூழ்கப்போகிறது //
-இவ்வளவு அலட்சியமாக எழுதுபவருக்கு நான் எதை எழுதி என்ன பயன்…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
திரு மோடி பதவி ஏற்றதிலிருந்து இதுவரை ஒரு குண்டு வெடிப்போ பயங்கரவாத நடவடிக்கையோ நடைபெறவில்லை என்பதை மறுக்க முடியுமா? இந்திய இறையாணையைப் பாதுகாப்பதில் டொக்லோம் பிரச்சினையில் சீனாவை மூட்டை முடிச்சுகளுடன் திரும்பிப்போக வைத்தவர் என்பதை மறுக்க முடியுமா? இவைகளே அவர் ஆட்சிசெய்ய அனுமதியுங்கள் என்பதின் அர்த்தங்கள் ஆகும்.
பயங்கரவாத நடவடிக்கையோ நடைபெறவில்லை – உண்மைதான் தவேஷ். ஆனால் சீனா, பின்வாங்கவில்லை. சீனா தந்திரமாகத் தன் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இன்றைக்கு இந்தியர்கள் சீனப் பொருட்கள் இல்லாமல் வாழ முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பொருளாதாரத்தை இப்போது பாழ்படுத்திக்கொள்ளவேண்டாம் என்று சீனா அமைதியாக இருக்கிறது. அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் போகவில்லை.
இன்னொன்று, தமிழ்னாடு, காங்கிரஸ் ஆட்சியை சகித்த காலம் 90களுக்கு அப்புறம் இல்லை. அதற்கு அப்புறம், திமுகதான், மத்திய காங்கிரஸ் அரசின் துணைவனாக சுரண்டியது. அதனால்தான் காங்கிரசும், திமுகவும் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது. இன்றைக்கு காங்கிரசுக்கு Pockets of support மட்டும்தான் இருக்கு. பாஜகவுக்கும் குமரி, கோவை இரண்டு இடங்கள்தான்.
Dear KM sir,
This may not be exactly about what the topic of your article… but slightly related to your previous article perhaps, in my opinion.
Requesting you to read this page (http://puthiyamaadhavi.blogspot.com/2017/12/blog-post_18.html)… any thoughts on the point raised??
நன்றி Jan,
படித்தேன் …. இப்போதைக்கு எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஒரு பிரச்சார தளமாக மாறியிருப்பது …காலத்தின் கட்டாயம் பாேலும் …! “அடிப்பதைப் பாேல அடிக்கிறேன் … அழுவதைப் பாேல அழு ” என்கிற சாெலவடை பாேல …. ?
குன்றக்குடி அடிகளார் கூறிய ஒரு குட்டிக்கதை : நானும் ( ராெட்டிக்கடைக்காரர் ) இந்த வெண்ணைக்கடைக்காரனும் நண்பர்கள். அதனால் இவனிடம் வெண்ணை தினம் தோறும் 500 கிராம் வாங்குவேன். இவர் கொடுக்கும் வெண்ணை சில ஆண்டுகளாக 450 கிராம் தான் இருக்கிறது. இவனிடம் பல முறை எச்சரிக்கை செய்தும் கேட்கவில்லை. அதனால் இவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறேன். நுகர்வோரை ஏமாற்றுகிறான். இவனை கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்’ என்றார்.
அடுத்து நீதிபதி வெண்ணைக்கடைக்காரனை கூப்பிட்டு கேட்டதற்கு வெண்ணைக் கடைக்காரன், ‘ஐயா அவர் சொல்லுவதெல்லாம் உண்மை. எனக்கு எழுத படிக்க தெரியாது. என்னிடம் தராசு கல்லும் இல்லை. அவர் 3 ரொட்டி துண்டுகள் அடங்கிய ஒரு பாக்கெட் 500 கிராம் என்று நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகிறார். அந்த பாக்கெட்டை வைத்து எடைப்போட்டு வெண்ணை கொடுக்கிறேன். அந்த ரொட்டி துண்டு பாக்கெட் என்ன எடையோ அந்த எடை தான் நான் கொடுக்கும் வெண்ணையின் எடை. என்னை எந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கிறீர்களோ அதே சட்டம் அவருக்கும் பொருந்தும்’ என்றார். இப்படி நாம் செய்கின்ற தவறுகள் நமக்கு தெரிவதில்லை. பிறர் செய்கின்ற தவறுகள் மட்டுமே நமக்கு தெரிகிறது. இப்படி வாழக் கூடாது” என்றார்…. .!
கதை நன்றாக இருக்கிறது பிரனீஷ்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்