…
…

…
FRDI bill ( Financial Resolution and Deposit Insurance Bill ) என்னும்
ஒரு மசோதா, ஏற்கெனவே சப்தம் போடாமல் பாராளுமன்றத்தில்
அறிமுகப்படுத்தப்பட்டு, எந்த நேரமும் நிறைவேறக்கூடிய நிலையில்
இருக்கிறது…குஜராத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, குளிர்கால
கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படக்கூடும்.
ஒரு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுவது என்பது
வெறும் 2 நிமிட சடங்கு என்பதால், இது அறிமுகப்படுத்தபட்டபோது
நம்முடைய கவனத்திற்கு வராமல் தப்பி விட்டது. மீடியாக்களும்
இதைப்பற்றி நமக்கு விவரமாக சொல்லவில்லை.
அது செலக்ட் கமிட்டியால் விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட்டு
மீண்டும் பாராளுமன்றத்திற்கு விவாதத்திற்கு வரும்போது தான்
நம் போன்றோரின் கவனத்திற்கு வரும்.
எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் கூட, பாஜகவுக்கு பாராளுமன்றத்தில்
மெஜாரிடி இருக்கிறது என்பதால், மோடிஜி நினைக்கும் எந்த
மசோதாவையும் நிறைவேற்றக்கூடிய சக்தி அவர்களுக்கு இருக்கிறது…
இந்த சட்டத்தைக் கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும்…?
இது நம்மை எந்த விதத்தில் பாதிக்கும்…?
– என்பன போன்ற விவரங்கள் எல்லாம் இந்தியாடுடே ஆங்கில செய்தி
தளத்தில் விவரமாக வெளிவந்திருந்தன.(ஆங்கில செய்தியை கீழே
தந்திருக்கிறேன்…)
நான் இந்த செய்தியை அடிப்படையாக வைத்து விமரிசனம்
வலைத்தளத்தில் நாம் விவாதிப்பதற்காக தமிழில் விவரமாக
ஒரு இடுகை எழுதிக் கொண்டிருந்தேன்…,
அதற்குள்ளாக இன்று வெளிவந்த ஜூனியர் விகடன் இதழில்
இதுகுறித்த சகல விவரங்களும் ஒரு கட்டுரையில் வெளிவந்திருப்பதை
பார்த்தேன். எனவே, நான் வேறு தனியாக எழுதாமல், அதையே இங்கு
பதிவு செய்தால் போதுமென்று தோன்றியது….
எனவே கீழே ஜூ.வி. செய்திக் கட்டுரையையும்,
பின்னர் ஆங்கிலத்தில் இந்தியாடுடே வெளியிட்ட செய்தியையும்
பதிப்பிக்கிறேன்….
பாஜகவுக்கு brutal majority கொடுத்து ஆட்சியில் அமர்த்திய மக்களையே
அது மீண்டும் மீண்டும் கொடுமைப்படுத்துவது, வரம் கொடுத்தவர்
தலையிலேயே கையை வைத்து பஸ்மம் ஆக்க முயற்சித்த
ராட்சதனையே நினைவிற்கு கொண்டு வருகிறது….
—————————————————————————

..

..

——————————————————————————
http://indiatoday.intoday.in/story/frdi-bill-banking-reforms-modi-government-
india-parliament/1/1103422.html
————-
Modi government’s FRDI bill may take away all your hard-earned money
Here’s how the Financial Resolution and Deposit Insurance Bill may help the
banks take away all your hard-earned money. Without your consent!
IndiaToday.in | Edited by Neha Vashishth
Delhi, December 5, 2017 | UPDATED 12:33 IST
Financial Resolution and Deposit Insurance Bill, 2017 is the new bomb that
may be dropped on commoners by the Modi government.
What is this bill all about and how is it going to affect you?
In June 2017, the Central government approved the FRDI Bill which is
intended to frame new rules for banks that are failing. It has created panic
among savings account holders. According to the Bill, if a bank is failing, may
be allowed to use depositors’ money to stay afloat. What this means is that the
bank can reduce its liability of paying its depositors, that is you, by either
locking your money for a longer time or asking you to take a hit on your
deposits.
Currently, your deposit in the bank is insured up to a specified limit.According to the 1961 Deposit Insurance and Credit Guarantee Corporation Act, up to Rs 1
lakh of your money deposited in a bank is insured if a bank were to fail. In
practice, however, the Reserve Bank has ensured that this never happens.
Failing, or weak banks, have been merged or allowed to be taken over by
healthier banks including their liabilities.
But the proposed banking reforms bill will change that. That, some say, will give
government banks, private banks and insurance agencies more power over
your money.
What is a bail-in?
The Bill provides for “bail-in” powers to banks. A rescuing body known as
Resolution Corporation has been proposed under the Bill which can use your
money in case the bank sinks.This is different from a traditional bailout in which government’s money helps bank tide over the crisis. In case of a bail-in, it is the bank’s own deposits (that is your money) that is used to rescue the bank or reduce its liabilities.
WHY IS IT IMPORTANT?
When you deposit money in a bank or invest in fixed deposits, you trust the
bank with keeping your money safe, forever. Even a remote possibility of you
having to lose it all or even part of it for no fault of yours is disturbing.
We take you through 10 steps which will help you understand the Bill:
TAKE A LOOK:
Under Section 52 of the FRDI Bill, the rescue body can cancel even the Rs 1
lakh insurance that you get under the current law. In this case, a bank can
even declare that they don’t owe you any money at all.
The same Section provides an option to the rescue body to modify a bank’s
liability. For example, if you deposit a certain amount of money for a certain
period of time as savings (say, 5 or 10 years), the bank can keep the money in
a locked-in period (in a FD) and change the time period without consulting you.
According to the bill, the bank may be exempted to fulfill its promises to
depositors in extreme cases. This means you lose all your money.
This can happen in case of an economic downturn, when banks (who provide
money to large corporations who are unable to repay the amount) ask for a
bail-in option.
The bank may turn your savings into a fixed deposit without asking you and
that too at a lower interest rate and you cannot even challenge it, unless, you
challenge the law.
This is the first time that a Bill of this sort has been proposed in India.
However, it has happened before in a few countries. ADeccan Chronicle report said a bail-in provision was used in Bank of Cyprus in 2013 which led to a loss of
money of half of its depositors who were uninsured (the people who had
deposited money over a certain limit).
It is going to challenge the rights of a commoner as ideally, the government
should look for money held by big corporations in case of a bail-in but, that
won’t be the case once this Bill is passed.
It would not be an exaggeration to say that if this Bill is passed in the
Parliament, the depositors’ rights may go down the drain, that is if the bank is
going down the drain.
