…
…

இந்த புகைப்படம் குஜராத் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்த மறு நாள் காலை – டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது… இதை நான் ஏன் இங்கே பதிவிட்டிருக்கிறேன்…?????
…
முடிவு முன் கூட்டியே தெரிந்து விட்ட ஒரு மேட்சைத் தான் அனைவருடன் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்…. காரணம்…?
எந்தெந்த உத்திகள் ஜெயித்தன…?
யாருக்கு எங்கே பலம்..? எங்கே பலவீனம்..?
யார் எப்படி விளையாடினார்கள்..?
எதிர்காலத்தில் இவர்கள் எப்படி விளையாடுவார்கள்..?
இவற்றைப்பற்றி எல்லாம் அறிந்து கொள்ளும் ஆரவம் தான்…. காரணம்.
இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்பது கிட்டத்தட்ட அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு தான்.
ஆனால் இரண்டு தரப்பிலும் performance, result எப்படி இருந்தது…?
150 + பெறுவோம் என்று சொல்லித்தான் தேர்தல் ஆட்டத்தையே துவங்கினார் பாஜக அகில இந்திய தலைவர் அமீத் ஷா. (மொத்தம் -182 )
இன்னும் அதிகாரபூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் – பாஜக 99-ல் நின்று கொண்டிருக்கிறது. 100 -ஐ தாண்டுமா என்று கட்சிக்காரர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். (காங்கிரசிலிருந்து இழுத்துக் கொண்டு வந்தவர்கள் எண்ணிக்கை தனி..! )
150 + என்று அறிவிக்கப்பட்டு, ஏற்கெனவே இருந்த 116 -ஐ கூட தொட முடியாமல், 100 ஐ-யாவது தொட்டு விடுவோமா என்று excitement – உடன் காத்திருக்கின்ற நிலை பாஜக வுக்கு…!
காங்கிரசை பொறுத்த வரை – முழுக்க முழுக்க ராகுல் காந்தியின் தலைமையில், நடைபெற்ற பிரச்சாரம்…. இங்கு கிடைத்தது வெற்றியோ தோல்வியோ அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பு ராகுல் தான்…
ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றாலும் கூட, முன்பு இருந்ததை விட கூடுதல் பலத்தை நிரூபித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. போன சட்டமன்றத்தில் இருந்ததை விட கிட்டத்தட்ட 15 எம்.எல்.ஏ.க்களை இப்போது கூடுதலாக பெறுகிறது.
இந்த தேர்தலின் விளைவாக சில முக்கிய விஷயங்கள் குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்பட்டிருக்கின்றன –
1) மோடிஜியின் மேஜிக் – எல்லை எது என்று தெரிய ஆரம்பித்திருக்கிறது. அவரது சொந்த மாநிலத்திலேயே, அவர் 12 ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சராக ஆட்சி செய்த மாநிலத்திலேயே – தேர்தல் முடிவதற்குள்
அவருக்கு மூச்சு முட்டி விட்டது.
அவர் அழுதால் எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு காட்டி விட்டது.
அவர் கெஞ்சினால் எப்படி இருக்கும் என்பதையும் கூட ….!
2) ஜெயிப்பதற்காக எந்த அளவிற்கு குனியத்தயாராக அவர் இருப்பார் என்பதை இந்த தேர்தல் காட்டி இருக்கிறது…
3) தான் வகிக்கும் பதவியின் உன்னதத்தை மறந்து – மற்றவர்களைப்பற்றி அசிங்கமாக, அவதூறாக, பொய்யாக, ஏளனமாக அவர் பேசுவதை பார்க்க முடிந்தது.
4) ஒரு மாநில தேர்தலில், மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசாமல், தன் ஜாதி என்ன, தன்னை ஜாதியை முன்வைத்து எப்படி மற்றவர்கள் அவமானப்படுத்துகிறார்கள்… என்றெல்லாம் பொய்யாக ஒரு சூழ்நிலையை
உருவாக்கி குஜராத்தின் மானம் காக்கப்பட வேண்டுமானால், குஜராத்தியர்கள் தன்னை ஜெயிக்க வைத்தால் தான் முடியும் என்றெல்லாம் பேசுவதை பார்க்க முடிகிறது.
5) முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட, பலர் மீதும் பொய்யான தேசத்துரோக குற்றச்சாட்டுகளை அவர் எந்தவித தயக்கமும் இல்லாமல் சாட்டுவதை பார்க்க முடிந்தது.
6) பாகிஸ்தான் மீதான வெறுப்புணர்வை ஓட்டுகளாக மாற்ற முயற்சித்ததை பார்க்க முடிந்தது.
முன்பிருந்த எண்ணிக்கைகளைக்கூட பெற முடியவில்லை என்றாலும் கூட – மொத்தத்தில் -குஜராத் தேர்தலில், மோடிஜி பாஜக வுக்கு ஆட்சியை பிடித்துத் தந்தாலும் –
அகில இந்திய அளவில் – அவரது இமேஜ் அதல பாதாளத்திற்கு போய் விட்டது…
பாஜகவை சாராத, ஆனால் பிரதமர் என்கிற முறையில் மோடிஜி மீது
மதிப்பு வைத்திருந்த நடுத்தர வர்க்கத்து, படித்த மக்கள் பலரிடையே –
அவர் மீதிருந்த பிடிப்பு – விடுபட்டு விட்டது….
இனி மோடிஜி அவர்களது ஆதர்ஷ புருஷர் அல்ல… பத்தோடு பதினொன்று
என்பது போல், இவரும் பொய் சொல்லக்கூடிய, நடிக்கக்கூடிய,
சராசரி அரசியல்வாதி தான்.
சரி – இந்த தேர்தலின் தொடர்ச்சியாக என்ன நடக்கலாம்…?
காங்கிரசைப் பொறுத்தவரை, குஜராத் தேர்தலில் பெரும் அளவில் எதையும் எதிர்பார்க்காததால், கூடுதல் எம்.எல்.ஏ.க்களையும், கூடுதல் சதவீத வாக்குகளையும் பெற்ற வரையில் அது சந்தோஷப்படவே செய்யும். ராகுல் காந்தியை பொறுத்த வரையில் -இது ஒரு சுமாரான துவக்கம் என்றே எடுத்துக் கொள்ளப்படும்.
பாஜகவை பொறுத்து ….?
பொருளாதார விஷயங்களோ, வளர்ச்சி பற்றிய விவாதங்களோ – தேர்தலில் தங்களுக்கு கைகொடுக்கப்போவதில்லை என்பதை பாஜக இப்போது உறுதியாக உணர்ந்திருக்கும்.
