தினமலர் கூறும் “நிஜம்” ….


அபூர்வமாக வெளிப்படும் நிஜங்களில் ஒன்று ….

—————————————————————————

மோடிஜி பிரதமராக டெல்லியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்,
10 மாதங்கள் கழித்து, நாம் இதே தளத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தோம்.
அதிலிருந்து சில பகுதிகளை இங்கே தருவது பொருத்தமாக இருக்குமென்று
நினைக்கிறேன்….

————————

1) சாதனை என்று குறிப்பிட முடியா விட்டாலும்,
நாட்டின் வளர்ச்சி குறித்த, முக்கியத்துவம் வாய்ந்த சில முடிவுகள்
மோடிஜி அரசால் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவை நல்ல முறையில் செயல்படுத்தப்படுமேயானால் – அவை எதிர்காலத்தில் மோடிஜிக்கு பெருமை தேடித்தரலாம்.

2) குஜராத்தைப் பொருத்த வரை –

– மோடிஜி பிரதமராக பொறுப்பேற்றவுடன் செய்த முதல் காரியம்
நர்மதா அணையின் உயரத்தை மேலும் 12 மீட்டர்கள் உயர்த்த
அனுமதி கொடுத்து, குஜராத் மேலும் நீர்வசதி பெற வழி வகுத்தார்.

– சீனப்பிரதமரை குஜராத் -தலைநகரத்திற்கு வரவழைத்து,
அதன் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.

– அகில உலக முதலீட்டாளர்கள் சங்கமத்தை குஜராத் தலைநகர்
அஹமதாபாதில் நிகழ்த்த பெரும் அக்கறை கொண்டு உதவினார்.

– சீன உதவி, முதலீட்டுடன் குஜராத்தின் தலைநகர் அஹமதாபாதை மும்பையுடன் இணைக்க “இந்தியாவின் முதல் புல்லட் ரயில்” திட்டம் நிறைவேற பெருமுயற்சி எடுத்திருக்கிறார்.

– 2024 ஒலிம்பிக்ஸ் போட்டியை அஹமதாபாதில் நிகழ்த்த
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் ஒப்புதலைப்பெற முழுவேகத்தில்
முயன்று வருகிறார்.

ஆக – பெரும்பாலும், தன்னை “குஜராத்தின் பிரதமர்” என்கிற நினைப்பில் இருத்திக் கொண்டே செயல்படுகிறாரே தவிர –

“இந்தியப் பிரதமர்” என்கிற நினைப்பு பெரும்பாலும் அவருக்கு
அயல்நாடுகளில் பயணம் செய்யும்போதும், வெளிநாடுகளின்
தலைவர்கள் இந்தியா வரும்போதும் தான் வருகிறது.

தமிழ் நாட்டைப் பொருத்த வரை –

தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இந்தியாவில் இருப்பதாகவே
அவர் கருதுவதாகத் தெரியவில்லை. தனக்கும், தன் கட்சிக்கும்
ஓட்டுப்போடாத மாநிலம் – என்கிற வெறுப்புணர்வு நிரந்தரமாகவே
அவர் மனதில் இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த 10 மாதங்களில் தமிழ்நாட்டிலிருந்து முன்வைக்கப்பட்ட
எந்த கோரிக்கைகளும் அவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை விடவும் –
உதாசீனப்படுத்தப்படுகிறது என்பது தான் சரியாக இருக்கும்.
வேண்டுகோளை அப்படியே ஏற்க வேண்டும் என்பது அவசியமில்லை…
குறைந்த பட்சம் – ஒரு பதில் –
இன்னின்ன காரணங்களில் ஏற்க முடியாத நிலையில்
இருக்கிறோம் என்று … ஊஹூம்.
எந்த கோரிக்கைக்கும், எந்த கடிதத்திற்கும் – பதிலே இல்லை.

—————————————————————————-—–


Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to தினமலர் கூறும் “நிஜம்” ….

  1. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    // தமிழ் நாட்டைப் பொருத்த வரை -தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இந்தியாவில் இருப்பதாகவே
    அவர் கருதுவதாகத் தெரியவில்லை. தனக்கும், தன் கட்சிக்கும்
    ஓட்டுப்போடாத மாநிலம் – என்கிற வெறுப்புணர்வு நிரந்தரமாகவே
    அவர் மனதில் இருப்பதாகத் தெரிகிறது. // இது போல ஒரு வெறுப்பு மத்தியில் ஆண்ட காங்கிரஸாருக்கு ” குஜராத்தின் பேரில் ” இருந்திருந்தால் — குஜராத் வளர்ச்சி என்ற ஒரு விளம்பரம் என்னவாகியிருக்கும் …?
    தமிழ்நாடு என்பதே இரு தேசிய கட்சிகளுக்கும் வேப்பங்காயாவே இருந்திருக்கிறது — கலைஞர் முதல்வர் என்றால் ஓரளவு செய்தவர்கள் — ஜெயா என்றால் தி.மு.க.கூட்டணி தர்மம் என்பதை கைக்கொண்டு எந்தளவுக்கு வஞ்சித்து முட்டுக்கட்டைகள் போட முடியுமோ அந்தளவுக்கு செய்தவர்கள் தான் …
    சுனாமியின் போதும் — தானே புயலின் போதும் கண்கூடாக கண்ட உண்மைதானே … எந்த ஒரு திட்டத்திற்கும் ஏதாவது ஒரு காரணம் காட்டி தாமத படுத்துவதும் — நிதி வழங்காமல் புறக்கணிப்பதும் தானே இவர்களது செயல் — தமிழ் நாட்டின் தலையெழுத்து ….?

  2. sundar Kannan's avatar sundar Kannan சொல்கிறார்:

    You mentioned “Chinese” prime minister instead of “Japanese” prime minister.
    Forgive me, if it is wrong.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      சுந்தர் கண்ணன்,

      முதலில் அப்போது சீன பிரதமர் தான் வந்தார்.
      மோடிஜி அவரை நர்மதா நதிக்கரைக்கு அழைத்துச்சென்று
      “ஊஞ்சல்” ஆடினாரே… மறக்க முடியுமா…?

      ஜப்பானிய பிரதமர் பிறகு வந்தார்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்திராகாந்தி காலத்துக்குப்பின், (அதுவும் காமராஜர், அவர் லெப்டினன்ட் ஆர்.வெங்கட்ராமன் போன்றோரின் முயற்சியால் தொழிற்சாலைகள் பல தமிழ்நாட்டிற்கு வந்தது) தமிழ்நாட்டின் பிரச்சனைகள்மீது மத்திய அரசின் பார்வை, ஆதரவு இருந்ததே இல்லை.

    தினமலரில் கார்ட்டூன் காலையில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ஒருவேளை ரிசல்ட் முன்பின் வந்தால் நழுவுவதற்கு உபயோகமாக இருக்கும் என்று போட்டிருப்பார்கள் என அனுமானித்தேன்.

    ஜல்லிக்கட்டு பிரச்சனையில் மத்திய அரசு கொஞ்சம் உதவியது. இருமாநிலப் பிரச்சனை எதிலும் எந்த மத்திய அரசும் உதவ்வில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.