——————————————————————————————————



மதிப்பிற்குரிய ஐயா,
திவாலாகக்கூடிய நிலையில் உள்ள பொதுத்துறை வங்கிகள் எவை எவை எனத் தெரியப்படுத்தினால் ( வேறு கட்டுரையை மேற்கோள் காட்டி ) மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.
அப்பண்ணசுவாமி,
(NPA) அதாவது எக்கச்சக்கமான Non-Performing Assets -ஐ பொதுத்துறை வங்கிகள்
குவித்துக் கொண்டே போகின்றன… இன்றைய தேதியில் கிட்டத்தட்ட ஒன்பதரை லட்சம் கோடிகள்…
கண்டிப்பான வழிமுறைகளை கடைபிடித்தால், இவற்றை வசூலிக்கும் முறைகளை உண்டு பண்ண
முடியும் என்றாலும் – செய்ய விருப்பமில்லை… காரணம் இதை வாங்கியிருப்பவர்கள் அரசுக்கு,
ஆளும் கட்சிக்கு – மிகவும் வேண்டப்பட்டவர்கள்….
அரசின் இந்த நடவடிக்கையின் முக்கியமான பின்னணி – பாஜக அரசு, மக்கள் வங்கியில் சேமிப்பு
வைப்பதை விரும்பவில்லை…. வங்கியில் வைப்பதை விட்டு விட்டு, மக்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்பது அரசின் விருப்பம்.
ஆகவே, மக்களை இப்படி எல்லாம் பயமுறுத்தினால் –
பங்குச்சந்தையில் முதலீடு அதிகரிக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், இந்த சூதாட்டத்தில் இறங்க பெரும்பாலான மக்கள் விரும்ப
மாட்டார்கள். அவர்கள் வருமானம் குறைந்தாலும் சரி, வேறு பத்திரமான
வழிகளில் சேமித்து வைக்கவே விரும்புவார்கள்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
5 ஆம் தேதிய இடுகை பின்னூட்டத்தில் நான் மேற்காேள் காட்டிய செய்திக்கு பலரும் அறியும் விதமாக விளக்கமான பதிவாக இன்று வெளியிட்டதற்கு … நன்றி … நன்றி….!!!
கா.மை சார்… இதனைப் பற்றி ஒரு வாட்சப் மெசேஜும் படித்தேன். உண்மை வரும்போது அது மிகப் பெரிய பிரச்சனையை உண்டாக்கும், கவலைப்படத் தேவையில்லை என்றுதான் நான் நினைத்தேன். அதனால் தேவையில்லாமல் இப்போது perturb ஆகவில்லை. நம் பணத்தை பொதுத்துறை வங்கியிலிருந்து எடுப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், நிச்சயம் மக்கள் பொங்கி எழுவார்கள். அதனால் அது நடக்காது என்றே நம்புகிறேன். I also feel that, Govt may want ultimately all the customers to choose foreign banks and ensure பொதுத்துறை வங்கிகள் are reduced in their size (like what they try to do in LIC etc.)
‘வாராக் கடன்’ – எவன் approve பண்ணினான் (எவன் என்று தெரிந்தேதான் உபயோகப்படுத்துகிறேன்), அந்த ஆளின் ஓய்வூதியம் உடனே நிறுத்தப்படும், அவன் குடும்பம் ‘கடன் வசூலாகும்வரை’ வங்கிகளை approach செய்ய முடியாது போன்ற சட்டம் நாட்டிற்கு அவசியம். நாடு நன்றாக நடப்பதற்கு ஒழுங்கான அதிகாரிகளும், அரசு அலுவலர்களும் முக்கியம். அரசியல்வியாதிகள் 5 வருஷம் வரும் போகும், ஆனால் மக்கள் நலனில் அதிகாரிகள்தான் முக்கியப் பங்கு எடுக்கவேண்டும். ‘வாராக் கடன்’ இருந்தால், அவர், அவர் குடும்பம் சம்பந்தப்பட்ட ஒருவருக்கும் மேற்கொண்டு வங்கிகள் கடன் கொடுக்காது என்ற சட்டம் வேண்டும். கண் தெரியாமல், புத்தி இல்லாமல், மல்லயா, அம்பானி, அதானி போன்றவர்களுக்கு வங்கிகள் எங்கனம் கடன் கொடுக்கின்றன? ‘வாராக் கடன்’ என்று யார் யாருக்கெல்லாம் சலுகைகள் இந்த அரசியல்வியாதிகளால் கொடுக்கப்படுகின்றன? இதன யாராவது ஆராய்ந்தால், ‘நியாயம்’ பேசுகின்ற எந்த மத்திய அரசின் கழுத்தையும் எளிதாகப் பிடிக்கலாம்.
வங்கிகளின் தைரியம், 100 ரூ, 5000 ரூ, 20,000 ரூ கடன் வாங்கும் சாதாரண விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்களிடம்தான் செல்லுபடியாகிறது. ஒருவேளை, அரசியல்வாதிகள், ‘பிரஷர்’ கொடுத்தால், அந்த அதிகாரி, ‘கடன் விண்ணப்ப ஃபைலில்’, ‘எனக்கு இதில் சம்பந்தமில்லை. இந்த அமைச்சர் ப்ரஷர் கொடுப்பதால், அல்லது இந்த மேனேஜர் என்னைக் கட்டாயப்படுத்துவதால், நானும் வேறு வழியில்லாமல் ஒப்பம் இடுகிறேன் என்று ஏன் எழுதக்கூடாது? அப்படி எழுதவில்லையானால், அவரும்தான் குற்றத்துக்கு உடந்தை.
ஆம் புதியவன் அவர்களின் கூற்றுப்படி வராகடன் ஏற்பட காரணமான அனைத்து அதிகாரிகளின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் வங்கிகள் நட்டமடைவது குறையும்.மேலும் வங்கி பணியாளர்களின் சம்பளம் தாறுமாறாக உயர்ந்துள்ளதை குறைத்து நெறிபடுத்த வேண்டும்.
தங்களின் பார்வைக்கு.
நன்றி திரு.ஷாஜகான்.ஆர்
டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
(எச்சரிக்கை – கட்டுரை நீளமானது. வங்கியில் டெபாசிட் செய்வது குறித்து ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் வாசிக்கவும்)
வங்கியில் டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் சட்டம் என்று ஏதோ வருகிறதாமே… வங்கி திவால் ஆனால் நாம் டெபாசிட் செய்த பணம் அம்போ ஆகி விடுமாமே… இது நிஜமா… இதைப்பற்றி நீங்கள் எழுதுங்கள் என்று இன்பாக்சில் பலர் கேட்டார்கள்.