எனவே, ஏற்கெனவே உத்திரபிரதேச தேர்தலில் பயன்படுத்தி வெற்றிகண்ட ஃபார்முலாவாகிய “தீவிர மதாபிமான உணர்வு ” (religious polarisation) கொள்கையை மேலும் தீவிரமாக்கலாம். பாராளுமன்ற தேர்தல் வருவதற்குள்ளாக
மத உணர்வுகளை எந்த அளவிற்கு தூண்டிவிட முடியுமோ – அதைச் செய்யலாம்.
பொருளாதார சீர்திருத்தங்கள் -fixed deposit -ல் கைவைக்கும், வங்கிகள் சீர்திருத்தம் பற்றிய மசோதாக்கள்
போன்ற சாதாரண மக்களை பாதிக்கக்கூடிய சில மசோதாக்கள் பின்னுக்கு தள்ளப்படலாம் அல்லது கைவிடப்படலாம்.
பார்ப்போம்… இன்னும் என்னென்ன மாற்றங்கள் வருகின்றன என்று.
———————————————————————-
பின் குறிப்பு – நண்பர்களிடமிருந்து, குஜராத் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்ற விதம் குறித்தும், முடிவுகள் பற்றியும், அடுத்து எதிர்பார்க்கும் விளைவுகள் பற்றியும் – பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.
நம் வலைத்தளத்தின் வழக்கம்போல் – நாகரிகமான முறையில்….!



Well my thoughts
1. The role played by Hardik + 2 of his friends played a huge factor in reducing the vote ( like combining Seeman, Vaiko Kamal ++, and other parties with DMK – )
2. Though Gujarat has been witnessing more than 10% growth in Agri sector, still unfinished water ways / lake / etc/. could have played a huge role .( in Saurastra )
3. GST and Demo effect on some of the traders , as Gujarat is a main trading community
4. Un-employment among youth – It looks like , Mudra and other schemes benefits were not experienced by the local Gujarat people
5. Low cost Housing to many promised before – no action yet / not much action yet.
6. Aura of Ambani and Adani around Modi / BJP
7. Beef controversy too affected the voting pattern of Dalits ( and the Dalit beating incident – reporting of such stories )
But despite all these , Modi managed to pull off a rabbit. It is good that BJP won with a small margin ( vote share is increased – to the previous assembly election ) . This will make them introspect as to what went wrong , you will see the difference . They will take corrective action , if they don’t they will suffer
On Pakisthan comment , MS Aiyer may have born there, and has a house there ( Lakshimi mansion ) but a former PM & former Army chief meeting Pakisthan guest at the eve of Gujarat election is little too much, and the party is denied it in the beginning , later accepted , YES they went for the dinner. Modi used that opportunity ( imagine something like , just before TN election – MK or Stalin going for a dinner with Rajpakshe – first deny and then accept it . u mean to say , JJ or ADMK (anybody) would have quiet )
Hope this opinion of mine did not hurt you or anyone of your followers/visitors
இதை நான் ஏன் இங்கே பதிவிட்டிருக்கிறேன்…????? – மோதி அவர்களுக்குப் பின்னால் இருப்பது அத்வானி அவர்களா? அதனால்தான் மோடி அவர்கள் வேறு பக்கம் நோக்கி முகத்தைத் திருப்பி வைத்துள்ளாரா? (சுஷ்மா அவர்கள் இவ்வளவு உயரம் குறைவானவரா? நான் நீங்கள் எடிட் செய்து போட்டிருக்கிறீர்களோ என்று முதலின் நினைத்தேன்)
மோடியின் முக மாற்றத்திற்குக் காரணம் அருகே இருக்கும் அத்வானியோ, எதிரே இருக்கும் ராகுலோ அல்ல. உரசி (கொண்டு) இருக்கும் மன்மோகன் சிங் தான். நன்கு படத்தை கவனித்துப் பார்க்கவும்.
i am seeing the KM sir doesn’t have answer for all his cries, and false propagandas against BJP.
Its a utter failure.
All of KM followers are now doesnt have answer but showing some statistics to convince themselves.
What could be your answer for BJP’s win?but what i witness in these blogs are like barking at the sun.
as far as i see, that all the medias were against BJP, by stating that the BJP is non-secular?But who is secular in this country?everybody are behind some religions and castes for thier votes.So please wide open your eyes before you cry for foul play
@Letskeepsourfingercrossed – உங்களுக்காக நான் சமர்ப்பணம் செய்யும் பாட்டு.
புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை – புத்திசாலி இல்லை.
பாஜக – எல்லாக் கட்சிகளைப்போல் செக்யூலார் இல்லை. (ie all parties are not secular). ஜிஎஸ்டி தவிர (அதுவும் இன்னும் மக்களுக்குப் பலன் தரவில்லை. எந்தப் பொருளின் விலையும் குறையவில்லை. எல்லோரும் விலையை ஏற்றி, ஜிஎஸ்டி உள்ளடக்கியது என்று உட்டாலக்கடி செய்துள்ளனர்), எது மக்களுக்கு நேரடியாக உதவிகரமாக இருந்தது என்பதை நீங்கள் சொல்லுங்கள். டிமானிடைசேஷன் – நானும் நம்பினேன். புது 2000 ரூ வைத்திருந்த எந்தக் கள்ளனும் மாட்டவில்லை, பழைய நோட்டுக்கள் அனேகமாக புதிதாக மாற்றப்பட்டுவிட்டது, 6 மாத கஷ்டம் எந்த நல்ல விளைவையும் கொண்டுவந்ததுபோல் எனக்குத் தெரியவில்லை. தயவு செய்து tangible good things list பண்ணுங்க.
If your cries are the representaion of the entire country, then how in this country the BJP is unstoppable.It has proved victorious against all the medias cries, false statistics,false poll surveys.Where are the so called vote banks who were really suppressed by that demonitisation, GST issues.Bring them to the voting centers.Where are they hiding still?
Dont think that your grievance is also the nations grievance.If you were forced to pay the tax, then dont think that the entire nation will row behind you.
But unfortunately what i witness in these blog is always cries for foul plays.
i understand that the demonitisation is the economical disaster, and milions of peoples were jobless now.
So please bring those millions and lets root out BJP, if cant then we can quiet.
BJP is unstoppable – நினைவு வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பகலுக்கும் ஒரு இரவு உண்டு. ஒவ்வொரு இரவுக்கும் ஒரு விடியல் உண்டு. தில்லி, பீகார், பஞ்சாப் போன்றவற்றில் சரியான மாற்றுக் கட்சி இருந்தது.
தற்போது என் எண்ணம், டிமானிடைசேஷன், பாஜக நன்மைக்காகத்தான் கொண்டுவரப்பட்டது என்று.
