இந்த சிந்தனையை வரவேற்போம்…….!!!




இந்த சிந்தனையை வரவேற்போம்…….!!!

நாம் ஏற்கெனவே சொல்லி வரும் விஷயம் இது….

எனவே, கட்சி எதுவாக இருந்தாலும் சரி …
சொல்வது யாராக இருந்தாலும் சரி ….
இந்த சிந்தனை வலுத்துக் கூறப்படுவது –
இன்றைய தினத்தில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று….
வரவேற்போம்… !!!
( இது எந்த கட்சிக்கும் நமது ஆதரவை தெரிவிப்பதாகாது…
பொதுவாக இத்தகைய சிந்தனை வலுப்பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்….)

————————————————————————————–

அவர்கள் மக்களின் குரலை ஒடுக்குகின்றனர். நாம் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வோம். அவர்கள் அவதூறு பரப்புகின்றனர். நாம் அவர்களுக்கும் மரியாதை அளிப்போம். பாதுகாப்போம்.

ஒரு முறை நெருப்பை பற்றவைத்துவிட்டால், அதை அணைப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். நாட்டுக்கு தீ வைத்துவிட்டால், அதை அணைப்பதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். நாடு முழுவதும் பா.ஜ.க வன்முறை தீயைப்
பற்றவைத்துள்ளது.

அவர்கள் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். நாம் ஒற்றுமையை வளர்ப்போம்.

அவர்கள் தீயை பற்ற வைக்கின்றனர். நாம் அதை அணைப்போம்.

மத்தியில் ஆளும் பாஜக தனது சுயநலனுக்காக போராடுகிறது. நாம் இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் போராடுவோம்.

நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ விரும்புகிறோம். ஆனால் அவர்கள் மக்களை பழங்காலத்துக்கு பின்னோக்கி
அழைத்துச் செல்கின்றனர். அறிவு, அனுபவம் ஆகியவற்றை புறந்தள்ளிவிட்டு, தனது பேச்சுக்கு மட்டுமே சக்தி உள்ளதாக அவர் கருதுகிறார்.

இன்று நாம் காணும் அரசியல் களம் நம்மை விரக்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

இன்றைய அரசியல் இரக்கமற்றதாகவும் உண்மையற்றதாகவும் இருக்கிறது. மக்களின் முன்னேற்றத்துக்காக அல்லாது மக்களை நசுக்கும் விதத்திலேயே அரசியல் செய்யப்படுகிறது.

அரசியல் என்பது இப்போது மக்களுக்கு உடையதாக இல்லை. அதிகார கட்டமைப்பை எப்போது எதிர்க்கத் துணிகிறீர்களோ அப்போது நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறீர்கள். உங்களை பலவீனப்படுத்த பொய் உரைக்கின்றனர்….பிரச்சினைகளை திசை திருப்புகின்றனர்…

இங்கே ஒரே ஒருவரின் குரல்தான் அர்த்தமுள்ளது;
அந்தக் குரலுக்கு அத்தனை பேரும் கீழ்ப்படிந்தாக வேண்டும்.
இப்படித்தான் நாம் இன்று பழக்கப்படுத்தப்படுகிறோம்.

ஒரு தனிநபரை வலுவானவராக்க தேசத்தின் வெளியுறவு கொள்கைகள்
சுக்குநூறாகிக்கிடக்கின்றன.

இந்திய மக்களின் குரலை நசுக்க விடமாட்டோம் என நாம் சூளுரைப்போம்.

இந்தியாவை அன்பும் சகோதரத்துவம் பிணைந்த நாடாக உருவாக்க நாம் இணைந்து செயல்பட வேண்டும். ஆத்திரத்தை அடிப்படையாக கொண்ட அரசியலுக்கு எதிராக வலுவுடன் போராடி, அதை தோற்கடிக்க வேண்டும். அவர்கள் வெறுப்பையும்,
வேற்றுமையையும் திணிக்க முயல்கிறார்கள். நம் குரல் அன்பும், பாசமும் கலந்ததாக இருக்க வேண்டும்.

அன்பும் கருணையும் கொண்ட இந்தியாவை உருவாக்க அனைவரும்
திரண்டுவர வேண்டும்.

