…
…
எந்த தொலைக்காட்சியும் இதை காட்டாது… பயம்….!!!
அவர்கள் பயமுறுத்துவது பாதி என்றால், இவர்களாகவே
நடுங்குவது மீதி.
பாஜகவுக்கு, தரை பலம், தொண்டர் பலம் அதிகம் உண்டு…(குஜராத்தில் சொல்கிறேன்…!!! )
இருந்தாலும் கூட, இப்போதைக்கு, தேர்தல் முடிவுகள் எப்படி
வேண்டுமானாலும் அமையலாம் என்றே தோன்றுகிறது……
குஜராத் தேர்தல், நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை உண்டு
பண்ணி இருக்கிறது… எப்படி இருந்தாலும், பாஜகவுக்கு நிச்சயம்
“கேக் வாக்” ஆக இருக்காது…
மோடிஜியின் செல்வாக்கு சரிந்திருப்பது உண்மை…!!!
அவரது நடவடிக்கைகளே அதை பறைசாற்றுகின்றன…
ஜெயிக்கிறார்களோ, தோற்கிறார்களோ –
அகம்பாவம், ஆணவம், இறுமாப்பு – கொஞ்சமாவது குறைந்தால் சரி.
முடிவுகள் எப்படி இருந்தாலும் சரி, இந்த தடவை குஜராத் தேர்தல்,
மோடிஜிக்கு மிகுந்த டென்ஷனை உண்டு பண்ணி விட்டது என்று தான்
சொல்ல வேண்டும்…
இன்று மாலை exit poll results வெளிவரும். வழக்கம்போல், ஆளுக்கு ஒரு சர்வே ரிப்போர்ட் கொடுப்பார்கள்…!!!
…



அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே …? பிரச்சார கூட்டங்களுக்கு ஆட்கள் வருவதும் …வராததும் …சேர்கள் நிரம்புவதும் … நிரம்பாததும் நாட்டு நடப்புதானே .. விடுங்க ..விடுங்க ..!!!
எப்படியோ இந்தியாவில் வம்சாவளி அரசியல் மோடியின் மூலம் ஒழிந்தது.
உங்க மறுமொழிக்கும்- பின்னூட்டத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கா …?
everybody created the image that demonitization of modi had damaged his name, and screwed up indian economy.Now how come suddenly you are back footing, and changed your views that anything can happen?we should be confident that only congress will succeed in gujarat.The strong business community(who will be the pure vitim of demonitization) in gujarat will teach modi a lesson. Rahul gandhi will defenetly will succeed.
But incase if he gains hand in gujarat election, then we need to revisit our views on demonitization.
தேர்தல் பிரச்சாரத்தில் காலி நாற்காலிகள் – பெரிய விஷயமாக எனக்குத் தெரியலை. நான் கரிஷ்மா இருந்த ராஜீவ் காந்தி தாம்பரத்தில் பிரச்சாரம் செய்தபோது (சிதம்பரம் தமிழ்ப்படுத்தினார் என்று ஞாபகம்), 20+ மக்கள்தான் இருந்தார்கள். நானுமே வீட்டுக்குப்போகும் வழியில் பார்த்தேன். தொடர்ந்து தேர்தல் சூழ்’நிலை இருக்கும்போது, யாருக்கு அவங்க அவங்க வேலையை விட்டுட்டு, ‘அன்னார் சொன்னார், அவர் இன்றே சொன்னார்… ‘ என்று நீட்டி முழக்கும் பிரச்சாரத்தைக் கேட்க நேரம் இருக்கும் (வரவு இருந்தாலொழிய).
என்னுடைய இன்றைய எண்ணம், மோடி அவர்களின் பாஜக குஜராத்தில் தோற்கவேண்டும் என்பதுதான். It must be a wake up call for BJP. இல்லையென்றால் அவர்கள் ground realityஐ அறியாது பெரும்பான்மை மத்திய தர, அதற்கும் கீழான மக்களை வதைக்கும் திட்டங்களை கண்ணைமூடிக்கொண்டு கொண்டுவருவார்கள். இன்றைய தேதி வரையில், பணக்காரர்களை, கருப்புப்பணம் வைத்திருப்பவர்களை, வங்கிகளில் வாராக்கடன் கோடிக்கணக்கில் வைத்திருப்பவர்களை, பாஜக ஒன்றும் செய்யாதது மட்டுமல்ல, அவர்களுக்காகவே கடுமையாக உழைப்பதுபோல்தான் தெரிகிறது. காங்கிரஸ், குவட்’ரோச்சியை, போபால் விபத்துக்குக் காரணமானவர்களைத் தப்பவிட்டதுபோல், லலித்மோடி, மால்யா, ரெட்டி போன்ற பலரை பாஜகவும் தப்பவிட்டது (இதுவரை)
நல்ல வலிமையான பாஜக இருந்தால்தான் வலிமையான காங்கிரசை எதிர்க்கமுடியும். அதனால் இரண்டு கட்சிகளுமே வலிமையாக இருக்கவேண்டும். அப்படி இருக்கணும்னா, பாஜக, குஜராத்தில் தோல்வியடையவேண்டும் (%ல் குறைவிருக்காது. ஆனால் சீட்டுகளில் படு பாதாளத்துக்குப் போகும் என்பது என் எண்ணம், விருப்பம்). அது இப்போ நடக்கவில்லை என்றால், 2019ல் படுதோல்வியை பாஜக ஆவலுடன் எதிர்நோக்கலாம்.