Hello Sir,
We have just a year only for the parlimentary election.Lets bring the victims of the demonitisation to the voting booth and lets bring those “NIGHT” as you say
Till then lets be quiet!
குஜராத்தில் 99 சீட்டுகள் பெற்றதே அதிகமாகத்தான் எனக்குத் தோன்றியது. பிரதமர் அவர்களின் பிரச்சாரக் கருத்துக்கள் அவரது பிம்பத்தைச் சிதைப்பதாகவும் ஏமாற்றமளிப்பதாகவும் இருந்தது. ராகுல் அவர்கள் சரியான தலைமை என்று எனக்குத் தோன்றவில்லை. அது மாறும்வரை மோடி அவர்களுக்கு கஷ்டப்பட்டாவது மயிரிழையில் வெற்றி கிட்டலாம். படேல் போன்றவர்களின் ஜாதீயப் பிரச்சாரம், அதற்குக் களம் அமைத்த காங்கிரஸ் போன்றவை மக்களால் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒருவேளை, மோடி அவர்கள் ‘வளர்ச்சி’ மற்றும், எந்த எந்த மாற்றம் செய்வோம் என்று பிரச்சாரம் செய்திருந்தால் இன்னும் அதிகமாக சீட் கிடைத்திருக்குமோ தெரியவில்லை. Desperate status and his few remarks must have reduced the votes for BJP I think. வாக்கு வித்தியாசம் 49 % – காங்கிரஸ் 42%.
“தீவிர மதாபிமான உணர்வு ” – இது நிச்சயம் கைகொடுக்காது. எப்போது இது கைகொடுக்கும் என்றால், காங்கிரஸ், சிறுபான்மையினருக்காக எல்லாம் செய்யும்போதும், இந்துக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற எண்ணம் தோன்றும்போதும், காங்கிரஸ் காலத்தைப்போல் மதக் கலவரங்களோ அல்லது பயங்கரவாத செயல்கள் நடக்கும்போதோதான் இது கைகொடுக்கும். மக்களுக்கு இப்போது தேவை, நல்ல வாழ்க்கை. வளர்ச்சி என்ற பெயரில் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் அல்லது கேள்விக்குரியாக்கும் இப்போதைய திட்டங்கள் அல்ல. இன்றைக்கு யாராவது ‘பாகிஸ்தான் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’ என்று சொல்லி வாக்குகளைக் கைப்பற்ற முயற்சித்தால் அது எந்த வித பயனும் தராது. பாஜக முதலில், பணக்காரர்களுக்குமான ( நான் சொல்வது 1%க்கும் குறைவானவர்கள்) அரசாக இருப்பது நல்லதல்ல. நடுத்தர மக்களுக்கு ஏதுவான அரசாக அமையவேண்டும், அதே சமயம் சாமானியனை வருத்தாத அரசாகவும் இருக்கவேண்டும். ‘நடுத்தர மக்கள் எல்லோரும் தியாகம் செய்யச்சொல்லி, ஆனால், பெரும் பணக்காரர்களையும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் அவர்களுக்கு மட்டும் நல்லது செய்யும் அரசாக இப்போதிருப்பதுபோல் இருந்தால், 2019ல் அது மிகப்பெரிய தோல்வியைக் கொண்டுவந்து கொடுக்கும்.
இன்றைக்கும் நான், ராகுல் காந்தி அவர்கள், உடனே, ‘தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. குஜராத்தின் நன்மைக்காக காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும்’ என்றெல்லாம் பேசுவார் என நினைத்தேன். அவர் இயல்பான ‘தலைவர்’ஆக எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை இன்னும் சில வருடங்கள் கழித்து அவருக்கு அந்த மெச்சூரிட்டி வருமோ என்னவோ.
இடுகைக்குச் சம்பந்தமில்லாத ஒன்றை எழுத நினைக்கிறேன்.
ராகுல் காந்தி அவர்கள், காங்கிரஸ் தலைவரானது அவருக்கு அதிருஷ்டம் என்று பெரும்பான்மையினர் நினைப்பார்கள் (ராகுலுக்கு அதிருஷ்டம்). அவர் தனது காதல் திருமணம், சொந்த வாழ்க்கை எல்லாவற்றையும் காவு கொடுக்கவேண்டியிருந்திருக்கிறது. அவர் தன் சொந்த வாழ்க்கை, ஆசைகளை தியாகம் செய்திருக்கிறார். அதற்கேற்ற பலன் கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரியது. அவர் மீது எனக்கு ‘பாவம்’ என்றுதான் தோன்றுகிறது. வேறு சரியான தலைவர் காங்கிரஸுக்கு அமைந்தால் அது மோடி அவர்களுக்கு நல்ல போட்டியாக இருக்கும்.
We need to reason something and throw tantrums.Thats what happening here in this blog.
No need to convince them.Let them cool for some weeks.
WHat they know is BJP is the one and only in this country making use of religious path to be victorious.
Its ridiculous,as they dont have any other option to highlight and to scold them.
Why cant you people be contructive rathar them using secular image of a party.
SHow some right example for non-secular party.
The results shows the country and people are behind Modi. There is hope that this MAN can make a difference in their life.HIS intentions and ACTIONS are with the best interest of the country. Implementation as it has been, will have some slip ups. But that is ok… After all PEOPLE of the country ( IAS/IPS ) are to implement. If they are corrupt, no leader can make a difference.
KM and his BAKTs should start seeing things in different light rather than finding fault in everything.
rightely said.but i dont think that they can able to sleep for some weeks.
the KM and his BAKTS are as usually, throwing muds and shame themselves by giving some unnecessary explanations against some other events!
Please maintain the dignity
// இதை நான் ஏன் இங்கே பதிவிட்டிருக்கிறேன்…????? // அதுவா … முகங்களின் உணர்ச்சியை வெளிபடுத்தவா ….?
Both Cong and BJP economic policies are same i.e against common man. The difference is style of governance, amount of corruption charges.
Congress got enough chances and back to back term of 10 years. Why so called secular forces not allowing BJP for 3 years. Over the time if Modi failed to deliver people may reject him totally. But at the same time when. Person like Rahul and Sonia projected great leaders they will forced to support BJP.
The more secular forces coming in supporting to Cong will gain BJP only and will help polarisation of. Votes to BJP. Voters are very clear true intention behind so called secular person.
ராகுல் காந்தி மேல் உள்ள வெறுப்பின் குரோதத்தின் வெளிப்பாடு நரேந்திர மோடியின் முகத்தில் நன்றாக தெரிகிறது .இவர் நல்ல தலைவர் என்று நினைப்பவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் . ராகுல் காந்தியின் பெருந்தன்மைக்கு முன்னால் இவர் ……… ?
