1955 – ஆம் வருடத்திய அற்புதமான இந்தி பாடல் ஒன்று….!!! ( என் விருப்பம் – 16 )


அநாதை இல்லம் நடத்தும் பால்ராஜ் சஹானி – தனது
திக்கற்ற துணைகளுடன் சேர்ந்து பாடும் ஒரு அற்புதமான பாடல் –
1955-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி திரைப்படம் “சீமா” விலிருந்து…
“மன்னா டே” பாடுகிறார்… ஷங்கர் ஜெய்கிஷன் இசையமைப்பு…

..


..

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது …..
62 ஆண்டுகள் கடந்தும், இதற்கீடான மற்றுமொரு இந்தி பாடல் இன்னும்
வெளிவரவில்லை…

” நீ கருணையின் கடல் அல்லவா ” என்று துவங்கும் –
சோகமும், பிரார்த்தனையும் இழைந்த –
நெஞ்சை உருக்கும் இந்த பாடலை இன்று நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன்.

(மொழி தெரியாதவர்களுக்கும் இந்த பாடல் பிடிக்கும்….! )

“சீமா” என்கிற இந்த இந்தி திரைப்படம் – 1957-ஆம் வருடம்
இரண்டு தேசிய விருதுகளை அதனை ஆக்கியவர்களுக்கு பெற்றுத் தந்தது…

சிறந்த கதைக்காகவும், சிறந்த நடிப்பிற்காகவும் – ( நாயகி – நூடன்…)

….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to 1955 – ஆம் வருடத்திய அற்புதமான இந்தி பாடல் ஒன்று….!!! ( என் விருப்பம் – 16 )

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஞாயிறு இரவு ஒரு மணிக்கு இந்த பாடலை, பதிவேற்றும்போது, மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்… நான் 12 வயதிலிருந்து மீண்டும் மீண்டும் பலமுறை கேட்ட பாடல்….!நடு இரவின் அமைதியில் இந்தப்பாடல் ஒலிக்கும்போது
    மனதை உருக்குகிறது…

    இறைவனை நினைக்க, இசையை விட சிறந்த வடிவம் வேறு எதுவும் இருக்க முடியாதென்றே தோன்றுகிறது.

    .
    -காவிரிமைந்தன்

  2. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    Audio blocked.

  3. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    இது Block செய்யப்பட்டுள்ளது

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      தமிழன், CVS –

      Blocked என்று காட்டும் அதே இடத்தில் தெரியும்
      watch on youtube என்கிற இடத்தில் க்ளிக் செய்தீர்களானால்,
      அது உங்களை பாட்டுக்கு இட்டுச் செல்லும்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

    but you can try search with the song name and moive name…you get it. only this link is not working

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.