வங்கி, நிதித்துறை, சட்டம் ஆகியவை தொடர்பான விஷயங்கள் மிகவும் சிக்கலானவை. அதிலும் நமது சட்டங்கள் இருக்கின்றனவே, அவற்றை இயற்றியவர்களே உண்மையில் புரிந்து கொண்டுதான் இயற்றினார்களா என்று சந்தேகப்படும் அளவுக்குக் குழப்பக்கூடியவை. Subject to, Notwithstanding, Read with என்று வேறு சட்டவிதிகளுடன் இணைத்து எழுதப்பட்டிருக்கும். ஒரு சட்டத்தைப் படிக்கும்போது அது வேறெங்கோ இழுத்துக்கொண்டுபோகும். எனக்கும் அந்த அளவுக்கு துறைசார் ஞானம் கிடையாது. எனவே, நான் படித்தவற்றில் புரிந்துகொண்ட அளவில் விளக்குகிறேன். அதற்கு முன்னுரையாக மூன்று கதைகள் கீழே தந்திருக்கிறேன்.
கதை-1 : ஓர் ஆலை இருக்கிறது. அதில் 5 பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். 1 வங்கி கடன் குடுத்திருக்கிறது. 100 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அந்த ஆலை நிதிச் சிக்கலுக்கு ஆளாகி நான்கு மாத சம்பளம் கொடுக்காமல் திடீர் என்று மூடப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். கடன்கொடுத்த வங்கி அதை சீல் வைக்கிறது. பிறகு ஏலத்துக்கு வருகிறது. அதை யாராவது ஏலத்தில் வாங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஏலத்தின் மூலம் கிடைத்த தொகையில் யாருக்கு முதல் உரிமை, யாருக்கு இரண்டாவது உரிமை என்று சில விதிகள் உண்டு. அதன்படி, தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியைத்தான் முதலில் தீர்க்க வேண்டும். அதற்குக் கொடுத்த தொகை போக மீதியிருந்தால் கடன் கொடுத்த வங்கி எடுத்துக்கொள்ளும். அதற்கும் மேலே மீதமிருக்கும் தொகைதான் முதல் போட்ட ஐந்து பேருக்கும் உரிய விகிதத்தில் கிடைக்கும். ஒருவேளை முதல் போட்டவர்களுக்குக் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். பிரச்சினையை எளிமையாக விளக்கவே இந்தக் கதையை உதாரணமாக சொல்லியிருக்கிறேன்.
கதை-2: அந்த ஆலையைத் தூக்கி நிறுத்த அரசு கடனுதவிக்கு வழி செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பெயர் பெயில்-அவுட். அதே போல, ஒரு வங்கி நிதிச் சிக்கலுக்கு ஆளாகிறது என்று வைத்துக் கொள்வோம். பொதுவாக, அரசு உதவிக் கரம் நீட்டுகிறது, அல்லது ஏதாவதொரு அமைப்பின் மூலமாக நிதியுதவிக்கு ஏற்பாடு செய்கிறது என்றால், அதற்குப் பெயர் பெயில்-அவுட். உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு விமான கம்பெனி சிக்கலுக்கு ஆளான போது, ஊழியர்கள் சம்பளத்துக்காக, பெட்ரோலுக்காக இன்னும் கொஞ்சம் வங்கிக் கடன் குடுத்து அரசாங்கம் பெயில்-அவுட் முயற்சி செய்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆக, நிதிச் சிக்கலுக்கு உள்ளான நிறுவனத்துக்கு வெளியிலிருந்து நிதியுதவி செய்து அதன் சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்வதற்குப் பெயர் பெயில்-அவுட்.
கதை-3: வெளியிலிருந்து நிதியுதவி செய்து மீட்பதற்குப் பதிலாக, அந்தக் கம்பெனியிடம் இருக்கும் சொத்துகளை வைத்தே அதை மீட்பதற்கு உதவி செய்வதும் உண்டு. இப்படி, ஒரு நிறுவனத்தின் உள்ளிருந்தே, அதனிடம் இருக்கின்ற நிதியையும் சொத்துகளையும் வைத்தே சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்தால் அதற்குப் பெயர் பெயில்-இன்.
புதிதாக வர இருக்கிற சட்டத்தில் சர்ச்சைக்குரிய விஷயமாகப் பேசப்படுவது பெயில்-இன்.
நாம் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை, அல்லது காலமெல்லாம் வேலை செய்து ஓய்வு பெறும்போது கிடைத்த பணத்தை எதிர்காலத் தேவைகளுக்காக முதலீடு செய்கிறோம். பிள்ளைகளின் படிப்புக்காக, கல்யாணத்துக்காக, வயதான காலத்தில் சோற்றுக்கு வழி செய்து கொள்ள இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். முதலீடு செய்ய பல வழிகள் உண்டு. பேராசை பிடித்துப்போய் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வந்தது போன்ற போலி கம்பெனிகளில் முதலீடு செய்வார்கள் சிலர். மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வார்கள் சிலர். பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள் சிலர். ஆனால், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வதில் ஆபத்துகள் உண்டு. உள்ளூர் அரசியல்/பொருளாதார நிலை மட்டுமல்ல, உலகளாவிய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இவை உயரவோ வீழவோ கூடும். போட்ட பணம் பலமடங்காகத் திரும்பி வரலாம், மொத்தமும் மூழ்கிப் போகலாம்.
எனவே, பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற, சிக்கலுக்கு ஆளாக விரும்பாத பெரும்பாலான மக்கள் தமது பணத்தை டெபாசிட் செய்வது வங்கிகளில்தான். ஏனென்றால், பெரும்பாலான வங்கிகள் பொதுத்துறை வங்கிகள்தான். தனியார் வங்கிகள் பெரும்பாலும் நகரப் பகுதிகளில் மட்டுமே இயங்குகின்றன. இந்திய வங்கிப் பரிவரத்தனையில் 82 விழுக்காடு பொதுத்துறை வங்கிகளில்தான நிகழ்கிறது. எனவே, வங்கிக்கு ஏதும் சிக்கல் வந்தாலும் அரசு கை கொடுக்கும் என்று நம்புகிறார்கள். காரணம், இந்த வங்கிகள் எல்லாம் தேசியமயமாக்கப்பட்டவை, ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்குகின்றன. அண்மையில் ஸ்டேட் பேங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் போன்ற பல்வேறு வங்கிகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைத்தது இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைதான்.