” பொருளாதார விஷயங்களோ, வளர்ச்சி பற்றிய விவாதங்களோ –
தேர்தலில் தங்களுக்கு கைகொடுக்கப்போவதில்லை என்பதை பாஜக
இப்போது உறுதியாக உணர்ந்திருக்கும்.
எனவே, ஏற்கெனவே உத்திரபிரதேச தேர்தலில் பயன்படுத்தி
வெற்றிகண்ட ஃபார்முலாவாகிய “தீவிர மதாபிமான உணர்வு ” (religious
polarisation) கொள்கையை மேலும் தீவிரமாக்கலாம். பாராளுமன்ற தேர்தல்
வருவதற்குள்ளாக
மத உணர்வுகளை எந்த அளவிற்கு தூண்டிவிட முடியுமோ – அதைச்
செய்யலாம்.”
என்ன KM சார் ,
குஜராத் வெற்றிக்கும் அதுதான் காரணம்.
இனிமேல் மத துவேசம் இந்தியா முழுவதும் கொழுந்து விட்டு எரியும்.
இங்கு பதியப்பட்டு இருக்கும் காரணங்கள் கூட இருக்கலாம்.
இவைகளை விடவும் நான் உற்று நோக்குவது, “அது எப்படி சுஸ்மா ஸ்வராஜ், அத்வானியுடன் பேசலாம்” என்பதாக இருக்கும்.
ஏன் என்றால் நம்ம தல விரிந்த மார்பகம்(56′) கொண்டவர் இல்லையா….!
இல்லை நண்பரே ,
ராகுல் காந்தி மட்டும்தான் நரேந்திர மோடியைப்பார்த்து சிரிக்கிறார்.
கீழே உள்ளது வாட்ஸப்பில் வந்தது. இந்த சகோதரி மிகத்தெளிவாக விவரிக்கின்றார். இதைத்தான் எதிர் கட்சிகளும் முறையிட்டுக் கொண்டிருகிகின்றன.
ஒரு விரிவான நம்பகமான முன்னால் நீதி அரசர்கள் கொண்ட விசாரனையில் தான் உண்மை தெறியவரும். அது இந்த அரசாங்கதை வைத்துக்கொண்டு நடைபெறப்போவதில்லை. காலம் இப்படியே செல்லப்போவதும் இல்லை.
மாற்றம் வரும்.
ஆனால், 2019-லும் இந்த அயோக்கத்தனம் நடைபெறாமல் ஏதாவது செய்யனும். இப்போதிருக்கிற ஒரே வழி பாலட் பாக்ஸ் தான். இன்றில்லாவிட்டாலும் நாளையாவது நடக்கனும்.
——————————————————
“எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்” (EVM) பற்றிய என்னோட பார்வை. கண்டிப்பாக படித்து ஷேர் செய்யவும்.
– சுவாதி, திருநெல்வேலி
கடந்த இரண்டு வருடமாக இந்த கார்ப்பரேட்/ RSS ஆட்சிக்கு எதிராக மக்களிடையே(பக்தாள் பற்றி சொல்லவில்லை) விழிப்புணர்வு வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது. எந்த ஒரு ஆட்சி மாற்றமும், நடுநிலை மக்கள் மற்றும் முதல்முறை ஓட்டு போடுபவர்களால் தான் நடக்கிறது (கிட்டத்தட்ட 25-30% இதில் அடங்கும்). இந்த மக்கள் தான் 2014ல் மோடியின் போலி தேசபக்தி, பஞ்ச் டயலாக், பொய்யான விளம்பரத்தை நம்பி என்னைப் போல மோடிக்கு ஓட்டு போட்டு பிரதமர் ஆக்கியவர்கள். இப்போது மோடியின் முகமூடி கிழிந்த காரணத்தால் இந்த மக்களுக்கு மோடி எதிரி ஆகி இருக்கிறார். நாடு முழுவதும் 2014ல் காங்கிரஸ்க்கு எதிராக வீசிய அலைக்கு மேல் இப்போதே மோடிக்கு எதிராக வீச ஆரம்பித்தது அதிசயம் இல்லை.. இப்படி ஒருபுறம் இருக்க பிஜேபி கட்சியின் ஓட்டு சதவிகிதம் மட்டும் கூடுவது எல்லோருக்கும் எழும் சந்தேகம் தான். இந்த ஓட்டு விகிதம் கூடுவதற்கு “வோட்டிங் மெஷின்” ஒரு காரணமா என்று பார்ப்போம். அதற்க்கு தான் இந்த கட்டுரை.
EVM has three units,
1. Ballot Unit – ஓட்டு போடும் எந்திரம்
2. Control Unit – ஓட்டு எண்ணிக்கை காட்டும் எந்திரம்
3. VVPAT – உங்கள் ஓட்டுக்கு ரசீது கொடுக்கும் எந்திரம்
இதுவரை பிரச்சனைகள்னு மக்கள் சொன்னது.
1. காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டா பிஜேபி லைட் எரியுது.
2. காங்கிரஸ்க்கு ஓட்டு போட பட்டன் அழுத்த முடியவில்லை.
3. ப்ளூடூத்/ wifi கனெக்ட் ஆகுது.
4. VVPAT – நான் காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டேன் ஆனால் பிஜேபிக்கு ஓட்டு போட்ட மாதிரி receipt வருது.
5. EVM Rigging, Tampering.
மேலே உள்ள எல்லாமே உண்மையில் மெஷின் பிரச்சனையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. Or EVMல் இருக்கும் மிகப்பெரிய இமாலய திருட்டை மறைக்க பிஜேபி வழக்கம் போல செய்யும் சின்ன கிரிமினல் வேலையாக இருக்கலாம். அந்த மிகப்பெரிய EVM தவறு பற்றி கீழே விவரிக்கிறேன்.
மோடி & அமித்ஷா என்ன ஜோல்னா பை போட்டுட்டு, குச்சி மிட்டாய் சப்பிட்டே ஸ்கூல்க்கு போர குட்டி பசங்களா என்ன மேலே உள்ள மாதிரி தப்பு பண்ண!!. தீர்ப்பு தனக்கு எதிரா வரும்னா ஜட்ஜ்’ய போட்டு தள்ளிட்டு யாராவது பாத்த அவர்களையும் அந்த இடத்தில தடயம் இல்லாம முடிச்சுட்டு போறவங்க.
