அமைச்சர் திரு.பியூஸ் காட்டும் ஃபைல்கள் திருடப்பட்டவையா…?



நேற்றிரவு, டெல்லியில் செய்தியாளர் கூட்டத்திலும், பிற்பாடு,
ரிபப்ளிக் டிவி – அர்னாப் கோஸ்வாமிக்கு கொடுத்த பேட்டியிலும்,
ரெயில்வே அமைச்சர் சில ஃபைல்களை காட்டி பேசினார்…

( திருமதி ஜெயந்தி நடராஜன் மற்றும் திரு.ராகுல் காந்தி
ஆகியோருக்கிடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்து குறித்த சந்திப்பு அது – அது குறித்து முழு விவரங்களும் நமக்கு கிடைத்த பின்னர் அதை தனியே விவாதிக்கலாம்… இப்போதைக்கு தலைப்பில் உள்ளதை பற்றி மட்டும்…)

அதீத ஆர்வத்துடன் இவர் நிகழ்த்திய சந்திப்பு குறித்து சில சந்தேகங்கள்
எழுகின்றன…

இவரோ ரெயில்வே துறைக்கு பொறுப்பானவர்…
இவர் காட்டிய ஃபைல்கள் மத்திய சுற்றுச் சூழல் ( environment )
அமைச்சகத்திற்குரியது. இவருக்கு சற்றும் தொடர்பில்லாத அந்த
ஃபைல்கள் இவரிடம் எப்படி வந்தன…?

இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமதி ஜெயந்தி நடராஜன் இல்லத்தில் சிபிஐ ரெய்டு நடந்தது. அதில் பல ஆவணங்களை கைப்பற்றிக் கொண்டு போனார்கள்… ஒருவேளை அவற்றில் இதுவும் இருந்திருக்கலாம்.

இந்த ஃபைல்கள் எப்படி இவரிடம் வந்தன… ?

சுற்றுச்சூழல் அமைச்சகத்திலோ அல்லது சிபிஐ அலுவலகத்திலோ
இருந்திருக்கக்கூடிய இந்த ஃபைல்கள், அவற்றிற்கு சற்றும் சம்பந்தம்
இல்லாத இவரிடம் வந்தது எப்படி…?

யாராவது திருடிக்கொண்டு வந்து இவரிடம் கொடுத்தார்களா…?
( ஏனெனில், அதிகாரபூர்வமாக /சட்டபூர்வமாக –
அந்த ஃபைல்கள் இவரிடம் வந்திருக்க முடியாது…!!!)

அமைச்சர் தன்னிடம் இந்த ஃபைல்கள் எப்படி வந்தன
என்கிற பின்னணியை விளக்கினால், மத்திய அரசில் ஃபைல்கள் எப்படி
கையாளப்படுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்….

மிஸ்டர் அதீத ஆர்வம் ……….. செய்வாரா…?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அமைச்சர் திரு.பியூஸ் காட்டும் ஃபைல்கள் திருடப்பட்டவையா…?

  1. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    Jayanthi Natarajan letter: 17 shocking revelations about Rahul Gandhi, Sonia Gandhi and Congress
    INDIATODAY.INNEW DELHI | FRIDAY, JANUARY 30, 2015. …. இந்த கடிதங்களாக இருக்குமாே ….?

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    உங்கள் பாயின்ட் சரியானது. முன்பு துக்ளக்கில் அரசாங்க ஃபைல்கள் எப்படி பராமரிக்கிறார்கள் என்று (முருகன் அவர்கள்?) ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன். துறை அல்லாத அமைச்சரிடம் Photo copy வந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      அதிகாரபூர்வமாக, ரெயில்வே அமைச்சரிடம், சுற்றுச்சூழல் அமைச்சகம்
      ராகுல்காந்தியுடன் மேற்கொண்ட correspondece இருக்க வழியே இல்லை.

      ஒன்று தங்கள் கட்சி அதிகாரத்திற்குட்பட்ட சிபிஐ – ரெய்டில் கிடைத்ததிலிருந்து
      photo copy பெற்றிருக்க வேண்டும். அல்லது, முன்னொரு காலத்தில்
      சுற்றுச்சூழல், நிலக்கரிச் சுரங்கங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திலிருந்தபோது,
      பிற்பாடு ப்ளாக் மெயில் செய்யலாம் என்று நினைத்து photo copy எடுத்து
      வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

      காங்கிரஸ்காரர்கள் புத்திசாலிகளாக இருந்தால், அமைச்சர் மீது உரிமைப்பிரச்சினை
      கொண்டு வரலாம்… அல்லது யாராவது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடலாம்.

      நம்மைப் பொருத்த வரையில், இவரை “அதீத ஆர்வம்” என்பதற்கு மேல்
      போக முடியாது…. 🙂 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    // நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடக்கம்: தாமதம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் // இதுஇன்றைய ” தினமணி ” செய்தி — இதில் அவர் கூறும் காரணம் :– அதாவது ” புவி வெப்பமயமாதல் காரணமாக குளிர் காலத்தில் முழுமையாக குளிர் தென்படவில்லை … இதனால் தீபாவளி சமயத்தில் தொடங்க வேண்டிய குளிர் தொடங்காததால் , நாடாளுமன்றம் தாமதமாக தொடங்கப்பட்டது என்று மோடி கூறினார் ” …. குளிர்காலக் கூட்டத் தொடர் என்றால் குளிர் தேவைதானே …. ?

    • M.Syed's avatar M.Syed சொல்கிறார்:

      குளிர் கால தொடர் என்றால் குளிர் வேண்டும் வெயில் கால தொடர் என்றால் கடுமையான வெயில் சரிதானே புத்திசாலி பி. எம்..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.