ஒரு வங்கி திடீரென நிதிச் சிக்கலுக்கு ஆளாகி, அதில் டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் திருப்பித்தர முடியாமல் போனால் என்ன செய்வது என்று யோசித்தது அரசு. இன்று அல்ல, அறுபது ஆண்டுகளுக்கு முன்பே யோசித்தது. 1961இல் Deposit Insurance and Credit Guarantee Corporation Act என்ற சட்டத்தை இயற்றியது. இதன்படி, 1 லட்சம் ரூபாய் வரையான டெபாசிட்டை வட்டியுடன் சேர்த்துத் திருப்பித் தருவதற்கான காப்பீடு வங்கிக்குக் கிடைத்தது. வங்கி மூழ்கிப் போனாலும் டெபாசிட் செய்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால், 1 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்திருந்தால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கு இந்த உத்தரவாதம் கிடையாது. எனவே வங்கி மூழ்குமானால் அதனுடன் சேர்ந்து டெபாசிட் பணமும் மூழ்கும்.
மேலே குறிப்பிட்ட டெபாசிட் காப்பீட்டுக்காக, ரிசர்வ் வங்கியின் கீழ் Deposit Insurance and Credit Guarantee Corporation என்ற நிறுவனத்துக்கு இந்திய பொதுத்துறை வங்கிகள் பிரிமியம் தொகையாக 3000 கோடி ரூபாய் செலுத்தி வருகின்றன. ஆனாலும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு 67 ஆண்டுகளில் வங்கி மூழ்கும் சம்பவம் ஏதும் நிகழவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, நீங்கள் ஒரு வங்கியில் எத்தனை லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தாலும், அந்த வங்கி மூழ்குமானால், உங்களுக்கு ஒரு லட்சம் மட்டுமே கிடைக்கும் என்ற விதி இன்று புதிதாக வந்ததல்ல, 1961 முதலாகவே இருக்கிறது. அப்படியானால், இப்போது புதிதாக என்ன சர்ச்சை ?
மத்திய அரசு, புதிதாக ஒரு சட்டத்தை இயற்றுவதற்கான மசோதா தயார் செய்திருக்கிறது. அதன் பெயர் Financial Resolution and Deposit Insurance Bill, 2017. அதாவது, நிதிச்சிக்கல் தீர்வு மற்றும் டெபாசிட் காப்பீட்டு மசோதா 2017. இந்த மசோதாவின் வரைவு மக்களின் கருத்துக்காக 2016 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. ஆனால், மக்கள் கருத்துக்காக இருபது நாட்கள் அவகாசம் மட்டுமே தரப்பட்டது. 2016 அக்டோபர் 14ஆம் தேதியுடன் வரைவு மசோதாவின் மீது கருத்துக்கேட்பது நிறுத்தப்பட்டது. 2017 ஜூன் மாதம் மைய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த்து. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் அமர்வு முடிவடைவதற்கு முதல் நாள் நாடாளுமன்றத்தின்முன் வைக்கப்பட்டது. மசோதாவைப் பரிசீலிக்க புதிதாக கூட்டுக்குழு ஒன்றை நியமிக்கவும் அரசு முடிவு செய்தது. நிதித்துறை விவகாரங்களைப் பரிசீலிப்பதற்காக ஏற்கெனவே நிதித்துறை நிலைக்குழு (committee for finance) இருக்கும்போது, தனியாக ஒரு குழு எதற்கு என்று காங்கிரசும் திரிணமுல் காங்கிரசும் எதிர்ப்புத் தெரிவித்தன. அத்துடன் நாடாளுமன்றத் தொடர் முடிந்து விட்டது.
இந்தப் புதிய மசோதாவில் உள்ள சிக்கல் என்னவென்றால், ஏற்கெனவே இருந்து வருகிற – 1961 முதல் ரிசர்வ் வங்கிக்குக் கீழ் இயங்குகிற Deposit Insurance and Credit Guarantee Corporation என்ற அமைப்புக்குப் பதிலாக புதிதாக வேறொரு அமைப்பை இந்தச் சட்டம் உருவாக்குகிறது. அதன் பெயர் Resolution Corporation – தீர்வு வாரியம். வங்கிகள் மட்டுமல்ல, காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தைகள் ஆகியவற்றையும் இது உள்ளடக்கும். நிதி நிறுவன முறைப்படுத்து ஆணையங்கள், நிதியமைச்சகம், ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் இருப்பார்கள்.
அப்படியானால், சிக்கலுக்கு உள்ளாகும் ஒரு வங்கி, ரிசர்வ் வங்கியின் கீழ் வராதா? சிக்கலுக்கு உள்ளாகும் காப்பீட்டு நிறுவனம் Insurance Regulatory and Development Authority (IRDA)-வின் கீழ் வராதா? நிதிச் சிக்கலுக்கு ஆளான பங்குச் சந்தை Securities and Exchange Board of India (SEBI) செபியின் கீழ் வராதா? வரும், ஆனா வராது.
ஆமாம். தீர்வு வாரியம் அல்லது நெறிப்படுத்து நிறுவனங்கள் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ, பங்குச் சந்தைகளுக்கு செபி), சிக்கலுக்கு உள்ளாகும் நிதி நிறுவனங்களை அவற்றின் சிக்கலைப் பொறுத்து தரப்படுத்தும் – நிறுவனத்தின் முதலீடு, சொத்துகள் மற்றும் பொறுப்புக்கடன்கள், நிர்வாகத் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தரப்படுத்தும். நெறிப்படுத்து நிறுவனங்கள், தீர்வு வாரியம் ஆகிய இரண்டுக்குமே நிதி நிறுவனங்களை கண்காணித்து தரப்படுத்தும் அதிகாரம் இருக்கும். ஒரே ஆணியைப் பிடுங்க 2 பேர் எதற்கு?
நிறுவனத்தின் நிதிநிலைச் சிக்கலைப் பொறுத்து, குறைந்த ஆபத்து அல்லது மிதமான ஆபத்து என்று தரப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், ஏற்கத்தக்க ஆபத்து நிலைமைக்குள் இருப்பதாகக் கருதப்படும். நெறிப்படுத்து நிறுவனங்களால் கண்காணிக்கப்படும். அதிக ஆபத்து, தீவிர ஆபத்து நிலையில் இருக்கும் நிறுவனங்கள் என்றால், நெறிப்படுத்து நிறுவனங்கள் / தீர்வு வாரியம் அதனை சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சரி செய்யும் நடவடிக்கை என்பதில், அந்த நிறுவனம் முதலீடு திரட்டக்கூடாது, டெபாசிட் வாங்கக்கூடாது, வர்த்தகத்தை விரிவுபடுத்தக்கூடாது போன்றவையும் அடங்கலாம். நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த முயற்சி செய்யலாம்; குறித்த காலத்துக்குள் முயற்சி நிறைவேறாவிட்டால் மூட வைக்கலாம்.
