…
…
திரு.யோகேந்திர யாதவ் -ஐ தமிழர்கள் மறந்திருப்பார்கள்…
தலைப்புச் செய்திகளில் அதிகம் அடிபடுவதில்லை..
அன்னா ஹஜாரே அவர்களுடன்,
கெஜ்ரிவாலுடன் India Against Corruption போராட்ட சமயங்களில்
நிறைய செய்திகளில் வந்தவர்.
அவரும் நீண்ட காலமாக தேர்தல் முடிவுகள் பற்றிய
புள்ளிவிவரங்களை அலசும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தவர்…
இந்த துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்.
நேற்று டெல்லி தொலைக்காட்சிகளில் குஜராத் எக்சிட் போல் முடிவுகள்
வெளிவந்தன… சொல்லி வைத்தாற்போல் அனைத்துமே பாஜக
ஆட்சியை பிடிக்கும் என்று தான் கூறின. எண்ணிக்கையில் தான்
வித்தியாசம் இருந்தது.
ஆனால், யோகேந்திர யாதவ் ஒரு வித்தியாசமான முடிவை
எதிர்பார்த்தார்….!!! பாஜக தோற்கும் என்று கணிக்கப்பட்டிருக்கும் ஒரே
ஒரு pre-result projection…இது மட்டும் தான்….!!!
அநேகமாக இது நிகழ வாய்ப்பில்லை;பாஜக தான் ஆட்சியை பிடிக்கும்
என்பது கிட்டத்தட்ட உறுதியாகவே தெரிகிறது…
இருந்தாலும் – இப்படி இருந்திருந்தால்… எப்படி இருக்கும் என்று
(நினைத்து மட்டும்) மகிழ அதை கீழே தந்திருக்கிறேன்…..
இந்த மகிழ்ச்சிக்கு அற்ப ஆயுள் தான் – திங்கள் காலையில் ரிசல்ட் வரும் வரை தாராளமாக கற்பனையில் திளைத்து மகிழலாம்….!!! 🙂 🙂 🙂
…

…



எக்சிட் Poll Result வைத்துக்கொண்டு ஒன்றும் சொல்லமுடியாது. என் மனதில் தில்லியில் எல்லோரும் சொன்ன Exit Poll Resultம், தமிழகத்துக்கு எல்லோரும் சொன்ன கருத்துக்கணிப்புகளும்தான் நினைவுக்கு வருகின்றன.
ஒரு Scenerio நினைத்துப் பாருங்கள். வெளியே வரும் வாக்காளர்கள், நமக்கு எதுக்கு வம்பு என்று பொய்யான தகவல் கொடுத்திருந்தால்?
அர்னாப் போன்றோரின் கத்தல்களை இரண்டு நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, தேர்தல் முடிவுகள் மாறுதலாகத்தான் வரும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
// தேர்தல்கள் வரும்போது, எதாவது ஒரு கட்சியை,
அல்லது கட்சி சார்ந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க
வேண்டிய அவசியம் வருகிறது. அப்போது எதாவது
சார்பு நிலை எடுத்து தான் ஆக வேண்டும். ஆனால் –
என்னைப் பொருத்த வரை, அந்த சார்பு நிலை அந்த தேர்தலோடு
முடிந்து விடும்.
இப்போது நான் எழுதுவதும் அந்த நிலையில் தான்.
இன்னொரு விஷயம். இந்த ‘விமரிசனம்’வலைத்தளத்தின்
மூலமாக, எந்தக் கருத்தையும் யார் மீதும் நான்
திணிக்க விரும்பவில்லை. என் பார்வையில்,
என் கோணத்தில், எனக்கு சரியென்று தோன்றுவதை
இங்கு வெளிப்படையாகக் கூறுகிறேன். அவ்வளவு தான்.
ஒரு விதத்தில் நான் கொடுத்து வைத்தவன். இந்த வலைத்தள நண்பர்கள்
சுயேச்சையாக, அற்புதமாக சிந்திக்கத் தெரிந்தவர்கள். அதை நான்
நன்கு உணர்ந்துள்ளேன். இந்த தளத்தில் பல இடுகைகளுக்கு வரும்
பின்னூட்டங்களில் நீங்களும் அதைக் காணலாம். இங்கே நான் சும்மா
எதாவது கதை விட்டு விட்டு போக முடியாது. இங்கு பின்னூட்டம் எதுவும் போடாமலே, தங்களுக்குள் ஒரு புன்முறுவலுடன் நகரும் பல அறிவாளிகளையும்
நான் உணர்கிறேன். இந்த தளத்தை – பல கோணங்களில் கருத்துக்களை
பரிமாறிக்கொள்ளும் ஒரு சிந்தனைக்களமாகவே நான் தொடர்ந்து பராமரிக்க விரும்புகிறேன்.// இந்த செய்தி : ஏப்ரல் 10, 2014 by vimarisanam – kavirimainthan அன்றைய இடுகை பதிவில் வந்தது …
பழைய இடுகைகளை படிக்கும் போது கண்ணில் பட்ட உங்களின் கருத்து -நிலை … இந்த காலத்திற்கும் பொருந்துகிறது என்பதால் … வேறு காரணங்கள் ஏதுமில்லை … கருத்துக் கணிப்பு என்பதே மாபெரும் குழப்பம் தானே …. ?