// தேர்தல் பிரச்சாரத்தில் காலி நாற்காலிகள் – பெரிய விஷயமாக எனக்குத் தெரியலை. நான் கரிஷ்மா இருந்த ராஜீவ் காந்தி தாம்பரத்தில் பிரச்சாரம் செய்தபோது (சிதம்பரம் தமிழ்ப்படுத்தினார் என்று ஞாபகம்), 20+ மக்கள்தான் இருந்தார்கள். //
ஏன் சார் வேஷம் போடுகிறீர்கள் ? என்ன ஆனாலும் உங்கள் மோடி பாசத்தை விட மாட்டீர்களே; ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில், தாம்பரத்தில் இந்தி/ஆங்கிலத்தில் பேசுவதும், மோடி, குஜராத்தில் அஹமதாபாத் அருகே பிரதமராக, குஜராத்தி மொழியில் பேசுவதும் ஒன்றா ?
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்க வேண்டும் என்று ராஜீவ் பேசுவதும், குஜராத்தில் தன் மானம் மரியாதை அனைத்தையும் காப்பாற்றிக்கொள்ள போராடும் மோடி பேசுவதும் ஒன்றா ?
எவ்வளவு மறைத்தாலும், உங்கள் மோடி வெறி வெளிறிப் போய்
வெளிப்படுகிறதே.
நண்பரே … ! ‘ கரிஷ்மா ‘ என்கிற பெயரில் ஒரு நெற்பயிர் இருக்கிறது — அதைப்பற்றி அறிய :–
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_(%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D_-_1_-_6)_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)
நல்ல வேளை. கரிஷ்மா கபூர் அட்ரசை கொடுக்காமல் விட்டீர்களே 🙂 🙂
இல்லிங்க சார்…! நபரை கூறுவதைவிட அதிக மகசூல்.தரும் நெல்லை கூறலாமே என்றுதான் …. ஹி…ஹி….ஹீ …!
சமீப ” பிட்காயின் ” சர்ச்சைப்பற்றி …?
பிரனீஷ்,
மன்னிக்கவும். என் கவனம் அதில் செல்லவில்லை.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஒரே வார்த்தையில் சொல்வதானால் ‘சூதாட்டம் ‘.
All exit polls are identical leading bjp
Doesn’t matter. ஆனால் பெருமைப்படும்படி பிரச்சாரம் நடைபெறவில்லை, வார்டு எலெக்ஷன் மாதிரி பிரதமர் அவர்கள் செல்லவேண்டியதாயிற்று, தரக்குறைவான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன என்பதை மறுக்க முடியாது. (கிட்டத்தட்ட நம்ம ஊர் பை-எலெக்ஷன் மாதிரி) நக்கீரன், தினமலர், விகடன் குழும தேர்தல் கருத்துக்கணிப்புகள் போல் ஆகாமல் இருந்தால் சரிதான்.
தேர்தல் முடிவுகள் வரட்டும் அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி..
‘உனக்கு’ நிச்சயம் இது பாஜக ஆள் தான். அவர்களால் தான் இப்படி எழுத மிரட்ட முடியும்.
தலைமை எப்படி தொண்டர்கள் அப்படி.
நாசுக்கான தளம் என்பதால் உள்ளே நுழைந்து திறமை காட்டுகிறார்கள் ..? அதே பலத்த பா.ஜ .க எதிர்ப்பு காட்டுகிற … தளங்களில் இவர்களின் வாசனையே கிடையாது … !
“அதே பலத்த பா.ஜ .க எதிர்ப்பு காட்டுகிற … தளங்களில் இவர்களின் வாசனையே கிடையாது … !”
.
யார் சொன்னது ? என்னுடைய பின்னூட்டத்தை அவர்கள் வெளியிடுவதில்லை
யாராவது வெளியிட தயாராக இருந்தால் லிங்க் தரவும் .. நான் பார்த்துக்கொள்கின்றேன்
.” வினவு , சவுக்கு , கீற்று என்று ஏகப்பட்டது இருக்கிறது … // என்னுடைய பின்னூட்டத்தை அவர்கள் வெளியிடுவதில்லை // பரவாயில்லை … ஆணித்தரமா இடுங்கள் …!
if modi wins, then we will cry for foul play in election, or fake votes win.