அந்த மெகா EVM கோல்மால் எதுவாக இருக்கும்? எது நடந்து கொண்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றால்,
EVM control unit (ஓட்டு எண்ணிக்கை காட்டும் எந்திரம்) யில் “மைக்ரோ சிப்” மற்றும் அதில் ஒரு சாப்ட்வேர் (மென்பொருள்) இருக்கும். இதை உங்களுக்கு தேவையான மாதிரி நீங்கள் ப்ரோகிராம் பண்ண முடியும். உதாரணத்துக்கு, ஒரு ஓட்டு சாவடியில் மொத்தம் பதிவான ஓட்டு 1000 என்று வைத்து கொள்வோம்.. தாமரை சின்னத்துக்கு மேல் வேறு சின்னம் அதிகம் ஓட்டு வாங்கி இருந்தால் அவர்களின் ஓட்டில் இருந்து 5% ஓட்டை தாமரைக்கு மாற்ற முடியும். இதெல்லாம் ரொம்ப சின்ன மேட்டர். அந்த சாவடியில் உண்மையில் காங்கிரஸ் 48% (480) ஓட்டும் பிஜேபி 41% (410) வாங்கி இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள்.. கடைசியில் ஓட்டு எண்ணிக்கை வரும் போது காங்கிரஸ்க்கு அந்த மெஷின் 430 (48%-5%=43%) என்று காட்டும். பிஜேபிக்கு 460(41%+5%=46%) என்று காட்டும். இந்த 5%.. 2% இருக்கலாம்.. or 10% கூட இருக்கலாம். இந்த மென்பொருள் திருட்டுத்தனம் எல்லா வோட்டிங் மெஷின்லையும் இருக்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட சதவிகித ஓட்டை ஒரு கட்சிக்கு சார்பாக மாற்ற முடியும்.
Control Unitக்கு தேவையான “மைக்ரோ சிப்” ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வருகிறது. இதே நிறுவனம் தான் மோடி மற்றும் அவரது தலைமை அதிகாரி (Chief Secretary) சேர்ந்து மோடி குஜராத் முதல்வராக இருந்த போது 20,000 கோடி காஸ் ஊழலில் மாட்டியது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.(check the link in the comments). அப்போது மோடிக்கு கீழ் பணிபுரிந்த அதே அதிகாரி தான் இப்போது எலேக்சன் கமிஷின் தலைவர். கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு புரியும்.
கீழே உள்ள கேள்வி பதில் படித்த பின்பும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் பண்ணவும்.. நான் பதில் சொல்கிறேன் நேரம் கிடைக்கும் போது.
1. இந்த மென்பொருள் திருட்டினால் ஒரு கட்சியின் வெற்றியை மாற்ற முடியுமா?
யெஸ். எங்கெல்லாம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் (for example, 5% vote difference) பிஜேபி தோற்க இருக்கும் இடங்களில் EVM booster ஓட்டின் மூலம் வெற்றிபெறும்.
ஒரு உதாரணத்திற்கு, இதனால் ரிசல்ட் எப்படி மாறும் என்றால் பிஜேபி 10000 ஓட்டில் தோற்க வேண்டிய இடத்தில் 5000ல் தோற்கும்.. 2000 வோட்டு வித்தியாசத்தில் பிஜேபி தோற்க வேண்டிய இடத்தில் 3000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வெறும். 5000 ஓட்டில் வெற்றி பெற வேண்டிய இடத்தில 10000 ஓட்டில் வெற்றி பெரும்.
2. எவ்வளவு நாளாக இது நடந்து கொண்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது?
என்னோட தனிப்பட்ட கருத்துப்படி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலே இது நடந்து கொண்டு இருக்கலாம்.
3. பீகார், பஞ்சாப் மற்றும் இடைத்தேர்தல் அனைத்திலும் பிஜேபி தோல்வி கண்டதே??
கேள்வி ஒன்றுக்கான பதில் தான். அங்கெல்லாம் இந்த சாப்ட்வேர் கோல்மால் இருந்து தான் இருக்க வேண்டும். ஆனால் பிஜேபியால் 40% ஓட்டு கூட வாங்கி இருக்க முடியாது. உண்மையில் அங்கு அவர்கள் இதை விட மிகவும் மோசமாக தோற்று இருக்க வேண்டும்.
4. குஜராத்தில் இந்த கோல்மால் நடந்து இருக்குமா?
கண்டிப்பாக. வாக்குகள் என்னும் போது, உண்மையாக கிடைத்த ஓட்டுக்கு மேல் 4-5% வாக்குகள் பிஜேபிக்கும். உண்மையாக கிடைத்த வாக்குக்கு கீழ் 4-5% காங்ரஸ்க்கு control unit காட்டும். So congress has to get at least 50% real vote to form the government. At the same time, BJP can form the government with just 40% real vote share.
5. அப்படின்னா மோடி எதற்கு இப்படி அழுது, கோமாளித்தனம் செய்து வோட்டு கேக்க வேண்டும்?
பிஜேபி அந்த குறைந்தபட்ச (35% or 40%) ஓட்டை வாங்கிதான் ஆக வேண்டும். அதற்க்கு மேல் 2% or 5% or 10% EVM சாப்ட்வேர் மூலம் கிடைக்கும். மொத்தமாக ஓட்டு எல்லாம் பிஜேபிக்கு போகிற மாதிரி செய்தால் மாட்டிக்கொள்ள மாட்டார்களா என்ன??
6. EVM டெஸ்ட் செய்யப்பட்ட பிறகு தான தேர்தலுக்கு பயன் படுத்துவார்கள்?
யெஸ். எல்லா கட்சியினர் முன்னாலும் இது சோதனைக்கு உட்படும். ஆனால் யாரும் 1000 ஓட்டு போட்டோ or சாப்ட்வேர் டெஸ்டிங் மாதிரி வித்தியாச வித்தியாசமாகவோ சோதனை செய்வது இல்லை. EVM booser vote can add only on the day of counting. எண்ணிக்கையில் அதிகம் காட்டுவது தேர்தல் ரிசல்ட் அன்று மட்டும் தான் நடக்க வேண்டும் என்று மென்பொருள் எழுதுவது 5 நிமிட வேலை. ஒட்டுமொத்த இந்த கிரிமினல் வேலையை செய்ய ஒரு 2 வருஷம் C or Micro controller அனுபவம் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் போதும்.
7. எக்ஸிட் போல் ரிசல்ட் எல்லாம் மோடிக்கு சாதகமாக வருகிறதே?
மோடி & அமித்ஷாக்கு இதெல்லாம் ஒரு மேட்டர்ரே இல்லை. பெரிய பெரிய international எஜென்சி கிட்டவே இவர்களால் காசு கொடுத்து மோடி பற்றிய +ve ரிப்போர்ட், நம்ம எகானமி பத்திய ரிப்போர்ட் மாத்த முடியுதுன்னா.. இதெல்லாம் சப்ப மேட்டர். மேலும் இப்போது அனைத்து தேசிய ஊடகங்களும் அவர்களின் கையில் தான்.