——————————————————————————————————————

பின் சேர்க்கை ( 05.15 pm )

காலையில் ஆங்கில செய்தித்தாளில் படித்தபோது, இதை அவசியம் எழத
வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். ஆனால், பிற்பாடு, வலையிலிருந்து
செய்திகளை தமிழில் சேகரித்து எழுதியபோது, இதைத்தவற விட்டு விட்டேன்.

ஆனால், ஏற்கெனவே இடுகையை படித்து விட்டவர்கள் தவற விடக்கூடாதே
என்று இப்போது அங்கும் குறிப்பெழுதி இருக்கிறேன்.

இந்த கருத்தை ஆங்கிலத்தில் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்கள்….
மிக முக்கியமாக சொல்ல வேண்டிய அற்புதமான கருத்து இது –

We wish to take India into the 21st century
while the Prime Minister today is taking us backwards,
to a medieval past –

– where people are butchered
because of who they are,

– beaten for what they believe and

– killed for what they eat.

This ugly violence shames us in the world.
Our country, whose philosophy and history is born out of love and compassion –
– is tarnished by such horror –

and no amount of hugs
can repair the damage done to this great country.

——————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to இந்த சிந்தனையை வரவேற்போம்…….!!!

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    Well done Rahul really appreciate.

    மோடிக்கு இந்த மாதிரி நாமும் பேசனுமேன்னு இருக்கும்.

    இன்றைக்கு talk of India இந்த பேச்சு தான். குழந்தைன்னு கிண்டல் செய்யப்பட்டவர் நமக்கு பாடம் நடத்துகிறார் போல் அற்புதமாக அதே சமயம் நம்மிடம் இல்லாத நற்குணங்களோடு வெளிப்பட்டிருக்கிறாரே என்ற கோபத்தில் எதுவும் செய்யாமல் இருக்கனும்.

  2. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    கே.எம். சார்,

    உண்மை. நான் கூட அசந்து போய் விட்டேன்.
    மிகப் பிரமாதமான ஒரு துவக்க உரை. அவரே உருவாக்கி இருந்தாலும் அல்லது
    அவருக்காக வேறு யாராவது உருவாக்கித் தந்திருந்தாலும் கூட,
    நீங்கள் சொல்லி இருப்பது போல் இந்த நேரத்திற்கு தேவையான சிந்தனை.
    தேசத்திற்கு தேவை ஒற்றுமையும், அமைதியும், வளமும் தான்.
    ஒரே மதம், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே தலைவன் என்கிற சிந்தனை
    முற்றிலும் ஆபத்தானது. இந்த நாட்டை பிளவுபடுத்தக் கூடியது.

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    காலையில் ஆங்கில செய்தித்தாளில் படித்தபோது, இதை அவசியம் எழத
    வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். ஆனால், பிற்பாடு, வலையிலிருந்து
    செய்திகளை தமிழில் சேகரித்து எழுதியபோது, இதைத்தவற விட்டு விட்டேன்.

    ஆனால், ஏற்கெனவே இடுகையை படித்து விட்டவர்கள் தவற விடக்கூடாதே
    என்று இப்போது அங்கும் குறிப்பெழுதி இருக்கிறேன்.

    இந்த கருத்தை ஆங்கிலத்தில் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்கள்….
    மிக முக்கியமாக சொல்ல வேண்டிய அற்புதமான கருத்து இது –

    We wish to take India into the 21st century
    while the Prime Minister today is taking us backwards,
    to a medieval past –

    – where people are butchered
    because of who they are,

    – beaten for what they believe and

    – killed for what they eat.

    This ugly violence shames us in the world.
    Our country, whose philosophy and history is born out of love and compassion –
    – is tarnished by such horror –

    and no amount of hugs
    can repair the damage done to this great country.

  4. Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

    Well it may be easy for RG to read out a sentence or two written by others , but it would be very difficult for him to look at the past as to what was the situation in congress rule . Introspection is NIL for RG. You have posted great videos, speach , articles – many of them are treasures, but u have come to post this RG speach as great. I can only say sorry

    Congress has cheated the hindus , just to get votes from minority community. In Gujarat , again cheated ( or not talked about them ) the minority to get Hindu votes . And you quote him as great scholar, learned man, etc., . Kerala and Karnataka is not ruled by BJP , doesn’t the hate crimes takes place there , how many Hindu’s were killed , or it doesn’t matter for him ? ( and to you also ). Much before, even before BJP came in to the picture – there were riots in Ahmedabad, Meerat, Bhagalpur, ( Bihar, UP, ) and many other places . You did not post a anniversary post for Vemula , please go ahead and complete that as well.