Modi did some good things , that is why he was re-elected in the past for more than 3 terms in Gujarat , and now also he might win the election with a huge margin ( more seats ) . In one of the article or in the feedback , you have said people are little slow in realizing that Modi is fake ( poli ). I would like to differ, I agree that he was weak AND he is weak in particular punishing the white collar crimes . Bureaucracy has its spies all over in the Govt, so any action will be watered down when it goes to court . And in the court , the lesser said about judges , the better it is. Still , there should have been action against , Jagan Reddy, TR Balu, Marans , PC ,Karthick , Kanimozi & Raja and so many others . Court , Newspapers , IAS lobby is playing a huge role in defending them.. YES , I agree with you, Central Govt with Income tax, CBI is more powerful than this TV and Newspaper , its high time Modi takes action with these corrupt politicians . As I told you , he doesn’t seems to be taking action against the former ministers – be it is in Gujarat or in New Delhi. AJ seems to be the main culprit , sleeping with enemies .There was one Talwar, he has 1000 crores in NGO, who literally milked out Air India and Indian Airlines. He was just a middle man – for this alone , Proful Patel should have been inside ,instead Pawar was given padmavibushan , big award by any standard . with Jayanthi Natarajan’s emails, Goyal is more interested in showing the dirt in the mail rather than initiating a action through CBI and court. Goyal may have handled power ministry very well, but he need to accept that Modi must start using his power.BJP and Modi is more interested in defaming the opposition, but not going for any legal route – this is not done. OR Modi and BJP feels that by hurting the leaders, they might become stronger ( like a wounded tigers ). Either way THIS IS WRONG , Election victory may not last long, it is not permanent , also RG help may not be always there , they can come up with some one news , what do u do while office – that’s what is important – despite the many economic steps , if this is not take care – they will loose the support base partly .
But one thing happened in GUJ election , in the eager to get Hindu votes , Rahul Gandhi, visiting temples, and claiming he is a poonal wearing Hindu , he left out the muslims , he did not even announce any schemes , or mentioned them in the speeches , I hope it opens their ( muslims ) eyes.
// with Jayanthi Natarajan’s emails, Goyal is more interested in showing the dirt in the mail rather than initiating a action through CBI and court. Goyal may have handled power ministry very well, but he need to accept that Modi must start using his power.BJP and Modi is more interested in defaming the opposition, but not going for any legal route –//
அடக்கு அடக்கு என்று உங்கள் மனம் தடுத்தாலும், உங்களையும் மீறி,சில சமயம் உங்களையும் அறியாமல் பொங்கி விடுகிறீர்கள் சார்.
சத்யமேவ ஜெயதே – எப்போதாவது 🙂
antha muttalin karuthai veliyittu ungal arippai kattukirikal… shame shame
பூசாரி மோடி… ‘பப்பு’ ராகுல்! குஜராத் தேர்தலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தத் தேர்தல் பிரசாரம், எப்போதும் இல்லாத அளவுக்கு வன்மம் தெறித்த களமாக அமைந்தது. எல்லோரும் அள்ளித் தெளித்த கருத்துகள், தேசத்தையே அச்சத்தில் ஆழ்த்தின. அந்தக் ‘கருத்து’களில் சில… https://www.vikatan.com/juniorvikatan/2017-dec-20/politics/137090-leaders-statements-on-gujarat-assembly-election.html?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=15289 இதையெல்லாம் ” கல்வெட்டுகளில் ” பதித்து ஆவனப்படுத்தினாலும் ஆச்சர்யமில்லை …!!!