மேம்போக்காகப் பார்த்தால், இதில் என்ன தவறு, ஒன்றுக்கு இரண்டாக கண்காணிப்பு அமைப்பு இருந்தால் நல்லதுதானே என்று தோன்றும். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ, பங்குச் சந்தைக்கு செபி ஆகிய மூன்று நிறுவனங்கள் ஏற்கெனவே கண்காணிப்பு அமைப்புகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் ஓரளவுக்கு சுயேச்சையாகவே செயல்பட்டும் வருகின்றன. இந்த மூன்றும் செய்து வந்த ஒரு பணியை இன்னொரு அமைப்பும் செய்ய வேண்டும் என்றால், இந்த மூன்று அமைப்புகளும் சரியாகச் செயல்படவில்லை என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்? இதுவரை அப்படி ஏதும் சொல்லப்படவே இல்லையே? பின்னே ஏன் எதற்காக இந்த தீர்வு வாரியம்?
எதற்காக இதை முன்வைக்கிறார்கள் என்று பார்த்தால், ஜி-20 கூட்டமைப்பு இப்படியொரு தீர்வு வாரியம் அமைக்குமாறு சொன்னதாம். இந்தியாவும் ஜி-20இல் உறுப்பினராக இருப்பதால் இதை உருவாக்குகிறதாம். ஜெர்மனியும் இங்கிலாந்தும் இதேபோன்ற சட்டங்களை உருவாக்கியுள்ளதாம். ஆனால் இதுவரை பயன்படுத்தவில்லையாம். 2013இல் சைப்ரசில் ஒரே ஒரு வங்கிக்காக பெயில் இன் பயன்படுத்தப்பட்டதாம்.
இந்தச் சட்டத்தில் மற்றொரு முக்கியப் பிரச்சினை உண்டு. ஒரு நிறுவனத்தை தரப்படுத்தும் முடிவை எதிர்த்து அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்ய எந்த வழியும் இல்லை. தீர்வு வாரியம் நினைத்தால் எந்தவொரு நிறுவனத்தையும் நிதிச்சிக்கலுக்கு உள்ளானதாக தரப்படுத்த முடியும். அப்படிச் செய்யப்பட்ட தகவல் வெளியே தெரிந்தால், அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்தவர்கள் பதறிப்போய் உடனே தமது டெபாசிட்டுகளை திரும்பப்பெறவே விரும்புவார்கள். திடீரென நிறுவனத்தின்மீது படையெடுப்பார்கள். இது படிநிலைச் சரிவு (கேஸ்கேடிங் எஃபக்ட்) விளைவை ஏற்படுத்தி, சிறிதளவே சிக்கலுக்கு உள்ளாகியிருந்தாலும் அந்த நிறுவனத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி விடும். ஆனால் அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்ய வழிகிடையாது!
ஒரு நிறுவனம் தீவிர ஆபத்தில் இருப்பதாகத் தரப்படுத்தப்பட்ட தேதியிலிருந்து அதன் நிர்வாகத்தை தீர்வு வாரியம் தன் கையில் எடுத்துக்கொள்ளும். அதன்பிறகு, மேலே சொன்ன வழிமுறைகளில் எதையும் பயன்படுத்தி, சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்யும். அந்த நிறுவனத்தின் சொத்துகள் / பொறுப்புக்கடன்களை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றலாம்; வேறொரு நிறுவனத்துடன் இணைக்கலாம்; இந்த நிறுவனத்தை நிர்வகிக்க புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கலாம்; பெயில்-இன் செய்யலாம். நிறுவனத்துக்குப் பணம் கொடுத்தவர்களுக்கு திருப்பித்தர நிறுவனத்தையே கலைக்கலாம். தீர்வு வாரியத்துக்கு ஓராண்டு கால அவகாசம் உண்டு. தேவைப்பட்டால், மேலும் ஓராண்டு நீட்டிப்பும் கிடைக்கும்.
இந்த ஒன்று / இரண்டு ஆண்டு காலத்தில், தீர்வு வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து எந்த நீதிமன்றத்திலும் யாரும் கேள்வி கேட்க முடியாது! ஒருவேளை இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்வு வாரியம் சிக்கலைத் தீர்க்க முடியவில்லை என்றால், அந்த நிறுவனம் தானாகவே திவால் நிலைமைக்குப் போய்விடும்! இரண்டு ஆண்டுகளுக்குள் சரிசெய்ய முடியாத தீர்வு வாரியத்தின்மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அது மட்டுமல்ல. தீர்வு வாரியத்தின் செயல்பாடுகளுக்காக ஒரு கட்டணத்தையும் அந்த நிறுவனத்திடமிருந்தே எடுக்கும்! கட்டணம் எவ்வளவாக இருக்கும் என்பதும் தெரியாது.
நிறுவனத்தை கலைப்பது என முடிவானால், பணத்தைத் திருப்பித் தருவதில் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய யாருக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது குறித்தும் ஒரு பட்டியல் அதில் உண்டு. (கட்டுரையின் துவக்கத்தில் கதை-1இல் நான் குறிப்பிட்ட உதாரணம் பார்க்கவும்.) இந்தப் பட்டியலின்படி, நிறுவனத்துக்குக் கடன் கொடுத்த மற்றவர்களைவிட டெபாசிட் செய்தவர்களுக்கே முன்னுரிமை தரப்படும். அதற்காகவே டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் உண்டு. முன்னுரிமைப் பட்டியல் :
1. டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ்
2. தீர்வு வாரியத்துக்கான கட்டணம்
3. ஊழியர்களுக்கான 24 மாத நிலுவை சம்பளம், உத்தரவாதம் தரப்பட்ட கடன் தொகைகள்
4. ஊழியர்களுக்கு 12 மாத சம்பளம்
5. இன்ஷ்யூர் செய்யப்படாத டெபாசிட்டுகள்
6. உத்தரவாதம் தரப்படாத கடன் தொகைகள்
7. அரசுக்குத் தர வேண்டியவை,
8. கடன்கள், நிலுவைகள்
9. பங்குதாரர்கள் (ஷேர் ஹோல்டர்கள்)
கவனிக்க வேண்டியது என்னவென்றால், இங்கேயும் டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ்க்கு உட்பட்ட தொகைக்கு மட்டுமே முதல் முன்னுரிமை. ஏற்கெனவே இதேபோன்ற டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் இருக்கிறது. எனவே இதில் புதிதாக ஏதுமில்லை. இன்ஷ்யூரன்சின் கீழ் வராத டெபாசிட் தொகைக்கு இந்தச் சட்டத்தில் ஐந்தாவது இடம்தான்! 1961 முதல் இருந்து வருகிற டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் திட்டத்தில் உள்ள 1 லட்சம் ரூபாய் என்ற வரம்பு இந்த மசோதாவால் நீக்கப்பட்டதா? ஒரு லட்சத்துக்கும் அதிகமாக ஒருவர் டெபாசிட் செய்திருந்தால் அந்தத் தொகை முழுவதும் கிடைக்க இது வழி செய்கிறதா?