8. இதைப் பற்றிய விழிப்புணர்வு வரவில்லையே?
இப்போது தான் விழிப்புணர்வு வர ஆரம்பிச்சு இருக்கு.. 1. குஜராத் ஹைகோர்ட்டில் ஒரு மனு போன வாரம்.. counting machine ஓட்டை VVPATயுடன் verify பண்ண. எலெக்க்ஷன் கமிஷின் உடனடியாக மறுத்து விட்டது. 2. Congress filed a similar case in சுப்ரீம் கோர்ட். சுப்ரீம் கோர்ட் அதை உடனடியாக கேன்சல் செய்து விட்டது.
கமென்டில் நான் கொடுத்த லிங்க் போய் பார்க்கவும். கேள்விகள் இருந்தால் கமெண்ட்டில் போடவும்.
இந்த நாடு ஒரு மிக மோசமான சூழலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 😢😢😢
-சுவாதி, திருநெல்வேலி
விவரமாக பின்னர் மீண்டும் வருகிறேன்.
இப்போதைக்கு ஒரு பட்டாசு…..
மோடிஜி ஆதரவாளர்களும், மீடியாக்களும் ஒரு உண்மையை மிக வசதியாக மறைத்து விட்டார்கள்…
இப்போது ஒப்பீடு செய்து பார்க்க வேண்டிய இன்னொரு தேர்தலும்
இடையில் இருக்கிறது….
குஜராத்தில் கடைசியாக நடந்தது மே,2014 பாராளுமன்ற தேர்தல்.
அதில் முக்கிய கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்…
பாஜக – 59.1 சதவீதம்…
காங்கிரஸ் – 32.9 சதவீதம்…
பாஜக ஜெயித்தது – மொத்தம் உள்ள அத்தனை 26 எம்.பி.சீட்டுகளையும்.
இந்த தேர்தலில் பாஜக பெற்றுள்ளது – 49 சதவீதம்..!!!
மோடிஜி ஆதரவாளர்கள் இப்போது மார்தட்டி சொல்லட்டும் பார்க்கலாம் –
கடந்த தேர்தலை விட இப்போது மோடிஜிக்கு ஆதரவு அதிகமாகி இருக்கிறதா
அல்லது குறைந்திருக்கிறதா என்று…? 🙂 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
The problem with KM is , he is believing himself as a great genius, and with the same geniuosness he is trying to predict the poll results(by showing photos of empty chairs in thier caimpaing), and most of the time he is licking the dust shamelessly.
But however he clears off those dusts after the poll results, and come up with some funny statistics and convince himslef & his BAKTS , that BJP is not victorious.
Better luck next time, but before that please recollect all of your earlier poll predictions.
கா மை சார்… இந்த வாதம் சரியானதாகத் தெரியவில்லை. தமிழகத்தில், பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது, காங்கிரஸ் தனித்து நின்றால், குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதம் பெறும் (7%க்கு மேல் இருக்கலாம் என்பது என் அபிப்ராயம்). ஆனால் சட்டமன்றத் தேர்தலில் இந்த அளவு வாக்கு சதவிகிதம் இருக்காது. பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் இரண்டுக்கும் இந்த வித்தியாசம் (பார்வையில்) உண்டு.
2014 தேர்தலில், காங்கிரசுக்கு எதிரான மன நிலை மிக மிக அதிகம். எவனாவது காங்கிரசை வீழ்த்தமாட்டானா என்று இந்திய மக்கள் எதிர்பார்த்த தேர்தல். (இந்திரா காந்தி இறந்தபோது காங்கிரஸ் பெற்ற வாக்குகளை, பிறகு நாம் காங்கிரஸ் ஆதரவு மக்கள் என்று சாதாரணமாகக் கடந்துபோய்விட முடியாது) ஆனால் இப்போது நடந்த குஜராத் தேர்தல் அப்படி அல்ல.
2012 சட்டமன்றத் தேர்தலில் 48% பாஜக, 39% காங்கிரஸ் பெற்றது. இப்போது 49%, 42% முறையே பெற்றுள்ளன. நான் பார்ப்பது, காங்கிரசின் வளர்ச்சி, மோடி அரசின் பாபுலாரிட்டி குறைவு. இதன் காரணம், மோடி அவர்களின் கொள்கைகள், சாமானிய மக்களுக்கு இன்னும் நன்மையாகச் சென்றடையவில்லை. 2012ல் 70% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளித்தனர். இப்போது அதைவிட மிகவும் குறைவு என நினைக்கிறேன்.
மோடி பக்தாள விடுங்க சார், நன்றி கெட்ட பசங்க. மோடிய நீங்க எதிர்க்கறீங்கன்னு காண்டு ஆவறாங்களே ஒழிய, நீங்க செய்யுற நல்லது பற்றியே யோசிக்க மாட்டீங்கறாங்களே. ஏன்னா அவங்களுக்கு உங்க ராசி பற்றி தெரியல்ல… அந்த அறியாமைதான் காரணம்.
போன நாடாளுமன்ற தேர்தலில் ஜெயாவை பிரமராக்க வேணும்னு கடுமையா எழுதுனீங்க, என்ன ஆச்சு? அந்தம்மாவுக்கு பிரதமர் பதவிய தாண்டி சிவலோக பதவியே கிடைச்சிருச்சு. கலைஞரை ஒழிக்கத்தான் ஜெயாவுக்கு ஆதரவுன்னு சொன்னீங்க, என்ன ஆச்சு? உடம்பு சரியில்லாத கலைஞர் குணமாயி அடுத்த முதலைச்சர் ஆயிடுவார் போல இருக்கு. மோடியை நீங்க எதிர்க்க ஆரம்பிச்ச பின்னாடி அவருக்கு வெற்றி மேல் வெற்றி! இப்ப காங்கிரஸ்காரங்கதான் மரணபீதில இருக்கறத கேள்வி 😉
ஆகவே மோடி பக்தாள்களே, அவர் தொடர்ந்து ஜெயிக்கவேணும்னா, காமை மறந்தும் கூட மோடியை ஆதரித்து எழுதாமலிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி துவா செய்யுங்கள், இன்ஷா அல்லா!
u have to see the end result, not stating like karunanidhi statistics. how about Himachal victory? congress lost its power. however in all aspects BJP is 100 times better party than Congress keeping Dynasty power in congress
சீரியஸ்ஆ போஸ்ட் போட்டு போர் அடிக்குது அதனால ஜாலியா ஒரு போஸ்ட் . . . .