    There is no one food or one tax or one religion in India, no body claims – if some one has said like that please quote . The so called GST has replaces so many tax like excise, sales tax, octroi etc., It has reduced the travel time for the truck drivers, reduced the corruption . No standing / waiting to clear the octroi gates . All the people eat all kind of things , in the west , people are realizing that , too much of meat is not good for their health, country , environment etc., whereas beef festival was celebrated in parts of India. Please read pasumai vikatan, where benefits of pancha kavya, and natural farming is encouraged . Why add religious tone to such calls.

    Minority place of worship are maintained by them only, Govt never interfere with them, whereas Hindu place of worship are available for free play . ( even Nasthika decide what to do or what not to do in some temples ). Christian institutions have large assets, receives enormous donation, and top of that some time they try to influence the voting public.

    I have already said , Modi is not that strong at all in taking action – against corrupt politicians . It is not enough if you are corrupt free – but have to punish everyone who is corrupt.
    Modi still gives a feeling that he is afraid of Delhi ( journalists , bureaucrats , and power brokers ). He did stop some lobbying , but not enough .
    It should be easy for him to negotiate with the west and get the corrupt people like Lalith Modi and Mallaya , if they don’t co-operate , name and shame those Governments .
    Koda is put in jail only for 3 years – not enough. ( of course, the sentence is given by the court, Govt will have to recover the assets and strip off his passport and properties ) .

    Congress is paying back for their sins to treat the minority as vote banks. Minority have to realize that they have been taken for a ride by Congress .Karma is catching up with them.

    • நெல்லைத்தமிழன்'s avatar நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

      மதவெறியர்கள் நிறைந்த கட்சி பாஜக.
      அதற்கு இவரே ஒரு உதாரணம்.
      ” மோடி பக்த் ” “மோடி அடிமை ” என்கிற term ஏன் உண்டானது என்பதை
      உணர்வதற்கும் இவர் மறுமொழி பெரிதும் உதவியாக இருக்கீறது.

      இந்த மாதிரி ” வெறியர்களை ” அடக்குவதற்காகவாவது பாஜக அல்லாத
      கட்சிகள் அனைத்தும் ஒன்று சேற வேண்டும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      சுந்தரராமன்,

      மதங்களுக்கிடையே விரோத உணர்வை கிளப்பும் வகையில் இங்கு யாரும் பின்னூட்டம் எழுத வேண்டாம்
      என்று பலமுறை நான் கூறி இருந்தும் மீண்டும் மீண்டும் நீங்கள் மததுவேஷ கருத்துகள் நிரம்பிய பின்னூட்டங்களையே
      எழுதி வருகிறீர்கள்.

      அரசியலில் மாற்றுக் கருத்துகளை நீங்கள் தாராளமாக இங்கே எழுதலாம்.
      ஆனால், இந்த தளத்தை, மதங்களிடையே பிளவுகளை தூண்டவோ,
      பாஜக /ஆர்எஸ்எஸ் பிரச்சார மேடையாகவோ மாற்ற முயல்வதை நான் அனுமதிப்பதற்கில்லை.
      இனியும் நீங்கள் தொடர்ந்து அப்படி எழுதினால், உங்கள் பின்னூட்டங்கள் இங்கு இடம் பெற மாட்டா…
      நீக்கப்படும் என்பதை உணரவும்.

      .
      -காவிரிமைந்தன்

  5. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    // கலிபோர்னியாவில் ராகுல் காந்தி… எங்கே தவறு…?
    Posted on செப்ரெம்பர் 14, 2017 by vimarisanam – kavirimainthan // என்ற இடுகையிலும் மற்றும் நியூயார்க்கில் உரையாற்றும் போதும் அவரது ” தெளிவான ” சிந்தனை வெளிப்பட்டது // நியூயார்க்கில் ராகுல் காந்தி உரை | 20.09.2017 // http://tncc.org.in/rahulgandhi-at-newyork-on-20092017/ இந்த உரையின்போது அனைத்து துறைகளைப்பற்றியும் கூறியது அவரின் உற்று நோக்கும் தன்மையை வெளிப்படுத்தியது —