” மோடியின் அரசை விளம்பரப்படுத்த 3,700 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த அரசின் பணம் எல்லாமே, அவர்களின் செல்வாக்கைத் தூக்கிநிறுத்தவும் தொழிலதிபர்களைப் பாதுகாக்கவும்தான் பயன்படுத்தப்படுகிறது. – ராகுல் காந்தி
என்னுடைய அரசு ஏழைகளுக்கானது. அம்பானி, அதானி, டாடா போன்றோர்களுக்கான அரசு அல்ல. நம் ராணுவ வீரர்கள் சீன எல்லைப்பகுதியில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, சீனத் தூதர்கள் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துள்ளனர். – பிரதமர் நரேந்திர மோடி
இந்த நாட்டில் திருடர்களின் கைகளிலிருந்த பணம் முழுவதும் பிரதமர் மோடியால் வெள்ளைப் பணமாக்கப்பட்டிருக்கிறது. – ராகுல்
நான் ஏழை என்பதால்தான், காங்கிரஸ் கட்சிக்கு என்னைப் பிடிக்கவில்லை. – மோடி
ஜி.எஸ்.டி என்றால் கப்பர் சிங் வரி! – ராகுல்
நாட்டின் வளங்களைச் சுரண்டி சொத்து சேர்த்தவர்கள், கொள்ளைக்காரர்களைப் போலத்தான் சிந்திப்பார்கள். – மோடி
மோடி தனது பிரசாரத்தின்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜப்பான் மற்றும் சீனாவைப் பற்றிப் பேசுகிறார். குஜராத் குறித்துப் பேசுவதில்லை. தயவுசெய்து மூன்று நிமிடங்களாவது குஜராத்தின் எதிர்காலம் குறித்து மோடி பேச வேண்டும். – ராகுல்
நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் என்னுடைய கடவுள். நான் அவர்களுக்கு பூஜை செய்யும் பூசாரி. நான் அவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன். – மோடி
கடந்த 22 ஆண்டுகளில் நீங்கள் குஜராத்துக்கு செய்தது என்ன? ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் வீடுகள் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்த மோடி, அதை ஏன் நிறைவேற்றவில்லை. உங்களுக்கு இன்னும் 45 ஆண்டுகள் தேவையா? – ராகுல்
குஜராத் மக்களை நேரு குடும்பத்துக்கு என்றைக்கும் பிடிக்காது. – மோடி
யார்மீதும் எங்கள் குடும்பத்தினர் வெறுப்பு கொள்வதில்லை. எனக்கும்கூட, அந்த மனப்பக்குபவம் இருக்கிறது. எனவேதான், நான் மோடி பற்றித் தரக்குறைவாகப் பேசுவதே இல்லை. – ராகுல்
கோயில் கோயிலாக ராகுல் செல்வது ஏன்? இது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் வித்தை. – யோகி ஆதித்யநாத்
குஜராத் மக்களின் நலனுக்காகத்தான், கோயில் கோயிலாகச் சென்று பிரார்த்தனை செய்கிறேன். – ராகுல்
சோம்நாத் கோயிலுக்கு ராகுல் காந்தி சென்றபோது, இந்துக்கள் அல்லாதோர் கோயிலில் நுழைவதற்கான பதிவேட்டில் அவருடைய பெயர் எழுதப்பட்டது ஏன்? – குஜராத் பி.ஜே.பி
ராகுல் காந்தி ஓர் இந்து… பூணூல் அணிந்த இந்து. – காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா
ராகுல் காந்தியைக் குறிவைத்துக் கூறப்படும் ‘பப்பு’ என்ற வார்த்தை ‘தரக்குறைவானது’. – தேர்தல் ஆணையம்
காங்கிரஸின் மணிசங்கர் அய்யர் இல்லத்தில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். காங்கிரஸைச் சேர்ந்த அகமது படேலை முதல்வராக்க பாகிஸ்தான் சதி செய்கிறது. – மோடி
மோடி, அரசியல் லாபம் பெறுவதற்காக பொய்யான தகவல்களையும், கட்டுக்கதைகளையும் கூறிவருகிறார். பிரதமர் பதவி வகிப்பவர்களுக்கு இது அழகல்ல. – மன்மோகன் சிங்
அனைத்துக்கும் பாகிஸ்தானை இழுத்துப் பேசுவதை இந்தியா நிறுத்த வேண்டும். எங்கள்மீது பழி போடுவதை விடுத்து, உங்களின் தனிப்பட்ட பலத்தைக் காட்டி தேர்தலில் வெற்றிபெறுங்கள். – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் முகமது பைசல்
தினமும் 4 லட்ச ருபாய் தைவான் இறக்குமதி காளானை மோடி சாப்பிடுகிறார். அதனால்தான் அவர் சிவப்பாகிவிட்டார். – காங்கிரஸ் கட்சியின் அல்பேஷ் தாக்கூர்
அல்பேஷ் தாக்கூர் மண்டையில் மூளை இல்லை. அங்கு காளான் செழிப்பாக வளர்ந்திருக்கிறது. அதனால்தான் இப்படிப் பேசுகிறார். – மத்திய அமைச்சர் விஜய் கோயல் ” ….. இதுதான் அதில் உள்ள பேச்சுகள் …. நல்ல தலைவர்கள் …?