ஒரு குட்டிக் கதை :
*****
பாகிஸ்தானில் நவீன முறையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது
அதனால் எதிரி நாடாக இருந்தாலும் பரவாயில்லை என்று உலகிலேயே ஓட்டிங் மெஷின்ல தேர்தல் நடத்தும் ஒரே நாடான
இந்தியாவில் இருந்து கடனாக
ஓட்டிங் மிஷினை(EVM) வாங்கலாம் என
ஏக மனதாக முடிவு செய்தார்கள் .
தேர்தலும் நடந்தது ,…..
முடிவுகளும் அறிவிக்கப்பட்டது
முடிவுகளைக் கேட்டதும் சாரை சாரையாக மக்கள் மயங்கி விழுந்தனர்.
அனைத்து இடங்களிலும் பாஜக அமோக வெற்றி ….!!!
– நன்றி: மருத முத்து.
KM sir, your statistics is no better than karunanidhi’s samalipu! people vote with different mind set in state elections compared to national elections. that said, there is no doubt that there is a there is some erosion in trust! You should consider anti-incumbacy and caste factor that might have played a role!
overall, MODI magic is still working. Like I do, millions of Indians are still hopeful that THIS MAN can uplift them and the country. We have to give him full five years and another full term before we can discount him as “no better than other politicians”. Until then i will continue to be his BAKT.
you can find so many articles arguing why this victory should be considered as a defeat. Feel free to dig them and keep publishing them for the satisfaction of yours and your Bakts. After all, its common for Sun TV to play “Thiruvilayadal” after election defeat on the results day.
if you want to play fair, then look for reasons why so many people are having hope on THIS ONE MAN. Rather than just thinking that they are idiots or branding them as BAKT, try to find out what work has gone in to reverse the trend in which the country was going earlier. Assess individual ministries/ministers instead of finding fault.
After all, it is your blog. you can write any thing you want. that is why you have named the blog as “vimarisanam”. you may want to change it as “kudharka vimarisanam” so that it will aptly represent your rhetoric.
finally, get some life and try to be appreciative. It will do honors to your age and experience.
Its obvious that KM now shamelesslly making noices like empty vessel.
He is licking his wounds now, and thinking what funncy reasons he can give to convince his BAKTS.
He is started making compalints that modi cried in front of the crowd and attracted the votes.So soon he will also complain that modi scratched his head in front of the crowd to attract votes.
Letskeepsourfingercrossed – ஒழுங்கா ஒரு பேரு கூட வெச்சுக்க தெரியாதவரெல்லாம் கூட இங்கே எழுத வந்துட்டாங்க. இந்த பேருக்கு என்ன அர்த்தம்னு உங்களால சொல்ல முடியுமா ?
அவன் அவன் தன்னைப்பத்தி என்ன வேணாலும் சொல்லிக்கலாம். அடுத்தவன் விரலையும் சேத்து பொத்திக்க இவனுக்கு என்ன ரைட் இருக்கு?
மோடி பக்த் என்று சொல்வது கூட தவறு. இதில் பலர் வெறியர்கள்.
மத வெறியர்கள். சொந்த நாட்டில் உழைத்து பிழைக்க வக்கில்லாமல்
அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் போய் வரி கட்டாமல் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டு, தான் வரி கட்டாமல் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள்.
கே.எம்.சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ; please don”t allow this type of people to write here. All psychopaths.
// people vote with different mind set in state elections compared to national elections. //
Exactly. You are 100 % correct.
2014 பார்லிமெண்ட் தேர்தலின்போது குஜராத் மக்களுக்கு ஒரு
assurance கிடைத்தது. பாஜகவுக்கு ஓட்டு போட்டால், மோடிஜி டெல்லிக்கு போய் விடுவாரென்றூம், குஜராத் மக்கள் அவர் பிடியிலிருந்து விடுபட்டு,
நிம்மதியாக இருக்கலாமென்றும். அதனால் மக்கள் விழுந்து விழுந்து
பாஜகவுக்கு ஓட்டு போட்டார்கள் – அதனால் தான் 69 %.
இப்போது மோடி போகவேண்டுமென்று நினைத்தவர்கள்நி அவர்களது எண்ணம் நிறைவேறி விட்டதால், நிம்மதியாகி விட்டார்கள்.
அதனால் தான் -10 %.
சரிதானே வெங்கட்டு ?
Lots of comments –
First Demonitization and GST, its a long term economic reform , in the short run it is bound to create problems. If modi, like congress instead of taking this long term measure – he could have easily acted like congress , like spending the money on subsidies , freebies, tokenism, appeasement he would have easily won 150
Instead , he said no free power to farmer or to any one , but 24 hrs power supply , where as you ( not you …but media ) pick up some remote corner and say , there is no power. He brought the GST so that , so many traders who doesn’t pay any tax at all , comes in to the tax net. Demo – has lot of seen and unseen benefits, basically it brings everybody into a formal trade – if you are making huge amount of money, and keep on buying properties , car, jewels etc in cash – it is no more possible. YES, in the short run, many business had to shut down. But it is filled by who does the business in straight forward basis – YES there is a place for people who pay tax, who have clean books , and comply laws. No place for crooks .
At the same time , I have already said, action against the white collar crimes remain a unfulfilled promise, may be AJ responsible – may be Modi is waiting for 2019 – the arrest , case etc., closer to election will have impact – may be the crooks can claim victim hood , and there are always people like you ready to grant victim hood to the economic offenders. If you can appreciate RG for speaking a written document , by passing all his misdeeds – you can appreciate PC , Karthik , Maran , Balu, Sashikala . I expect a write up from u on Mayawathi …what a selfless leader she is , how she uplifted to Dalits etc.,
And the EVM big article – less said the better it is . Please speak to some technical person . Understand how it works – ideally you shouldn’t have allowed that feedback , however it is from your follower. What to do.
சுந்தரு,
அமெரிக்காவிலும், டுபாயிலும் போய் உட்கார்ந்துகொண்டு லட்சக்கணக்கில்
சம்பாதிப்பவர்கள் subsidy தேவையே இல்லை. அனாவசியம் என்று சொல்லலாம்.
அவர்களுக்கென்ன நஷ்டம். ?
காவிரிமைந்தன் சாரின் புள்ளி விவரங்களுக்கும், கேள்விகளுக்கும்,
ஆதாரபூர்வமான வாதங்களுக்கும் பதில் சொல்ல இயலாதவர்கள் இப்போது
அவரை தூற்றுவதில் இறங்கி இருக்கிறார்கள். இதிலிருந்தே மோடி பக்தர்கள்
குஜராத் முடிவுகளால் எந்த அளவு ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பது
நன்றாக தெரிகிறது.