இல்லை. முன்னர் என்ன இருந்த்தோ அதுவேதான் இப்போதும் இருக்கிறது. ஆனால் சிறு வித்தியாசம் : முன்னர் ரிசர்வ் வங்கியின் கீழ் டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் இருந்தது. இப்போது அந்தப் பணியை எடுத்துக்கொள்ளும் தீர்வு வாரியம், வங்கிகளுக்கு “குறிப்பிட்ட வரம்புக்குள்” டெபாசிட் காப்பீடு வழங்கும். அதாவது, வங்கி மூழ்குமானால், டெபாசிட் செய்தவருக்கு “குறிப்பிட்ட” தொகை கிடைக்கும். முந்தைய சட்டத்தின்படி ஒரு லட்சம் என்பது உச்சவரம்பு. இந்தச் சட்ட மசோதாவில் “ஒரு லட்சம்” என்றும் குறிப்பிடப்படவில்லை, முழுத் தொகை என்றும் தரப்படவில்லை. “குறிப்பிட்ட தொகை” தரப்படும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. திருப்பித் தரப்படுகிற “ஒரு லட்சம்” அல்லது “குறிப்பிட்ட” தொகைக்கு மேலான டெபாசிட் தொகையை டெபாசிட் செய்தவருக்கு வங்கியின் பங்குகளாக மாற்றித்தரவும் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. (நிதிச்சிக்கலுக்கு ஆளான வங்கியின் பங்கை வைத்துக்கொண்டு நாக்கு வழிப்பதா என்பது வேறு கதை.)
அதாவது, சமூக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த செய்திகள் சரிதான். இது சட்டமான பிறகு, ஒருவேளை வங்கி மூழ்குமானால், டெபாசிட் செய்தவர்களுக்கு முழுத் தொகையும் கிடைக்காது. ஒரு லட்சமாவது கிடைக்குமா அல்லது அதுவும் கிடைக்காமல் போகுமா என்பதும் தெரியாது!
முன்னர் இருந்த சட்டத்தைவிட இது மேம்பட்டது, முன்னர் ஒரு லட்சம்தான் வரம்பு இருந்தது, இப்போது அது உயர்த்தப்படும் என்று சிலர் பேசுகிறார்கள். உண்மையில், சமூக ஊடகங்களில் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்ட பிறகுதான் மைய நிதியமைச்சர் வாயைத் திறந்தார். இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில்தான் இருக்கிறது. இன்னும் நிறைய திருத்தங்கள் செய்யப்படும் என்று திருவாய் மலர்ந்தார். சமூக ஊடகங்களில் பிரச்சினை எழுப்பப்படாமல் போயிருந்தால் அப்படியே சட்ட மசோதாவாக முன்வைத்திருப்பார்கள் என்ற அச்சம் நியாயமானதே. நில கையகப்படுத்தல் மசோதாவை பல முறை அவசரச் சட்டமாக நிறைவேற்றிய அரசு இது என்பதை மறந்து விட முடியாது.
ஆக, இப்போதைக்கு அச்சப்படத் தேவையில்லை. வங்கியில் இருக்கும் உங்கள் பணத்துக்கு எந்த ஆபத்தும் இப்போதைக்கு இல்லை. ஆனால், நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்போது, அது சட்டவடிவம் கொள்ளும்போது, எதிர்க்கட்சிகள் கவனமாக இருக்க வேண்டும். அப்போதும் சமூக ஊடகங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
வங்கிகளுக்கு என்ன சிக்கல் வந்து விடும்? அது எதற்கு மூழ்கும் என்ற கேள்வி வரக்கூடும். குஜராத்தில் ஒரு கூட்டுறவு வங்கியில் மிகப்பெரிய ஊழல் நடந்தது தவிர, இதுவரை இந்தியாவில் அப்படி ஏதும் நிகழவில்லை. (மாதவ்புரா வங்கி ஊழலில் சம்பந்தப்பட்டவரை விடுவிப்பதில் அமித் ஷா உள்பட பலருக்கும் பங்கு இருந்தது குறித்து ஏற்கெனவே பதிவு எழுதிவிட்டேன்) வங்கிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி எழுத வேண்டுமானால் வங்கிகளின் வாராக்கடன் குறித்தும் எழுத நினைத்திருந்தேன். கட்டுரை மிகவும் நீளமாகி விட்டதால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தொடுகிறேன்.
நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஒரு கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் கூற்றுப்படி : 2013இன் கணக்குப்படி வாராக்கடன் 1,55,890 கோடி. 2017இல் 6,41,057. அதாவது, காங்கிரஸ்-யுபிஏ அரசின் காலத்தில் இருந்த தொகையைவிட மூன்று மடங்கு அதிகம். இந்தக் கணக்காண்டின் ஆறு மாதங்களில் மட்டும் வங்கிகள் ரைட்-ஆஃப் செய்த வாராக்கடன் தொகை 55,356 கோடி. படத்தைப் பார்த்து, எவருடைய ஆட்சியில் அதிகத் தொகை ரைட்-ஆஃப் செய்யப்பட்டது என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். வாராக்கடன்களில் பெரும்பகுதி உங்களையும் என்னையும் போன்றவர்கள் வாங்கிய சில்லறைக்கடன்கள் அல்ல. அதானிகள், அம்பானிகள், சிங்கானியாக்கள், டாடாக்கள், ஜிண்டால்கள், எஸ்ஸார்கள் வகையறாக்கள் வாங்கி நாமம் போட்டவைதான்.
(ரைட்-ஆஃப் என்பது வாராக்கடன் தள்ளுபடி அல்ல, அது ஒரு டெக்னிகல் சொல்தான் என்று பாடம் எடுக்க யாரும் வர வேண்டாம்.)
ஸ்ரீநிவாசன் முருகேசன்.
அற்புதமான, மிகத்தெளிவான விளக்கம்.
இதைவிட சிறப்பாக யாரும் இதை விளக்க முடியாதென்றே நினைக்கிறேன்.