    மேலும் // எப்படி நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்று உலகுக்கு எப்போதும் இந்தியா காட்டி இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நல்லிணக்கத்துக்கும் அமைதிக்கும் இந்தியா புகழ்பெற்று விளங்கி இருக்கிறது. இப்போது அதற்கு சவால்கள் உருவாகி இருக்கின்றன. சில சக்திகள் இந்தியாவை பிளவுபடுத்துகின்றன, அது இந்தியாவிற்கு பேராபத்தாகும், அவைகள் இந்தியாவின் புகழை உலக அரங்கில் சீர்குலைத்துவிடும். // என்றும் கூறியது தற்போது நம் நாட்டின் நிலையை நன்கு உணர்ந்திருப்பது தெரிந்தது ….

    வெறும் பேச்சோடு நில்லாமல் செயலிலும் காட்டினால் நாட்டிற்கு நல்லது — பிரிவினை வாதம் என்பதும் — ஒரு வட்டத்திற்குள் நாட்டை திணிக்காமல் – பாரதம் என்பது ” யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் ” என்பதையும் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது – காலம்தான் பதில் கூறனும் …. !!!

  6. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இது பிரபல எழுத்தாளர் மாலன் அவர்கள்,
    தனது facebook-ல் எழுதி இருப்பது –

    இதை நான் ஒரு impartial கருத்து என்று கருதுவதால் –
    விமரிசனம் தள நண்பர்களின் பார்வைக்காக முன்வைக்கிறேன் –

    —————————————————————-

    அன்றுதான் அவரை முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கிறேன். வெள்ளை வெயிலைப் போல பளீரென்றிருந்த குர்த்தாவை முழங்கை வரை வழித்து விட்டிருந்ததில் ஓர் அலட்சியம் தெரிந்தது. இளைஞர்தான். ஆனால் தலையில் வழுக்கை தொடங்கியிருந்தது.அன்று காலை தோட்டத்தில் பூத்த ரோஜாப்பூவைப் போன்ற நிறத்தில் ஃபிரஷ்ஷாக இருந்தார். ஆனால் அவர் தந்தையிடமிருந்த வசீகரம் இல்லை. காரணம் அவர் தந்தை அணிந்து கொள்ளும் புன்னகை இவரிடம் இல்லை. வெளிப்படையாகச் சொன்னால், அவர் என்னிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் ராகுல் காந்தி

    இலங்கை பிரச்சினை உச்சத்தில் இருந்த நேரம். அதைப் பற்றிப் பேசத் தொடங்கினோம். என்ன செய்யலாம் என்றார். நாம் ஏன் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கூடாது. என்றேன். நொடி நேரம் திகைத்தார். யோசிக்கிறேன் என்றார். ஆண்டுகள் பல போயின. ஆனால் எதுவும் நடக்கவில்லை.பெரிதாக ஏதோ நடந்துவிடும் என்ற எதிர்ப்பார்ப்பும் எனக்கு இல்லை. ஆனால் அந்தப் பிரசினையின் பக்கம் அவர் கவனம் திரும்பும் என்று நினைத்தேன்.அப்படித் திரும்பியதற்கான சமிஞ்கைகள் ஏதும் கிடைக்கவில்லை. வருத்தப்படவில்லை. ஆனால் ஏமாற்றமாக இருந்தது

    நான் தொடர்ந்து அவர் பேச்சுக்களையும், செயல்களையும், பயணங்களையும், திடீர் திடீர் என்று காணாமல் போவதையும் கவனித்து வந்தேன். நாடாளுமன்றத்தில் அவர் குரல் அதிகம் ஒலிக்கவில்லை. பத்தாண்டுகளில் ஆறுமுறைதான் பேசினார். அந்த ஆறாவது உரையில் “இது பூட் –கோட் சர்க்கார்” என்று அதிரடியாக அவர் முழங்கிய போது, ‘அட!’ என்று வியப்பால் என் புருவங்கள் உயர்ந்தன. தில்லிப் பத்திரிகையாளர்களிடம் உரையாடும் போது அவரைத் தயக்கம் நிறைந்த இளவரசர் என்று வர்ணித்தார்கள்

    இளவரசர் இந்த வாரம், 132 ஆண்டுகள் தாண்டிவிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக முடி சூட்டப்படுகிறார். அந்தக் கட்சிக்கு அவரது குடும்பத்திலிருந்து தலைமை ஏற்கும் ஆறாவது நபர் இவர். உலகில் எந்த ஒரு கட்சியிலும் இது போன்று ஒரே குடும்பத்திலிருந்து ஆறு பேர் கட்சித் தலைமைப் பதவியில் அமர்ந்ததில்லை.

    ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவி என்பது முள்முடி. அதிலும் நேரு குடும்பத்தின் வாரிசு என்பது இன்றையச் சூழலில் சாதகமானதல்ல. அது கழுத்தில் சூடிய மாலையல்ல, காலைக் கட்டிப் போட்டிருக்கும் சங்கிலி. முப்பாட்டன் காலத்தில் செய்த தவறுகளுக்கு இவர் இன்று பதில் சொல்ல வேண்டிவரும்.

    காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்கும் ராகுல் காந்தியின் முன்னுள்ள சவால்கள் என்ன?

    பெரும் சவால் கட்சி. 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின் வரிசையாகத் தோல்விகள். அதன் காரணமாக மன ஊக்கம் குன்றிய தொண்டர்கள். அமைப்பு கலகலத்துப் போயிருக்கிறது. அதற்குப் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்.

    ஒவ்வொரு புதிய தலைவர் வரும் போதும் அவர்கள் கூட ஒரு புதிய படை வரும். எல்லாக் கட்சிகளிலும் அதுதான் வழக்கம் என்ற போதிலும் காங்கிரசில் பழையவர்களை முற்றிலுமாக ஒதுக்கி விட்டு புதியவர்களை அந்த இடத்தில் அமர்த்துவது எளிதல்ல.

    பாஜகவில் மோடி யுகம் தொடங்கிய போது அவர் மூத்த தலைவர்களான, அத்வானி, ஜோஷி, யஷ்வந்த் சின்கா போன்றவர்களை எளிதாக ஓரம் கட்ட முடிந்தது. அதற்கு ஆட்சி கையில் இருந்ததும், ஆர்.எஸ்.எஸ். அனுசரணையாக இருந்ததும் காரணம்.

    ஆனால் ராகுலுக்கு அது போன்ற சாதகங்கள் இல்லை. ராகுலும் தனக்கு உதவக்கூடிய சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்யா சிந்தியா போன்றவர்களை வளர்த்து வந்திருக்கிறார் என்றாலும் முதியவர்களிடம் மோதல் இல்லாமல் பொறுப்பை மாற்றிக் கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. குஜராத் தேர்தல் நேரத்தில் தரம் தாழ்ந்து பேசிய மணி சங்கர் ஐயரை இடை நீக்கம் செய்திருப்பது போன்ற அதிரடியான நடவடிக்கைகளை எல்லோர் மீதும் எடுக்க முடியாது.

    அவரது இரண்டாவது சவால் வரவிருக்கும் தேர்தல்கள். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன், அடுத்த ஆண்டு, அதாவது 2018ல், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. இதில் கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்து கொண்டு தேர்தலைச் சந்திக்கும் சூழல்.அங்கேயும் மற்ற 3 மாநிலங்களிலும் கடும் போட்டி கொடுக்கக் கூடிய நிலையில் பாஜக.

    இப்போது நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் காங்கிரசின் அணுகுமுறையில் மாற்றங்கள் தெரிந்தன. இந்திரா காந்தி காலம் போல, ஜாதி அரசியலில் இறங்கியது காங்கிரஸ். தலித், சிறுபான்மையரது வாக்குகள் இந்திராவின் காலத்தில் அதற்குக் கை கொடுத்தன. இப்போது அவற்றுடன் பிற்பட்ட வகுப்பினரது வாக்குகளையும் ஈர்க்கும் நடவடிக்கையை அது குஜராத்தில் மேற்கொண்டது. இது போன்ற அணுகுமுறைகள் பலன் கொடுக்கும். ஆனால் அவை குறுகிய காலத்திற்கு மட்டுமே.
    நீண்ட காலப் பலன்களுக்கு நாங்கள்தான் மோடிக்கு மாற்று என்று திட்டங்களை முன் வைத்து ஆக்கபூர்வமாகப் பேசுவதே உதவும்

    மூன்றாவது சவால் பாஜகவிற்கு எதிராக, மற்ற எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைத்தல். அப்படிச் செய்தால் மட்டுமே 2019ல் ஆட்சியைப் பிடிக்க முடியும்.
    ஆனால் அது எளிதல்ல. கம்யூனிஸ்ட்களை இழுத்தால் மம்தா ஒதுங்கிவிடுவார். அகிலேஷை இழுத்தால் மாயாவதி விலகிவிடுவார். வேறெதைக் காட்டிலும் இதில்தான் ராகுலின் சாணக்கியத்தனம் தெரியவரும்

    மத்திய தர வர்க்கத்தில் இன்று மத்திய அரசின் மீது ஏமாற்றமும், அதிருப்தியும் நிலவுகிறது.