டொன்ட் வொர்ரி பக்தாஸ் ; பெட்டர் லக் நெக்ஸ்ஸ்ட் டைம்.
His statistics on poll prediction is a utter failure every time.
But i dont know what do u mean by “His statissstics”?everytime he poorly predict that BJP will fail, and he fails.
But now he safely jumped to the 2018 poll, without answering to his previous failed statistical predictions.
But everytime he is getting a blow from BJP.
so better i advice him to prepare some graphics (like empty chairs in election campaign, like what he did earlier) for 2018 polls.
OK Sir , YES subisdy is required to deserving persons . That is what BJP is trying to work through Aadhar , that subsidy should reach the right people . However people like you, media, court – putting all sorts of hurdles . BJP Govt, because of Aadhar ( though it is by congress Govt – adopted it for the country in the interest of the nation ) – is trying to weed out the corruption in Food distribution, kerosene, 100 days work , pension, and in so many areas . It is always better to teach a man how to catch Fish and not feed him Fish.
You have not answered my question, it is easy to pay subsidy and get votes – still Modi choose a different route .YES or NO
சுந்தர்ராமன் சார் – Demonitization and GST, its a long term economic reform – ஜிஎஸ்டி பற்றி நீங்கள் எழுதியிருப்பது சரி என்றே (இன்று வரையில்) நான் நம்புகிறேன். ஆனால், டிமானிடைசேஷனைப் பற்றி எழுதி என் எரிச்சலைத் தூண்டாதீர்கள்.
கண் முன்னால், ரெட்டி, சேலம் பாஜக பிரமுகர், ஆகியோர் கோடிக்கணக்கான 2000 ரூ புது நோட்டுக்கள் வைத்திருந்தார்களே, சாதாரண மனிதர்கள் ஒரு நாளைக்கு 2000 ரூ நோட்டு கிடைப்பதற்கே எவ்வளவு பாடுபட்டார்கள்/ (அப்போது நானும் கஷ்டப்பட்டேன், ஆனால் அது தேச நலனுக்கான திட்டம் என்று நம்பினேன். அதனால் மக்கள் கியூவில் இருந்து கஷ்டப்பட்டதையும் பொருட்படுத்தவில்லை). ஆனால், அந்தக் கஷ்டத்தினால் ஒரு நன்மையும் சாதாரண மக்களுக்குக் கிடைத்தமாதிரி (நன்மையையும் அறிவேன். மக்கள் எலெக்டிரானிக் பண முறைக்கு நிறையபேர் மாறியிருக்கின்றனர்) எனக்குத் தெரியவில்லை. இந்த ரெட்டி, சேலம் பாஜக பிரமுகர், கர்னாடக மந்திரி இவர்களுக்கெல்லாம் சுடச் சுட நாசிக்கிலிருந்து பணம் வினியோகம் செய்தவர் யார் என்பது கண்டுபிடிக்க முடிந்ததா?
If he is arrested in salem, our TN police has arrested them, Our courts in Salem or high court in Chennai / Madurai will punish them ( I hope he gets punished ) – of course, in between the IT dept also get entangled in the case. There was a answer in parliament also as to how much was recovered etc., Sekhar reddy claimed in Vikatan interview that , he has not prepared accounts for 2 or 3 years, the news notes from the selling of sand. Judge has to see through the arguments – and punish him. Of course , the IT and RBI need to corroborate with evidences .
If Demo is such a horrible thing, put people into difficulties – why should BJP do it ? . Despite the difficulties – why the people are voting for bringing such draconian law?
Dear KM sir,
can you please do a self assessment, and analyse yourself that what went wrong, and where you make mistakes about BJP’s power.
ஏதாே ஒரு வட்டத்திற்குள் ….! மனம் வேதனை பட்டாலும் …வேறு என்ன செய்வது ….. ? // நம் வலைத்தளத்தின் வழக்கம்போல் – நாகரிகமான முறையில்….! //
I have only one point to make. The very fact that BJP got lesser seats compared to previous elections and congress divisive & doling out freebie agenda got traction, does not augur well for the country. The Gujaratis(Sizable chunk) has forgotten good deeds of Modi did to Gujarat. They trusted non-performing congress.
This is no way to Say BJP is perfect. They are best choice at the moment.
KM sounds neutral, but i see he has particular hatred towards BJP. Also I read KM suggesting, implicitly, Congress could have been better from all his posts. I am afraid.
The congress leadership is pathetic. Please listen to his speeches where he does not even know if Bangalore is state or City. I am sure he does not iota of idea of what running a country is like. Not that Modi knows everything, he has considerable experience governing and common sense.
Rahul and Congress are pure rhetoric, while BJP has to counter. For instance, Congress started campaigning in Gujarat early and set the casteist agenda. BJP had to counter, though in not so nice manner, Rahul claimed, BJP stopped talking about Development
Tamilnadu defeated Kamraj and still losing out. The day Modi loses, the nation loses. I am 99.99% sure Rahul is not even going to be 0.01% of Modi.
Indian public has least memory. I am afraid, some day, DMK and Congress will rule(read loot) again together
I hope KM sir respond to this feedback.
Incidentally today, when 3 three young leaders (?) were on a TV, two of them used a very foul language , that’s the caliber of these young leaders. KM sir understand hindi , I hope he follows them.
சுந்தர ராமன்,
//two of them used a very foul language , that’s the caliber of these young leaders. KM sir understand hindi , I hope he follows them.//
நீங்கள் இதை இங்கு சொல்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்
என்பது எனக்கு தெரியவில்லை.
இருந்தாலும், நீங்கள் இது குறித்து என் கருத்தை கேட்பதாக நினைத்து
உங்களுக்காக (மட்டும்) சுருக்கமாக என் கருத்தை சொல்கிறேன்.
இவர்கள் பேசியது எனக்கு உங்களுக்கு பரிச்சயமாக இருக்கக்கூடிய ஒரு சொல்லை நினைவுபடுத்துகிறது….
“யதா ராஜா – ததா ப்ரஜா…..”
அதாவது – தமிழில் –
அரசன் எவ்வழி – குடிமக்கள் அவ்வழி…!!! 🙂 🙂
————————————————————————————————————
ஆமாம்… மேக்வானி சொன்ன கருத்தில் எதை தவறு என்று நினைக்கிறீர்கள்..? கொஞ்சம் விளக்குங்களேன்…
உங்கள் தலைவர் அவரது முன்னோடிகளான அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி போன்றோருக்கு என்ன செய்தாரோ, அதைத்தானே இவரையும்
செய்யச்சொல்கிறார் ….? 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Noted sir.
ராமநாதன்,
உங்களுக்கான விளக்கத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கொஞ்சம் …… காத்திருக்கவும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Thank you sir