மிக்க நன்றி. இதை எழுதியவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஸ்ரீனிவாசமுருகேசன் – பகிர்ந்த உங்களுக்கும் எழுதிய ஷாஜகான் அவர்களுக்கும் நன்றி. நிறைய விஷயங்களை புரியும்படி விளக்கியுள்ளது.
எகானமி என்பதை ‘பணப்புழக்கம்’ என்று சொல்லலாம். இந்தியர்கள் பாரம்பரியமாக சேமிக்கும் உணர்வு கொண்டவர்கள், எளியவர்கள். (அர்த்தம், ஆடம்பரச் செலவு செய்யாதவர்கள்). நான் பார்த்த மக்கள் எல்லோரும் இப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள். contented life. இங்கு சொத்து சேர்ப்பது என்பது தன்னிச்சையாக நிகழ்வது. காடு, கரை, வீடு, நகை என்று இங்கு சொத்து சேரும். இங்கு இருந்ததெல்லாம் பெரும்பாலும் பண்டமாற்றுதான். என் சிறுவயதில், தாமிரவருணி ஆற்றை வெள்ளத்தின்போது கடப்பதற்கு, படகு உபயோகப்படுத்துவார்கள். படகு விடுபவர், வீட்டில் வந்து நெல் பெற்றுக்கொள்வார். (சிலர் காலணா பணமும் கொடுப்பது உண்டு)
மேற்கத்தைய நாடுகளில் சேமிப்பு என்ற கான்சப்ட் அவ்வளவு கிடையாது. அவர்கள் தலைமுறை தலைமுறைக்கும் அசையாச் சொத்து போன்றவை சேர்க்கமுடியாது. அங்க, 18 வயதாச்சுன்னா, அவன்/அவள் இன்னொரு சிடிசனாக ஆகிவிடுகிறார். பொதுவாக, சம்பாதிப்பு, செலவழிப்பு, அனுபவிப்பு என்றே அங்கு வாழ்க்கை ஓடுகிறது. அதனால், வங்கிக் கடன் போன்றவை இல்லாதவர்களை, கிரெடிட் கார்டில் வாழாதவர்களை அங்கு காண்பது அரிது. அங்கெல்லாம் சேமிப்புக்கு வட்டி என்பது மிக மிகக் குறைவு. சில நாடுகளின் நாம்தான் பணம் தரவேண்டும் (நம் பணத்தை அவர்கள் பாதுகாத்து வைப்பதற்கு)
இரண்டு உலகத்தையும் இணைப்பதுபோல் எப்போது இந்தியப் பொருளாதாரம் கதவு திறந்துவிடப்பட்டதோ, அப்போது, அரசு, மக்களையும் மேற்கத்தைய வாழ்க்கை வாழ்ந்தால்தான் பொருளாதாரம் சீர்ப்படும் என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளது. அதனால்தான், அரசு, மக்களை ‘செலவழி, தங்கத்தில் சேமிக்காதே, வங்கியில் பணத்தைப் போடாதே’ என்பதைப்போன்று விரட்டுகிறது என நினைக்கிறேன். நம் குழந்தைகளின் குணமும் அதற்கேற்றவாறு மாறியிருக்கிறது. இப்போது இருப்பதை வைத்து எஞ்சாய் என்பதுபோன்று.
மக்களை பதற்றத்திலேயே வைப்போம். எப்படி சார் ? அவர்கள் செய்த தவறுகளை சரி கட்ட நாம எப்படி எல்லாம் பட வேண்டியிருக்கு ? செய்தியை படித்திருப்பீர்கள், “குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் சதி ” – பிரதமர் மோடி, ஒரு பிரதமர் இப்படியெல்லாமா பேசுவது ?
புது வசந்தம்,
குஜராத்தில் தோற்று விடுவோமோ என்கிற பயம் அவரை என்னென்னவோ பேச வைக்கிறது….
அவர் எவ்வளவுக்கெவ்வளவு இப்படி பிதற்றுகிறாரோ அவ்வளவுக்கவ்வளவு தன் உண்மையான உருவத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
ஓரளவு நியாயமாக யோசிக்கக்கூடிய – பாஜக அல்லாத ஆனால் – மோடிஜி ஆதரவாளர்கள் கூட
குஜராத் தேர்தலில் மோடிஜியின் நடத்தையை பார்த்து விட்டு, மனம் மாற ஆரம்பித்திருக்கிறார்கள்.
எனவே, அவர் இப்படியே தொடரட்டும். அவரது உண்மை உருவம் வெளிப்படட்டும். அதுவே நல்லது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
‘நானாக இதை ஆரம்பிக்கவேண்டாம் என்று இருந்தேன் புது வசந்தம். ஒவ்வொரு பதவிக்கும் ஒரு கண்ணியம் இருக்கிறது (ஜெ. அவர்கள், சென்னா ரெட்டி கையைப் பிடித்து இழுத்தார் என்று சொன்னதும் இந்த ரகம்தான்). அந்தக் கண்ணியம் காற்றில் பறப்பதுபோல் மோடி அவர்களில் பல பேச்சுக்கள் (அதிலும் தேர்தல் சமயத்தில்) இருக்கின்றன. நாம கம்பீரமா பார்க்கறவங்க, தாங்களாகவே சேற்றைத் தன்மீது வாரிப்போட்டுக்கொள்ளும்போது வரும் வெறுப்புதான் இத்தகைய பேச்சுக்களைப் படிக்கும்போது வரும். பதவிக்கு ஆளுக்கு ஒரு கண்ணியம் இருக்கும். அதை மெயின்டெய்ன் செய்வதுதான் அவரவர்களுக்கு அழகு. அதனால்தான் பதவி என்ற ஏணியில் ஏற ஏற, முதல் சட்டம் ‘பேச்சைக் குறைக்கவேண்டும்’. பேச வேண்டிய சமயத்தில், கௌரவமாகப் பேசவேண்டும். அதற்காக, மன்மோகன் சிங் போன்று, ‘ஊழல் செய்தவர்களை’த் தட்டிக்கேட்கும் திராணி இன்றி, பொம்மையாக இருக்கக்கூடாது. அப்படி ஒரு பிரதமர் இருக்கமுடியும் என்று காட்டியவர் மன்மோகன் சிங். (ஸ்டாலின் கூட, சட்டமன்றத்தில் சட்டை பட்டனைக் கழட்டினார்கள் என்று காருக்குளிருந்து வெளியே வரும்போது பட்டனைக் கழட்டிவிட்டு வந்தாரே, அதைப் பார்த்தபோதும், இது திருந்தாத கட்சித் தலைமை என்றுதான் எனக்குத் தோன்றியது)
இன்னொன்றும் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. நான், ஹிந்துக்களை பாஜக ஆதரிப்பதை, முழு மனத்துடன் ஆதரிக்கிறேன். காங்கிரஸ், திமுக போன்ற பல கட்சிகளின் போலி செக்யூலரிசத்தை வெறுக்கிறேன். ஆனால், மனிதனுக்கு முதல் தேவை, உணவு, நல்ல வாழ்வு, அவனது உழைப்பை யாரும் சுரண்டாமல் பார்த்துக்கொள்வது, நல்ல சட்டம்/ஒழுங்கு. இதற்கு அப்புறம்தான், மதம் என்பதே வரும். 5 ஆண்டுகள் ஆட்சி முடிவடையும்போது மோடி அவர்களும் பாஜக அவர்களும், ‘என்ன மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள்’ என்பதை மட்டும்தான் பேசவேண்டும். .அதுவே, நம் எல்லோருக்கும், ‘உண்மையாக அவை நம்மை அடைந்ததா, அதற்கான முயற்சிகளை பாஜக செய்ததா’ என்று எடைபோடத்தோன்றும். வெறும், ‘ஹிந்துத்துவா’ மட்டும் மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தராது, நிச்சயமாக என் வாக்கை.