    ஆனால் அது காங்கிரசிற்கு ஆதரவாக மாறுமா அல்லது ஆங்காங்குள்ள மாநிலக் கட்சிகளுக்கு சாதகமாக ஆகுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதைக் காங்கிரசிற்கு ஆதரவாக மாற்ற, தெளிவான திட்டங்களும், துணிச்சலாக ஆளும் கடசியை விமர்சிக்கும் திறனும் வேண்டும்.

    குஜராத்தில் அதை காங்கிரஸிடம் காண முடிந்தது. அதைப் போன்று, ஆனால் அதை விடப் பன்மடங்கு வலிமையாகவும் திறமையாகவும், இயங்க முடிந்தால் ராகுல் அரசியலில் நிலைக்க முடியும்.

    நேரு இந்திரா நிழலிலிருந்து தயக்கம் நிறைந்த இளவரசர் வெளிவந்தால் மட்டுமே அவரால் இந்த சவால்களை எதிர்கொள்ள முடியும்.

  7. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    மாலனின் இந்த பதிவு உண்மையில் நடுநிலைதான் …!

  8. Letskeepsourfingercrossed's avatar Letskeepsourfingercrossed சொல்கிறார்:

    all the so called secular parties united against BJP.All medias were brain washing the peoples that demonetization is a national economic disaster, and also against the GST .
    But i earlier believed that the media is echoing the peoples mind.But now i clearly understand that they area far away from the peoples mindset.They are writing articles without getting the peoples feedback on these views.
    Its a utter shame on those secular medias again, including KM sir.
    They have to get the feed back directly from the majority of the peoples instead of assuming their grievance as the national grievance
    Its a shame.They have to answer for the victory of the BJP, instead of crying again and again.
    we are tired of looking at your tears

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      உங்கள் கருத்து எனக்குப் புரியலை. டிமானிடைசேஷன் எந்தப் பயனும் விளைவித்த மாதிரி எனக்குத் தெரியலை. கொஞ்சம் சர்காஸ்டிக்கா சொல்லணும்னா, அதுனால பாஜக பயன் பெற்றதோன்னு எனக்கு சந்தேகம் (கறுப்பை வெள்ளையாக்கியது). எல்லா புது 2000 நோட்டுக்கள் பிடிபட்டது பாஜக பிரமுகர்களிடம்தான். ஆர்பிஐ எண்களைக் குறித்துவைக்காமல் சர்குலேட் செய்தோம் என்ற காமெடி செய்ததும் இந்த ஆட்சியில்தான். (ஆனால் ஜிஎஸ்டி நல்லதுதான், இன்னும் சில மாறுதல்கள் தேவை).

      இன்றைக்கு ஆட்சியைப் பிடித்தது மிகவும் கஷ்டப்பட்டுத்தான். இதைப்பற்றி நீங்களே வாக்கு எண்ணிக்கை, எந்தக் பகுதியில் எதிர்ப்பு அதிகம் என அனலைஸ் செய்து முடிவுக்கு வரலாம். (இருந்தாலும் தொடர்ந்து மாநிலத்தைத் தக்கவைத்துக்கொண்டது சாதனைதான். இதனை மாறுதலாகவும் சொல்லலாம். டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி இரண்டும் குஜராத் மக்களினால் வரவேற்கப்பட்டால் முன்பு பெற்ற வெற்றியைவிட மிக அதிகமாக, 150ஆவது பெற்றிருக்கவேண்டுமல்லவா?)

      அதற்காக, மோடி அவர்களின் அரசை விமரிசிக்க என்ன தடை? தவறு யார் செய்தாலும் தவறுதான். தேர்தல் வெற்றி தவறுகளை மறைக்காது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.