// ஹிந்துக்களை பாஜக ஆதரிப்பதை, முழு மனத்துடன் ஆதரிக்கிறேன். காங்கிரஸ், திமுக போன்ற பல கட்சிகளின் போலி செக்யூலரிசத்தை வெறுக்கிறேன். //
என்னுடைய பார்வையில் – இரண்டுமே தவறு.
அரசியலுக்கும், மதத்திற்கும் என்ன சம்பந்தம்…?
அரசியலில் மதத்தை ஏன் கொண்டு வர வேண்டும்…?
நமது அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நடப்பதை நாம் எப்படி ஆதரிக்க முடியும்..?
//நான், ஹிந்துக்களை பாஜக ஆதரிப்பதை, முழு மனத்துடன் ஆதரிக்கிறேன்//
ஆனால், எல்லா ஹிந்துக்களும் இந்த வெறிக்கூட்டத்தை ஆதரிக்கவில்லை வெறியர்களை தவிர. Voter Mache-க்கு பதிலுக்காக Ballot Box கொண்டுவந்தால் தெறியும்.
தேர்தல் கமிஷன் சவால் எல்லாம் விட்டது. எங்கள் மெஷினை எதுவும் செய்ய முடியாது என்று. கீழே உள்ள BBC தள செய்தியை பாருங்கள்.
http://www.bbc.co.uk/news/10123478
இது 2014 தேர்தல் முடிவுகளையும் இந்த வருட UP தேர்தல் முடிவுகளையும் சந்தேகம் பட வைக்கிறது. யாராவது பொது நல வழக்கு போட்டு உண்மையை வெளிக் கொண்டு வர முடியுமா? இப்போது இருக்கின்ற நீதி மன்றங்களில் அப்படி ஏதாவது இருந்தால் வெளிவருமா?
மேலும், வரும் குஜராத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது….?
பாஜக ஆதரவு tv channels, papers இப்போது சொல்லி வருவதை காணும் போது முடிவு எழுதப்பட்டு விட்டதோ….!
Hi I went to the link – and it concludes like this :-
However, for their system to have any impact they would need to install their microchips on many voting machines, no easy task when 1,368,430 were used in the last general election in 2009.
If you still want to maintain the elections results are hacked – from what I understood , ( I have not seen one ) – each machine is packed by the election officials, and it is tested in front of the agents ( of all candidates ), then it is sealed , and after the election is over , the seal is broker . No machine has a blue tooth , its only a stand alone machine , meaning from outside, the data can not be corrupted .
Also the order of the symbol is not known – it is not first should be always lotus , second is hand – the order could be different for different constituencies .
BBC – many times they took back their stories – please speak with some common techie .
ஓ…! அப்படியா.
கீழேயுள்ள செய்தி….? ஏன் இந்த பதற்றம்…?
உம்மை போன்றவர்கள் தான் இணையத்தில் செயல்படுகிறீர்கள். மக்கள் வெற்றி பெறவைக்கின்றார்களா? உம்மை போன்றவர்களா…?
காலம் பதில் சொல்லும்.
https://tamil.oneindia.com/news/india/malfunctioning-evm-at-buldhana-contradicts-ec-tamper-proof-claim-290551.html
” குஜராத் தேர்தல் பிரச்சாரம்: மோடிக்கு சில யோசனைகள்..! ”
– கே.கே.மகேஷ் , தி இந்து தமிழ் நாளிதழ்.
http://tamil.thehindu.com/opinion/blogs/article21389978.ece?homepage=true
நாம் எப்பேர்பட்ட பிரதமரை பெற்றுள்ளோம்.
ஆடுவோமே பல்லு பாடுவோமே…
அறுமையான பிரதமர் கிடைத்திருக்கிறார் என்று
பல்லு பாடுவோமே…!
நண்பரே …! ” பகவானை பட்டினி பாேட்டதால ” தான் மகேஷ் இப்படியெல்லாம் எழுதுகிறார் … ?
இங்கேயும் சிலர் நியாயமா கூறுகிற மாதிரி ஆரம்பித்து .. கடைசியில் அங்கே சென்று விடுவது … நல்ல டிரிக் …!
இருவருக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை நண்பா. இந்த தளத்தில் பின்னூட்டம் வெளிவரனும் என்பதற்காக நாகரீகம் பேனப்படலாம். அவ்வளவே.
//குஜராத்தில் தோற்று விடுவோமோ என்கிற பயம் அவரை என்னென்னவோ பேச வைக்கிறது…. அவர் எவ்வளவுக்கெவ்வளவு இப்படி பிதற்றுகிறாரோ அவ்வளவுக்கவ்வளவு தன் உண்மையான உருவத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்.// – KM அவர்கள்.
முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இன்னாள் பிரதமரின் பொய்யுறைக்கு பிதற்றல்களுக்கு கொடுத்துள்ள விளக்க ஸ்டேட்மென்ட் கீழே…
http://www.thehindubusinessline.com/news/gujarat-elections-manmohan-singh-asks-narendra-modi-to-apologise-over-pakistan-conspiracy-comment/article9989181.ece
சரி. கை தூக்குங்கள், ”மோடி மன்னிப்பு கேட்பார்” என்று யார் யாரெல்லாம் நம்புவதென்று.
இந்த கேள்வி பாஜக அடிவருடிகளுக்கல்ல.